-
23rd September 2014, 05:48 PM
#2941
எதுகை மோனை உள்ள அருமை தலைப்பு sss சார்
-
23rd September 2014 05:48 PM
# ADS
Circuit advertisement
-
23rd September 2014, 05:50 PM
#2942

Originally Posted by
madhu
"தமிழ் திரையுகில் முதன் முதலில் நடிக மன்னன் என புகழப்பட்ட சின்னப்பா 23/09/1951 ம் ஆண்டு இரவு 9.45 மணிக்கு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்."
Link இதோ
மது சார்
இன்னும் 4 hours உள்ளது மௌனம் அனுஷ்டிக்க
or
-
23rd September 2014, 07:58 PM
#2943
Junior Member
Diamond Hubber
வியரசரின் வைரவரிகள்............
அக்காலத்தில் 1982ல் “இதயம் பேசுகிறது” இதழ் “கவியரசு கண்ணதாசனின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்தமான இரண்டு வரிகளை எழுதி அனுப்புங்கள்” என்று வாசகர்களைக் கேட்டுக் கொண்டது. உடனே எண்ணற்ற வாசகர்கள் இந்தப் பகுதிக்கு எழுதி அனுப்பி விட்டாரகள்.
அதில் எனக்குப் பிடித்த வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!!
1. அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்........கவலை இல்லாத மனிதன்.
2.உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்---தலை
வணங்காமல் நீ வாழலாம் ....வேட்டைக்காரன்.
3.உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும். ....சூரியகாந்தி.
4.ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு. ....ஆயிரத்தில் ஒருவன்.
5.ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விழைவது மழலையடா......வாழ்க்கைப்படகு
6.காலம் ஒருநாள் மாறும்--நம்
கவலைகள் யாவும் தீரும். ...பாவமன்னிப்பு.
7.சந்திரனைத் தேடிச்சென்று குடியிருப்போமா
தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா..பறக்கும்பாவை.
8. சிரித்துச் சிரித்து என்னை சிறையிலிட்டாய்--கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய். ..தாய்சொல்லைத்தட்டாதே.
9. சொல்லென்றும் மொழியென்றும் பொருள்
..ஒன்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..பாலும்பழமும்.
10.நீலவானம் போபங் கொண்டா நிலவு தேய்ந்தது..கண்ணா
நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது.....அவர்கள்
.................நிறைய வரிகள் உள்ளன. மீதி இன்னொரு நாளில்,,,,,
-
23rd September 2014, 08:13 PM
#2944
Junior Member
Diamond Hubber
டி.எம் .எஸ்.;....... தேன் மல்லி பூவே!...பூந்தென்றல் காற்றே!
என் கண்ணே !...என் ராணி !....
நீ இன்றி ...நான் இல்லயே !
ஜானகி ;...
தேன் மல்லி பூவே!....பூந்தென்றல் காற்றே !
என் கண்ணா !...என் மன்னா!...
நீ..இன்றி ..நான் இல்லயே !
[ஜானகி ,டி .எம்.எஸ்.,கங்கை அமரன் ,இளயராஜா..]
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd September 2014, 10:00 PM
#2945
Senior Member
Senior Hubber
//சின்னப் பிள்ளை செய்யும் தொல்லை
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ..// சமத்தா ஆஃபீஸ்லருந்து வந்து குளிச்சுட்டு பாட்டுக் கேட்டுட்டேன்..
மலையாள சகுந்தலை – கே.ஆர்.விஜயா - ராஜேஷ்
ஆசை பொங்கும் அழகு ரூபம் பத்மினி அப்புறம் ஹிந்திவெர்ஷன்
பொல்லாத புன்சிரிப்பு – வாசு சார்
எஸ்.வாசுதேவன் சார் கொடுத்த ஹிந்திப் பாடல்கள்
மேனகா பாடல்கள் எல்லாம் கேட்டுட்டேன்.. கொடுத்தவர்களுக்கு மிக்க்க நன்றி..
பி.யூ சின்னப்பா -35 வயதில் இறந்த்து மிகக் கஷ்டம் தான்.. நன்றி எஸ் எஸ் எஸ் சார்..பட் அந்தக் கால பி.யூ.சி, எம்.கேடி. என்.எஸ்.கே சந்திரபாபு எல்லாம் ஏனிப்படி ஒரு சோக முடிவாக ஆனார்கள்..ம்ம்
-
24th September 2014, 12:48 AM
#2946
Senior Member
Seasoned Hubber
Ringtones for Mobile
நண்பர்களே,
நம் பல்வேறு அலுவல்களுக்கிடையில் கைப்பேசி அழைப்பினை உதாசீனப்படுத்தாமல் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்போம். அப்போது நமக்கு பிடித்த பாடலின் முன்னிசை இருந்தால் நன்றாக இருக்குமே என விரும்பியிருப்போம். அவ்வாறு விரும்பக் கூடிய நமது நண்பர்களுக்காக இனி வரும் நாட்களில் பழைய பாடல்களின் முன்னிசைத் தொகுப்பினை அழைப்பிசையாக வைத்துக்கொள்ள உதவும் பொருட்டு இங்கே வழங்க எண்ணியுள்ளேன். இதன் தொடர்ச்சியான பங்களிப்பு இதற்கு கிடைக்கும் வரவேற்பினைப் பொறுத்ததே எனவும் கூற விரும்புகிறேன்.
தொடக்கமாக ஆளுக்கொரு வீடு திரைப்படத்தில் இடம் பெற்ற அன்பு மனம் கனிந்த பின்னே பாடலின் முன்னிசையில் வரும் சாரங்கி .. அதனூடே ஒலிக்கும் சிதார்... கூடவே ஒலிக்கும் வயலின்... என்ன மறக்க முடியாக இசை... இதனை தங்களுடைய அழைப்பிசையாக வைத்துக் கொண்டு சில நாட்கள் பாருங்களேன்.
பதிவிறக்கிக் கொள்ளுங்கள்... பரீட்சித்துப் பாருங்கள்...
https://www.mediafire.com/?sg3ul2581kmavh6
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th September 2014, 01:00 AM
#2947
Senior Member
Senior Hubber
விட்டுப்போன முக்கால்மணி நேரத்தை இன்று மறுபடி பார்த்தேன் – நீயா நானா.. நிகழ்ச்சியை..
புருவத்தை வளைக்கிற மாதிரி இருக்கற போஸ்ச்சர் நல்லா இருக்கும் – கிருஷ்ணா ஜி..
பட ரிலீஸ்- சைக்கிள் டிக்கெட் வாங்கற்தே ஒரு திருவிழா..
தில்லானா மோகனாம்பாளுக்கு குங்குமச் சிமிழ் வாங்கிக் கொடுத்தோம்..
கிராமத்திலிருந்து வந்தவன் நான்.. முதல் நாள் அங்கு வராது..ரீரன்னுக்குத் தான் கிராமத்திற்கு வரும்..அதற்கே வீட்டில் சொல்லி – சந்திரசேகர் சார்..- அதற்கு மார்க் வாங்கினால் தான் பார்க்க முடியும்னு கண்டிஷன் வீட்டில்- அதெல்லாம் ஃபுல் ஃபில் பண்ணிட்டேன்..என்னைக் கூட்டிப் போ என்று அடம்பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போவோம் – (என்ன சந்தோஷம் முகத்தில்)
என்ன டெகரேஷன்ஸ் பார்த்தீங்க..
கர்ணன் படத்துல சாந்தி தியேட்டர்ல வளைவுகள் வைத்து ஒவ்வொரு வளைவுக்கும் ஒரு – நடித்தவர்களின் கட் அவுட் வைத்திருப்பார்கள்..எனில் ஊரில் இருந்து யார் வ்ந்தாலும் அவர்களை அந்தப்படத்திற்குக் கூட்டிப்போவோம்.இப்ப நினைச்சாலும் சிலிர்க்குது – ஒரு மாமி..
சொர்க்கம் படத்தில தேவி தியேட்டர் (?)ல அம்பதடில மரம் வச்சுருந்தாங்க அப்புறம் அவர் படுக்கற போஸ்ல ஒரு கட் அவுட்…அ ந்த மரத்துலயே ரூபா நோட்டு படத்துல வரமாதிரி நிஜத்துல போட்டு செக்யூரிட்டிஸ் பாத்துண்டே இருப்பாங்க – ராகவேந்தர் சார்..
பேசும் தெய்வத்துக்கு திருப்பதி செட்..அந்தப் படத்துல பெருமாளுக்கு திருப்பதி மாதிரி கத போகும் அதனால திருப்பதி செட் போட்டு முதல் நாள் வந்தவங்களுக்குலட்டு கொடுத்தாங்க.. – முரளி சார்.. (ஸோ ஸ்வீட்)
பெங்க்ளூர்ல திருவிளையாடலுக்கு நவ்ரங்க் தியேட்டர்ல சிவலிங்கம் மாதிரி செட்லாம் போட்டு வச்சுருந்தாங்க – ஒரு ரசிகர்
சிவசக்தி தியேட்டர் ரோஜாவின் ராஜான்னு சினிமா சுத்திவீர ரோஜாசார்..ஜஸ்ட் இமாஜின் தியேட்டர்னா எவ்வளவு பெரிசு சுத்திலும் ரோஜா..ஃபுல்லா ரோஸ் வேற மலரே கிடையாது _ வெல்டன் மேஜர் கிருஷ்ணா ஜி..
கலந்துகொண்ட ஹப் நண்பர்கள் அனைவருக்கும் மறுபடி ஒரு பெரிய ஓ 
ம்ம் தூக்கம் வருது வரட்டா..
-
24th September 2014, 04:08 AM
#2948
Senior Member
Veteran Hubber
jugalbandhi time
From Avan, Tamil dubbed version of Aah
kalyaaNa oorvalam varum......
From the original Aah
raajaa ki aayegi baraat......
We sing these songs as jugalbandhi in our annual music party. I sing the Tamil version and one of our North Indian friends sings the Hindi version.
Another jugalbandhi pair:
aaLai aaLai paarkkiraar (RathakkaNNeer)/ jhoome jhoome dil mera chanda ke chandni mein (Poonam)
Our annual music party this year is set in November. You are invited. Make sure you can sing at least one song. Don't worry about your singing or missing a note or two here and there. I will lock the front door so that nobody leaves ! 
Let us have fun (with food and music).
Last edited by rajraj; 24th September 2014 at 04:29 AM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th September 2014, 06:43 AM
#2949
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
சந்திரிகா - 1950ல் வெளிவந்த திரைப்படம். டி.எஸ்.பாலய்யா, கே.சாரங்கபாணி மற்றும் பலர் நடித்து, வி.எஸ்.ராகவன் இயக்கிய படம். இசை யாரெனத் தெரியவில்லை. ஆனால் லீலா அவர்களின் குரலில் இப்பாடல் மிகவும் இனிமையானது. விண்ணின் தாரை போலே...
http://www.inbaminge.com/t/c/Chandrika/
இப்படத்தில் இன்னொரு பாடலும் இதே போல் மனதை மயக்கும். கண்ணில் விளையாடும் காதலே.. கேட்டு மகிழுங்கள் இதே இணைப்பில்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th September 2014, 06:50 AM
#2950
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
டி.ஆர்.மகாலிங்கத்துடன் இப்பாடலை இணைந்து பாடியவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் பாடலின் துவக்க இசையும் பின்னணி இசையும் மனதை மயக்குவது நிஜம். புல்லாங்குழலுடன் இனிமையாகத் துவங்கும் இப்பாடல் நிச்சயம் நம்மில் பலர் கேட்டிருக்க மாட்டோம்.
இசை எஸ்.வி.வெங்கட்ராமன் மற்றும் சி.ஆர். சுப்பராமன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலைக் கேட்கும் போது சி.ஆர்.எஸ்.ஸின் ஸ்டைல் தான் தெரிகிறது.
கேட்டு மகிழுங்கள் - 1950ல் வெளிவந்த பாரிஜாதம் திரைப்படத்திலிருந்து
http://www.inbaminge.com/t/p/Parijatham%201950/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks