-
10th September 2014, 02:44 PM
#1471
Junior Member
Seasoned Hubber
முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது,
சிவாஜி கணேசன் அவர்கள் என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போடவில்லை. அதேபோல, எங்கள் வள்ளலுக்கும் மற்றவர்களை சாப்பிட வைத்துதான் பழக்கமே தவிர, யார் சாப்பாட்டிலும் மண்ணை அள்ளிப் போட்டவர் கிடையாது ( உங்கள் சாப்பாடு உட்பட) என்பது உலகம் அறிந்த உண்மை. நிதானமாக செயல்படும் நீங்களே கூட நான் ஏன் பிறந்தேன் படத்தைப் பற்றி மதுரை தங்கம் அவர்களிடம் நீங்கள் கேட்ட நிகழ்ச்சியை விவரிக்கும் போது, அவரை புரட்சித் தலைவர் ஒதுக்கி விட்டார் என்று கூறுவதும் மூன்று தமிழ் தோன்றியதும் பாடலை மு.க.முத்துவுக்கு எழுதியதற்காக காரில் திரும்பும்போது வாலியை புரட்சித் தலைவர் கோபித்துக் கொண்டார் என்று கூறுவதையும் தவிர்க்கலாமே. (அது வாலி எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட. பல சம்பவங்கள் பல புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் மேற்கோள் காட்டுவது மன வருத்தத்தையே ஏற்படுத்தும்)
சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. சொல்லப்போனால் எஸ்.வி.ரங்காராவ், பாலையா, எம்.ஆர்.ராதா, சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா , நாகையா போன்ற தமிழகத்தின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் தனி இடம் உண்டு. நன்றி.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th September 2014 02:44 PM
# ADS
Circuit advertisement
-
10th September 2014, 04:06 PM
#1472
From Hindu 08/09/14-RANDOR GUY

Sivaji Ganesan, Padmini, J.P. Chandra Babu, M.N. Rajam, M.K. Radha, T.S. Balaiah, O.A.K. Thevar, (Late) M.R. Santhanalakshmi , D.V. Narayanasami, S.A. Asokan, M.N. Krishan, Chandra, V. Suseela, Asokan, Sivasuriyan Saayiram, ‘Master’ Baji and ‘Baby’ Uma
A popular film of the late 50s, Pudhayal was written by Mu. Karunanidhi, then a member of the Madras Legislative Assembly, and had Sivaji Ganesan and Padmini in the lead.
Shot at Newtone and Revathi Studios, and processed at AVM Studio Film Laboratories, the cinematographer was G. Vittal Rao and the editor ‘Panjabi’ (Panchapakesan of the ‘Krishnan-Panju’ duo; the two also directed the film.) It was produced by the Kamal Brothers.
The lyricists were Thanjai Ramaiah Das, Pattukottai Kalyanasundaram, A. Marudhakasi, Atmanathan, and Subramania Bharati. ‘Vinnodum mukhilodum’, sung by C.S. Jayaraman and P. Susheela, was a big hit. Shot at Elliot’s Beach, the song had Padmini and a slim and supple Sivaji doing somersaults! Two songs by Chandra Babu, ‘Hullo, My dear Rami!’ and ‘Unakkaaga ellam’, were also hits. The first has a humming ‘lalala...’, lifted from the ‘The Wedding Samba’ by Edmundo Ros. The tune was repeated in the Hindi Tangewali (1955) in ‘Halkey Halkey’ (composed by Salil Chowdhury).
The music composer was Viswanathan-Ramamurthi, and the action choreographer ‘Stunt’ Somu. Pudhayal was about imaginary gold buried on a beach, which Vellaiambalam (Balaiah) covets. Padmini and Sivaji meet and talk about how her father (M.K. Radha) in Sri Lanka was implicated in her mother’s murder and imprisoned.
Padmini and her sister Thangam come to India, where the sister dies. It’s believed that she drowned and her body lies under the sand. Vellaiambalam overhears the word ‘Thangam’ (‘gold’ in Tamil) and believes a fortune is buried there.
Remembered for: Mu. Karunanidhi’s dialogues, the songs, and for Sivaji, Padmini, Balaiah, and Radha.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th September 2014, 04:20 PM
#1473
Junior Member
Senior Hubber
அன்புள்ள கலைவேந்தன் அவர்களே,
எங்களுக்கும் எம்.ஜி.ஆர் மீது வெறுப்பு கிடையாது.திரு. ரஞ்சன், நம்பியார், அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர் போன்ற நல்ல நடிகர்களின் வரிசையில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் தனி இடம் உண்டு. நன்றி.
ஏழைகளை ஏய்த்ததில்லை முத்துமாரி , நாங்க ஏமாத்தி பிழைத்ததில்லை முத்துமாரி
வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி, இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி.
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 3 Thanks, 3 Likes
-
10th September 2014, 05:13 PM
#1474
Junior Member
Seasoned Hubber
நன்றி திரு. சுந்தராஜன் அவர்களே, நல்ல ரசனை உள்ளவர் நீங்கள் என்று கருதுகிறேன். சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படத்தில் எனக்கு பிடித்த பாடலை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
ஓஹோஹோஹோ மனிதர்களே, ஓடுவதெங்கே சொல்லுங்கள்..
உண்மையை வாங்கி பொய்களை விட்டு உருப்பட வாருங்கள்.
நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
-
10th September 2014, 05:16 PM
#1475
Senior Member
Diamond Hubber

Originally Posted by
KALAIVENTHAN
சொல்லப்போனால் எஸ்.வி.ரங்காராவ், பாலையா, எம்.ஆர்.ராதா, சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா , நாகையா போன்ற தமிழகத்தின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் தனி இடம் உண்டு.
என்னே உங்கள் பெருந்தன்மை ! எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு .
-
10th September 2014, 05:31 PM
#1476
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது,
சிவாஜி கணேசன் அவர்கள் என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போடவில்லை. அதேபோல, எங்கள் வள்ளலுக்கும் மற்றவர்களை சாப்பிட வைத்துதான் பழக்கமே தவிர, யார் சாப்பாட்டிலும் மண்ணை அள்ளிப் போட்டவர் கிடையாது ( உங்கள் சாப்பாடு உட்பட) என்பது உலகம் அறிந்த உண்மை. நிதானமாக செயல்படும் நீங்களே கூட நான் ஏன் பிறந்தேன் படத்தைப் பற்றி மதுரை தங்கம் அவர்களிடம் நீங்கள் கேட்ட நிகழ்ச்சியை விவரிக்கும் போது, அவரை புரட்சித் தலைவர் ஒதுக்கி விட்டார் என்று கூறுவதும் மூன்று தமிழ் தோன்றியதும் பாடலை மு.க.முத்துவுக்கு எழுதியதற்காக காரில் திரும்பும்போது வாலியை புரட்சித் தலைவர் கோபித்துக் கொண்டார் என்று கூறுவதையும் தவிர்க்கலாமே. (அது வாலி எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட. பல சம்பவங்கள் பல புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் மேற்கோள் காட்டுவது மன வருத்தத்தையே ஏற்படுத்தும்)
சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. சொல்லப்போனால் எஸ்.வி.ரங்காராவ், பாலையா, எம்.ஆர்.ராதா, சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா , நாகையா போன்ற தமிழகத்தின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் தனி இடம் உண்டு. நன்றி.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
அன்புள்ள கலைவேந்தன் சார்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
"சிவாஜி" கணேசன் அவர்களும் MG இராமச்சந்திரன் அவர்களும் யார் சாப்பாட்டிலும் மண்ணை போட்டவர்கள் இல்லைதான் !
அவர்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு சாப்பாடு மட்டுமே போட்டு மகிழ்ந்தவர்கள்.
"சிவாஜி" கணேசன் அவர்கள் மீது உங்களுக்கு எந்தவித காழ்புணர்ச்சி இல்லை என்பது உங்கள் பதிலில் இருந்து எங்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
மக்களுக்கு மனம் மகிழும் வகையில் என்டேர்டைன்மென்ட் வகையை சேர்ந்த படங்களை திரு பீ யு சின்னப்பா, Capt ரஞ்சன், திரு M K ராதா , திரு CL ஆனந்தன், திரு ஜெய்ஷங்கர் போன்ற சிறந்த அதிரடி action நடிகர்கள் வரிசையில் நிச்சயம் திரு M G ராமசந்திரன் அவர்களுக்கு முக்கியமான தனி இடம் , மரியாதை நிச்சயமாக உண்டு !
வாழ்க இரு திலகங்களின் புகழ் !
RKS
Last edited by RavikiranSurya; 10th September 2014 at 05:36 PM.
-
10th September 2014, 05:37 PM
#1477
Junior Member
Veteran Hubber

Originally Posted by
joe
என்னே உங்கள் பெருந்தன்மை ! எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு .
அட....தண்ணி வரணும்னு தானே இவ்வளவு உயர்வா எழுதறதே !!
-
10th September 2014, 05:47 PM
#1478
Junior Member
Seasoned Hubber
We have dedicate this song to them from their movie " POIYELE PIRANDHU POIYELE VALARNDHA PULAVAR PERUMANE"
-
10th September 2014, 05:49 PM
#1479
Junior Member
Seasoned Hubber
Recap from the posting of Mr Murali Srinivas
லட்சுமி கல்யாணம்- Part I
கதை வசனம் பாடல்கள் - கண்ணதாசன்
தயாரிப்பு - AL.S புரொடக்சன்ஸ்
இயக்கம் - ஜி.ஆர்.நாதன்
வெளியான நாள் - 15-11-1968
அழகனூர் ஒரு அழகான கிராமம். அங்கே பத்திரிக்கை நிருபராகவும் Agent - ஆகவும் இருப்பவன் கதிர்வேல். அவனின் தந்தை ஏகாம்பரம். கதிர்க்கு தாய்.இல்லை. திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே ஊரில் வசிக்கும் தாய் - பார்வதி மகள்- லட்சுமி. லட்சுமியின் தந்தை அவர்களுடன் இல்லை, அவர் ஒரு அரசியல் கைதி என நமக்கு சொல்லபப்டுகிறது. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் அவர் எங்கேயோ உயிருடன் இருக்கிறார் என்று லட்சுமியின் தாய் நம்புகிறாள். அவள் சுமங்கலி கோலத்தில் வலம் வருவதை ஊரார் கேலி செய்தாலும் அவள் அதிப் பொருட்படுத்துவதில்லை. லட்சுமிக்கு அதே ஊரில் உறவு முறையில் ஒரு மாமன்-அத்தை இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே மகன் கண்ணன், ஆனால் அவன் சற்று அறிவு வளர்ச்சி குன்றியவனாக ஊரில் கருதப்படுகிறான். ஊர் முன்ஸிப் சுந்தரம் பிள்ளை. எப்போதும் சுருட்டும் கையுமாக அலைவதால் சுருட்டு சுந்தரம் பிள்ளை. யார் நன்றாக வாழ்ந்தாலும் பொறுத்துக்க கொள்ள முடியாத மனம் உடையவர். கல்யாணம் செய்துக் கொள்ளாத சுந்தரம், லட்சுமியை பெண் கேட்டு செல்ல, லட்சுமியின் தாய் மறுத்து விடுகிறாள். தனக்கு பெண் கொடுக்க மறுத்ததனால் லட்சுமியின் கல்யாணம் எப்படி நடக்கிறது பார்ப்போம் என்று சவால் விடுகிறார் சுந்தரம்.
கதிர்வேலுவும் அவனது தந்தையும் அந்தக் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் காட்டுகிறார்கள். லட்சுமிக்கு கல்யாணம் செய்து வைக்க கதிர்வேலு மிகுந்த முயற்சி எடுக்கிறான். அந்நேரத்தில் கண்ணனின் பிறந்த நாள் வர அதில் கலந்து கொள்ள ஏகாம்பரத்தின் நண்பர் ராஜாங்கம் தன் மகன் ராமுவுடன் வருகிறார்.
கதிர்வேலுவின் நண்பன் ராமு. பிறந்தநாள் விழா நடக்கிறது. பிறந்தநாள் விழாவில் அந்த ஊருக்கு புதியதாக வந்த சித்த மருத்துவர் விழாவிற்கு வர அவரை பார்க்கும் பார்வதியும், பார்வதியை பார்க்கும் அவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
பிறந்த நாள் விழாவில் லட்சுமியை பார்க்கும் ராமு அவளை விரும்புகிறான். இதை தெரிந்துக் கொண்ட கதிர் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி எடுக்க இரு வீட்டார்களுக்கும் இதில் சம்மதம் தெரிவிக்கிறார்கள். அன்றிரவு யாருக்கும் தெரியாமல் மருத்துவரை சென்று சந்திக்கிறாள் லட்சுமியின் தாய். அப்போதுதான் தெரிகிறது அந்த சித்த மருத்துவராக இருப்பவர் அவளின் கணவன் ரகுநாதன் என்பது. அவள் யாருக்கும் தெரியாமல் போனாலும் சுருட்டு சுந்தரம் பிள்ளை இதை பார்த்து விடுகிறார். அவர் மனதில் ஒரு திட்டம் உருவாகிறது.
கல்யாணத்தன்று மணமேடையில் ராமு தயாராக இருக்க மணமகள் லட்சுமி மணமகளாக மேடைக்கு வர, ராமுவின் தந்தையார் ராஜாங்கத்தை லட்சுமியின் அத்தை [அவர் மகனை லட்சுமி கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்ற கோவத்தில்] தனியே அழைத்து செல்ல அங்கே யார் கண்ணிலும் படாமல் மறைந்திருக்கும் சுந்தரம் பிள்ளை லட்சுமியின் குடும்பத்தைப் பற்றிய அவதூறுகளை சொல்கிறார். முதலில் நம்ப மறுக்கும் ராஜாங்கம் அவர்களின் தொடர்ச்சியான போதனையினால் மனம் மாறி தாலி கட்டும் நேரம் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். கதிர்வேலுவும் மற்றவர்களும் எத்தனை எடுத்துச் சொல்லியும் மகனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் விடுகிறார். லட்சுமியும் அவள் தாயாரும் நில குலைந்து போகின்றனர்.
அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் கதிர்வேலு லட்சுமிக்கு ஒரு நல்ல மாப்பிளையை தானே தேடிக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு சென்னைக்கு போகிறான்.
சென்னையில் திருமண தரகர் ஒருவரின் அலுவலகத்திற்கு செல்லும் கதிர்வேலு அங்கே இருக்கும் புகைப்படங்களை பார்க்க ஒரு வாலிபனின் படத்தை பார்த்து விவரங்கள் கேட்க தரகர் அந்த பையனின் வீட்டிற்கு கூட்டி செல்கிறார். பையனின் தாயார் மிகுந்த நல்ல முறையில் பழகுகிறார். ஆனால் பையன் ராஜதுரை பெரிய குடிகாரன். இந்த விஷயத்தை எப்படியேனும் மறைத்து திருமணம் செய்து வைக்க தரகரிடம் சொல்ல அவரும் அதை கதிர்வேலுவிடமிருந்து மறைத்து விடுகிறார். பேச்சு வாக்கில் பையன் சுந்தரம் பிள்ளைக்கு உறவு என்பதை தெரிந்துக் கொள்ளும் கதிர் கல்யாணத்தின் போது தன் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறான்.
அழகனூர் வரும் ராஜதுரையையும் தாயாரையும் தனியாக சந்திக்க சுந்தரம் பிள்ளை செய்யும் முயற்சியை எல்லாம் கதிரும் அவனது தந்தையும் தடுத்து விடுகின்றனர்.
விடிந்தால் கல்யாணம். அதற்கான வேலைகளில் கதிர் ஈடுபட்டிருக்க மணமகன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அவனது தந்தை காவல் இருக்கிறார். விடிந்தவுடன் அவர்கள் வீட்டிற்கு செல்லும் கதிர் வீட்டை திறந்து பார்க்க அவர்கள் இல்லை. ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர்கள் கிளம்பி போக அவர்களை தேடித் போகும் கதிரை பார்த்து பரிகாசம் செய்கிறார் சுந்தரம் பிள்ளை.
மனம் உடைந்து போகும் தாய் தன் மகளின் மேல் கோவத்தைக் காட்ட மனம் வெறுத்து போகும் மகள் விபரீதமான முடிவு எடுக்க போகும் நேரம் தாய் தடுத்து விடுகிறாள். நடந்தையெல்லாம் அறிந்த அவள் கணவன் ரகுநாதன் உண்மையை சொல்லி விடுகிறேன் என்று சொல்ல தாய் தடுக்கிறாள். உண்மையை சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கி கொள்கிறாள். தாய் நடு இரவில் வீட்டை விட்டு வெளியே போவதை பார்க்கும் மகள் ஒரு நாள் இரவில் அவளை நிறுத்தி கேள்வி கேட்க தாய் அவமானத்தால் கூனி குறுகுகிறாள்.ஆனாலும் உண்மையை சொல்ல மறுக்கிறாள். உண்மை தெரிந்தால் கொலைக் குற்றவாளி என முத்திரை குத்தப்பட்டு போலீசார் தேடிக் கொண்டிருக்கும் தன் கணவனை எங்கே பிடித்து சென்று விடுவார்களோ என்ற பயம்.
இந்நிலையில் சித்தா மருத்துவமனைக்கு கண்ணில் ஒரு பிரச்சனை என்று வந்து மருந்து ஊற்றிக் கொண்டு போகும் ஒருவர் மீது ரகுநாதனுக்கு சந்தேகம் தோன்றுகிறது. அவர் சந்தேகப்பட்டபடியே வந்தவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். தாங்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர் இவர்தான் என்று தெரிந்ததும் அவரை கைது செய்ய வரும் போலீஸ் அவரை காணாமல் தேடுகிறது. துரத்துகின்ற போலீசின் கையில் இருந்த தப்பிக்க தன் மனைவி வாழும் வீட்டிற்கே ரகு வர, லட்சுமியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனைவிக்கும் மகளுக்கும் ஏற்படும் மோதலை காண சகிக்காமல் ரகுநாதன் வெளியேறுகிறார்.
இதற்கிடையில் மனம் ஒடிந்து மீண்டும் சென்னைக்கு செல்லும் கதிர்வேலு அங்கே தன் பழைய நண்பன் பாலுவை சந்திக்கிறான். ஒரு வங்கியில் வேலை செய்யும் அவன் வீட்டிற்கு சென்று தாயை பார்க்கிறான். அவனது ஒரே தங்கை தாரா நோய்வாய்ப்பட்டு இப்போது நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்பதை பார்க்கும் கதிர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறான். பாலுவிடம் லட்சுமியை கல்யாணம் செய்துக் கொள்ள கதிர் வேண்டுகோள் விடுக்க தன் தங்கையின் நிலையை சுட்டிக் காட்டும் போதே கதிர் தானே அவன் தங்கைக்கு வாழ்வு கொடுப்பதாக வாக்களிக்கிறான். உடனே கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படுகிறது.
அனைத்து உண்மைகளும் சொல்லப்பட்டு விட்டதால் சுந்தரம் பிள்ளையின் சூழ்ச்சி பலிக்காமல் போகிறது. இப்போது பிரச்னை வேறு ரூபத்தில் வருகிறது. கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் போலீசார் வீட்டில் நுழைந்து வங்கியில் பணத்தை கையாடல் செய்தற்காக கைது செய்ய வந்திருப்பதாக கூற, கதிர்வேலு நிலை குலைந்து போகிறான். தான் திருடியது உண்மைதான் என்று ஒப்புக் கொள்ளும் பாலு அதை தங்கையின் திருமனதிற்காக செய்ததாக சொல்கிறான். நண்பனிடம் கதிர் நீ சொன்ன வாக்கை உன்னால் காப்பாற்ற முடியாமல் போனாலும் கூட நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் என உறுதி கூறுகிறான்.
லட்சுமியின் கல்யாணத்திற்கு இத்தனை தடங்கல்கள் ஏற்பட்டதற்கு காரணம் தன் நண்பன் ராமுவும் அவன் தந்தை ராஜாங்கமும்தான் என கோவம் கொள்ளும் கதிர், அவனை இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு போகிறான். மகளின் கல்யாணம் நடக்கப் போவதை அறிந்து அதைக் காண மாறுவேடத்தில் வரும் ரகுநாதன் கல்யாணம் நின்று போனவுடன் அவரும் ராமுவின் வீட்டிற்கு செல்கிறார்.
இங்கே தொடர்ச்சியாக நடந்த தடங்கல்களினால் மனம் வெறுத்து தன் அத்தை மகனையே திருமணம் செய்துக் கொள்ள லட்சுமி முடிவெடுக்கிறாள். மாமா மற்றும் உறவினர்கள் வேண்டாம் இந்த முடிவு என்று சொல்லியும் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள். திருமண வேலைகள் இங்கே நடந்துக் கொண்டிருக்கின்றன.
ராமுவை தேடி செல்லும் கதிர் அவனை தாக்க முயற்சிக்க, தான் இப்போதும் லட்சுமியை மணம் செய்துக் கொள்ள தயார் என்று ராமு சொல்ல அவனையும் கூட்டிக் கொண்டு கதிர் கிளம்ப ராமுவின் தந்தை ராஜாங்கம் தடுக்கிறார். அந்நேரம் அங்கே வரும் ரகுநாதன் தான் ராஜாங்கம் மற்றும் ஏகாம்பரம் இருவரின் பழைய நண்பன் என்பதையும் ராஜாங்கத்தின் தம்பியை கொன்ற ஆங்கிலேய சப் கலக்டரை தான் சுட்ட போது ஏற்பட்ட சப் கலக்டர்- ன் மரணம் காரணமாகதான் போலீஸ் தன்னை தேடுகிறது என்று தன்னிலை விளக்கம் கொடுக்க உண்மையை உணரும் ராஜாங்கம் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார். நால்வரும் அழகனூர் கிளம்ப ரகுநாதனை கைது செய்ய போலீஸ் இவர்களை சுற்றி வளைக்க ராமுவையும் ராஜாங்கத்தையும் முன்னால் அனுப்பி வைத்துவிட்டு கதிர்வேலுவும் ரகுநாதனும் பின்பக்க வழியாக வெளியேறும் நேரத்தில் போலீசார் சுடும் குண்டு ரகுநாதனின் காலில் படுகிறது. அவரை தூக்கி போட்டுக் கொண்டு கதிர்வேலு ஊருக்கு திரும்ப போலீஸ் துரத்துகிறது.
அதே நேரத்தில் அங்கே லட்சுமியின் கல்யாண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஊரில் வந்து ரகுநாதனோடு இறங்குகிறான் கதிர். துரத்தி வரும் போலீசார் மீண்டும் சுட மீண்டும் ரகுநாதனின் உடலில் குண்டு பாய்கிறது. ரகுநாதனை எப்படியேனும் மகளின் கல்யாணத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று துடிப்பில் கதிர்வேலு ஒரு பக்கம், அத்தை மகனோடு லட்சுமிக்கு கல்யாணம் நடத்தும் ஏற்பாடுகள் ஒரு பக்கம், ராமு மணமகனாக தன்னை தயாரித்துக் கொண்டு திருமண ஏற்பாடுகளில் மூழ்குவது ஒரு பக்கம், மகளின் கல்யாணத்தை பார்ப்பதற்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டே வரும் ரகுநாதன், அவர் எப்படியும் கல்யாணத்திற்கு வருவார் என்று கைது செய்ய காத்திருக்கும் போலீஸ் - இந்த சூழலில் என்ன நடந்தது, லட்சுமி கல்யாணம் நடந்ததா என்பதற்கு வெள்ளித்திரையில் விடை காண்க.
(தொடரும்)
-
10th September 2014, 05:49 PM
#1480

Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks