Page 272 of 401 FirstFirst ... 172222262270271272273274282322372 ... LastLast
Results 2,711 to 2,720 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2711
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பாபனாசம் சிவன் மியூசிக் போட்டிருக்காரா என்ன எனக்குத் தெரியாதே.
    Sivakavi with MKT in the lead. "vadhaname chandra bimbamo" and " vaLLalai paadum vaayaal" are from Siivakavi.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. Thanks chinnakkannan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2712
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    (சின்ன) கண்ணனை (i mean கிருஷ்ணா பரமாத்மா) பற்றி வைரமுத்துவின் கற்பனை

    வைரமுத்து சலங்கை ஒலி படத்தில் வான் போலே வண்ணம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி, எஸ் பி ஷைலஜா) ஒரு ட்விஸ்ட் சொல்கிறார். கன்னியருடன் விளையாடியவன், பெண்களோடு அலைந்தவன் கோபியரின் சேலைகளை எடுத்தது பாஞ்சாலி கேட்கும்போது கொடுப்பதற்காகவே என்று ஒரு ஜோடனை.

    பெண்கள் உடை எடுத்தவனே
    தங்கைக்கு உடை கொடுத்தவனே
    சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி

    கண்ணதாசன் பூவும் பொட்டும் படத்தில் எழுதிய பாடலில் (இசை கோவர்தனம் பாடியவர் பி சுசீலா)

    எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
    பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா

    என்ற வரிகளில் பெண் மானம் காக்க கண்ணன் தன்னையே தந்தான் என்கிறார். அவர் கையிலிருந்தே மீட்டர் கணக்கில், பல வண்ணங்களில் சேலைகள் என்பது வழக்கமான விளக்கம்

    கருத்துகளை பகிர்ந்து கொள்ள உதவிய நண்பர் மோகனக்ரிஷ்ணன் அவர்களுக்கு நன்றி
    gkrishna

  5. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #2713
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'Palkon Ki Chhaon Mein' இந்திப் படத்தில் இதே மாதிரி 'கௌரிக் கல்யாணம்' மாதிரி போஸ்ட்மேன் ராஜேஷ்கண்ணா பாடும் பாடல் 'Daakiya Daak Laaya'. தமிழ் மாதிரி வராது. பாடலில் ராஜேஷ்கண்ணாவை மட்டுமே 'கண்ணா' பார்க்கவும். அதை மீறி அருணா இராணி குளித்துவிட்டு வருவதை கண்கள் மேய்ந்தால் நான் பொறுப்பல்ல. இருவருக்கு இந்த அன்பு எச்சரிக்கை.

    Last edited by vasudevan31355; 19th September 2014 at 12:10 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes Russellmai liked this post
  8. #2714
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    இன்றைய ஸ்பெஷல் .இந்த கௌரி கல்யாணம் பற்றி ஒரு சிறு தகவல் என் பொறியில் தட்டியது . சண்டை காட்சிகளை பற்றி இரண்டு தினங்களுக்கு முன் பேசி கொண்டு இருந்தோம். இந்த படத்தில் ஜெய் மற்றும் ரவி இருவரும் சண்டையிடும் காட்சி மிக ஆக்ரோஷமாக இருக்கும். அந்த காலத்தில் பாத்திரக்கடை பைட் என்று சொல்வார்கள். இரண்டு முன்னணி ஹீரோகள் ஒரே திரைபடத்தில் எதிரும் புதிருமாக இருந்தால் இரண்டு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்த இயக்குனர் மற்றும் சண்டை காட்சி அமைப்பாளர் மிகவும் சிரமபடுவார்கள். இரண்டு ஹீரோகளும் ஈகோ இல்லாமல் காட்சி அமைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அக்னி நட்சத்திரம் திரை படத்தில் கூட இளைய திலகம் பிரபு ,நவரச நாயகன் கார்த்திக் இருவரும் சண்டை போடும் இறுதி காட்சி குதிரை லாயத்தில் எடுத்து இருப்பார்கள்.

    நீங்கள் முதல் பாகத்தில் தபால் காரன் தங்கை படத்தை பற்றி கூறும் போது நாம் இருவரும் இந்த 'ஒருவர் மனதை ஒருவர் அறிய' பாடலை பற்றி விரிவாக அல்லாமல் ஒரு வரி விமர்சனம் எழுதி இருந்த நினைவு.
    அப்போது ராஜேஷ் கண்ணா பற்றி ஒரு பேச்சு வந்தது .அது என்ன என்று மறந்து விட்டது .நினைவிருந்தால் தெரியபடுத்தவும்

    இந்த பாடலை படிக்க ஆரம்பிக்கும் போதே பாடலின் விசில் சப்தத்தை நிச்சயம் குறிப்பிட்டு இருப்பீர்கள் என்று நினைத்து கொண்டே படித்தேன். நீங்களும் அப்படியே குறிப்பிட்டு இருக்கிறீர்கள் .உண்மையில் அந்த விசில் சப்தம் சொர்க்கம் தான். விசில் என்றுடன் ஒரு நினைவு உண்டு
    'ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்து இருந்தான் ' சுசீலாவின் பாடலுக்கு ஊடே இது போன்று ஒரு விசில் சப்தம் வரும்
    'நாணம் ஒரு புறம் ,ஆசை ஒருபுறம்
    கவலை ஒருபுறம் அவள் நிலைமை திரிபுரம்' என்ற வரிகளுக்கு நடுவே இது போன்று ஒரு விசில் சப்தத்தை நாம் உணரலாம்
    அதே போல் எங்க மாமா படத்திலும் 'செல்ல கிளிகலாலம் பள்ளியிலே '
    பாடலிலும் இது போன்று ஒரு அனுபவத்தை சந்திக்கலாம்
    gkrishna

  9. Likes Russellmai liked this post
  10. #2715
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷலில் வந்திருக்கும் 'ஒருவர் மனதை ஒருவர் அறிய' பாடலின் ஆரம்ப இசையைக் கேளுங்கள். (ஆடியோ லிங்கில்) இந்தப் படத்திற்கு பின் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சென்று வெளிவந்த உலகப் புகழ் பெற்ற 'ஆராதனா' படத்தின் 'Mere Sapnon Ki Rani' பாடலின் இசையையும் கேட்டு 'கௌரிக் கல்யாணம்' பாடலின் ஆரம்ப இசையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அசந்து போவீர்கள். லஷ்மிகாந்த் பியாரிலால் பின்னால் தந்த இசையை 3 வருடங்கள் முன்னாலேயே தந்துவிட்டார் ஒன்றுமே தெரியாத நமது விஸ்வநாதன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2716
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அதனால் தான் அவர் மக்கு (M) எஸ் (S) என்று எல்லாவற்றிகும் மண்டை ஆட்டும் PRO விஸ்வநாதன்
    gkrishna

  12. #2717
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே மிகப் பாடல்..!

    **

    இரவு தான்.. வானில் முழு மதி வெளிச்ச கிரணங்கள் கீழே பாய்ச்சி வந்த போது சற்றே திகைத்தது.

    கீழே இருப்பது யார்..இரண்டு பெண்கள்..இளமைப் பருவம்..கண்களில் கனவூறி காண்பவரைக் கொள்ளை கொள வைக்கும் அழகு..ஆனால் இதென்ன.. கிக் கிக் என ச் சிரிக்கவேண்டிய இதழ்கள் மூடியிருக்கின்றன கண்கள் சிவந்திருக்கின்றன. கண்ணோரம் வழியே வழிந்த நீரின் கறை காய்ந்துமிருக்கிறது..இருவரும் எதை வெறித்து ப் பார்க்கிறார்கள்..எதிரே இருந்த மலையை..

    கீழே அந்தக் குடிலுக்கு வெளியே இருந்தவர்கள் பாரியின் மகள்கள் அங்கவை சங்கவை.. அவர்களது அழுகைக்குக் காரணம் இந்தப் பெளர்ணமி வெண்ணிலா..

    ஆம். போன பெளர்ணமியின் போது அவர்களது தந்தையான பாரி உயிரோடு இருந்தார்..இந்த பெளர்ணமி ஒளி அந்தப் பறம்பு மலையில் பட்ட போது அங்கவை சங்கவை இருவரும் தனது தந்தை தாயொடு மகிழ்ந்து இருந்தார்கள். பறம்பு மலையும் அவர்களது சொந்தமாய் இருந்தது..

    இன்றும்பெள்ர்ணமி.. கலகலப்பாய்ச் சந்திரன் வானத்தில்.பறம்புமலையும் இருக்கிறது..என்ன அது அவர்களுக்குச் சொந்தமில்லை.. போன பெளர்ணமியில் இருந்த மன்னன் பாரி அவர்கள் தந்தை உயிருடன் இல்லை.. சந்தோஷ நாட்கள் போய் இப்போது பெளர்ணமியிலும் சோக இருள் சூழ்ந்திருக்கிறது அவர்களை..

    பாடல் வருகிறது..
    அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
    எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
    இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவின்
    வென்றெறி முரசின் வேந்தர் எம்
    குன்றும்கொண்டார்யாம் எந்தையும் இலமே (புற நானூறு 112)

    சோகம் தான்.கபிலர் தான் அந்தப் பெண்களைக் காத்து மணம் செய்வித்து வைத்தார் என்பது வ்ரலாறு..

    *

    திரைப்பாடல் நினைவுக்கு வந்திருக்குமே

    அன்று வந்ததும் இதே நிலா குழு : சச்சச்சா
    இன்று வந்ததும் அதே நிலா குழு : சச்சச்சா
    என்றும் உள்ளது ஒரே நிலா குழு : சச்சச்சா
    இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆ.....ஆ......

    அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா

    அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா

    கம்பன் பாடிய வெள்ளி நிலா கவியில்
    ஆடிய பிள்ளை நிலா ஆ...ஆ..
    கவியில் ஆடிய பிள்ளை நிலா ..


    காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா


    பாவை லைலா பார்த்த நிலா பாலைவனத்தின் வண்ண நிலா


    நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா


    பார்த்துப் பார்த்து சலித்த நிலா பாதி தேய்ந்தது வெள்ளை நிலா ஆ...ஆ...

    **
    இனி சோகம்:
    அன்று வந்ததும் இதே நிலா
    இன்று வந்ததும் அதே நிலா
    இன்பம் தந்ததும் ஒரே நிலா
    ஏங்க வைப்பதும் ஒரே நிலா ..

    காதல் தந்தது வண்ண நிலா
    களங்கமில்லா கன்னி நிலா
    மேகம் மூடிய வெள்ளி நிலா
    வெள்ளை உள்ளம் கொண்ட நிலா

    பேசச் சொன்னது அன்பு நிலா
    பிரியச் சொன்னது துன்ப நிலா
    தூங்கச் சொன்னது காதல் நிலா
    துடிக்க விட்டது கால நிலா

    அழகாய் சூழ் நிலைக்கு த் தக்கனவாய் காதல் மகிழ்ச்சி காதல் சோகம் என எழுதியிருப்பார் கவிஞர் .காலப் போக்கில் பிரிவானதால் துடிக்கவிட்டிடுத்தாம்
    நிலா காதலர்களை.. ம்ம்

    நிலா என எடுக்காமல் நாம் பார்க்க வேண்டியது வெண்ணிலா.. என்பதால் முதலில் வருவது..

    இந்தப் பொண்ணைப் பாருங்களேன்.. இளம்பருவம்.. உடலில் பருவத்தால் விளைந்த ஊக்கம், தாக்கம், ஏக்கம் இவையெல்லாம் கூட இரவில் உறக்கம் வரவில்லை. கண்களும் விழித்திருக்கிறது..உள்ளமும் விழித்திருக்கிறது.பாடுகிறாள்..

    வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
    எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்

    நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
    (அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்ற நால்வகைக் குணம் பெண்களுக்கு இருக்கும்..அதில் காதல் வயப்பட்ட பெண்களுக்கு. அச்சோ.. இவனைப் பிடிச்சுருக்கே இந்த படவா கண்ணுலயே மயக்கப் பார்க்கறானே.. மெல்லத் தொட வர்றானே..ஓ. எல்லை மீறக் கூடாதே.என மனசுக்குள் குரல் ஒலிச்சு பயப்படுத்தும்)
    ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?

    ஆசை கொண்ட இதயமது (இது சும்மாச்சுக்குச் சொல்லிக்கறா.. அனல் போல் கொதிப்பது உடலென்று அறியாத சிறுமியா அவள்)

    வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்

    மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது?
    கன்னி எந்தன் வடிவமது ( ஒரு வேளை ஓவர் கான்ஃபிடன்ஸோ..பரவால்லை தன்னழகுல்ல நம்பிக்கை வைத்திருக்கும் பெண்ணழகு..குட்..)
    காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து
    பூமகளின் நெஞ்சினிலே போர் தொடுக்கும் நேரமெது?

    மஞ்சள் வெயில் மாலை அது (பாடறது ராவேளைல. ஆனால் ஈவ்னிங்க் டயத்துலருந்தே ஒரு மாதிரி ஆகிவிடுகிறது ஆசைகொண்ட நெஞ்சமும் உடலும்)
    முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
    கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?
    முத்து ஒன்று பிறந்து வரும்
    ( சீக்கிரம் அம்மா அப்பா கிட்ட பேசி கல்யாணம் பண்ணி வைக்கணும் இந்தக் கன்னிக்கு..காதல் கொஞ்சம் ஓவராகிடுத்து போல..)
    **
    நெக்ஸ்ட் என்னவாம்.
    இன்னொருகாதலனுக்குக் கோபம்.
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    என்னக்கண்டு.. உன்னைக் கண்டு
    என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே

    தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
    தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
    எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி
    எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே

    பின்ன காதல்னா பொஸஸிவ்னெஸ் இல்லாமயா இருக்கும்
    இன்னும் இரண்டு ஜோடிகள் அந்த நிலாவொளி தன்னை வாட்டக் கூடாது தன் ஜோடிய வாட்டட்டும்னுபாடிக்கறாங்க.
    உள்ளமெல்லா மிளகாயோ
    ஒவ்வொரு தே சுரைக்காயோ
    வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ..
    கோதையெனைக் காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
    அப்புறம் சேர்ந்திருக்கணும்னு ஆசை வர. இருவரையும் காயாதே தனிமையிலே காய் வெண்ணிலா என்கிறார்கள். இந்த வெண்ணிலா அப்பவாவது திருந்திச்சா என்ன..
    **
    பாரதியின் தீர்த்தக் கரைதனிலே யில் வரும் பிரிவு ஏக்கப் பாட்டு. வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்..
    அழகிய பாடல்..
    நிறையபாடல்கள் எல்லாம் காதலைச் சுமந்தே வந்திருக்கின்றன..குட்டிலிஸ்ட் போட்டால்
    நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
    நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த பெண்ணிலா
    வராமல் வந்த என் தேவி.

    நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா..

    வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை
    தன்பிடிவாதம் விடாது என்மனம்போல் நடக்காது
    தனக்கென ஏதும் சொலாது நம்மையும் தூங்க விடாது.
    *
    ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
    பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ

    ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
    பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ

    நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
    இன்று நனவாக நீ இங்கு வந்தாய்

    ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
    அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
    *
    ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
    அசைந்தாடும் தாரகையாக அசைந்தோடி ஆடுதே ஆனந்தம் தேடுதே (யார்யார்..)
    *
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே (மைக், சொர்ண புஷ்பம்
    *

    ஐஸீம் வைர முத்துவும்..

    வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
    கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
    தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

    கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
    கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
    வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
    கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

    (ஹை.இதையே தான் வெண்ணிலா வானில் வரும் வேளையில் பாட்டும் பேசுதா..)
    *
    இன்னும் நிறைய வெண்ணிலா இருக்கிறது. ப்ராஜெக்ட் பாஸா இல்லையான்னு தெரியலை.. எனில் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்..-
    //vandhu vandhu konjuvadhen veNNilaave
    -vaana meedhil neendi Odum veNNilaave
    -veNNilavin oLithanil veesum thendral// இது என்ன பாட்டுன்னு தெரியவில்லை.

    ஆனால்…எல்லார் வாழ்க்கையிலும் வெண்ணிலா ஒருபங்கு உண்டு.குறிப்பாக அன்று கல்லூரிப் பருவத்தில் மதுரையின் மொட்டை மாடியில் இருந்த போது…..பக்கத்து வீட்டு…(சரி சொன்னால் கதை என்பார்கள்…சொல்லாதே கண்ணா..

    பின்ன வரட்டா.

  13. Likes Russellmai liked this post
  14. #2718
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    krishna sir,

    antha pachcha bootham rombave uggiramaa payamuruthuthu. naan payanthu enna panaa? muthalla masuthi poai manthirichikkanum.
    Last edited by vasudevan31355; 19th September 2014 at 12:42 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #2719
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்.. இன்றைய ஸ்பெஷல் ஒருவர் மனதை ஒருவர் அறிய …சூப்பர்.. பாட்டுக் கேட்டிருக்கிறேன்..இந்த சிச்சுவேஷன் என்று தெரியாது..
    அதேபோல் ராஜேஷ் கன்னா ஹிந்திப் பாடலுக்கும் நன்றி அண்ட் ஒருஓ. ..பாவம் அந்த அருணாஇரானிகாரிகை..சமர்த்தா குளிச்சுட்டு கோவிலுக்குப் போற வழில்ல கடிதம் தானே எழுதச் சொல்லுது. நான் அவங்களைப் பார்க்கலை இரண்டுக்கும் நன்றி…

  16. #2720
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    krishna sir,

    antha pachcha bootham rombave uggiramaa payamuruthuthu. naan payanthu enna panaa? muthalla masuthi poai manthirichikkanum.
    மாரியாத்த காளியாத்த
    மாரியாத்த காளியாத்த
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •