-
14th September 2014, 06:00 AM
#101
Senior Member
Diamond Hubber
இளைய ராஜா செய்ததெல்லாம் ,technological embellishment (இதில் ரகுமான் அவரை தாண்டி எங்கோ சென்றார் புதிய trend உருவாக்கி)
மன்னிக்கவும். முழுவதும் வேறுபடுகிறேன். ஒரு தம்தன நம்தன தாளம் வரும், ஒரு சிறுபொன்மணி அசையும், ஒரு வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி, ஒரு தென்றல் வந்து தீண்டும்போது, ஒரு ராக தீப நேரம் ஏற்றும் நேரம் (இதுபோல எண்ணிலடங்கா..) கண்டிப்பாக technological embellishment கிடையாது. உச்ச இசை ஞானம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
14th September 2014 06:00 AM
# ADS
Circuit advertisement
-
14th September 2014, 06:42 AM
#102
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
தங்கள் கருத்துக்களை என்றுமே பொருட்படுத்துபவன் நான். நான் சொல்பவற்றையும் கேளுங்கள்.ரசிகரான நீங்கள் ,மேலும் உங்களை வளர்த்து கொண்டு பார்வை விசாலம் பெறலாம்.
நன்றி. உலகத்தில் எந்தவொரு இசையமைப்பாளராக இருந்தாலும் மேன்மையான இசையாக்கங்களை ராஜா மூலமே அடைந்துவிடலாம். அந்த வழியில் ஜி ராமநாதன், சி.ஆர் சுப்பராமன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கேவிமகாதேவன் என எல்லோரது பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தே வருகிறேன்.
உங்கள் எம்.எஸ்.வி கட்டுரைக்கு வாழ்த்துக்கள். மேதையின் சிறப்பம்சங்களை இலக்கண ரீதியாக மட்டுமே விவரிப்பதோடு நின்றுவிடாமல் எளியோர்க்கும் புரியும் வண்ணம் பாடலாக்கங்க்களில் எம்.எஸ்.வி தொடங்கிவைத்த முதற்கண் முயற்சிகளை சுட்டிக்காட்டவும். என்னைப் போன்றவர்களுக்கு புரிந்துகொள்ள எளிதாக இருக்கும். உதாரணத்திற்கு.. ராஜாவின் பாடல் ஒன்று. காதல் ஓவியம் படத்தில் இடம்பெற்ற "நதியில் ஆடும் பூவனம்" பாடலின் ஆரம்பத்தில் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இடம்பெற..அதன் நடுவில் உதயமாகும் ஜானகியின் ராக ஆலாபனை...இரண்டும் ஒன்றோடொன்று சங்கமித்து ஒரு இடத்தில் ஸ்லோகம் நின்றுவிட பிரதான மெலடி மட்டுமே (ஜானகி குரல்) நீட்டித்து முடியும் நேரத்தில் பல்லவி ஆரம்பிக்கிறது. என் இதுவரையிலான பாடல் கேட்கும் அனுபவத்தில் இந்தவகை முயற்சியில் இதுவே முதற்கண் பாடலாகத் தோன்றியது. (ராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்களின் பாடல்களில் இந்த யுத்தி வந்திருந்தால் சுட்டிக் காட்டலாம்)
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th September 2014, 07:33 AM
#103
Junior Member
Newbie Hubber
அப்படியெல்லாம் ,மற்ற இசையமைப்பாளர்களை புறம் தள்ளி ,இளையராஜாவிடம் மட்டும் எல்லாம் அடைந்து விட முடியாது. நான் ,இளையராஜா விஸ்வநாதனை மாடல் ஆக கொண்டு செய்த முயற்சிகளை,அதில் அடைந்த தோல்விகளை விளக்க போகிறேன். நான் யாருடனும் ஒப்பிடாமல்,செய்ய நினைத்திருந்ததை நீங்கள் ஒப்பீடு செய்ய என்னை தூண்டியதற்கு நன்றி. இது ,இக்கட்டுரைக்கு கூடுதல் பலமே.
அவர்(எம்.எஸ்.வீ -டி.கே.ஆர்,எம்.எஸ்.வீ) இசையில் யாராலும் கிட்டே நெருங்க முடியாத பாடல்களை மெலடி,குத்திசை,துள்ளிசை,சோதனை, வெளிபாணி எல்லாமே சேர்ந்தவை. ஒரு 100 ஆவது பட்டியல் இடுகிறேன்.
இளைய ராஜா இசையில் என்னை மறந்ததுண்டு. விகசித்ததுண்டு. பழைய நினைவுகளில் அகப் பட்டு இன்ப சித்திரவதை அடைந்ததுண்டு. ஆனால் எஸ்.எஸ்.வீ இசையில் mysterious divinity with psychedelic unpredictability ,இளையராஜாவின் எந்த பாடலிலும் காணக் கிடைப்பதில்லை. அதுதான் எம்.எஸ்.வீ . நான் தரும் நூறு பாடல்களை சுகமாக கேட்டு விட்டு ,வாதம் புரியுங்கள்.
இளையராஜா ,முயற்சியால்,பயிலும் ஆர்வத்தால் தன்னை உருவாக்கி செதுக்கி கொண்டவர். எம்.எஸ்.வீ எந்த இலக்கணத்திலும் வராத சுயம்பு.அவரின் மூளை ,கிட்டத்தட்ட தாமஸ் ஆல்வா எடிசன் போல.
அதே மாதிரி திட்டமிட்டு கச்சிதமாக நோட்ஸ் கொடுத்து இசை கலைஞர்களை ஆட்டுவிப்பது ஒரு வகை.,
அவர்களை தட்டி கொடுத்து மனோதர்மம் என்று சங்கீதத்தில் சொல்ல படும் வகையில் planned &Spot improvisations க்கு இடம் கொடுப்பது இன்னொரு வகை.
நான் இரண்டாவது வகையில் தான் பல உன்னத பாடல்களை கண்டிருக்கிறேன்.
எம்.எஸ்.வீயுடையது முக்கால்வாசி இரண்டாம் வகையே.
-
14th September 2014, 08:05 AM
#104
Senior Member
Diamond Hubber
திரு விக்கி அவர்களின் சமீபத்திய காணொளிப் பதிவு..
****************************************
Demonstration of Major and Relative Minor - ஒருவர் வாழும் ஆலயம் - தீம் இசையாக்கம்.

Originally Posted by
Vicky
I have always highlighted Maestro Illaiyaraaja's understanding of toying around with a Major key and its relative minor seamlessly. Usually if the Pallavi is in Major the Charanam switches to relative minor and vice versa.
Today's selection is a dummy guide to this phenomenon executed in all of just 4 bars. This is the theme music of the classic 'Oruvar Vaazhum Aalayam'.
........
.............
..................
This music sounds incredibly simple. But its the vision of charting the trajectory of a piece of music first and then setting all other tracks according to it, which makes me go 'Wow'. Not a single note that you hear in this bit is composed independently. They are well conceived knowing what their place in the whole 4 bars. This school of thought in composing is simply not to be found anymore..
This is the reason whenever I look around, I see no match for Maestro Ilaiyaraaja.
Last edited by venkkiram; 14th September 2014 at 08:07 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th September 2014, 04:48 AM
#105
Senior Member
Diamond Hubber
இசைக்கு ஈடு இணையில்லாத இழப்பு .. மாண்டலின் ஸ்ரீனிவாசின் மறைவு. ஆழ்ந்த அனுதாபங்கள்!
ராஜாவின் தனி இசையாக சில ஆக்கங்களை ஸ்ரீநிவாஸ் வாசித்திருக்கிறார்.
Raagam: Raaja Lahari (Raagam discovered by Ilayaraaja) || Thaalam: Rupakam || Year: 1994
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th September 2014, 04:50 AM
#106
Senior Member
Diamond Hubber
Shri Shivasutha || Maestro Ilayaraaja's Classics with Mandolin U Srinivas
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th September 2014, 04:51 AM
#107
Senior Member
Diamond Hubber
Arul Thavazhum || Maestro Ilayaraaja's Classics || U Srinivas Plays them on Mandolin
இது போன்ற பொக்கிஷங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த வெங்கடேஸ்வரன் கணேசன் அவர்களுக்கு நன்றிகள் பல!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st September 2014, 08:36 AM
#108
Senior Member
Diamond Hubber
ட்வீட்டரில் காணக் கிடைத்த சில வாசகங்கள். இவற்றோடு ஒத்துப் போவதால் இதை இங்கு பதிவு செய்கிறேன்.
** கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் இந்த இந்திய தேசத்தில் உருவானவர்களில் இளையராஜாவை விடப் பெருங்கலைஞன் எவன்?
** நுனிப்புல் மேய்ந்தே பழகிய தமிழர்களுக்கு இசையின் அரசியலும், நுட்பங்களும் புரியாமல் போவதில் ஆச்சரியமில்லை.
** தலைசிறந்த ஈரான்/ கொரியப் படங்கள் உலகிற்கு ஈரானின் கொரியாவின் கலாச்சாரத்தையும் வாழ்வியலையும் பறைசாற்றுகிறது. அதுதான் கலையின் வேலை. அப்படி ராஜாவின் இசை தமிழர் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் காட்சிப்படுத்த மிக வலுவாகப் பயன்படுகிறது. இது தான் உலகத்தரம். நம் கலாச்சாரத்தை நம்முடன் சற்றும் தொடர்பில்லாத மாற்றுக் கலாச்சார மனிதர்களிடம் எடுத்துச் செல்லும் கருவிதான் கலை - இயல்/ இசை/ நாடகம். அப்படி நமது முகத்தை நமது முகமாகவே அச்சு அசலாக பிரதிபலிக்க உறுதுணையாக இருக்கும் இசை ராஜாவினுடையது.
** இளையராஜா மட்டும் இல்லையென்றால் இரவென்பது வெறும் இருட்டாகவே அறியப்பட்டிருக்கும்...!!

முத்தாய்ப்பாக மு.க அவர்களின் புகழாரம்..
அருவியின் ஆலோலம் - விடியலின் இனிமை
கோகிலத்தின் கூவல் - பூகம்பத்தின் சுழற்சி
தென்றலின் தெம்மாங்கு - பிரளயத்தின் ஆவேசம்
இவைதான் இசை ஞானி இளையராஜாவின் இசை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd September 2014, 12:01 AM
#109
Senior Member
Diamond Hubber
இந்த நேர்காணலை இப்போதுதான் முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பு அமையும் மக்களுக்கு பிரமிப்பாக இருக்கும். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் இதை தொலைக்காட்சில் பல வாரங்களுக்கு பார்த்த மக்களுக்கு அன்று ஏற்பட்ட பிரமிப்பு, ஆனந்தம் இன்னும் அடங்காமல் ஆழ்மனதில் எரிந்துகொண்டே இருக்கிறதே எனத் தோன்றும்..
பதிவேற்றம் செய்த அன்பருக்கு நன்றிகள் பல.
SPB Interviews Ilayaraaja for Doordarshan (Year: 1995)
இதுபோன்ற காணொளிகள் மேலும் மேலும் இசையில் ராஜா தன்னிகரற்றவர் என்பதையே பறைசாற்றுகிறது.
Last edited by venkkiram; 22nd September 2014 at 12:04 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
22nd September 2014, 04:25 PM
#110
Junior Member
Newbie Hubber
After comming across Rakkama Kaiya Thattu from the above video, lot of memories came gushing back without my permission. After about 25 years, I still can't shun down the intelligent BGM score in the movie Thalapathi. Just a grain to prove not only the musical aspect, but the Directorial touch of IR in this particular score, where he washes the emotions with a single piece of melody by using different instruments for 2 different suituations :
Initially when Surya is announced about the depature of his love Subhu, he stands, again under the shelter of the SUN (MR you are great), thinking the awesome moments that he passed with Subhu, at the same time watching his dream walking away from him. Here its the conversation of Surya with his heart, musically the violin & the bow taking their places. IR fiddles it quite elegantly to bring out the sorrow of Surya, how much he is going to miss her. Following it, the wind instrument comes into place symbolising (explained in the visuals too) the fading Subhu, his love, just like a dust in the wind.
The second time, there is no other instruments, just violin. As Surya and Subhu approach each other, the fiddle goes accute where the bow and the violin are struck so closely, just like the assosiation of the melting hearts of Surya & Subhu. As they advance, it reaches its peak, a moment of unimaginable emotion, made understanble by IR.
A bgm is not only a tool to elevate a scene, it should be more meaningful. Director in IR does wonders in resonating the visuals with his meaning full compositions.
Last edited by mappi; 22nd September 2014 at 04:35 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks