-
20th September 2014, 06:05 AM
#11
Senior Member
Diamond Hubber
92, 93வரைக்கும்தான் ராஜா என்ற பொய்யை திரும்ப திரும்ப நிறுவி திருப்தி காண்பவர்களுக்கு... கீழ்வரும் பாடல்களில் ராஜா கொடுத்திருக்கும் மேன்மையான இசையை கேட்டுவிட்டு மறுபடியும் பூமிக்குள் முகத்தைப் புதைந்து கொள்ளவும்.
கிழக்கும் மேற்கும் (1998) கத்துங்குயிலே கத்துங்குயிலே - சாதனா சர்கம் குரலில்
செந்தூரம் (1998) ஆலமரும் மேலமரும்.. - உன்னி கிருஷ்ணன் -பவதாரிணி குரல்களில்.. இதுபோல ஒரு சரணம் கட்டமைப்பை வேறெந்த ராஜா/ வேறு இசையமைப்பாளர் பாடல்களையும் கேட்டதில்லை..
தேசிய கீதம் (1998) - நான் வாக்கப்பட்ட - சுஜாதா குரலில்
காதல் கவிதை (1998) - காதல் மீது.. ஹரிஹரன்
வீரத் தாலாட்டு (1998) - படிக்கட்டுமா படிக்கட்டுமா.. ஜானகி குரலில்
பூந்தோட்டம் (1998) - மீட்டாத ஒரு வீணை - ஹரிஹரன் மகாலட்சுமி குரல்களில்.. (ஹரிஹரனின் இதுவரை நீங்கள் பாடிய பாடல்களிலேயே எதைப் பாடி முடிக்க தாவு தீர்ந்து போனது எனக் கேட்டால் இதைச் சொல்வார் என நினைக்கிறென். பெண்டு எடுத்திருப்பார் ராஜா அவரை.. ). திரையிசையில் ரீதிகௌளை ராகம் என்றால் ராஜாவின் கோட்டை. வெகுசிலரே இதைத் தொட்டிருகிறார்கள். ஆனால் அவர்கள் இந்த ராகத்தில் எழுப்பியிருப்பது என்னவோ வீடுகளே. யாரும் தொடாத/தொட முடியாத ராகத்தின் உள்ளெ புகுந்து வெளியெ வருவது ராஜாவுக்கே எட்டக் கூடிய கலை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th September 2014 06:05 AM
# ADS
Circuit advertisement
Bookmarks