-
20th September 2014, 01:24 AM
#3271
Junior Member
Devoted Hubber
பாடல்: சிரிச்சா கொல்லிமலை குயிலு
படம்: ஜோதி
பாடியவர்கள்: பாலசுப்ரமணியம் & ஷைலஜா
வரிகள்: வைரமுத்து
மேற்கு தொடர்ச்சி மலைகளில் கொல்லிமலைக்கு ஒரு அழகும், ஐய்தீகமும் உண்டு. அங்கு, கொல்லிமலை குயிலு காதலில் விழும் வரை, கழுகுகள் வட்டமிடும் ஊரில் தன்னை பாதுகாத்து கொள்ள கரடு மொரடாக இருக்கிறாள். நாயகன் அழகாய் சொல்கிறான்.
கல்லா கெடந்து பூ ஆனா (ள்)
ரெண்டாந்தடவ ஆளானா (ள்)
கரும்பாறைய போல் இருந்தா (ள்)
சொக மாம்பழமா கனிஞ்சா (ள்)
வழக்கம் போல், ராஜா சாரை என்ன சொல்வது? அவர் இல்லை என்றால் கல் பூ ஆனால் என்ன, பொன் ஆனால் நமக்கென்ன? இன்று மட்டும் இந்த பாடலை 30 முறை கேட்டேன்.
இந்த பாடலை பல நூறு முறை கேட்டு ரசித்திருந்தாலும், பாடல் இடம் பெற்ற ஜோதி படத்தை நான் இது வரை பார்க்கவில்லை. ஒவ்வொரு முறை பாடலை கேட்கும் போதெல்லாம் தியாகராஜனும் சரிதாவும் சேர்ந்து பாடுவது போல எனக்கு ஒரு பிரம்மை ஏற்படும். அருமையான பாடல். சரியாக படமாக்கபடாத பல நூறு பாடல்களில் இதுவும் ஒன்று. முதலாம் இடை இசையை ராட்டினத்தை காட்டி இயக்குனர் மணிவண்ணன் எப்படி வீனடிதிருப்பாரோ, அதே போல், அம்பிகா மோகனுக்கு சாப்பாடு பரிமாறி, இலையை எடுக்கும் வரை உள்ள மொக்கை காட்சிகளுக்கு ஒரு அருமையான BGM குடுத்து, ராஜா சாரும் தன்னுடைய நேரத்தை வீணடித்திருக்கிறார்.
Last edited by rajaramsgi; 20th September 2014 at 01:38 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th September 2014 01:24 AM
# ADS
Circuit advertisement
-
20th September 2014, 03:17 AM
#3272
Junior Member
Devoted Hubber
பாடல்: சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே...
படம்: காவல் கீதம்
பாடியவர்கள்: பாலசுப்ரமணியம் & ஜானகி.
வரிகள்: வாலி
இந்த ஜானெரில் ராஜா சார் நிறைய கொடுத்திருக்கிறார். ராமன் அப்துல்லாவில் முத்தமிழே, அதர்மத்தில் முத்துமணி, அரண்மனைகிளியில் ராசாவே உன்னை விட மாட்டேன்.. இன்னும் எழுதி கொண்டே போகலாம்.
பிராமண பையன், பிள்ளைமார் பொண்ணு - இவர்களுக்கு கலப்பு திருமணம். மேல்குடி என்பதால் இசையில் செழுமை போங்க, வாலி வார்த்தை ஜாலத்தை அள்ளி தெளிக்கிறார். இந்த பாடலின் காட்சி அமைப்பு மற்றும் வரிகளில், கிடைத்த சூழ்நிலைக்குள் நிறைய பாவங்கள், கிளுகிளுப்பு மற்றும் சந்தோஷத்துக்கு குறைவில்லை. வரிகளின் இடையில் சமூக அக்கறை வேறு. ஆனால் ரம்மியமான இசை, எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.
சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்க பொன்னில் வார்த்த பைங்கிளியே
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றி சுற்றி வந்து துன் புறுத்தும்...
ஜாதி பூவை ஒரு ஜாதி பேதமின்றி நீ தான் பறிக்க
ஆதி நாளில் இந்த ஜாதி ஏது, நம்மை யார் தான் தடுக்க?
....
மீண்டும் மீண்டும் விரல் தீண்ட தீண்ட இங்கு ஏதோ மயக்கம்
வாரி வாரி ஒரு வள்ளல் போல தர ஏன் ஏன் தயக்கம்
மோகம் நீ வளர்க்க மேனி தான் வியர்க்க பார் பார் நடுக்கம்
ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
வேகம் வேகம் இந்த வாலிபமே
வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே
வேதம் புதிது படத்துக்கு ராஜா சார் வேலை செய்து, இந்த பாடலை அந்த படத்தில் ராஜா அமலாவுக்கு டுயட்டாய் கொடுத்து பாரதிராஜா இயக்கி இருந்தால் எப்படி APT டாக இருந்திருக்கும்? ம்....
Last edited by rajaramsgi; 20th September 2014 at 03:22 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th September 2014, 04:24 AM
#3273
Junior Member
Devoted Hubber
பாடல்: ஆதாமும் ஏவாளும் போல
படம்: மருதுபாண்டி
பாடியவர்கள்: அருண்மொழி, ஜானகி
வரிகள்: பிறைசூடன்
ஆதாம் ஏவாள் போல், ஆடை கூட பாரமாகும் என நினைக்கும் இரண்டு இளஞ்சிட்டுக்கள் ஆடி பாடி மகிழும் அழகுக்கு அழகு சேர்க்கும் இசையும் வரிகளும். 16 முறை வரும் தம்புரா சத்தம்.. பாடல் முழவதும் வரும் கப்பாஸ், உங்களை விட்டா யாரால சார் இதை இவ்வளவு அழகா பயன்படுத்த முடியும்? வேறு யாராவது கப்பாஸ் சத்தத்தை இவ்வளவு தூய்மையாக தந்திருக்கிறார்களா? செல்வி படத்தில், இளமனது பல கனவு பாடலில் கப்பாஸ் நினைவிருக்கிறதா?
(இந்த ஆதாமும் ஏவாளும் பின்னர் திருமணம் செய்து கொண்டு நிஜத்தில் ஹாப்பி கப்புல்சாக இருக்கிறார்கள்.)
படம் பார்த்த முதலே இந்த பாடலுக்கு நான் அடிமை. 24 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. எளிமையான இந்த பாடல் தரும் இதமும் சுகமும் எனக்கு மட்டும் தானா இல்லை வேறு யாரேனும் அதை உணர்ந்திருக்கிறீர்களா?
Last edited by rajaramsgi; 20th September 2014 at 04:29 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th September 2014, 05:27 AM
#3274
Senior Member
Diamond Hubber
ராஜாராம் அய்யா! ஒரே நாளில் இதுபோல பாடல்மழை பொழிந்தால் திரி தாங்குமா? ஒவ்வொன்றும் முத்துக்கள். வழக்கம் போல உங்கள் வருணனை அருமை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th September 2014, 05:47 AM
#3275
Senior Member
Veteran Hubber
listened to Azhagarsamiyin kuthirai entire BGM track!
this man is an impossible genius - what a stupendously eclectiv score to a movie with an entirely unknown cast!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th September 2014, 06:05 AM
#3276
Senior Member
Diamond Hubber
92, 93வரைக்கும்தான் ராஜா என்ற பொய்யை திரும்ப திரும்ப நிறுவி திருப்தி காண்பவர்களுக்கு... கீழ்வரும் பாடல்களில் ராஜா கொடுத்திருக்கும் மேன்மையான இசையை கேட்டுவிட்டு மறுபடியும் பூமிக்குள் முகத்தைப் புதைந்து கொள்ளவும்.
கிழக்கும் மேற்கும் (1998) கத்துங்குயிலே கத்துங்குயிலே - சாதனா சர்கம் குரலில்
செந்தூரம் (1998) ஆலமரும் மேலமரும்.. - உன்னி கிருஷ்ணன் -பவதாரிணி குரல்களில்.. இதுபோல ஒரு சரணம் கட்டமைப்பை வேறெந்த ராஜா/ வேறு இசையமைப்பாளர் பாடல்களையும் கேட்டதில்லை..
தேசிய கீதம் (1998) - நான் வாக்கப்பட்ட - சுஜாதா குரலில்
காதல் கவிதை (1998) - காதல் மீது.. ஹரிஹரன்
வீரத் தாலாட்டு (1998) - படிக்கட்டுமா படிக்கட்டுமா.. ஜானகி குரலில்
பூந்தோட்டம் (1998) - மீட்டாத ஒரு வீணை - ஹரிஹரன் மகாலட்சுமி குரல்களில்.. (ஹரிஹரனின் இதுவரை நீங்கள் பாடிய பாடல்களிலேயே எதைப் பாடி முடிக்க தாவு தீர்ந்து போனது எனக் கேட்டால் இதைச் சொல்வார் என நினைக்கிறென். பெண்டு எடுத்திருப்பார் ராஜா அவரை.. ). திரையிசையில் ரீதிகௌளை ராகம் என்றால் ராஜாவின் கோட்டை. வெகுசிலரே இதைத் தொட்டிருகிறார்கள். ஆனால் அவர்கள் இந்த ராகத்தில் எழுப்பியிருப்பது என்னவோ வீடுகளே. யாரும் தொடாத/தொட முடியாத ராகத்தின் உள்ளெ புகுந்து வெளியெ வருவது ராஜாவுக்கே எட்டக் கூடிய கலை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th September 2014, 03:46 PM
#3277
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
ராஜாராம் அய்யா! ஒரே நாளில் இதுபோல பாடல்மழை பொழிந்தால் திரி தாங்குமா? ஒவ்வொன்றும் முத்துக்கள். வழக்கம் போல உங்கள் வருணனை அருமை.
Hats off. Absolutely enjoying them all.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st September 2014, 01:41 AM
#3278
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
செந்தூரம் (1998) ஆலமரும் மேலமரும்.. - உன்னி கிருஷ்ணன் -பவதாரிணி குரல்களில்.. இதுபோல ஒரு சரணம் கட்டமைப்பை வேறெந்த ராஜா/ வேறு இசையமைப்பாளர் பாடல்களையும் கேட்டதில்லை..
நன்றி வெங்கிராம். ஆலமரம் மேலமரும் பாடலில் வரும் கோரஸ்க்கு எதை சார் ஈடாக கொடுக்கலாம்? கோரஸ் குயில்கள் தந்தனனா சொல்லும் போதும், இடையில் ஆஆஆஆ படிக்கும் போதும் சுகமாய் இருக்கும். எங்கேயோ கேட்டது போலவே தோணும்.
வன்னார் என்று சொல்லப்படும் டோபிகள் ஆத்தோரத்தில் துணி துவைத்து கொண்டிருக்கும் பின்னணியில், அவர்களுடைய வலியையும் வேதனையையும் சொல்லும் ஒரு சமூக சிந்தனையுள்ள இனிமையான பாடல்.
இரண்டாவது இன்ட்ருலுட் தொடங்கும் போது , ஒரு சின்ன மியுசிகல் ஜெர்க் கொடுத்துவிட்டு,
தந்ததன தந்தாதனா தந்த தன தந்தா தனா (2)
தந்த னன தந்தாதானா தந்தனன தந்தானனா னா.....
ஆஹா.......super
-
23rd September 2014, 01:27 AM
#3279
Senior Member
Veteran Hubber
venkkiram:
'kathhunguyile' - first interlude !! I would like to know if anyone from the present crop can come up with such 'world-class' stuff !
-
23rd September 2014, 01:46 AM
#3280
Senior Member
Diamond Hubber

Originally Posted by
irir123
venkkiram:
'kathhunguyile' - first interlude !! I would like to know if anyone from the present crop can come up with such 'world-class' stuff !
அற்புதமான இடையிசை அது irir. இன்னும் நூறு வருடங்கள் கழித்துக் கேட்டாலும் அது நம்மை ஆச்சர்யப் படுத்தும், தீராத பிரமிப்பில் ஆழ்த்தும்.
'அன்னக்கிளி'யில் ஆரம்பித்து இன்றைய மெகா, தாரை தப்பட்டை வரை இசையாக்கத்தில் ராஜா எப்படியெல்லாம் புதிது புதிதாக, நவீனமான மாறுதல்களை கொண்டுவந்து கொண்டே இருக்கிறார் என்பது அவரின் பயணத்தில் (4500 பாடல்கள்) ஒரு சில நூறு பாடல்களைக் கேட்டாலே எளிதில் விளங்கும். தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர். இதுபோன்ற பாடல்களில் இந்த இந்த இசைவகைதான் வரும் என யாருமே ராஜாவின் இசைப் போக்கினை கணித்துவிட முடியாது. இசையில் புதுமை என்றாலே ராஜாதான். ஆனால் இசை விமர்சனத்தில் வித்தகர் என சொல்லிக் கொள்ளும் இணையவாதிகள் சிலர் இந்த திமிங்கில உண்மையை உணராமல் ( வீம்புக்கென்றே/அறியாமையால் ) அடம்பிடிப்பது வேடிக்கையில் வேடிக்கை. காலம் கடைசிவரை ராஜாயிசையை ஏந்திச் செல்லும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks