-
25th September 2014, 10:51 AM
#3051
ராஜா மலைய சிம்மன் மற்றும் அழகர் மலை கள்ளன் பாடல்களுக்கு நன்றி ராஜேஷ் மற்றும் வாசு சார்
-
25th September 2014 10:51 AM
# ADS
Circuit advertisement
-
25th September 2014, 10:53 AM
#3052
வாசு சார்
ராஜாமலைய சிம்மன் மற்றும் அழகர் மலை கள்ளன் திரை படத்தின் மேலதிக தகவல்கள் கிட்டுமா ?
-
25th September 2014, 10:55 AM
#3053
Senior Member
Seasoned Hubber
ராஜா மலையசிம்மன் ரஞ்சன் மற்றும் ராஜசுலோச்சனா நடித்தது. செளகார் அவரது தங்கை
அழகர் மலைக்கள்ளன் வெளிவந்ததா என்று தெரியவில்லை. வாலி ஐயா இயற்றிய முதல் பாடல்
இசையரசி பாடிய நிலவும் தாரையும் நீயம்மா , பி.கோபாலம் அவர்களின் இசையில்
-
25th September 2014, 10:56 AM
#3054
Senior Member
Seasoned Hubber
-
25th September 2014, 11:00 AM
#3055
Senior Member
Diamond Hubber
1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில் அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen' என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014, 11:00 AM
#3056
thanks for the information rajesh sir
அழகர் மலைக்கள்ளன் வாலியின் கட்டுரையில் படித்த நினைவு உண்டு
-
25th September 2014, 11:04 AM
#3057
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
ராஜாமலைய சிம்மன் மற்றும் அழகர் மலை கள்ளன் திரை படத்தின் மேலதிக தகவல்கள் கிட்டுமா ?
கிருஷ்ணாஜி,
'ராஜா மலையசிம்மன்' படம் பார்த்திருக்கிறேன். ரஞ்சனின் வீர தீர சாகசங்கள் நிறைந்த ஒரு படம். பிற்கால ரஞ்சன் படம். சண்டைக் காட்சிகள், குதிரைஏற்றம் , வாட்போர் அட்டகாசம். நமது அருமை ராகவேந்திரன் சார்தான் இந்தப் படத்தின் சண்டைக்கட்சிகளைப் பற்றிக் கூறியிருந்தார். என்னிடம் டிவிடியும் உள்ளது.
அழகர் மழைக் கள்வன் பட ஸ்டில்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014, 11:06 AM
#3058
வாசு சார்
9 வது வகுப்பு படித்து கொண்டு இருந்த போது வந்த பாபி படத்தின் நினைவை கிளப்பி விட்டீர்கள். நெல்லை பூர்ணகலாவில் 70 தினங்கள் ஓடிய நினைவு . படம் பார்த்த சில நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டு நல்ல நினைவு உண்டு ஒரு செவ்வாய் கிழமை மதியம் 2 மணி சாப்பாட்டுக்கு பிறகு முதல் வகுப்பு attendance கொடுத்துவிட்டு பார்த்த படம். திரை அரங்கு பள்ளி கூடத்தில் இருந்து கூப்பிடு தூரம் .அந்த வெள்ளை கலர் ரவிக்கையில் கருப்பு கலர் பொடிபொடி வட்டம் போட்ட முடிச்சு போட்ட dimple மேலாடை டிரஸ் கீழே ஒரு டவுசெர்
மறக்க முடியுமா
-
25th September 2014, 11:06 AM
#3059
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
ராஜா மலையசிம்மன் ரஞ்சன் மற்றும் ராஜசுலோச்சனா நடித்தது. செளகார் அவரது தங்கை
அழகர் மலைக்கள்ளன் வெளிவந்ததா என்று தெரியவில்லை. வாலி ஐயா இயற்றிய முதல் பாடல்
இசையரசி பாடிய நிலவும் தாரையும் நீயம்மா , பி.கோபாலம் அவர்களின் இசையில்
-
25th September 2014, 11:07 AM
#3060
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks