-
25th September 2014, 08:10 PM
#3131
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th September 2014 08:10 PM
# ADS
Circuit advertisement
-
25th September 2014, 08:10 PM
#3132
பின்னர் வெகு காலம் சாருகேசி பயன்படுத்தப் படாமல் இருந்தது. இளையராஜா வந்தபின் மீண்டும் ஒரு சுற்று வரத் தொடங்கியது. பெரும்பாலும் சோகமான சூழலுக்குப் பொருந்துமாறு ராஜா இசை அமைத்திருப்பார். 'அன்னை ஓர் ஆலயம்' படத்தில் டி.எம்.எஸ் பாடிய 'அம்மா ! நீ சுமந்த பிள்ளை" என்ற பாடல் சாருகேசியில் அமைந்தது. வெகுகாலம் இதைச் சிவாஜி கணேசன் படப் பாடல் என்று நிறைய பேர் சொல்ல கேள்வி பட்டது உண்டு
'தூங்காத கண்ணென்று பாடல்' பாணியில் அமைந்த பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014, 08:10 PM
#3133
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014, 08:11 PM
#3134
Senior Member
Veteran Hubber

Originally Posted by
gkrishna
welcome rajraj sir -
your period songs and related news were posted today. hope you will enjoy
regrds
gkrishna
Thanks. I like songs by S.G.Kittappa, P.U.Chinnappa, MKT , T.R. Mahalingam,MMD and NSK from that period.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
25th September 2014, 08:27 PM
#3135
நெருக்கடியான சூழலையும் ரசிக்க வைத்து ஒரு அனுபவமாக்குவதே படைப்பு. சாருகேசி துயரத்தையும் கவிதையாக வெளிப்படுத்தும் ராகம். 'முந்தானை முடிச்சு' படத்தில் வரும் 'சின்னஞ்ச்சிறு கிளியே' பாடல் அந்தவகையைச் சேர்ந்தது. பின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் மிகவும் மெல்லிசை பாணியில் 'காதலின் தீபம் ஒன்று' என்ற பாடலை அளித்திருப்பார். எஸ்.பி.பியின் குழைவுடன் சாருகேசிக்கே உரிய பிரிவின் ஏக்கத்தை உணர்த்தும் பாவம் மிக அழகாக வெளிவந்திருக்கும்.
-
25th September 2014, 08:45 PM
#3136
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
நெருக்கடியான சூழலையும் ரசிக்க வைத்து ஒரு அனுபவமாக்குவதே படைப்பு. சாருகேசி துயரத்தையும் கவிதையாக வெளிப்படுத்தும் ராகம். 'முந்தானை முடிச்சு' படத்தில் வரும் 'சின்னஞ்ச்சிறு கிளியே' பாடல் அந்தவகையைச் சேர்ந்தது. பின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் மிகவும் மெல்லிசை பாணியில் 'காதலின் தீபம் ஒன்று' என்ற பாடலை அளித்திருப்பார். எஸ்.பி.பியின் குழைவுடன் சாருகேசிக்கே உரிய பிரிவின் ஏக்கத்தை உணர்த்தும் பாவம் மிக அழகாக வெளிவந்திருக்கும்.
ராகதேவனின் சாருகேசி ஆளுமை:
தூது சொல்வதாரடி - சிங்காரவேலன்
மணமாலையும் மஞ்சளும் சூடி – வாத்தியார் வீட்டுப் பிள்ளை
அரும்பாகி மொட்டாகி – எங்க ஊரு காவல்காரன்
நல்லதோர் வீணை செய்தே – மறுபடியும்
ஆடல் கலையே தேவன் தந்தது – ராகவேந்திரா
சிறிய பறவை சிறகை – அந்த ஒரு நிமிடம்
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் – நானே ராஜா நானே மந்திரி
உயிரே உயிரின் ஒளியே – என் பொம்முக்குகுட்டி அம்மாவுக்கு
உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பெத்த மனசு பித்ததிலும் – என்ன பெத்த ராசா
நாடு பார்த்ததுண்டா – காமராஜர்
சக்கரக் கட்டி சக்கரக் கட்டி - உள்ளே வெளியே
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th September 2014, 09:07 PM
#3137
Senior Member
Diamond Hubber
எம்.எஸ்.வியின் சாருகேசிக்கு இசைக்குயில் சுசீலா குரலில் இன்றைய முதலமைச்சரின் நடனத்தைக் கண்டு களியுங்கள் ( ஈஸ்வரியின் குரலில் பாம்பாட்டி நடனம் போனஸ் )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014, 09:08 PM
#3138
Senior Member
Diamond Hubber
சிரி சிரி மாமா படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ஜாலியான சாருகேசி
நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்
-
25th September 2014, 09:34 PM
#3139
Senior Member
Senior Hubber
ஹப்பாடி..ஆஃபீஸ் விட்டு வந்து சமர்த்தா முகம் கைகால் அலம்பி ஒம்மாச்சி சேவிச்சுட்டு ஹோம் வொர்க் பண்ண வந்தா..எக்கச் சக்கமா இருக்கே
முதலில் வாசு சார் வழங்கியபிபிஎஸ் கல்யாண்குமார் கேட்டேன்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கிலை ஒத்துக் கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ
இதுவரை கேட்டிராத பாடல் என்று நினைக்கிறேன்.. நல்லாருந்துச்சு தாங்க்ஸ்..கடைசியா வர்ற ஆறு வைகை ஆறு மாதிரி தெரியுது தொலைவில் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்?
'அழகே
அமுதே
அறிவே
உயிரே
ஆசைக்கனவே
அன்பின் வடிவே' வாவ் எனக்கு மிகப் பிடித்த பாடல் எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே இந்த உலகினில் ஆகும் இனிமேலே..ம்ம் அழகான ஹம்மிங்க்.. பாடல் ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை..ஒரே ஒரு ஈ மட்டும் திறந்திருந்த வாய்க்குள் சுற்றிவிட்டு வெளியே வந்து கீழே மயங்கி விழுந்தது!
*
வாலி முதல் பாட்டுக்கு தாங்க்ஸ் உலகம் ஒரு நாள் உனதம்மா..
*
பாபி படஸ்டில்கள், அதுபற்றி கருத்த்தாழமிக்க கட்டுரைகள் வழங்கிய புண்ணியாத்மாக்கள் வாசு சார் கிருஷ்ணா சாருக்கு நன்றி.. ஹம்தும் ஏக் கம்ரேமே பந்த் கோனுக்கு அண்ணனோ அக்காவிடமோ அர்த்தம்கேட்டு சும்மாபடத்தப் பாருடா எனத் திட்டு வாங்கியிருக்கிறேன்..புரியவேயில்லைம்ம் என்று கொஞ்சம் முகம் வாடிய என் கையில் பாப்கார்ன் வாங்கிக்கொள்ள காசு வைக்கப் பட்டதாய் நினைவு.. (மதுரை மீனாட்சி தியேட்டர் என நினைவு..) ஆனால் ஹிந்திப் பட பிரம்மாண்டம் கொஞ்சம் நன்றாகவேப் பார்க்க வைத்தது.. அப்பறம் வேலைக்குச் சென்ற பிறகுதான் பார்த்துப் புரிந்தது..
*
ஷல்மிளாதால்கூர் கலுப்பு வெள்ளை மல்ற்றும் கலர்ல்படங்கள் கொஞ்சம் இருங்க முழுங்கிக்கறேன்..ஷர்மிளாதாகூர் கறுப்பு வெள்ளை மற்றும் வண்ணப் படங்களுக்கு அகெய்ன் தாங்க்ஸ்..
*
”பொங்குதே புன்னகை
புள்ளி இட்ட கலைமானை
அள்ளி இட்ட விழியோரம்
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே”
இன்றைய ஸ்பெஷல் எனக்குத் தெரிந்த பாட்டு.. ரசித்துக் கேட்டிருக்கிறேன்..இப்பதான் பார்க்கிறேன்.. புள்ளி இட்ட க்லைமானை எனும்போது யானைக்கூட்டம் செல்கிறது! எடிட்டிங்க் மகா சொதப்பல்.. கோராகாகஸ் கா எ மன் மேரா லிக்லியா நாம் உஸ்கோ தேரா பாட்டு போல் எடுக்கவேண்டும் என்று ஆசைமட்டும்பட்டிருக்கிறார்கள்.. நல்ல வேளை பாட்டு மட்டும் நன்றாக இருக்கிறது.. (ஓகே..லொகேஷன் தேக்கடி தான்..கொஞ்சம் கொடைக்கானலும் மிக்ஸ் ஆவது போல் இருக்கிறது.. கறுப்பு வெள்ளை மஞ்சுகள் முகட்டினில் மோதுவது அழகுதான்..) நன்றி வாசு சார்.
*
//நடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது// கேள்விப் படாத தகவல் தாங்க்ஸ் கிருஷ்ணா ஜி..
*
உடுமலை நாராயண கவி தானே குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், தாந்திதிமிக்கி தந்தக் கோனாரே எழுதியது இல்லை தஞ்சை ராமையா தாஸா..
*
விக்ரம் நு சொன்னா ஆக்டர் பத்தி இல்லை கிருஷ்ணா ஜி. விக்ரம் படம்….அதில் கமல் கூட இன்னொரு ஜோடியான சலாமியா இளவரசி டிம்ப்பிள் கபாடியா..வேண்டும் வேண்ட்டும் வா..மீண்டும் மீண்டும் வா எனக் கண்களில் மோகக் கனல் நீட்டி ஒரு காதற்கவிதை பாடிய சற்றே வயதாகியிருந்த பசுங்கிளி.. தேக்குமரத்தில் வார்த்து வைத்த தேஹம் இது தானோ – ம்ம் கொ வை க
*
க்ரேஸியாக்கிய ராஜஸ்ரீ நடித்த மலையாளப்படஸ்டில் அண்ட் பாட்டு..(முழுக்கக் கேக்கலை) நன்று..
*
செண்டு மல்லி மாலையோ
சிங்கார சோலையோ
தேனுண்ட தாழையோ
மணிகள் கொண்ட பார்வையோ நல்ல பாட்டு.. தாங்க்ஸ்.. யாராக்கும் அந்த வைர மூக்குத்திக் கன்னி?! (மூக்குத்தியில்லை..புல்லாக்கு) ஹிந்திப்பாடல் சாந்தினிக்கா சாந்த்ஹோ பலதடவை கேட்டிருக்கிறேன்..இப்பதான் பார்க்கறேன்..
*
அன்னையும் தந்தையும் தானே. தீன கருணாகரனே நடராஜா, மன்மதலீலையை வென்றார் உண்டோ..ம்ம் அப்பனைப் பாடும் வாயால் பழனி ஆண்டி சுப்பனை ப்பாடுவேனோ..என் ஸ்வாமியைப்பாடும வாயால்…, கிருஷ்ணா முகுந்தா முராரே (எம்கேடி தானே) நல்ல பாடல்கள் நினைவூட்டல்கள் அண்ட் பதிவுகள்க்கு ஒரு நன்றி..
*
ஆடல் காணீரோ எவ்வளவு தடவை கேட்டிருப்பேன் எனக்கு மி பிடித்த பாட்டு..பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி, நரிதனைப்பரியாக்கி பரிதனை நரியாக்கி…ம்ம் வைரவளை முத்து வளை ரத்னவளை விற்ற விளையாடல் காணீரோ..அழகிய பாடல் ஒல்லி பத்மினி..ஐ திங்க் இப்போ தான் பார்க்கிறேன் என நினைக்கிறேன்..
*.
வசந்த முல்லை , தூங்காத கண்ணின்று ஒன்று (சாருகேசிஎன இப்ப தான் தெரியும்..)என ப் பார்க்கையில் வெங்க்கிராமின் இடுகை..இவ்வளவும் சாருகேசியா..தாங்க்ஸ் வெங்கிராம், கிருஷ்ணாஜி.. பார்த்தால் மதுண்ணா – வரச்சொல்லடி சாருகேசி ம்ம் நன்றி டு ஆல்
*
ஹப்பாடா ஒருவழியா ஹோம்வொர்க் முடிச்சாச்சு
-
25th September 2014, 10:21 PM
#3140
Senior Member
Diamond Hubber
ஜாதகம் பார்த்து காதலிப்பது என்ன வகையோ ? கமல், ஜெயசித்ரா ஜோடிக்கு ராசிப் பொருத்தம் சரிதானா ?
குமாரவிஜயம் படத்தில் ஜேசுதாஸ், சுசீலா குரல்களில்... கன்னி ராசிப் பெண்ணும் காளை ராசிப் பையனும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks