-
5th September 2014, 07:02 PM
#11
Junior Member
Devoted Hubber
from https://www.facebook.com/harshavardhan.vl
என் படத்தின் trailerஐ கமல் சாரிடம் காண்பிக்க சென்றபொழுது, அவருடன் உரையாடிய சில நிமிடங்கள் மறக்கமுடியாதவை. அதில் ஒன்று –
நான் – சார்! உங்க ‘அன்பே சிவம்’ படத்துலே வர்ற ‘வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் அடுத்த வினாடி ஆச்சரியங்கள் ஏராளம்’ என்ற டயலாக்கிலிருந்து, என் படத்துக்கு ‘அடுத்த வினாடி ஆச்சரியங்கள்’னு தான் முதல்லே பேர் வச்சிருந்தேன். ஆனா, நிறைய பேரு ‘ரொம்ப நீளமா இருக்கே? பேரு வாயிலேயே வரலியே’ன்னு சொன்னதாலே simpleஆ ‘ஆச்சரியங்கள்’னு மாத்தி வச்சிட்டேன்.
கமல் – (சற்று கோபமாக) யாருங்க அந்த நிறைய பேரு? இந்த துறையிலே எக்கச்சக்கமான ‘அட்வைஸ் ஆறுமுகம்’கள் இருக்காங்க. அவங்க வேலையே தெளிவா இருக்கவங்களை குழப்பி விடறதுதான். ‘படம் length அதிகம். ஒரு 10 நிமிஷம் வெட்டுனா சூப்பரா இருக்கும்’பாங்க. எந்த 10 நிமிஷம்னு கேட்டு பாருங்க. ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டான். என் இத்தனை வருஷ அனுபவத்தை வச்சு ஒண்ணு சொல்றேன் ஹர்ஷவர்தன், உங்களுக்கு conviction இருக்கற விஷயத்தை தெளிவா செஞ்சீங்கன்னா, ஒருவேளை தோத்துப்போனா கூட உங்களுக்குன்னு ஒரு identity கிடைக்கும். ‘அவன் சொன்னான், இவன் சொன்னான், இப்படி எடுத்தாத்தான் அவங்களுக்கு புடிக்கும், அப்படி எடுத்தாத்தான் இவங்களுக்கு புடிக்கும்’னு compromise பண்ணிட்டே போனீங்கன்னா, ஜெயிச்சா கூட உங்களுக்குன்னு ஒரு identity கிடைக்காது’.
இப்போது நினைத்துப் பார்த்தாலும் புல்லரிக்கும் வாக்கியம், எதிரே உட்கார்ந்து கேட்டபொழுது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
இந்த ‘ஆசிரியர்கள் தின’த்தில் என் மானசீக குரு கமல்ஹாசன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்களும், நன்றிகளும். நான் சினிமாவில் இதுவரை போட்டிருக்கும் ஒரு சிறிய கோடும், இனி போடவிருக்கும் பெரிய ரோடும், அவருக்கே சமர்ப்பணம்.
Last edited by Ravi Ravi; 5th September 2014 at 07:12 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2014 07:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks