-
11th September 2014, 01:02 PM
#3491
Junior Member
Veteran Hubber

Courtesy: Vanambadi Magazine, Malaysia & Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
11th September 2014 01:02 PM
# ADS
Circuit advertisement
-
11th September 2014, 01:06 PM
#3492
Junior Member
Veteran Hubber

Courtesy: Vanambadi Magazine, Malaysia & Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 01:09 PM
#3493
Junior Member
Veteran Hubber

Courtesy: Vanambadi Magazine, Malaysia & Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
11th September 2014, 01:16 PM
#3494
Junior Member
Veteran Hubber

Courtesy: Vanambadi Magazine, Malaysia & Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th September 2014, 01:21 PM
#3495
Junior Member
Veteran Hubber
பெருந்தன்மையின் பேரரசர்

Courtesy: Vanambadi Magazine, Malaysia & Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th September 2014, 01:44 PM
#3496
Junior Member
Diamond Hubber
சில நடப்புகளை கேள்விபட்டால் சிரிப்புதான் வருகிறது! "சந்திரோதயம் "- காவியத்தில் மக்கள்திலகம் பேசும் வசன- காட்சிதான் உடன் நினைவிலாடுகிறது..."என் எதிரி கூட எனக்கு சமமா இல்லைனா, அதை அலட்சியம் பண்றவன் நா..." -இந்த வசனமெல்லாம் சும்மா சினிமாவோட சரின்னு, நினைக்க வேண்டாம் "அந்த" பக்க தோழர்களே - இந்த வரலாற்று புகழ் வசனம் திரைஉலகம்--- அரசியல் உலகம் - என எல்லாவற்றுக்கும் பொருந்திய, பொருந்தி கொண்டிருக்கும், பொருந்த போகும் -சொற்கள் எனில் மிகையன்று...
-
11th September 2014, 01:58 PM
#3497
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Pradeep Balu
Makkal Thilagam M.G.R, Mr.Devar, and Actress Vijayakumari are in this image
Working Still From The Movie "Ther Thiruvizha"
"தேர் திருவிழா"- குறைந்த நாட்களில் அதிக மகசூல் செய்த தேவர் பிலிம்ஸ் -திரைப்படம் 1968- ஆண்டு கும்போகோணத்தில் "மஹா மகம் "-திருவிழா நடை பெற்று வந்த நேரத்தில் சிறிது தூரத்தில் கொள்ளிடம்--- காவேரி ஆற்றங்கரை பக்கம் இதன் படபிடிப்பு நடந்ததாம்...அப்பொழுது ஒரு வாரமும் அதன் சுற்று புறம் எங்கும் மக்கள் கூட்டமாக திகழ்ந்ததாம்...காவல்துறையினர் மிகுந்த சிரமப்பட்டு பொது மக்களுக்கும், மக்கள்திலகம் சார்ந்த படப்படிப்பு குழுவினருக்கும் பாதுகாத்து ஒத்துழைப்பு நடந்ததாக - படபிடிப்பை பார்த்த மூத்த பிரமுகர் தந்த தகவல் தான் இது...
-
11th September 2014, 02:02 PM
#3498
Junior Member
Veteran Hubber
இதய தெய்வத்தை வணங்கும் இசைக்குயில்

Courtesy: Vanambadi Magazine, Malaysia & Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
11th September 2014, 02:42 PM
#3499
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
என் மனம் கவர்ந்த still நன்றி வினோத் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
11th September 2014, 02:44 PM
#3500
Junior Member
Seasoned Hubber
திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு,
தங்களது நீண்ட பதிலுக்கு நன்றி. என் இரண்டாவது கேள்விக்கு (காரில் சென்ற போது வாலியிடம் புரட்சித் தலைவர் கோபித்துக் கொண்டார் என்பதை தவிர்த்திருக்கலாமே) தங்களிடம் இருந்து பதில் இல்லாத போதும் முதல் கேள்விக்கான விளக்கம் சற்று நியாயமாகவே படுகிறது. நியாயம் என்று தெரிந்தால் ஏற்றுக் கொள்ளும் தர்மதேவனின் வழி வந்தவர்கள் நாங்கள். எங்கள் தலைவரை குறை கூறும் நோக்கம் உங்களுக்கு இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.
உங்களின் கண்ணியமான வார்த்தைகள் உங்கள் நண்பர்களிடம் இல்லையே. எத்தனை கிண்டல்கள் கேலிகள். எங்கள் தலைவரின் படம் தொலைக்காட்சிகளில்தான் ஒளிபரப்பாகும் என்றும், குப்புற விழுந்தாலும் மை மீசையில் மண் ஒட்டவில்லை என்றும் சமீப காலங்களில் கூட வேலுமணி, ஸ்ரீதர் போன்றவர்களை பட வாய்ப்புக்காக அமுக்கினார் என்று எத்தனை கேலி மொழிகள். எங்களை திரு. கோபால் கிண்டல் செய்வது ஒருபுறம் இருக்கட்டும். திரு. ஆர்.கே.எஸ். அவர்களை ஆரியர் என்றும், எங்கள் தலைவரின் மலர் வெளியிடுவதற்காக திரு. பம்மலார் அவர்களை அறமற்ற வியாபாரிகள் என்று பழித்தும், ஏன்? உங்களையே நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் என்று ஏசியதும், பண்பாளர் திரு. ராகவேந்திரா அவர்களை இவர் செய்த ஏளனமும் கிண்டலும் தாங்காமல் அவர் நொந்துபோய் உங்கள் திரியில் இருந்தே சற்று ஒதுங்கி இருக்கிறாரே? இது உங்கள் உட்கட்சி விவகாரம், சாரி... உள் திரி விவகாரம் நான் தலையிட விரும்பவில்லை என்றாலும் மதுரை தங்கத்துக்காக நீங்கள் வருந்துவதுபோல் பண்பாளர் ராகவேந்திராவுக்காக நாங்களும் வருந்துகிறோம்.
அவரை பண்பாளர் என்று சொல்ல காரணம் உண்டு. வசூல் விவரங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஈகோவைத் தவிர்த்து சுமூகமாக பேசினால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு என்று இரண்டாண்டுக்கு முன்பே கண்ணியமாக கூறியதுடன் அவ்வப்போது எங்கள் திரிக்கு வந்து நல்ல தகவல்கள், கருத்துக்கள், நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதால்தான் அவரை பண்பாளர் என்றேன். அதனால் எங்களுக்கும் நண்பராக இருக்கும் அவரை உங்களில் சிலர் கேலி செய்வதற்காக வருந்துகிறேன்.
தலைவர் பற்றி எழுதவோ பேசவோ கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை திரு. முரளி.ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள் நாங்கள். யாரும் யாரையும் தடுக்க முடியாது. ஆனால், எங்கள் தலைவரைப் பற்றி எதிர்மறையாக விமர்சிக்காதீர்கள் என்றுதான் கூறுகிறோம். நான் கூறியுள்ள பட்டியலில் உள்ள நடிகர்கள் வரிசையில் சிவாஜி கணேசன் அவர்களையும் சேர்ப்பதால் எனக்கு சிவாஜி கணேசன் மீதுள்ள ‘மதிப்பு’ புரிகிறது என்கிறீர்களே, அப்படியானால், பாலையா, எம்.ஆர். ராதா போன்ற மேதைகளை நீங்கள் அவமதிக்கிறீர்களா? சிவாஜி கணேசன் அவர்கள் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எங்கள் நடிகர்தான் ஒரே நடிகர் வேறு யாரும் நடிகர்கள் இல்லை என்று கூறாதீர்கள். நாங்கள் யாராக இருந்தாலும் அவர்களது தனித் திறமைகளை ஏற்றுப் போற்றுவோம்.
சமீபத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் 50ம் ஆண்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. அதில் பேசிய திரு. சித்ராலயா கோபு அவர்கள், ‘‘காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்யப் போவதாக கூறுகிறார்கள். இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் இப்போது உயிரோடு இருந்து, வாடா கோபு நாமே அந்தப் படத்தை ரீமேக் செய்வோம் என்று கூறினாலும் நான் வேண்டாம் என்று சொல்வேன். காரணம், திரு.பாலையா அவர்களுக்கும் நாகேஷ் அவர்களுக்கும் எங்கே போவது? என்று கேட்டபோது அரங்கமே கலங்கிப் போனதே.
நேற்று நான் கூறிய நடிகர்கள் பட்டியலில் டி.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் கூட சிறந்த நடிகர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவரே. பாடலுக்கு வாயசைத்து நடிப்பதே கடினம். அதிலும் பின்னணிப் பாடகரின் குரலுக்கு வேறொருவர் படத்தில் வாயசைக்க அந்தப் பாட்டுக்கு தான் பொய்யாக வாயசைப்பதாக அதிலும் சில இடங்களில் காமெடிக்காக தப்பாக வாயசைப்பதுபோல நடிப்பதற்கு மிகுந்த திறமையும் அபாரமான நடிப்புத் திறனும் டைமிங் சென்சும் வேண்டும். இதை தனது சிறப்பான நடிப்பால் அடுத்த வீட்டுப் பெண், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படங்களில் அருமையாக செய்திருப்பார் திரு.டி.ஆர். ராமச்சந்திரன் அவர்கள்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் வ.உ.சி. பாத்திரத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் சிறப்பாக நடித்தார் என்றால் அதே படத்தில் பாரதியாரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய சுப்பையாவை கிண்டல் செய்கிறார் திரு. கோபால். அதேபோல கலைவேந்தனுக்கு பிடித்த டி.ஆர்.ராமச்சந்திரன் என்று கூறி அவரையும் கிண்டல் செய்யாதீர்கள். காரணம், உங்களில் பலருக்கு தெரியுமோ என்னமோ எனக்கு தெரியாது. நகைச்சுவை நடிப்பில் பரிமளித்து, தமிழ் திரையுலகின் முதல் காமெடி கதாநாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்ற திருக்காம்புலியூர் ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்..... பண்பாளர் ராகவேந்திராவின் உறவினர். டி.ஆர்.ராமச்சந்திரனை கிண்டல் செய்வதன் மூலம் எங்களுக்கும் நண்பரான திரு. ராகவேந்திராவை காயப்படுத்தாதீர்கள் கோபால் அவர்களே. அவர் நல்லவர்.
மகாத்மா காந்தி, அய்யா, அண்ணா, புரட்சித் தலைவர் வழியில் ஜனநாயகத்தையும் யாருக்கும் எந்தக் கெடுதலையும் செய்யக்கூடாது என்ற அகிம்சா கொள்கையில் நம்பிக்கையும் கொண்ட எங்களுக்கு கோபாலைப் போல ‘‘நாங்கள் சும்மா இருக்க மாட்டோம், மூடிக் கொண்டு இருக்கச் சொல்லுங்கள்’ என்று உருட்டல் மிரட்டலாக பேசக் கூடத் தெரியாதே? இனியாவது உங்கள் முகாமில் இருந்து கண்ணியமான வார்த்தைகளை எதிர்பார்க்கிறோம் திரு. முரளி. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks