-
3rd October 2014, 03:56 PM
#11
Junior Member
Devoted Hubber
படம்: மயிலு பாடல்: யாத்தே யாத்தே.
பாடியவர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரிணி
எழுதியவர்: ஜீவன்
21ம் நூற்றாண்டில் இதை விட சிறப்பாய் எப்படி சார் ஒரு கிராமிய மனம் நிரம்பிய பாடலை நவீன இசை கருவிகள் கொண்டு பதிவு செய்ய முடியும்? எல்லா அம்சங்களும் பொருந்திய பாடல் இது.
கதையின் தன்மை, போக்கு, வேகம் சூழ்நிலை எல்லாவற்றையும் உள்வாங்கி , அதிலே தன்னுடைய சிக்னேச்சர் சற்றும் குறையாமல், அதிகபிரசங்கமும் செய்யாமல் ஒரு 5 நிமிட மாயம் செய்ய வேண்டும். - அது ராஜா சாரால் மட்டுமே முடியும். எல்லா இசை கருவிகள் இருந்தும் எதுவுமே நம்மை உறுத்தாமல் அழகாய் நகர்ந்து செல்லும் இந்த பாடலில் பவதாரிணி, நிறைய வித்தை தெரிந்த ஸ்ரீராம் பார்த்தசாரதியோடு சரிக்கு சமமாய் நடையை கட்டுகிறார். ஒரு ஊஞ்சலில் ஜாக்கிரதையாய், மெதுவாய் அமர்ந்து, சற்றே காலால் தள்ளிக்கொண்டு அப்பறம் முழு ஸ்விங்கில் போவோமே? இந்த பாடலும் அப்படி தான்.
பாடல் மிக நன்றாய் வந்திருந்தும், காட்சி அமைப்பில் எங்கோ தெரியும் அழகிய மலைகளையும் இயற்கையையும் மறைத்து விட்டு குறுகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.
அதிகம் கண்டு கொள்ளப்பாடாத மயிலு படம் வெளிவருவதுக்கு முன்னரே பாடல் பதிவுகளின் துளிகளை யூடியூபில் பார்த்தபோது மூக்கால் சொரனையற்று பாடிய பவதாரினியால், அது என்னை அதிகம் ஆட்கொள்ளவில்லை. பின்னர் முழு வடிவம் பெற்று ஆடியோ வெளியானதிலிருந்து என்னை வசியம் செய்து விட்டது. இதே படத்தில் கிறுக்கி அரை கிறுக்கி, நம்மளோட பாட்டுதாண்டா பாடல்களும் பிரமாதம்.
ராஜா சாருக்கு 71 வயது என்பதை இந்த பாடல்களை எல்லாம் கேட்கும் போது நம்ப முடியவில்லை. 80களின் ராஜா என்று யாராவது ராஜா சாரை சொன்னால், வாயை கிழிக்கணும், அவர் எப்போதுமே ராஜா தான். நமக்கு தான் ரசனை குறைந்து விட்டது.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
3rd October 2014 03:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks