-
9th September 2014, 10:49 AM
#1431
Junior Member
Seasoned Hubber
எங்க மாமா" PART - II)
'நான் தன்னந்தனிக்காட்டு ராஜா' பாடலில் நடிகர் திலகம் வழக்கத்துக்கு மாறாக தொப்பியணிந்து நடித்திருப்பார். முன்னிசையும் (PRELUDE), இடையிசையும் (INTERLUDES) நம் மனத்தை மயக்கும்.
அடுத்தது தன்னுடைய குழந்தைகள் இல்லத்தில் நடிகர் திலகம் பாடும் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' என்ற பாடல். 'ல...ல...ல... ல... ல...ல..லா' என்ற ஆலாபனையுடன் டி.எம்.எஸ். பாடத்துவங்கும்போதே நம் மனதை அள்ளிக்கொண்டு போகும்.
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப்பூக்களாம் தொட்டிலிலே
என் பொன் மணிகள்... ஏன் தூங்கவில்லை
கன்றின் குரலும் கன்னித்தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா.. அம்மா
கருணைதேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா.. அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா... அம்மா
இன்பக்கனவை அள்ளித்தரவே
இறைவன் என்னைத் தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத்தேடி ஏங்கும் உயிர்கள்
கண்ணில் உறக்கம் கொள்வானவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலை கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வானவன்
என் பொன் மணிகள் ஏன் தூங்கவில்லை.
எத்தனை முறை கேட்டாலும் கிறங்க வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
இந்தப்பாடல் படத்தில் இரண்டு முறை வரும். மகிழ்ச்சியான சூழ்நிலையில் முதலில் பாடிய இதே பாடலை, சேகரை பணக்காரர் ஒருவருக்கு தத்துக் கொடுத்தபின்னர் சோகமே உருவாக இருக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த மீண்டும் ஒருமுறை சோகமாக பாடுவார். இரண்டுமே மனதைத்தொடும்.
பாலாஜியின் பிறந்தநாள் விழாவில், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் நடிகர் திலகம் பாடும்
"சொர்க்கம் பக்கத்தில்...
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில்...
நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கண்ணங்களில்
சிந்தும் முத்தங்களில்"
மஞ்சள் நிற சேலையில் நிர்மலாவும், டார்க் மெரூன் கலர் ஃபுல் சூட்டில் நடிகர் திலகமும் ஆடும் இந்த காட்சி நம் இதயங்கலை கொள்ளை கொள்ளும். நான் திரும்ப திரும்ப சொல்வது ஒன்றுதான். இக்காட்சிகள் மிக அருமையாக அமைய காரணம் அப்போதிருந்த அவருடைய ஒல்லியான அழகு உடம்பு. அதற்கேற்றாற்போல அமைந்த அழகான நடன அசைவுகள். இன்றைக்குப் பார்த்தாலும் அந்தப்பாடல் நம் மனதை அள்ளும். இப்பாடல் டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். (இப்பாடலுக்காக நடிகர்திலகம் 'அக்கார்டியனை' தோளில் மாட்டிக்கொண்டு வாசிப்பது போல உடலை பெண்ட் பண்ணி நிற்பதுதன் அன்றைய 'தினத் தந்தி' பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம். என் அப்பாவுடைய ஃபைலில் இருக்கிறது).
ஓட்டலில் ஜெயலலிதா ஆடும் 'பாவை பாவைதான்... ஆசை ஆசைதான்' என்ற பாடலில் அதிகப்படியான இசையை அள்ளிக்கொட்டியிருப்பார் மெல்லிசை மன்னர். வயலின், கிடார், பாங்கோஸ் யாவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு விளையாடும்.
நடிகர் திலகத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் டூயட் பாடல் வேண்டுமே என்ற (தேவையில்லாத சித்தாந்தத்தில்) உருவான "என்னங்க... சொல்லுங்க... இப்பவோ எப்பவோ" என்ற பாடல் இப்படத்திற்கு ஒரு திருஷ்டிப்பொட்டு. கொஞ்சம் கூட மனதைத் தொடவில்லை.
கடைசி பாடல்... அய்யோ, நம மனதை அள்ளிக்கொண்டு போகும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஓட்டலுக்கு ஜெயலலிதாவுடன் வரும் பாலாஜி, நடிகர் திலகத்தை ஒரு பாடல் பாடும்படி வற்புறுத்த, இவர் தன்னுடைய சோகத்தையெல்லாம் கலந்து பாடும் இந்த பாடல் இன்றைய இளைஞர்களுக்கும் கூட ஃபேவரைட்.
'பியானோ' வாசித்துக்கொண்டே பாடுவது போன்ற பாடல் இது. டி.எம்.எஸ். அண்ணா பற்றி சொல்லணுமா. அவருக்கு இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. பிண்ணியெடுத்திருப்பார். எத்தனை ஆழமான வரிகள்.
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
பூப்போன்ற என் உள்ளம் யார் கணடது
பொன்னான மனமென்று பேர் வந்தது
வழியில்லாத ஊமை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு பகையானது
கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்
நான் யாரென்று அப்போது நீ காணலாம்
உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நன் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
பாடலின்போது நடிகர் திலகம் மற்றும் ஜெயலலிதா கண்களில் மட்டுமா கண்ணீர்?. இல்லை நம் கண்களிலும்தான். பாடல் வரிகளின் பொருளை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொள்ளும் ஜெயலலிதாவின் முகபாவமும் அருமையாக இருக்கும்.
பியானோ வாசிப்பது போல நடிக்க நடிகர் திலகத்துக்கு சொல்ல வேண்டுமா?. ஏற்கெனவே பாசமலரில் 'பாட்டொன்று கேட்டேன்', புதிய பறவையில் 'உன்னை ஒன்று கேட்பேன்', 'பார்த்த ஞாபகம் இல்லையோ' (இரண்டாவது முறை), எங்க மாமாவுக்குப்பின்னர் வந்த கௌரவத்தில் 'மெழுகு வர்த்தி எரிகின்றது' போன்ற பாடல்களுக்கு அருமையாக பியானோ வாசிப்பது போல அபிநயம் செய்திருப்பார்.
("நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை எந்த வேஷமானாலும், அது நாதஸ்வர வித்வானோ அல்லது பிச்சைக்காரனோ, எதையும் முழுமையாக புரிந்து, முழுமையாக பயிற்சி எடுத்து, முழுமையாக செய்து முடிப்பவர். அவர் செய்து முடித்தபின், அது சம்மந்தமான கலைஞர்கள் அவரைப் பாராட்டும்படி இருக்குமே தவிர, குறை சொல்லும்படி இருக்காது" - பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமண்யம்).
நடிகர் திலகம், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, பாலாஜி, சோ, தேங்காய் சீனிவாசன், ஏ.கருணாநிதி, ரமாபிரபா, கி.கே.சரஸ்வதி, ஓ.ஏ.கே.தேவர், செந்தாமரை, டைப்பிஸ்டு கோபு இப்படி பெரியவர்கள் மட்டுமல்லாமல், அப்போதிருந்த குழந்தை நட்சத்திரங்கள் அத்தனை பேரும் (பேபி ராணி நீங்கலாக) பிரபாகர், சேகர், ராமு, ஜெயகௌசல்யா, ரோஜாரமணி, ஜிண்டா, சுமதி இன்னும் பெயர் தெரியாத குழந்தை நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். நடிகர் திலகத்தின் படங்களிலேயே முழுக்க முழுக்க குழந்தைகளோடு நடித்த படம் இது.
அப்போது நடிகர்திலகத்தின் பல படங்களை வரிசையாக இயக்கி வந்த இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இப்படத்தையும் இயக்கியிருந்தார். வசனம் குகநாதன் எழுதியிருந்தார். மாருதிராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார் (கிளைமாக்ஸில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நிற்கும் வேனை ஜீப் இடித்துத்தள்ளிவிட்டு சட்டென்று ஜீப் ரிவர்ஸில் வர, உடனே ரயில் கடந்து செல்லும் காட்சி தியேட்டரில் பலத்த கைதட்டல் பெற்றது. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் அருமை).
நான் துவக்கத்தில் சொன்னபடி, நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா'வுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு.
"எங்க மாமா" பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த நல்ல இதயங்களுக்கு நன்றி.
From the posting of Saradha Madam - the analysis of NT's Fantastic Movie Enga Mama
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
9th September 2014 10:49 AM
# ADS
Circuit advertisement
-
9th September 2014, 10:50 AM
#1432
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகத்தின் 87-வது பிறந்தநாள் வருகிற அக்டோபர் 1 ஆம் நாள் வருவதையொட்டி, தஞ்சாவூரில் உள்ள நடிகர்திலகம் சிலை புது வண்ணம் பூசப்பட்டு, புனரமைக்கப்பட்டு வருகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.துளசி ஐயா வாண்டையார் அவர்களின் உதவியோடு, தஞ்சை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையால், புதுப்பொலிவுபெறும் நடிகர்திலகம் சிலையை படத்தில் காணலாம்.

Last edited by KCSHEKAR; 9th September 2014 at 10:58 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2014, 11:00 AM
#1433
Junior Member
Seasoned Hubber
From earlier posting of Saradha Madam
"கௌரவம்"
மோகன் தாஸ் வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் நாள். பாரிஸ்டர் ரஜினிகாந்த் தன் வீட்டு மாடிப்படிக்கட்டில் சாய்ந்து உட்கார்ந்து இருப்பார். அப்போது அங்கே வரும் மனைவி பண்டரிபாய்:
"என்னன்னா இங்கே உட்கார்ந்துட்டேள்?. கோர்ட்டுக்குப் போகலையா?"
"இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? ஜட்ஜ்மெண்ட் டே. கண்ணனா மிஸ்டர் ரஜினிகாந்தா என்று தீர்மானிக்கும் நாள். CAT ON THE WALL".
எழுந்து மாடிக்குப்போவார். கூடவே எம்.எஸ்.வி.யின் டெர்ரிஃபிக் BACKGROUND மியூஸிக். மாடி ரூம் கதவை திறக்கும்போதும் டிரம்ஸ், ட்ரம்பெட்டுடன் அதிர வைக்கும் சவுண்ட்.
கையில் பைப்புடன் சட்டென்று பண்டரிபாய் பக்கம் திரும்பி, குனிந்து
"டீ செல்லா... ஒரு சின்னப்பய இன்னைக்கு கோர்ட்டில் எனக்கு டைம் குடுக்கிறாண்டி. ஒவ்வொரு தடவை நான் ஜெயிக்கும்போதும் ஓடி வந்து கைகுலுக்குவான். முத்தம் கொடுப்பான். நான் வளர்த்த பையனாச்சே. இன்னைக்கு அவன் ஜெயிக்கிறான்னு தெரிஞ்சதும் எனக்கு ஏன் பொறாமை. ஜெயிச்சா ஜெயிச்சுட்டு போகட்டுமே".
"நோ" (மீண்டும் எம்.எஸ்.வி.யின் அதிரடி இசை) இத்தனை நாள் நான் கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச கௌரவம். அதனால் இந்த சொஸைட்டியில் எனக்கு கிடைச்ச ஸ்டேட்டஸ், எல்லாத்தையும் விட்டு விட்டு 'அம்போன்னு' நிக்க முடியுமா? NEVER".
('NEVER' என்ற வார்த்தைக்கு ஒரு STYLE கிடைச்சதே இந்தப்படத்தில் இருந்துதான்)
நேரே சென்று தன்னுடைய கேஸ்கட்டுகள் அடங்கிய ரேக்கிலிருந்து ஒவ்வொரு கேஸ் கட்டாக எடுத்துப்போடுவார்.
"டீ செல்லா...., இதுதான் நான் அட்டெண்ட் பணிய முதல் கேஸ். இந்த கேஸை நான் பண்ணிய அழகைப் பார்த்துதான், பிற்காலத்தில் இவன் பெரிய வக்கீலா வருவான்னு நினைச்சு உங்கப்பன் உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சான்"
அடுத்த் கட்டை தூக்கிப்போட்டு
"இந்த கேஸில ஜெயிச்சுத்தான் பங்களா வாங்கினேன்"
அடுத்த கேஸ் கட்டைப்போட்டு
"இந்த கேஸுலதான் ஊரிலேயே பெரிய மனுஷன்னு பேர் எடுத்தேன்"
"இதோ இந்த கேஸுலதான், தினம் பத்தாயிரம் ஃபீஸ் வாங்கி எங்கு பார்த்தாலும் 'ரஜினிகாந்த்..ரஜினிகாந்த்'னு பேசும்படி செஞ்சேன்... இதெல்லாம் சாதாரண கேஸ் கட்டுகள் இல்லடீ.. என் முன்னேற்றப்பாதையின் படிக்கட்டுக்கள்"
சட்டென்று விரலை சொடுக்கிபடி அடுத்த கேஸ்கட்டை எடுத்துப்போட்டு....
"ஆனா இன்னைக்கு இந்த மோகன் தாஸ் கேஸ்...."
பண்டரிபாய் : "என்னங்க.."
"ஷட் அப்" (கேஸ் கட்டுகளின் கடைசியில் கண்ணனின் உருவம் தெரிய) கண்ணா.. உன்னுடைய முதல் கேஸே என்னுடைய கடைசி கேஸா போயிடுமா?.. ஏண்டா படவா என்னை ஜெயிச்சுருவியா?"
பண்டரிபாய்: "அய்யோ ஜெயிச்சா ஜெயிச்சுட்டுப் போகட்டுமே.. யானைக்கும் அடி சருக்கும்னு சொல்லுவாளே..."
"ஆமாண்டி.. யானைக்கும் அடி சறுக்கும். ஆனா யானை சறுக்கி கீழே விழுந்தா எப்படி அடி படும்னு தெரியுமா?. அதால எழுந்திருக்க முடியாது. அதைத்தானே எல்லோரும் எதிர்பார்க்கிறா... இவன் எப்படா விழுவான்னுதானே எதிர்பார்க்கிறா?.... நடக்காதுடி..."
My God... What a terrific expression
(இந்த மனுஷனைப்பத்தி பேசிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு)
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
9th September 2014, 11:41 AM
#1434
Junior Member
Seasoned Hubber
Mr KC Sir,
Happy to see that fresh coating of paints has been applied in NT's Statue in Tanjore. Any news about the statue opening at Trichy as well as in Nagari in AP.
Regards
-
9th September 2014, 11:49 AM
#1435
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
s.vasudevan
Mr KC Sir,
Happy to see that fresh coating of paints has been applied in NT's Statue in Tanjore. Any news about the statue opening at Trichy as well as in Nagari in AP.Regards
திரு.வாசுதேவன் சார்,
திருச்சி சிலை சம்பந்தமாக தகவல்களைத் திரட்டிவருகிறேன். வரும் அக்டோபர் 5 ஆம் நாள், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சி, ஸ்ரீரெங்கத்தில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நகரி சிலையைப் பொறுத்தவரையில் பணி நிறைவடைந்துள்ளது. பொதுத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், தெலுங்கானா பிரிவினை என்று தொடர் நிகழ்வுகளால் தள்ளிப்போன சிலை திறப்பு விழாவை விரைவில் நடத்திட முயற்சி மேற்கொண்டுள்ளேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th September 2014, 01:17 PM
#1436
Junior Member
Senior Hubber
[
QUOTE=KCSHEKAR;1162955]திரு.வாசுதேவன் சார்,
திருச்சி சிலை சம்பந்தமாக தகவல்களைத் திரட்டிவருகிறேன். வரும் அக்டோபர் 5 ஆம் நாள், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சி, ஸ்ரீரெங்கத்தில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நகரி சிலையைப் பொறுத்தவரையில் பணி நிறைவடைந்துள்ளது. பொதுத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், தெலுங்கானா பிரிவினை என்று தொடர் நிகழ்வுகளால் தள்ளிப்போன சிலை திறப்பு விழாவை விரைவில் நடத்திட முயற்சி மேற்கொண்டுள்ளேன்.
[/QUOTE]
Dear KC Sir
Thanks for your great effort and we are eagerly awaiting the date of opening statue at Trichy
C. Ramachandran.
-
9th September 2014, 01:37 PM
#1437
Junior Member
Senior Hubber
ஜாதி மத மொழி இன அரசியல் வேறுபாடுகளையெல்லாம் தாண்டி நடிகர் திலகத்தின் மேல் தமிழ் மக்கள் வைத்திருக்கும் அன்பு. அதற்கு எல்லையே இல்லை.
ராஜபார்ட் ரங்கதுரை படம் என்பது தமிழ் மக்கள் பலருக்கும் மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாக இன்றும் திகழ்கிறது என்ற நிதர்சன உண்மை.
அவர்கள் அந்தப் படத்தை பெரிய திரையில் டிஜிட்டல் வடிவில் காண வேண்டும் என்பதில் எந்த அளவிற்கு ஆர்வமாக ஆவலாக இருக்கிறார்கள் என்ற உண்மை.
Dear Murali Sir
You are 100% correct. For this i want to share one incident. Last year on july 21st we have organised small function at trichy puthur 4 road santhippu, for that we have gone to
Uraiyur police station for official permission from Sub inspector immediately that guy told about especially this film and expressed like any thing and his age may be 35 to 40 only
i was wondering about his statement. Also he told such a great actor you dont require any permission and do whatever you want. This is situation i want to share this
C.Ramachandran
-
9th September 2014, 06:03 PM
#1438
Junior Member
Regular Hubber
[கோவை ராயல் தியேட்டரில் சந்திப்பு. இன்று 5 வது நாள்.
ஞாயிறு மாலை 90% அரங்கு நிறைவு.வசூலும் திருப்தி.
-
9th September 2014, 06:08 PM
#1439
Junior Member
Regular Hubber

Originally Posted by
Senthilvel Sivaraj
[கோவை ராயல் தியேட்டரில் சந்திப்பு. இன்று 5 வது நாள்.
ஞாயிறு மாலை 90% அரங்கு நிறைவு.வசூலும் திருப்தி.
Sent from my GT-S7562 using Tapatalk
-
9th September 2014, 06:09 PM
#1440
Junior Member
Regular Hubber

Sent from my GT-S7562 using Tapatalk
Bookmarks