Page 263 of 401 FirstFirst ... 163213253261262263264265273313363 ... LastLast
Results 2,621 to 2,630 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2621
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    கிருஷ்ணா ஜி..

    இன்னும் வாத்தியாரையா போடும் க்ரீன் டீ பிரம்ம்ம்மாதமாக இருக்கும்.
    அரே அரே

    சமையலும் இவர் தானா .
    எத்தனை ரோல் அய்யா இவர் பண்ணுவார்
    ஆமாம் உமக்கு எப்படி ஒய் இது எல்லாம் தெரியும்
    எங்கேயோ இடிக்குதே

    எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது வாணி பாட்டு தானே
    அவன் தான் மனிதன்
    நடிகர் திலகம் கலைச்செல்வி பேபி சுமதி டான்ஸ் எல்லாம் சூப்பர் ஆ இருக்கும்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2622
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னதான் இருந்தாலும் ஐ மிஸ் வாசு சார்..அவர் இருந்திருந்தார்னா சிருஷ்டி டாங்கே யோட அந்தக்கால ஃபோட்டோவும் இந்தக்கால ஃபோட்டோவும் போட்டிருப்பார்..ம்ம்

  4. #2623
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    கண்ணா
    இரண்டு குழியும் ஒண்ணா
    சின்ன (கண்)ணா குழியை கவனியுங்க
    மூணாவது யாரு தெரியுதா
    gkrishna

  5. Likes chinnakkannan liked this post
  6. #2624
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    ஆமாம் உமக்கு எப்படி ஒய் இது எல்லாம் தெரியும்
    சென்னையில் அவர் வீடு நம்ம வீட்டுப் பக்கம்தானே !

  7. #2625
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மாம்பலமா ? நங்கனல்லுரா?
    உங்க ஆத்தில் இருந்து கூப்பிடு தூரம் தானா ?
    gkrishna

  8. #2626
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இது அரைகுறை மயக்கமல்ல.. ஆனந்த மயக்கம்..
    திருவிழாக் காலமல்ல.. மங்கையின் திருமணக்கோலம்
    மனதிற்குள் மழைபொழியும்.. கனவுகள் ஆயிரம் தோன்றும்
    பருவத்தின் வாசல்தனிலே தேர்வுகள் நடத்தல் போல
    உள்ளத்துள் மின்சாரம் அங்கே உற்பத்தியாகும் என்றே
    உணர்ந்தவர் சொல்வதுண்டு!. உண்மையதிலே உண்டு!
    தன்னிலை மறக்கும் பெண்மை வெட்கத்தில் தலைகவிழ
    அந்நிலை என்னென்று கேட்டால் எப்படிச் சொல்லும்?
    பெண்மையின் பூரணமே அந்த நாணத்தில் நலம்பாடும்போது
    தோன்றும் நயனங்கள் தானே அப்பெண்மையைத் தாலாட்டச்
    சொல்லும்? எழுதப்படிக்கத் தெரியாதபோதும்கூட அறிகின்ற
    கலைதனில் ஒன்று! மலருக்குள் தேனெடுக்கச் செல்லும்
    வண்டின் தேவையை.. மலரா அறியும்?
    அறிந்தா இதழ் திறந்து வைக்கும்?
    தோன்றிய உயிரனங்கள் அணைத்துகொள்ளும்
    தோன்றலின் ரகசியம் தானே!
    ஆயினும் இங்கே மனுடன் அனுதினம் தேடும் தெய்வீக ராகம்!
    அன்பே.. அன்பே.. பெண்மையும் சொல்லும்
    பதில் .. அத்தான்.. அத்தான்..
    பாசமலரில் விளைந்த பாட்டு மலரிது..
    கற்பனைச் சிறகடித்து கண்ணதாசன் எழுதிய பாட்டு..
    பி.சுசீலா குரலால் இனிக்கும் பாடு!
    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மயங்கலாம் கேட்டு!

    மயங்குகிறாள் ஒரு மாது!!



    ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்
    ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ம்
    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    திருவாய் மொழியாலே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    ஆஆஆஆஆஆஆஆ
    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    மயங்குகிறாள் ஒரு மாது
    தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
    துணிவில்லையா பயம் விடவில்லையா?
    தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
    துணிவில்லையா பயம் விடவில்லையா?
    நாழிகை செல்வதும் நினைவில்லையா?
    நாழிகை செல்வதும் நினைவில்லையா?
    அன்பே அன்பே அன்பே அன்பே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    ஆஆஆஆஆஆஆஆ
    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    மயங்குகிறாள் ஒரு மாது
    பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
    படித்தவள் தான் அதை மறந்து விட்டாள்
    காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
    காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
    அன்பே அன்பே அன்பே அன்பே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    ஆஆஆஆஆஆஆஆ
    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    மயங்குகிறாள் ஒரு மாது
    அஹஹா அஹஹா அஹஹாஹஹஹாஹாஹ
    ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

    gkrishna

  9. Likes Russellmai, chinnakkannan liked this post
  10. #2627
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இசையின் மொழியை முற்றிலும் அறிந்த குயில் எம்.எஸ். சுப்புலஷ்மி ...

    மீரா திரைப்படத்தில் வரும் இந்த கானம் காற்றினிலே வரும் கீதம்..

    இயற்றியிருக்கிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி..

    எத்தனையோ பாடல்கள் நம் காதில் விழுந்தாலும் எத்தனையோ கானங்கள் நம் நெஞ்சம் நுழைந்தாலும் .. இந்த கானம் தருகிற அமைதியும் ஆனந்தமும் அலாதியானது.

    எந்த அலம்பலும் இல்லாமல் அன்பின் மொழியாக .. நந்தவனத்திற்குள் வருகின்ற தென்றல் போலே கேட்போரை நிம்மதியின் சன்னதிக்கு அழைத்துசெல்கிறார்.

    கண்ணனை எண்ணி மனம் உருகி.. உச்சநிலையில் உள்ளம் தொடுகிற பணியை
    இந்தப் பாடல் எந்த ஆர்பாட்டமுமின்றி செய்துவிடுகிறது.

    கர்நாடக சங்கீதத்தில் முதல் நிலையில் விளங்கிய இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி பாடிய ஒரு சில திரைப்பாடல்களில் இதுவும் ஒன்று.
    மனம் ஒருமிக்க இந்தப் பாடலில் மயங்கலாம்..
    இறை அருள் பெற்ற இசையரசியின் குரல் கேட்டு இன்புறலாம்

    எஸ். வி. வெங்கட்ராமன் அவர்களின் இசையில் இழைந்தோடிவரும் இன்ப கானம்!


    gkrishna

  11. Likes Russellmai liked this post
  12. #2628
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    அரை நாளில்

    மாட்டு வண்டி பாடல் - ஜல் ஜல் சலங்கை ஒலி
    கல்கண்டு - அன்றைய நாட்கள்
    சிவகுமார் - கமல்
    மன்மத லீலை
    தவமணி - அன்றும் இன்றும்
    ராஜகுமாரி
    அங்கமுத்து
    ஷப்னா - பிறந்த நாள்
    எம்ஜிஆர் ஆட்டோ கிராப்
    அமெரிக்காவில் எம்ஜிஆர் -1974
    மயங்குகிறாள் ஒரு மாது
    கவர்ச்சி படம்

    7 பக்கங்கள் சூப்பர் ஸ்பீட் .பல்வேறு தகவல்கள் -அருமை .

    போனஸ் ..... ஒரு அரிய் நிழற் படம் ... எல்லோருக்கும் ......

  13. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post
  14. #2629
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    கிருஷ்ணா சார்

    அரை நாளில்

    மாட்டு வண்டி பாடல் - ஜல் ஜல் சலங்கை ஒலி
    கல்கண்டு - அன்றைய நாட்கள்
    சிவகுமார் - கமல்
    மன்மத லீலை
    தவமணி - அன்றும் இன்றும்
    ராஜகுமாரி
    அங்கமுத்து
    ஷப்னா - பிறந்த நாள்
    எம்ஜிஆர் ஆட்டோ கிராப்
    அமெரிக்காவில் எம்ஜிஆர் -1974
    மயங்குகிறாள் ஒரு மாது
    கவர்ச்சி படம்

    7 பக்கங்கள் சூப்பர் ஸ்பீட் .பல்வேறு தகவல்கள் -அருமை .

    போனஸ் ..... ஒரு அரிய் நிழற் படம் ... எல்லோருக்கும் ......
    எஸ்வி சார்

    உங்கள் வெற்றியின் ரகசியம் இதுதான் எஸ்வி சார்
    வாழ்த்துவதிலும் சரி தகவல்களை வழங்குவதிலும் சரி மேலும் பரிசு கொடுப்பதிலும் உங்களுக்கு இணை அதுவும் அந்த அபூர்வ பரிசு நடிகர் திலகத்தின் காவல் தெய்வம் ஷூட்டிங் படம் தானே அது

    நமது புதிய நண்பர் ராஜ்ராஜ் அவர்கள் மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து போட்டோ எல்லாம் எடுத்து இருக்கிறார் . நம்ம வாசு சார் கூட நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து போட்டோ எல்லாம் எடுத்து இருக்கிறார். எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வர இருக்கிறது
    உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்க்கும்
    gkrishna

  15. Likes chinnakkannan liked this post
  16. #2630
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராஜ் ராஜ் சாரின் அமர்க்களமான் மலரும் நினைவுகள் என்னுடைய நாஸ்டால்ஜியாவைக் கொஞ்சம்கிளறிவிட்டது..

    அய்யம்பேட்டையில் கல்லூரி முடித்த காலத்தில்அக்காவீட்டில் ஓரிரு மாதங்கள் இருந்த தருணஙகளில் சுற்றியுள்ள தஞ்சாவூர்,கும்பகோணம்,திருவையாறு
    எனப் பல ஊர்களைச் சுற்றிப் பார்த்தது, அப்புறம் அக்காவீட்டூப் பக்கத்து வீட்டு ப்ளஸ் டூ செளராஷ்டிரப் பெண் சித்ரா..என.. எனில்
    அதைச் சொல்ல நேரம் இல்லை இப்போது!! என்ன சொல்லவந்தேன்..பழங்கதை..இப்படி கதை வரும் பாடல்களைப்
    பற்றி எண்ணக் குதிரையை ஓட விட்டதில்..

    இப்படி ஓர் தாலாட்டுப் பாடவா அதில் அப்படியே என் கதையைக் கூறவா (அவர்கள்)

    நான் நீரோடையில் நீராடையில்
    யாரோ வந்து ஏதோ சொல்லி
    கன்னத்தைத் தொட்டு நெஞ்சத்தைக் கிள்ளிக் கையைப் புடிச்சான் (ஒரே பாடலில் அஸ்வினியின் ஃப்ளாஷ்பேக் ஒருகை ஓசை)

    சொல்லவா கதை சொல்லவா (சாவித்ரீ இன் நவ்ராத்ரி)

    முன்னஒரு காலத்தில முருங்கமலைக் காட்டுக்குள்ள
    தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்துவந்தது (மூன்றாம்பிறை கமல் அண்ட் குட்ட்டி ஸ்ரீதேவி)

    ஒரேஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா (படிக்காத மேதை ந.தி)

    கதை கேளு கதைகேளு ரசமான கதை கேளு ( மைக்கேல்மதனகாமராஜன் இளையராஜா டைட்டில் பாட்டு)

    ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
    செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே (லவகுசா பி.சுசீலா பி.லீலா)

    கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
    வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்(பஞ்ச வர்ணக் கிளி பி சுசீலா)

    இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது (கமல் எழுதும் குட்டிக்கதை வித் சீதா உன்னால் முடியும் தம்பி)

    நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்ல போகிறேன் ஓங்கிய காடு (அ.ஒ.தொ. கமல்ஹாசன்)

    சிறகில் எனை மூடி அருமை மகள் போல
    வளர்த்த கதை சொல்லவா
    கனவில் நினையாத காலம் இடை வந்து
    பிரித்த கதை சொல்லவா...(பாச மலர் ந.தி சாவித்ரி)

    என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே
    சொல்லிச் சொல்லி முடித்துவிட்டேன் சொன்ன கதை புரியவில்லை ( வெ.ஆ ..ஜெயலலிதா)

    எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
    என்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே (சக்கரவர்த்தி திருமகள் எம்.ஜி.ஆர்)

    உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை (அவள் அப்படித் தான்?)

    விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று ??

    ம்ம் நிறைய க் கதை இருக்குங்கோ..விட்டுப் போன கதை..அதான் நீங்க சொல்வீஹளே..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •