-
22nd September 2014, 07:57 PM
#111
Junior Member
Devoted Hubber
வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும்...
-
22nd September 2014 07:57 PM
# ADS
Circuit advertisement
-
22nd September 2014, 08:05 PM
#112
Junior Member
Devoted Hubber
நூ(ற்)றாண்டுகள் கடந்தாலும் இதுபோல ரசிகர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். இதை இப்போதிருக்கும் சிலர் புரிந்துகொள்ளவேண்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd September 2014, 01:59 AM
#113
Senior Member
Diamond Hubber
Originally Posted by
venkkiram
இந்த நேர்காணலை இப்போதுதான் முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பு அமையும் மக்களுக்கு பிரமிப்பாக இருக்கும். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் இதை தொலைக்காட்சில் பல வாரங்களுக்கு பார்த்த மக்களுக்கு அன்று ஏற்பட்ட பிரமிப்பு, ஆனந்தம் இன்னும் அடங்காமல் ஆழ்மனதில் எரிந்துகொண்டே இருக்கிறதே எனத் தோன்றும்..
பதிவேற்றம் செய்த அன்பருக்கு நன்றிகள் பல.
SPB Interviews Ilayaraaja for Doordarshan (Year: 1995)
இதுபோன்ற காணொளிகள் மேலும் மேலும் இசையில் ராஜா தன்னிகரற்றவர் என்பதையே பறைசாற்றுகிறது.
"நீ இசையமைத்த பாடல் ஒன்றை நீயே ஆர்மோனியத்தில் வாசித்து நான் கேட்கணும், எதையாவது வாசிச்சி காட்டுடா" என பாலு கேட்கும்போது "மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்!" என ராஜா ஆரம்பித்து.. "தாயென்று உன்னைதான் தாயென்று உன்னைதான்........ பிள்ளைக்கு காட்டினேன் மாதா" என ஒரு விளிம்புவரை சென்று மறுபடியும் பல்லவியின் ஆரம்பத்துக்கே வரும் இடம்..அப்பப்பா! ஜானகி பாடும் குரலில் பலமுறை இதைக் கேட்டு உணர்வுப் பிரவாகத்தில் மூழ்கியிருக்கிறோம்.. எதிரே பாலு உட்கார்ந்திருக்க, பாலுவையே இதைப் பாடியிருக்கச் சொல்லியிருக்கலாம்.. ஆனால் ராஜாவே அந்த உணர்வோடு பாடும்போது.. எனக்கு ரோமங்கள் சிலிரித்து கண் ஓரத்தில் திவலைகள் எட்டிப் பார்த்துவிட்டது அந்த சொற்ப மணித் துளிகளில். அதுதான் ராஜா. உணர்வுத் தளத்தின் உச்சிக்கு இசை மூலம் அழைத்துச் சென்றுவிடுவார். பாடப்படும் பாடல் வேறொரு மதமாக இருப்பினும் அந்த ஒரு சில நொடிகளில் நம்முள் பக்தி பெருக்கெடுத்து, அந்த குறிப்பிட்ட பாடல் வரிகளோடு ("தாயென்று உன்னைதான்........ பிள்ளைக்கு காட்டினேன் மாதா" ) நம்மையெல்லாம் அள்ளி அணைத்துச் சென்றுவிடுகிறது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th September 2014, 08:17 AM
#114
Senior Member
Diamond Hubber
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1167354
திரு ராகவேந்திரா (சிவாஜி ரசிகர்) அவர்கள் இன்று சிவாஜியின் நடிப்பை இப்படி விவரிக்கிறார்..
Originally Posted by
RAGHAVENDRA
எந்தக் கோணத்தில் அணுகினாலும் சிறந்த பரிமாணத்தைக் கொடுக்கக் கூடிய படைப்பு...
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சிறந்த தோற்றத்தை அளிக்கக் கூடிய அமைப்பு...
எந்தப் பாத்திரமானாலும் அதனுடைய தன்மையில் அணுகக் கூடிய நடிப்பு...
இலக்கணம் என்பதற்கே இலக்கணம் வகுத்தவர்..
கோபால் சொல்வது போல் நடிப்பிற்கென்று பல பள்ளிகள் பல நாடுகளில் இருந்தாலும் அவற்றில் ஏதாவத Orientation இருக்கும்... ஏதாவது ஒரு நாடு, மொழி, கலாச்சாரம் இவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வகைக்கு மட்டும் பொருந்தும் வகையில் இருக்கும்..
ஒவ்வொரு School of Actingகும் unconditional, uniform என்று பரவலாக பொதுவாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால்
Sivaji Ganesan School of Acting மட்டுமே பொதுவானது. அவருடைய நடிப்பு பாத்திரம் சார்ந்தது. ஏற்ற பாத்திரத்தின் கலாச்சாரம், சமூக நெறி, வாழ்க்கை முறை, பொருளாதார அடிப்படை என பல்வேறு செறிவுகள் நிறைந்த காரணத்தால் அது ஒரு இலக்கணமாகிறது. ஒவ்வொரு நடிகனும் ஏன் நடிகர் திலகத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான விடையும் அந்த நடிப்பிலேயே இருக்கிறது.
வேற்று மொழிக் கதையானாலும் வேற்று மொழிப் பாத்திரமானாலும் அதனை localise ஆக உருமாற்றி அந்தப் பாத்திரம் சார்ந்த பல்வேறு கூறுகளை அதனுள் புகுத்தி அதன் மூலம் அந்தப் பாத்திரத்தை ஆடியன்ஸுடன் ஒன்றிப் போக வைக்கும் சாத்தியத்தை அளிப்பது நடிகர் திலகத்தால் மட்டுமே முடிந்த ஒன்றாகும். இந்த இலக்கணத்தைப் பின்பற்றினாலே ஒரு நடிகன் தன்னுடைய நடிப்பில் வெற்றி பெற்று விடலாம்.
இதில் நடிப்பு, சிவாஜி என்ற இரு பதங்களுக்கு பதிலாக இசை, இளையராஜா என்ற இரு பதங்களை நிரப்பினால் அப்படியே பொருந்தும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
27th November 2014, 06:07 PM
#115
Junior Member
Devoted Hubber
SINDHU BHAIRAVI FILM:
A MUSICAL JOURNEY:
சிந்து பைரவி திரைப்படம்: ஒரு இசை பயணம் :
சிந்து பைரவி திரைப்படம் 1985 ம் ஆண்டு வெளிவந்த ஒரு இசைக்காவியம் . இயக்குனர் இமயம் என்று கொண்டாடப்படும் கே.பாலச்சந்தர் அவர்களின் கை வண்ணத்தில் இயக்கப் பட்டு இசை ஞானி இளையராஜா அவர்களின் இசைப் பிரவாஹத்தில் அவரது இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொணர்ந்த திரைப்படம்.முழுக்க முழுக்க கர்நாடக இசையிலேயே இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் இசைத்திருப்பார்கள் .கர்நாடக இசையில் இளையராஜாவின் ஆளுமைத்திறன் மற்றும் பாண்டியத்தை வெளிக்கொண்டு வந்த அருமையான இசைக் காவியம் . இந்த படத்தில் வரும் பாடல்களையும் அவை அமைந்த ராகங்களையும் இப்போது பார்ப்போம்.
முதல் பாடல் : படம் தொடங்கியதும் கதாநாயகன் இசை வித்தகன் JKB என்கிற JK பாலகணபதி காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது வரும் பாடல் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்களில் இரண்டு.
‘ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் சர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபென்னித்யம் அட்சயம் பரமம் சிவம் I
( இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற சூரிய பகவானை வழிபடும் புனித ஸ்லோகம் எல்லா எதிரிகளையும் அழித்து உனக்கு வெற்றியையும் முடிவில்லா ஆனந்தத்தையும் அளிக்கும்”)
சர்வ மங்கள மாங்கல்யம் சர்வ பாப ப்ரனாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வதனம் உத்தமம்.I”
(இந்த பிரார்த்தனை மிகவும் உயர்ந்தது- நிச்சயம் வெற்றியைத் தரக்கூடியது இது பாபம், சோகம், கவலை எல்லாம் அழித்து நீண்ட ஆயுளைக் கொடுக்கக்கூடியது )
இந்த ஸ்லோகம் வரக்கூடிய ராகம் : பந்துவராளி .
(இதன் பின்னணி இசை முதலில் பந்துவராளியாக இருக்கும் பிறகு பைரவி (JKB யின் மனைவி) அங்கப் பிரதட்சிணம் செய்யும் போது நாட்டை BGM!).
2. அடுத்து டைட்டில் - JKB கச்சேரி – அதில் குடித்துவிட்டு வந்த தனது மிருதங்க வித்வான் குருமூர்த்தியை கண்டித்து மேடையையும் சபையையும் விட்டு வெளியேறிய பிறகு ஒரு அருமையான (முத்துஸ்வாமி தீட்சிதர் ) கிருதி- மகா கணபதி என்கிற அருமையான பாடல் : ராகம் நாட்டை . இந்த பாடல் வரும் போது டைட்டில் ! (இது ஒரு சம்பிரதாயமான பாடல் – பொதுவாக இசைக் கச்சேரியில் லய வாத்தியம் மிருதங்கம் இல்லாமல் பாடுவது கஷ்டம். மிருதங்கம் துணை இல்லாமல் பக்க வாத்தியம் வயலின் துணையுடன் கந்தர்வ கான ஜேசுதாஸ் அவர்கள் அருமையாக பாடுவது தான் இதன் விசேஷம்)
இந்த பாடல் ஆரம்பிக்கும்போது கணபதிக்கு அபிஷேகம் ஆரம்பித்து ஒவ்வொன்றாக காண்பித்து பாடல் முடியும் போது அலங்காரம் முடிந்த பிள்ளையாரை காண்பித்து மஹா கணபதிம் மனசா ஸ்மராமி என்று முடிப்பது மிக அருமை!
3. அடுத்து JKB வீட்டில் லதா மங்கேஷ்கரின் மீரா பஜன் ‘நந்த நந்தனு தித்து படியா ‘ என்ற பாடல் கேட்டுக்கொண்டிருக்கும் போது JKB மனைவி அவருக்கு பருப்பு பொடி MIXIE யில் அரைக்கும் போது வரும் பாடல் – இந்த பாடலின் ராகம் சுப பந்து வராளி போல் இருக்கிறது- ஆனால் இதன் ராகம்
குஜாரி தோடி (GUJARI TODI ) என்று போட்டிருக்கிறது.
4. அடுத்து JKB யின் இன்னொரு கச்சேரி- இந்த பாடல் “மரி மரி நின்னே முரளிட ‘ என்ற தியாகய்யர் கிருதி – இதன் வரிகளை எடுத்து அவர் சம்பிரதாயமாகப் பாடிய காம்போதி ராகத்தில் இல்லாமல் சாரமதி என்ற ராகத்தில் தன் கற்பனையால் இசை அமைத்து இந்த பாடலை கொடுத்திருப்பார், இளையராஜா. இது அசம்ப்ரதாயமான பாடலாக இருந்தாலும் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை. உண்மையில் இதற்கு ரசிகர்களிடையே வரவேற்பு தான் இருந்தது. ஏன் இப்படி செய்தார் என்றால் இதற்குப் பின் வரும் பாடறியேன் என்ற பாடல் நாட்டுப்புற மெட்டுக்கு சாரமதியையே போட்டு இரண்டும் ஒன்று சேர FUSION செய்ய இதை அவர் தன் இசைப் புலமையை பயன்படுத்தி இந்த ராகத்தில் அமைத்திருப்பார். இந்த பாடலை அருமையாக பாடியிருப்பார் ஜேசுதாஸ் ! இதன் ஒரிஜினல் ராகமான காம்போதி ராகத்தில் பாடியிருந்தால் நாட்டுப்புற சாயலை பாடறியேன் பாடலுக்கு கொண்டு வந்தால் சரியாக இருக்காது என்ற எண்ணத்தினாலோ அல்லது ஒரு பரிட்சார்த்தமாகவோ இப்படி செய்திருக்கலாம் ! இன்னும் சிலருக்கு இந்த முயற்சியில் உடன்பாடு கிடையாது. அது பற்றி நிறைய இங்கே விவாதிக்கப் போவதில்லை! ஆனாலும் பாடல் செமி க்லாச்சிகல் முறையில் இசைக்கப்பட்டு மக்களை போய் சேர்ந்தது!
5. அடுத்து வருவது இதே பாடலை ஒட்டி மேடையிலேயே சவாலாக அதே ராகம் சாரமதியில் வரும் ‘பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன் ‘ என்ற பாடல் – அதில் நாட்டுப்புறமான (FOLK) இசையில் சொன்னது தப்பா தப்பா சொன்னது தப்பாதப்பா – என்ற இடத்தில் ஒரு ஹம்மிங் – இந்த இடத்தில் சாரமதி ராகத்தின் சாயலைக் கொண்டு வந்து சிந்து பாடியவுடன் JKB நெளிந்து உட்கார்வாரே இந்த இடம் அருமை! இந்த பாடலைப்பாடி அதிகம் புகழ் பெற்றார் சின்னக்குயில் சித்ரா! இதில் வரும் ஸ்வரப்பிரயோகம் வெகு அருமை! இந்த பாடலுக்கு சித்ரா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது!
(குறிப்பு: இந்த சம்பவம் போல் யாரும் எந்த வித்வானும் தனது மேடையில் சவாலாக மற்ற யாரையும் மேடையேற்றமாட்டார்கள்! இது சினிமாவில் மட்டுமே வரும்!!)
பிறகு கோபமாக இருக்கும் JKB இடம் சிந்து என்கிற சிந்தாமணி “உங்களுடன் ஒரு நிமிடம் பேசலாமா’ என்ற PLACRAD உடன் பேச முற்படும்போது வரும் BGM சிந்து பைரவி ராகம்- நானொரு சிந்து பாடலின் முன்னோடி!
5. நடுவில் JKB யின் நண்பரும் ஜட்ஜ் உம் ஆன பாரதி கண்ணனுக்கும் அவரது கார் டிரைவருக்கும் ஒரு இசை சம்பந்தமான சர்ச்சை .இதற்கு விடை காண JKB இடம் ஜட்ஜ் அவர்கள் தனது டிரைவரை அழைத்து வந்து ராக ஆலாபனை செய்வார்கள். அதில் ஜட்ஜ் ஆரபியை தவறாக பாடுவார்- டிரைவர் சரியாக பாடுவார். அதற்கு JKB நடுவராக இருந்து டிரைவர் பாடியது தான் சரியான ஆரபி என்று தீர்ப்பு சொல்வார்.நிஷாத பிரயோகம் தான் சரியாக செய்யவில்லை என்று ஜட்ஜ் ஒப்புக்கொண்டு செல்லுமிடம் மிக சுவாரசியமான இடம் ! ஒரு நீதியரசரும் அவரது கார் டிரைவரும் இசையில் கொண்ட ஈடுபாட்டையும் அதில் ஜட்ஜ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டதையும் மிக அழகாக காண்பித்திருப்பார்கள்.
6.. அடுத்து சிந்துவை சந்திக்கும் JKB சிந்துவினால் கவரப்பட்டு தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாட முற்பட்டு சுப்ரமணிய பாரதியார் பாடல் ‘மனதில் உறுதி வேண்டும் ‘ என்ற பாடலை அலை ஓசையை ஆதார சுருதியாக வைத்துக்கொண்டு பாறையின் நடுவே பாடும் போது அந்த பாடலின் நயமும் இனிமையும் மனத்தைக் கவர ஒரு மீனவ கிழவர் மிகவும் சந்தோஷத்துடன் ஒரு சங்கு மாலையை அவருக்கு பரிசாக அளிக்கிறார். இந்த இனிமையான பாடலின் ராகம்: திலங் ! இந்த பாடலை அருமையாக பாடியிருப்பார் ஜேசுதாஸ் அவர்கள்!
7.. பிறகு சிந்துவைத் தன் நெருங்கிய நண்பர் ஜட்ஜ் பாரதி கண்ணன் வீட்டுக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தி வைக்கும் போது பாரதி கண்ணனின் மனைவி தான் தன்னுடைய பூர்வாசிரம தாய் என்பதை அறிந்த சிந்து அதிர்ச்சியில் உறைந்த போது பாடும் பாடல் : நானொரு சிந்து, காவடி சிந்து ராகம் புரியவில்லை உள்ள சோகம் புரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அதை சொல்ல தெரியவில்ல – என்ற மனதை உருக்கும் சித்ராவின் பாடல் : சிந்து பைரவி ராகம்!
8. பிறகு JKB யும் சிந்துவும் தனியே அடிக்கடி சந்தித்து சங்கீதத்தைப் பற்றியும் ராகங்களை பற்றியும் பேசும் போது JKB பாடும் பாடல் “நீ தயராதா” என்ற சாஹித்யம் – இது படத்தில் முழுமையாக வரவில்லை- இசைத்தட்டில் மட்டுமே வந்த பாடல்.ஒரு வரி தான் வரும் .இதன் ராகம் – வசந்த பைரவி – இது வகுளாபரணம் ஜன்யம்! இந்த பாடலை எல்லாம் தமிழ்ப் படுத்த வேண்டும் என JKB சொன்ன போது ‘நான் ஏற்கனவே தமிழ்ப் படுத்தி விட்டேன் ‘ என சிந்து கூறி ‘ உன் தயவில்லையா ‘ என்ற பாடலை அதே வசந்த பைரவி ராகத்தில் சிந்து பாடுகிறாள் ! சித்ராவின் குரலில் இந்த பாடல் அருமை !
(இந்த பாடல் பாடி முடித்தவுடன் வரும் பின்னணி இசை (BGM) : சிந்து பைரவி ராகம்.)
பிறகு JKB யின் படுக்கை அறையில் அவர் படுத்துக்கொண்டு சிந்துவையே நினைத்துக்கொண்டு இருக்கும்போது வரும் போது வரும் பின்னணி இசை : ஹம்சானந்தி ராகம்.)
9. சிந்துவை நினைத்து அவள் நினைவுகளினால் பீடிக்கப்பட்டு அதை நீக்க வேண்டும் என்ற உத்வேகத்தினால் JKB தன்னை மறந்து தம்புரா கம்பி அறுந்து விழ அதனால் கை விரலில் காயம் ஏற்படும் அளவுக்கு தன்னை மறந்து பாடுவது : ‘மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும். வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும் – மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும். இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும் ‘ என்று பாடும் இந்த பாடல் ஒரு அபூர்வ ராகம் ; கனகாங்கி . இந்த கனகாங்கி ராகம் தான் கர்நாடக இசையின் முதல் ராகம் . இதன் சிறப்பு இதில் உள்ள அத்துணை ஏழு ஸ்வரங்களும் சாஸ்திர ரீதியாக சுத்த ஸ்வரங்கள். வேறு எந்த ராகத்திற்கும் எல்லா ஏழு ஸ்வரங்களும் கர்நாடக இசையில் சுத்த ஸ்வரங்கள் இல்லை. மற்ற எல்லா ராகங்களும் ஒவ்வொன்றாக இதன் ஸ்வரங்களில் இருந்து மாறுபட்டுத் தான் புதிய ராகங்களாக மாறுகின்றன. இந்த ராகத்தில் இளையாராஜா மட்டும் தான் முதன் முதலில் இசை அமைத்து அதையும் வெற்றி காண செய்து இந்த ராகத்தை சாதாரண மனிதனிடம் சென்றடைய செய்திருக்கிறார். இந்த ராகத்தில் தியாகய்யர் கூட அதிக பாடல்கள் இயற்றியது இல்லை. (இந்த கனகாங்கியில் மலையாள திரைப்படத்தில் ஒரு பாடல் பிறகு வந்துள்ளது.)
10. பிறகு ஜட்ஜ் பாரதிகண்ணன் வீட்டில் சிந்து கலந்துகொண்டு சாப்பிடும் ஒரு காட்சி. பாரதிகண்ணன் நகைச்சுவையாக ஒவ்வொரு நடிகருக்கும் இசை அமைத்தால் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனையாக வித விதமாக TUNE கள் போடுவார். அதில் சிவாஜிக்கு வரும் பாடல் TUNE- கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் – கல்யாணி ராகம்! இந்த பாடலைப்பாடி அசத்தியவர் : ராகவேந்தர் ! நடிப்பும் அவரே!
(பிறகு வரும் பின்னணி இசை- BGM கள் ; சிந்து JKBயுடன் பிணங்கி கோபப்பட்டு தனியே வந்து தன் வீட்டில் இசைத்தட்டு கேட்கும் போது ஷண்முகப்ரியா ; பிறகு தான் JKBயை நேசிப்பதை உணர்ந்து அவரை திரும்ப சந்தித்து தன் காதலை வெளிப்படையாக சொல்லும்போது இசைக்கும் பின்னணி: ஹம்சானந்தி மற்றும் சிந்து பைரவி !)
11. தனக்கும் தன் கணவனுக்கும் இடையே சிந்து நுழைந்து விட்டதை அறிந்து அதைப் பொறுக்காமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கிணற்றில் விழ அந்த செய்தியை JKB பாதி கச்சேரியில் பாடிக் கொண்டிருப்பார். அப்போது அந்த செய்தியை கேட்ட JKB முகம் மாறி பாடும் ஒரு சிறிய பாடல் முடிவு : ‘ஆனந்த நடனம் ஆடினாள் சக்தி ‘ . இந்த பாடலின் ராகம் : ரதி பதி ப்ரியா ! இந்த ராகம் “ஜகத் ஜனனி” என்று வரும் தண்டபாணி தேசிகர் பாடிய பாடலில் அமைந்தது. இந்த ராகத்தில் MKT அவர்கள் ஒரு பாடல் ‘மனம் கனிந்து’ என்று வரும் – பாடி இருக்கிறார்கள். வேறு யாரும் பாடி இருப்பதாக தெரியவில்லை.(MSS அம்மா பாடிய காற்றினிலே வரும் கீதம் பாடல் கூட இந்த ராகம் தான் என்று சிலர் கூறுகிறார்கள்- ஆனால் இது நிருபிக்கப் படவில்லை )
(பிறகு பாடறியேன் பாடல் கோரஸ் ஆக வரும் சிந்து பாடுவதை JKB கேட்பதாக வரும் .)
12. பிறகு சிந்துவை பிரிந்து விட்டு வந்து அதைப் பொறுக்க முடியாமல் கழிவிரக்கத்தில் குடித்துவிட்டு கச்சேரி மேடைக்கு வந்த JKB கச்சேரியில் பாடும் பாடல்; ‘பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே ‘ என்ற பாடல் – இது கானடா ராகம் ! மிக அருமையான பிரயோகங்களுடன் வரும் இந்த பாடலை மிக நேர்த்தியாக பாடியிருப்பார் ஜேசுதாஸ் அவர்கள்!
(பிறகு தன் தாயைத் தனியே சந்திக்கும் சிந்து அவளது கடந்த கால உறவை தாயிடம் பாறைகளுக்கு நடுவே அமர்ந்து சொல்லும்போது வரும் பின்னணி இசை: சோகம் கலந்த சிந்து பைரவி ராகம் )
13. குடிப்பழக்கத்துக்கு ஆளான JKB வேறு ஒரு கச்சேரிக்கு சென்று சரியாக பாடாத இன்னொரு வித்வானை பார்த்து அற்புதமாக பாடும் பாடல் வரிகள் ‘யோசனா கமலா லோச்சனா ‘ இந்த பாடல் தர்பார் ராகம்- கொஞ்சமே வந்தாலும் இதன் பல்லவியையும் சில ஸ்வரக்கோர்வைகளையும் மிகவும் அற்புதமாக பாடியிருப்பார் ஜேசுதாஸ் அவர்கள்.
(இது போல் இன்னொரு மேடைக் கச்சேரியில் புகுந்து தன் வித்வத்தை வெளிப் படுத்துவதாக வரக்கூடிய நிகழ்ச்சி சினிமாவில் தான் வர முடியும்! குடி காரணம் என்று சமாதானம் சொல்லலாம்!)
14. அதற்குப் பிறகு குடிக்கப் பணம் கிடைக்காத JKB தன் கௌரவத்தை விட்டுத் தன் எதிரியான ஒரு பணக்காரப் புள்ளியிடம் சென்று ‘நீங்கள் முன்பு கேட்டுப் பாடச்சொன்ன சிவரஞ்சனி ராகம் பாடுகிறேன் – எனக்கு விஸ்கி கிடைக்குமா?’ என்று கேட்க அவர்கள் ‘இப்போது எங்கள் ரசனை மாறி விட்டது . நீங்க ஒரு டப்பாங்குத்து பாட்டு பாடி ஆடவேண்டும்’ என்று நையாண்டி செய்கின்றனர். அதற்கு JKB என்கிற அந்த இசை மேதை குடிபழக்கத்திற்கு அடிமையானதால் தன்னிலை மறந்து ‘நான் டப்பாங்குத்து பாட்டு பாடுகிறேன்- ஆனால் விஸ்கி கட்டாயம் கொடுக்க வேண்டும் ‘ என்று கெஞ்சி டப்பாங்குத்து பாட்டு பாடி ஆடுகிறார். அந்த பாடல் தான் ‘தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்- இந்த சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி ‘ என்ற பாடலை பாடி குடி போதையில் ஆடவும் செய்கிறார்.
இப்போது பாருங்கள் : இது சிச்சுவேஷன்(SITUATION): இந்தக் கதாநாயகன் மிக சிறந்த இசைப் பாடகன். சம்பிரதாயமான பாடல்களைத் தவிர வேறு எதையும் பாடாதவன். அவன் டப்பாங்குத்து பாட வேண்டும் . அவனுக்குப் பின்னணி பாடிய ஜேசுதாஸ் அவர்களும் மிகவும் புகழ் வாய்ந்த மேடைப் பாடகர். அவருக்கும் இந்த டப்பாங்குத்து பாடுவதால் களங்கம் வரக்கூடாது. இருவருடைய புகழும் பாதிக்கப்படக்கூடாது. ஆனால் டப்பாங்குத்து பாடலும் கொடுக்கவேண்டும்! இளையராஜாவின் சமயோசித அற்புதமான திறமையைப் பாருங்கள் ! இந்த பாடலின் ராகம் காபி ! இந்த காபி ராகத்தை மிக அருமையாக டப்பாங்குத்து பாடலுக்கு பயன் படுத்தி இசை அமைத்திருப்பார் . என்னே ஒரு கற்பனை! என்னே ஒரு இசை அமைப்பு! அருமையான கர்நாடக இசை ராகம் டப்பாங்குத்து பாடலாக மாறி மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததைப் பாருங்கள்!! இது தான் இளையராஜா!
பிறகு JKB வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு அவருக்கு சிந்துவின் துணையின் மூலம் சிகிச்சை அளிக்க அனைவரும் ஏற்பாடு செய்கின்றனர்.குடித்துவிட்டு அவர் வீட்டுக்குள் நுழையும் போது வீணை ஒலி கேட்கிறது- சிந்து வீணை வாசிக்க அதை JKB கேட்டு நிதானிக்கிறார். இந்த வீணை ஒலியில் வரும் ராகம்- ரேவதி . பிறகு BGM இசை வயலினில் ஆஹிர் பைரவியாக மாறி வருகிறது.
15. JKB நன்கு குணமானதும் குடியை மறந்ததும் சிந்து அனைவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரை விட்டு விலகுகிறாள். அப்படி அவள் ஊரை விட்டு வெளியேறும் போது என்ன இது என்ற பாடல் ஒலிக்கிறது. அப்போது ஒரு ஹம்மிங் : அமிர்தவர்ஷினி ராகத்தில்.
16. கடைசியில் சிந்து JKB யை விட்டு விலகி சில காலம் பிரிந்து இருக்கும்போது அவருக்கு தமிழிசை மன்றத்தில் பாராட்டுப்பத்திரம் கொடுக்க ஏற்பாடு ஆகிறது. அதற்குள் அவர் தன் திறமைகளை எல்லாம் வெளிக்கொண்டு வந்து பழையபடி இசை மேதை ஆகப் பரிணமிக்கிறார். அவர் பாராட்டப்படும் அந்த நாளில் மேடையில் ஏறி அவர் பாடும் பாடல் தான் ‘கலைவாணியே, உனைத்தானே அழைத்தேன் ‘ என்ற பாடல் .
இந்த பாடல் அசம்ப்ரதாய முறையில் இளையராஜாவினால் சமத்காரமாக இசைக்கப் பட்டது. வாழ்க்கையில் இறக்கம் கண்டு அடி மட்டத்துக்குப் போன ஒரு இசை கலைஞன் இனி கீழே போகவே கூடாது இனி ஏற்றம் மட்டுமே இருக்கவேண்டும் ‘ என்ற கருத்தை வலியுறுத்தி ஆரோகணப் பிரயோகம் மட்டுமே எடுத்து கல்யாணி ராகத்தின் ஆரோகண ஸ்வரங்களை அற்புதமாக கையாண்டிருப்பார். இது அற்புதமான இசையமைப்பு. சாஸ்த்ரீய சம்ப்ரதாயம் இல்லாமல் வந்தாலும் மிக அருமையான இசை ! மிக அருமையாக பாடியிருப்பார் கந்தர்வ கான மேதை ஜேசுதாஸ் அவர்கள்.
17.கடைசியாக உச்ச கட்டத்தில் (CLIMAX) JKB மூலம் தான் பெற்றெடுத்த குழந்தையை JKB/பைரவி தம்பதிக்கு பரிசாக தந்து விட சிந்து முற்படுகிறாள் .ஆனால் அவளது வெளியேற்றத்தை பைரவி ஏற்க மறுக்கிறாள்.”நீ வெளியேறும் போது உன் குழந்தை எனக்கு தேவை இல்லை” என்று குழந்தையைத் தொட்டுத் தூக்க மறுக்கிறாள். சிந்துவும் தான் JKB மூலம் பெற்ற குழந்தையை திருப்பி எடுக்க மறுக்கிறாள் . இருவராலும் கை விடப்பட்ட அந்த சிறு குழந்தை அழுகிறது. கொஞ்ச நேரம் அழுகை ஆனவுடன் பொறுக்க முடியாமல் பைரவி அந்த குழந்தையை தூக்குகிறாள்.
இப்போது ஒரு BGM வருகிறது . என்ன BGM தெரியுமா? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் ! மாயா மாளவ கௌளையில் அமைந்த ஜண்டை வரிசை ஸ்வர பிரயோகம் வருகிறது. இந்த ஜண்டை வரிசை பிரயோகம் தான் இசை கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு முதலில் சொல்லிக் கொடுப்பார்கள்.இது நாள் வரை பைரவி இசை கற்றுக்கொள்ள முற்பட்ட போது அவளுக்கு எந்த ஸ்வரமும் மண்டையில் ஏறவில்லை. ஆனால் இப்போது அந்த குழந்தை அவளுக்கு பரிசாக கிடைத்ததும் அவளுக்கு ஜண்டை வரிசை ஸ்வரம் கேட்கிறது.அதாவது இனி குழந்தை தான், அதன் வளர்ப்பு தான் இசை என்று அவள் உணர்வதை சிம்போலிக் ஆக சொல்லி இருக்கும் இசை ஞானியின் சமத்காரமான இசையை நாம் எப்படி பாராட்ட முடியும் என்றே தெரியவில்லை!எவ்வளவு கற்பனை வளம் வேண்டும் என்று நினைத்துப்பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது ! உண்மையிலேயே இளையராஜா இசை ஞானி தான்!
பிறகு JKB /பைரவி தம்பதிக்கு தான் JKB மூலம் பெற்றெடுத்த குழந்தையை பரிசாக கொடுத்து விட்டு சிந்து செல்வதுடன்
படம் முடிவடைகிறது!
பின்குறிப்பு: KV மகாதேவன், Gராமநாதன் ,மெல்லிசை மன்னர்கள் MS விஸ்வநாதன் – TK ராமமுர்த்தி மற்றும் SM சுப்பையா நாயுடு போன்றவர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த கர்நாடக திரை இசையில் தன் பங்களிப்பை மிக அருமையாக வெளிக்கொண்டு வந்து வெற்றி பெற்ற இளையராஜா இதன் மூலம் தமிழ் திரை உலகில் தனக்கென கர்நாடக சங்கீதத்தில் ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார் என்றால் அது மிகை ஆகாது!
-
Last edited by poem; 30th November 2014 at 08:55 AM.
-
26th December 2014, 07:04 AM
#116
Senior Member
Diamond Hubber
Shrutibhedam In Ilayaraaja's Music - Article By Mr. Hari Govindan
http://ilaiyaragam.blogspot.com/2014...music.html?m=0
இக்கட்டுரையில் பேசப்பட்டுள்ள திரைப்பாடல்கள்..
1) அந்திமழை பொழிகிறது
2) வைதேகி ராமன் - பகல் நிலவு
இக்காணொளிக்கான ஒருவரது பின்னூட்டம்
It's not exactly a ragamalika as you've mentioned! Well, it can also be considered a ragamalika composition but it differs from a ragamalika composition that the shift to various ragas are confined within a particular pitch. In this case, there is a clear evident tonal shift i.e Graha Bedham which is also called Shruthi Bedham. In this case the position of a swara is changed leading to the change in alignment of swara sequence, resulting in an another raga. Raja sir has clearly demonstrated it in this very song. In the swara portion starting with GA GA GA NI RI GA GA GA ..... for the second time the swara GA (Anthara Gandhaaram) is shifted to Ma (Shuddha Madhyamam) which resulted in Ma Ma Ma Sa Ga Ma Ma Ma GAa Ma Da Ni Da Ma Ga Sa Ma i.e Hindolam. (That is Raja sir demonstrated the shifting of Anthara Gaandhaaram to Shuddha Madhyamam changes the kalyani raga into Hindolam. This phenomenon is known as Grahabedham. The concept of Graha bedham is difficult to explain in texts but it can be understood only when a persdon attains a deep knowledge of any raga. Ultimately I mean to say that composing a song in Ragamalika is not that challenging as that trying Grahabedham! (Yet another song as far as I know is KAVITHAI KELUNGAL sung by Vani Jayaram madam in which there is only a shift to Chakravaham ragam, but this composition is simply fabulous!) It depicts the musician's great virtuosity in Carnatic classical music. Carnatic legends like G.N. Balasubramaniya Iyer, M. L. Vasanthakumari et al excelled in the herculean task of Grahabedham but our maestro is nowhere inferior to them in virtuosity! I'm really proud of being his ardent fan.
Last edited by venkkiram; 26th December 2014 at 07:08 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th December 2014, 07:05 AM
#117
Senior Member
Diamond Hubber
3) சிறியபறவை சிறகை விரிக்க
4) Don't compare (How To Name It?)
5) Nothing But Wind - Composer's Breath
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th December 2014, 07:05 AM
#118
Senior Member
Diamond Hubber
6) நந்தவனம் பூத்திருக்குது (இல்லம்)
7) சின்னப் பூவே - கட்டுமரக்காரன்
8) நில் நில் நில் - பாட்டுப் பாடவா
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th December 2014, 07:06 AM
#119
Senior Member
Diamond Hubber
9) இவள் யாரோ - ராஜாவின் பார்வையில்
10) பாடித் திரிந்த - காக்கை சிறகினிலே
11) வார்த்தை தவறிவிட்டாய் - சேது
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th December 2014, 07:06 AM
#120
Senior Member
Diamond Hubber
12) எங்கே செல்லும் இந்தப் பாதை - சேது
13) யார் தூரிகை - பாரு பாரு பட்டணம் பாரு
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks