-
7th September 2014, 01:48 PM
#1991
Senior Member
Senior Hubber
கார்த்திக் சார்.. நன்றி.. எப்படி விட்டேன் தெரியவில்லை..தேடி ப் பார்க்கிறேன்..
-
7th September 2014 01:48 PM
# ADS
Circuit advertisement
-
7th September 2014, 02:07 PM
#1992
Senior Member
Senior Hubber
-
7th September 2014, 02:52 PM
#1993
Senior Member
Veteran Hubber
என் விருப்பம் (9)
'நட்சத்திரம்' என்று ஒரு படம். நீயா பட வெற்றிக்குப்பின் ஸ்ரீபிரியா தயாரித்தார். தெலுங்கில் ஜெயசுதா நடித்து வெளிவந்த 'சிவரஞ்சனி' படத்தின் தமிழ் ரீமேக். துரை இயக்கத்தில் சங்கர் கணேஷ் இசையில் வந்தது.
படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இதில் நடிகர்திலகம், ரஜினி, கமல், சாவித்திரி, மஞ்சுளா, இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார்கள்.
கிராமத்தில் கொட்டாங்கச்சி பிடில் செய்து விற்கும் ஸ்ரீபிரியா எப்படி நகரத்துக்கு சென்று பெரிய சினிமா நடிகையாகி ஒரு அயோக்கியனின் வலையில் சிக்கி, மனமுடைந்து இறந்துபோகிறாள் என்பது கதை. கதாநாயகனாக அந்த நடிகையின்மேல் உயிரையே வைத்திருக்கும் அவளது ரசிகன் (ஹரி பிரசாத்). கொஞ்சம் வித்தியாசமான கதைதான். இதில் 'அவளொரு மேனகை என் அபிமான தாரகை' என்ற அருமையான பாடல் ஏற்கெனவே இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு மனதை மயக்கும் பாடல். கதாநாயகி ஸ்ரீபிரியா கிராமத்தில் கொட்டாங்கச்சி பிடில் விற்பவளாக வரும்போது பாடும் பாடல்..
"வைகை கரையினில் ஒரு பறவை - அது
வானத்தில் தேடுது தன் உறவை"
தெருத்தெருவாக நடந்து பிடில் விற்கும்போது பாடிக்கொண்டே சென்று, ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்து விற்பனை செய்துகொண்டே, பாடலில் தன் கதையையும் சொல்லியவாறு தொடர்ந்து பாடும்போது இனம் புரியாத சோகம் நம் மனதில் படரும். எந்தவித பந்தாவான கைகால் அசைவுகள் இல்லாமல் முகத்தில் ஒரு மாதிரியான சோகம் இழையோடும் முகபாவத்துடன் ஸ்ரீபிரியா பாடும்போது பாடலுடன் நாம் ஒன்றிப்போவோம். கடைசியில் ஓடிவந்து காசை நீட்டும் சிறுவனிடம் 'எல்லாம் விற்றுவிட்டது' என்று சொல்வதுபோல கூடையைக் கவிழ்த்துக் காட்டியபடி பாடலை பாடி முடிக்கும்வரை நம் மனதை என்னவோ செய்யும்.
ஸ்ரீபிரியா நடித்து எனக்குப்பிடித்த சில பாடல்களில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. (இன்னொன்று, வசந்தத்தில் ஓர் நாள் படத்தில் இடம்பெற்ற 'வேண்டும் வேண்டும் உந்தன் மனது' என்ற மனத்தைக் கலங்கடிக்கும் பாடல்).
மற்றவர்களுக்கு எப்படியோ, என்னைப்போன்ற எமோஷனல் பேர்வழிகளுக்கு மனத்தைக் கரைய வைக்கும் பாடல் 'வைகை கரையினில் ஒரு பறவை'. சங்கர் கணேஷ் இசையில் வந்த அழகிய மேலோடி (மெட்டும் வேறெங்கும் தழுவப்பட்டதா என்பது தெரியாது)...
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
7th September 2014, 03:58 PM
#1994
Senior Member
Senior Hubber
இந்தப் பாடல் கேட்டதாக நினைவில்லை கார்த்திக் சார்.. நான் நட்சத்திரம் படமும் பார்த்ததில்லை..ம் தேடிப்பார்க்க வேண்டும் .. நன்றி..
-
7th September 2014, 04:16 PM
#1995
Junior Member
Platinum Hubber
சின்ன கண்ணன் சார்
வாணிஸ்ரீ எம்ஜிஆருடன் கண்ணன் என் காதலன் - தலைவன் - ஊருக்கு உழைப்பவன் மூன்று படங்களில் நடித்துள்ளார் கண்ணன் என் காதலன் படத்தில் இடம் பெற்ற '' கண்களிரண்டும் விடி விளக்காக ''பாடல் காட்சியில் வாணிஸ்ரீயின்
இளமையும் காதல் நடிப்பும் அபாரம் .வாணியின் காதல் நடிப்பை கண்டு மகிழுங்கள் .
-
7th September 2014, 04:32 PM
#1996
Senior Member
Senior Hubber
//வாணிஸ்ரீ எம்ஜிஆருடன் கண்ணன் என் காதலன் - தலைவன் - ஊருக்கு உழைப்பவன் மூன்று படங்களில் நடித்துள்ளார் கண்ணன் என் காதலன் படத்தில் இடம் பெற்ற '' கண்களிரண்டும் விடி விளக்காக ''பாடல் காட்சியில் வாணிஸ்ரீயின்
இளமையும் காதல் நடிப்பும் அபாரம் .வாணியின் காதல் நடிப்பை கண்டு மகிழுங்கள் .// எஸ்.வி.சார்.. பாடலிட்டமைக்கு நன்றி..கண்களிரண்டும் விடி விளக்காக பாடல் கேட்டிருக்கிறேன்..பார்த்ததில்லை..எம்.ஜி.ஆர்.- வாணிஸ்ரீ - ஜோடி முதல்முதல் கேள்விப் படுகிறேன்..ஏனெனில் மூன்று படங்களையும் பார்த்த்தில்லை..பாடல் மட்டும் கேட்டிருக்கிறேன்..ஊ.உவில் லதா இல்லியோ.. (வீடியோ பார்த்துச் சொல்கிறேன்)
-
7th September 2014, 04:55 PM
#1997
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
//எஸ்.வி.சார்.. பாடலிட்டமைக்கு நன்றி..கண்களிரண்டும் விடி விளக்காக பாடல் கேட்டிருக்கிறேன்..பார்த்ததில்லை..எம்.ஜி.ஆர்.- வாணிஸ்ரீ - ஜோடி முதல்முதல் கேள்விப் படுகிறேன்..ஏனெனில் மூன்று படங்களையும் பார்த்த்தில்லை..பாடல் மட்டும் கேட்டிருக்கிறேன்..ஊ.உவில் லதா இல்லியோ.. (வீடியோ பார்த்துச் சொல்கிறேன்)
தலைவன் - நீராழி மண்டபத்தில்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th September 2014, 05:00 PM
#1998
Senior Member
Diamond Hubber
Originally Posted by
mr_karthik
என் விருப்பம் (9)
மற்றவர்களுக்கு எப்படியோ, என்னைப்போன்ற எமோஷனல் பேர்வழிகளுக்கு மனத்தைக் கரைய வைக்கும் பாடல் 'வைகை கரையினில் ஒரு பறவை'. சங்கர் கணேஷ் இசையில் வந்த அழகிய மேலோடி (மெட்டும் வேறெங்கும் தழுவப்பட்டதா என்பது தெரியாது)...
நானும் எமோஷனல் பேர்வழி என்பதால் என்னையும் கரைத்த பாடல் இது....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th September 2014, 05:04 PM
#1999
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
இந்தப் பாட்டு இங்கு வரலைன்னு நினைக்கறேன்.. கொஞ்சம் டபக்கென காதுகளில் ரீங்கரிக்கும் பாடல் எஸ்பிபி..வாணி ஜெயராம்..பேரும் புகழும்..
அவளே என் காதலி
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th September 2014, 05:24 PM
#2000
Senior Member
Diamond Hubber
டியர் கார்த்திக் சார்,
'உங்கள் ஜொள்ளை நிறுத்த' ரொம்ப ரசித்தேன்.
அப்புறம் 'வைகைக் கரையினில் ஒரு பறவை' கொட்டாங்கச்சி வயலின் பாடல் இதுவரை யாரும் தொடாதது. கலக்கி விட்டீர்கள். உங்களுக்கு ஸ்ரீபிரியாவைப் பிடிக்காது. இருந்தாலும் நல்ல பாடலை ரசித்து சுவைத்து எங்களுக்கு ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. எனக்கு கிளாமரில் பிரியாவை ரொம்பப் பிடிக்கும். கிருஷ்ணா சார் என் கட்சி. சி.க சொல்லவே தேவையில்லை.
எனக்கு நட்சத்திரத்தில் 'பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ' பாடல் ரொம்ப இஷ்டம். அதே போல் ஜெயச்சந்திரன், ஜானகி பாடும் 'வானம் இங்கே மண்ணில் வந்தது' பாடலும் மிகவும் பிடிக்கும்.
ராஜ் பிளஸ் சேனல் கிடப்பவர்கள் தொடர்ந்து கவனித்தால் மாதம் ஒருமுறை 'நட்சத்திரம்' படம் போடுவார்கள்.
நடிகர் திலகம் கௌரவ நடிகராக ஸ்ரீபிரியாவுடன் ஷூட்டிங்கில் கலந்து கொள்வது போல சில காட்சிகள் வரும். கமல், ரஜினி எல்லோரையும் காட்டிவிட்டு இறுதியாக ஷூட்டிங்கில் ஸ்ரீபிரியா திமிராகப் பேசும்போது 'ஹஹஹஹ்ஹஹா' என்று சிரித்தபடியே திரும்புவது போல நடிகர் திலகம் அறிமுகக்காட்சி. இடைவேளைக்குப் பிறகு என்று நினைவு. கடலூர் பாடலி தியேட்டரில் முதல் காட்சியில் அந்த சீனுக்கு பூகம்பம் ஏற்பட்டது என்றுதான் கூற வேண்டும். தியேட்டர் கூரை இரண்டாகப் பிளந்தது போல் அப்படி ஒரு கைதட்டல் நடிகர் திலகத்தைப் பார்த்து. கமல் ரஜினி ரசிகர்கள் முகத்தில் ஈயாடவில்லை. அதுதான் என் தலைவன்.
அருமையான நினைவுகளை கிளர்ந்து எழச் செய்தமைக்கும் நன்றி கார்த்திக் சார்.
'வானம் இங்கே மண்ணில் வந்தது'
Last edited by vasudevan31355; 7th September 2014 at 05:43 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks