Page 294 of 401 FirstFirst ... 194244284292293294295296304344394 ... LastLast
Results 2,931 to 2,940 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2931
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //என்னடி மீனாட்சி 'ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ' பாடலை தரவேற்றியதற்கு நன்றி

    உங்கள் 'பெண்ணே நீ வாழ்க' திரை கதை சுருக்கம் அருமை// நான் இதை வழி மொழிகிறேன் மதுண்ணா

    வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேனுக்குமொரு தாங்க்ஸ்

    //சிக்கா.. நைஸாக தெரியாத மாதிரி தூண்டில் போட்டு கேட்டு வாங்குவதில் நீர் புலிக்கும் புலி.// அப்படில்லாம் இல்லீங்க்ணா..தப்பா அடிச்சுட்டேன் பாட்டை

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2932
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    thanks madhu gi

    for posting saavithri vaani song
    gkrishna

  4. #2933
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள் (செப். 23- 1951)

    முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் சினிமாவில் பிரவேசித்தார் சின்னப்பா. அதனைத் தொடர்ந்து 1938-ம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப்பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து சுமார் 25 படங்களில் அவர் நடித்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தாபனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார்.

    1944-ம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற ஒரு மகனும் உண்டு. ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். mangaiyarkarisi படத்தில் அவர் பாடிய காதல் கனிரசமே.. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக்கேட்கப்படுகிறது. 1951-ம் ஆண்டு செப்டம்பர் 23-ல் தமது 35-வது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார்.

    இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் வனசுந்தரி. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் சுதர்சன் இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.



    Last edited by gkrishna; 23rd September 2014 at 05:40 PM.
    gkrishna

  5. Likes Russellmai liked this post
  6. #2934
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    GKrishna Sir,
    பி.யூ.சின்னப்பா அவர்களின் காதல் கனி ரசமே பாடலைப் பதிவிட்டு மலரும்
    நினைவுகளை மலர விட்டமைக்கு எனது பாராட்டுக்கள்.ஆனால் ஒரு சந்தேகம்.இப்பாட்டு
    மங்கையர்க்கரசி படத்தில் உள்ளதா?கிருஷ்ணபக்தி படத்தில் இடம் பெற்றதா?
    கோபு
    Last edited by gopu1954; 23rd September 2014 at 05:15 PM.

  7. Thanks gkrishna thanked for this post
  8. #2935
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    அன்புள்ள கிருஷ்ணா ஜி அவர்களே

    pu சின்னப்பா வுக்கு பதில் சக போட்டியாளர் பாகவதர் போட்டோ போட்டு விட்டீர்களே ?

    Dc டேனியல் என்கிற படத்தில் அந்த வேடத்தில் நடித்த ப்ரிவிதிராஜ் ஒரு பல் டாக்டர் , அவரிடம் சின்னப்பா பல் வலிக்கு சிகிச்சைக்கு வருவதாக காட்சி உண்டு.
    அதில் சின்னப்பாவாக நடித்திருந்தவர் "ஹி ஹி... சிரிப்பு.." புகழ் மதன்பாப் ...

  9. Likes gkrishna liked this post
  10. #2936
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னது பி.யூ.சின்னப்பா செத்துட்டாரா.. பாருங்க நானுமே பி.யூ.சி முகம் மாதிரி இல்லையேன்னு யோசிச்சேன். எஸ்எஸ் எஸ் சார் சொல்லிட்டார்..

    வெகுசின்ன வயதில் சாந்தியிலோ ஸ்ரீதேவியிலோ ஆர்யமாலா - முழுப்படம் - கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் என நினைக்கிறேன் - பார்த்த நினைவு..படம் எப்ப முடியும்னு அழுதது மட்டும் நினைவிலிருக்கிறது!

  11. Likes gkrishna liked this post
  12. #2937
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

    சினிமா பார்த்த சின்னப்பா திடீர மரணம் !

    நன்றி : மாலை மலர்


    "நடிக மன்னன்" என்று புகழ் பெற்றவரும், வீரதீரச் செயல்கள் செய்வதில் இணையற்ற வருமான பி.யு.சின்னப்பா, யாரும் எதிர்பாராத வகையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார். அப்போது, அவருக்கு வயது 35. சின்னப்பா மிகவும் சிக்கனமானவர். பீடிதான் குடிப்பார்; சாராயம்தான் அருந்துவார்.

    சினிமா மூலம் கிடைத்த வருமானத்தை வீணாக்காமல், புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கிக் குவித்தார். எங்கு பார்த்தாலும், சின்னப்பாவின் வீடுகள். இதுபற்றி புதுக்கோட்டை மன்னருக்கு தகவல் போயிற்று. "இனிமேல் சின்னப்பா வீடு வாங்கக்கூடாது" என்று தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்னையில் வீடுகள் வாங்கினார்.

    1951_ல் "வனசுந்தரி" என்ற படத்தில் சின்னப்பா நடித்தார். ஜோடி டி.ஆர்.ராஜகுமாரி. படம் சுமார் ரகம். இந்த சமயத்தில், தமிழ்ப்பட உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பின்னணி பாடும் முறை வந்துவிட்டது. எனவே, கதாநாயகனாக நடிப்பவர்கள் சொந்தமாகப் பாடும் திறமை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    1946_ல் வெளிவந்த "ஸ்ரீவள்ளி" மூலம், டி.ஆர்.மகாலிங்கம் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவானார். "நாம் இருவர்" படம், அவர் புகழை மேலும் உயர்த்தியது. ஜபிடர் தயாரிப்பான "ராஜகுமாரி" மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமாகி முன்னேறிக்கொண்டிருந்தார். கே.ஆர்.ராமசாமியும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

    "சந்திரலேகா", "ஞானசவுந்தரி", "ஏழைபடும்பாடு", "வேலைக்காரி" முதலிய தரமான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று, ரசிகர்களின் ரசனையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால், சின்னப்பாவின் முன்னேற்றத்தில் தேக்க நிலை ஏற்பட்டது. படம் குறைந்து போனதால், சின்னப்பா ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார்.

    "வானவிளக்கு" என்ற பெயரில் நடத்தி வந்த நாடகத்தை சொந்தத்தில் படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார். கத்திச்சண்டையில் "சுருள் பட்டா" என்பது புதுமையானது; ஆபத்தானது. சுருளின் முனையில் கூரிய கத்தி பொருத்தப்பட்டு இருக்கும். கைப்பிடியை பிடித்தபடி "சுருள் பட்டா"வை வீசினால், கத்தி சுழன்றபடியே சென்று, எதிரியின் தலையை கொய்து கொண்டு வரும்! குறி தவறினால், வீசியவனின் தலைக்கு ஆபத்து!

    இந்த "சுருள் பட்டா" சாகசச் செயலை "வான விளக்கு" படத்தில் புகுத்த சின்னப்பா திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் 1951 செப்டம்பர் 23_ந்தேதி சின்னப்பா மரணம் அடைந்தார். புதுக்கோட்டையில் தன் வீட்டில் தங்கியிருந்த சின்னப்பா, அன்றைய தினம் "மணமகள்" சினிமா படம் பார்க்க நண்பர்களுடன் சென்றார்.

    கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்து, டைரக்ட் செய்திருந்த படம் இது. லலிதா, பத்மினி, டி.எஸ்.பாலையா நடித்திருந்தனர். படம் பார்த்துவிட்டு இரவு சுமார் 10 மணிக்கு வீடு திரும்பிய சின்னப்பா, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று, "மயக்கம் வருகிறதே" என்றார். உடனே ரத்த வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார்.

    ஒரு சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். உடன் இருந்த நண்பர்கள் கதறி அழுதனர். சின்னப்பா இறந்தபோது, அவருடைய தந்தை உலகநாதப் பிள்ளை உயிருடன் இருந்தார். மகன் புகழின் சிகரத்தை அடைந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்திருந்த அவர், மகனின் எதிர்பாராத மரணத்தால் கதறித் துடித்தார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது.

    ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சின்னப்பாவின் சொந்த தோட்டத்தில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறக்கும்போது சின்னப்பாவுக்கு வயது 35தான். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்த அவர் திடீரென்று மரணம் அடைந்தது, திரை உலகை அதிர்ச்சி அடையச் செய்தது.

    இறக்கும்போது, "சுதர்சன்" என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாகி முடிந்துவிட்டன. "கோராகும்பர்" என்ற பெயரில் ஏற்கனவே படமாக வெளிவந்த புராணக் கதைதான் இது. சின்னப்பாவுடன் ஜோடியாக கண்ணாம்பாவும் (யோக) மங்களமும் நடித்தனர்.

    பாகவதர் நடித்த "ஹரிதாஸ்" படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இப்படத்தைத் தயாரித்தனர். கதை வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமியும், இளங்கோவனும் இணைந்து எழுதினர். "ஹரிதாஸ்" படத்தை இயக்கிய கந்தர்ராவ் நட்கர்னியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர். சின்னப்பாவின் மரணத்துக்குப் பின்னர் இந்தப்படம் வெளிவந்தது. சரியாக ஓடவில்லை.
    Last edited by sss; 23rd September 2014 at 05:40 PM.

  13. Thanks gkrishna thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #2938
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like





    நன்றி கோபு சார்,sss சார்,சி கே சார்

    தவறு திருத்தப்பட்டது . சுட்டி காட்டியமைக்கு நன்றி

    1951 இல் puc மரணம் சரிதானா இல்லை அதுவும் தவறா

    கொஞ்சம் confirm செய்யவும்
    gkrishna

  15. Thanks Russellmai thanked for this post
  16. #2939
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜி அவர்களே

    மரணம் வருடம் சரி தான்,... அந்த கட்டுரைக்கு நான் கொடுத்துள்ள தலைப்பு எப்படி ??

  17. #2940
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    1951 இல் puc மரணம் சரிதானா இல்லை அதுவும் தவறா
    கொஞ்சம் confirm செய்யவும்
    இணையத்தில் அவர் வாழ்க்கை வரலாறு என்ற பக்கத்தில் இப்படித்தான் போட்டிருக்கு
    "தமிழ் திரையுகில் முதன் முதலில் நடிக மன்னன் என புகழப்பட்ட சின்னப்பா 23/09/1951 ம் ஆண்டு இரவு 9.45 மணிக்கு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்."

    Link இதோ

    http://www.lakshmansruthi.com/legends/puc.asp

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •