Page 326 of 401 FirstFirst ... 226276316324325326327328336376 ... LastLast
Results 3,251 to 3,260 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3251
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    வாசு சார்.. நானும் ஒரு பெண் வந்திராத பாடலின் வரிகளுக்கு நன்றி..இன்னும் கேட்கவில்லை.. கண்ணழகின் சன்னதியில்.. க்ளிக் செய்தால் இன்னொரு tab ஓபன் ஆகி சுற்றிக் கொண்டே இருக்கிறது..!

    ராஜ்ராஜ் சார்.. பேகஸி ஹட் சே..பத்மினி பாடலுக்கு நன்றி..

    வாங்க கோபால் சார்..தங்கள் பிஸி ஷெட்யூலில் வருகை தந்தமைக்கு நன்றி..
    50
    ரங்கூன் ராதா மலைக்கள்ளன் தேவதாஸ் ரத்தக் கண்ணீர் பார்த்ததில்லை….கல்யாணப் பரிசு வும் தூக்குத் தூக்கியும் மி.சி.ப வில் என் லிஸ்ட்ல் வரும்..
    60
    லிஸ்ட்டுடன் ஒத்துப் போனாலும் மோட்டார் சுந்தரம் பிள்ளை, நடு இரவில், இரண்டும் கூடும் போட்டி வித் பாமா விஜயம் அண்ட் நெஞ்சில் ஓர் ஆலயம்..(முதலில் ஒரே ஹாஸ்பிடலில் எடுக்கப் பட்ட படமென்றாலும் என் பத்துலிஸ்டில் இல்லை)..அதே போல நீர்க்குமிழி யும் இதே காலகட்டம் தானே..சிறந்தபடங்களில் அது வந்திருக்க வேண்டுமே..
    70
    கொஞ்சம் நவீன இலக்கிய வாதியின் பார்வையில் டாப் டென் கொடுத்திருக்கிறீர்கள்..60% எனக்கு உடன்பாடில்லை

    80

    மீண்டும் ஒரு காதல்கதையை (பிரதாப் ராதிகா?) தயை தாட்சண்யமில்லாமல் நகர்த்திவிட்டு பூவே பூச்சூட வாவிற்குக் கொடுக்கலாம் (வருடத்திற்கொரு படம் என்று எடுத்திருக்கிறீர்களா தெரியாது..என் மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன்)

    90

    அவதாரத்தை விட சிகரம் பெட்டராக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

    2000

    கொஞ்ச்ம் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது பின் வருகிறேன்..

    அப்புறம் வரட்டா..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3252
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    வாசு ஜி,

    இதோ உங்களுக்காக ஒரு இசையரசி பாடல். இசை பப்பி லஹரி.

    சுஹாசினியை சகித்து கொள்வது கஷ்டம் .. பாடலை கேட்டு மட்டும் ரசிக்கவும்


  4. #3253
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால்

    வாருங்கள். நல்வரவு.

    வருந்த வேண்டாம். நல்லவைகள் ரசிக்கப் படாமல் போனதே இல்லை. உங்கள் ஸ்கூல் ஆப் ஆக்டிங் வானளாவ புகழப் பட்டது. எனவே கவலைகளை விடுத்து பணி தொடரவும் உங்கள் ஒய்வு நேரத்தில். சில்லறை நடிகைகள் வெளியே தெரிய வேண்டும் என்ற எண்ணமே அல்லாமல் வேறில்லை. வெளியே தெரியாதவர்களை அல்லது தெரிந்து மறந்தவர்களை தெரியப் படுத்துவதில் தவறில்லையே. அதையும் இதையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

    உங்கள் முதல் ரசிகனாய் நான் இருக்கையில் ஏன் தங்களுக்கு இந்த மனக் கிலேசம்? இங்கு பல பதிவுகள் கவனிக்கப் படாதது போலத் தோன்றலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிவையும் அணு அணுவாக வாசித்து மதுர கானத்தை மனதார ரசிக்கிறார்கள் என்பதே உண்மை. பின்னூட்டம் இட நேரமின்மை காரணமாக இருக்கலாம்.

    உங்கள் திறமை மய்யம் அறிந்த ஒன்று. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. உங்களுக்கு தீவர ரசிகர்கள் அதிகம். பின்னூட்டத்தை வைத்து எடை போடாதீர்கள். உங்களுக்கு பின்னூட்டம் கிடைக்காததற்கு முதல் காரணம் உங்களுக்கு வரும் பொசுக்கென்ற கோபமும், அடுத்தவரை வேதனைப் படுத்தும் வார்த்தைகளும், முன்னுக்கு முரணான கருத்துக்களும், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற சற்று அதீத எக்காளமும் தான். இதை முதலில் நிறுத்திப் பாருங்கள். அப்புறம் உங்களுக்குப் பின்னூட்டம் வருவதைப் பாருங்கள். ஏன் வம்பு இவரிடம் என்று எல்லோரும் உங்களைக் கொண்டு ஒளிந்து கொள்வதுதான் அனைத்திற்கும் காரணம். இந்த சிறு விஷயம் கூட எல்லாம் தெரிந்த தங்களுக்குப் புரியாதது எனக்கு மிக ஆச்சர்யமாய் இருக்கிறது.

    ஒரு ஆத்மார்த்தமான நண்பனாக ஹரி கூறுவதைப் போல் உங்களுக்குக் கூறுகிறேன். இதற்கும் வார்த்தைப் பிரயோகம் செய்ய வருவீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதுபற்றி நான் கவலை கொள்ளவில்லை.

    தங்கள் நண்பர் ஹரியை நான் பார்த்திருக்கிறேன். அவருடன் பேசியுமிருக்கிறேன். அவரை நான் மிகவும் விசாரித்ததாக சொல்லுங்கள்.

    தங்கள் பொன்னான பதிவுகளைத் தொடருங்கள்.
    Last edited by vasudevan31355; 27th September 2014 at 12:11 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3254
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    வாசு சார்.. நானும் ஒரு பெண் வந்திராத பாடலின் வரிகளுக்கு நன்றி..இன்னும் கேட்கவில்லை.. கண்ணழகின் சன்னதியில்.. க்ளிக் செய்தால் இன்னொரு tab ஓபன் ஆகி சுற்றிக் கொண்டே இருக்கிறது..!
    வணக்கம் சி.க. சார்.

    நீங்கள் சொல்வது உண்மையே. அனால் அதில் டவுன்லோட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து பாடலைக் கேளுங்கள். ஆன் லைனில் கேட்க யாது.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3255
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (80)

    இன்றைய ஸ்பெஷலில் மிக மிக ஸ்பெஷலான ஒரு பாடல்.

    இந்தப் பாடல் இன்பங்களின் ஊற்று.

    ஆழ்மனதின் அடித்தளத்தில் அனாயாசமாய் நங்கூரமிட்டு அமரும் அமரத்துவ கீதம்.

    'மெல்லிசை மன்னரி'ன் பின்னாளைய விஸ்வரூபம். இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் தனித்தனியே சாம்ராஜ்யம். நடத்துகின்றன. ஸ்டீரியோ நுணுக்கங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. மிக நுணுக்கமான பின்னிசை. ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெறும் பாடல். 'என்னால் எந்தக் காலத்திலும், எந்நேரத்திலும் இது போன்ற அமர்க்களமான பாடல்களைத் தர முடியும்' என்று பொட்டில் அடித்தாற்போன்று நெத்தியடி அடித்த பாடல்.

    பாலாவின் பரவசமூட்டும் அந்த குலோப்ஜாமூன் குரல் நம்மை குதூகலமடைய வைக்கிறது.


    நீண்ட நாட்களுக்குப் பின் பிரிந்த தன் காதலியைப் பார்த்த சந்தோஷத்தில் தன் மனதின் மகிழ்ச்சிகளையும், ஆசைகளையும் அவள் உணரும்படி பாடகனாக மேடையில் கொட்டித் தீர்க்கும் இளைஞன்.

    ஆனால் அவள் நிலைமை வேறு. அவன் பாடப் பாட அவள் சோகத்தில் கண்ணீர் வடிக்கிறாள். அவனோ அவளுடன் பழகிய நாட்களை எண்ணியபடி எழுச்சியுடன் பாடுகிறான் அவள் நிலைமை புரியாமல். ஏனென்றால் அவள் வேறு ஒருவனுக்கு மனைவியாகியிருக்கிறாள்.

    பாடகனாக விஜயகாந்த், பரிதாபமான காதலியாக சுதா சந்திரன். விஜயகாந்த் இன்னும் நன்றாகப் பண்ணியிருக்கலாம். சுமார்தான். இந்தப் பாடலின் அர்த்தம் முழுமையாகப் புரிந்து அதற்கேற்றபடி நடிக்க முடியாமல் போனது வருத்தமே. சுதா பரவாயில்லை. அப்போதைய புகழ் பெற்ற மின்னி மின்னி எரியும் டிஸ்கோ லைட்கள் சமாச்சாரமெல்லாம் உண்டு.


    மிக மிக அருமையான பொருத்தமான வரிகள். பாட்டைப் பிரிந்த பாடகனுக்கு பல்லவி கிடைத்தது..... உன்னை இன்று பார்ப்பது உண்மைதானா இது நிஜமா இல்லை நிழலா.....முன்பு என்னை விட்டு விலகிப் போன வெள்ளைப் புறா இன்று என்னைத் தேடி வந்து விட்டது.... என்னைக் கை விட்டுப் போன என் செல்வம் மீண்டும் எனக்கே கிடைத்துவிட்டது என்ற பொருள் பதிந்த பரவச வரிகள்.

    பாலாவின் பின்னாளைய பாடல்களில் முதல் இடம் பெறத் தகுதி வாய்ந்த பாடல்.

    இந்தப் பாடல் ஒரு சேர மகிழ்ச்சியையும், சந்தோஷ உணர்வுகளையும், பாடலைப் பார்க்கும் போது ஒருவித சோகத்தையும் கொடுக்கக் கூடிய வல்லமை நிறைந்த பாடல்.




    படம்: வசந்த ராகம் (1986)

    தயாரிப்பு: வி.வி. கிரியேஷன்ஸ்.(திருமதி ஷோபா சந்திரசேகரன்)

    கதை: ஷோபா

    நடிகர்கள்: உங்கள் அபிமான நட்சத்திரங்கள் என்று போடுவார்கள் ('பார்த்தால் பசி தீரும்' பட டைட்டில் போல)

    பாடல்கள்: கவிஞர் வாலி, புலமைப் பித்தன்.

    ஒளிப்பதிவு: எம்.கேசவன்

    இசை: 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்

    திரைக்கதை, வசனம், இயக்கம்: எஸ்.ஏ.சந்திரசேகரன்




    இனி பாடலின் வரிகள்.

    தேடாத இடமெல்லாம் தேடினேன்
    பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
    ஆனாலும் நான் தேடும் பல்லவி
    காணாமல் வாடினேன்
    கண்ணீரில் ஆடினேன்.

    இதுவரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
    பல்லவி கிடைத்தது
    இதுவரை ஏட்டைத் திரிந்த வார்த்தைகளுக்கொரு
    சரணம் கிடைத்தது
    என்னுடைய பல்லவி கிடைத்தது
    நல்லதொரு சரணம் கிடைத்தது

    ஹே ஹே ஹேஹே

    வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு
    வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
    இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று
    சந்திக்க நேர்ந்ததம்மா

    வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு
    வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
    இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று
    சந்திக்க நேர்ந்ததம்மா
    என் கண்ணம்மா
    துன்பங்கள் தீர்ந்ததம்மா

    நிஜமோ நிழலோ உனை நான் பார்த்தது
    பிரிந்தோம் இணைந்தோம்
    விதிதான் சேர்த்தது

    இதுவரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
    பல்லவி கிடைத்தது
    இதுவரை ஏட்டைத் திரிந்த வார்த்தைகளுக்கொரு
    சரணம் கிடைத்தது

    மெய் தொட்டுத் தழுவிய மஞ்சள் நிலாவும்
    கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா
    முன்னாளில் விலகிய வெள்ளைப் புறாவும்
    இந்நாளில் தோன்றுதம்மா

    மெய் வைத்துத் தழுவிய மஞ்சள் நிலாவும்
    கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா
    முன்னாளில் விலகிய வெள்ளைப் புறாவும்
    இந்நாளில் தோன்றுதம்மா
    என் கண்ணம்மா
    என் செல்வம் மீண்டதம்மா

    அடடா! இதுதான் இறைவன் நாடகம்
    உறவும் பிரிவும் மனிதன் ஜாதகம்

    இதுவரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
    பல்லவி கிடைத்தது
    இதுவரை ஏட்டைத் திரிந்த வார்த்தைகளுக்கொரு
    சரணம் கிடைத்தது
    என்னுடைய பல்லவி கிடைத்தது
    நல்லதொரு சரணம் கிடைத்தது


    Last edited by vasudevan31355; 27th September 2014 at 10:54 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes Russellmai liked this post
  8. #3256
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    வசந்த ராகம், நல்ல படம்

    ரகுமானின் பாத்திரம் மிகப்பிரமாதம் (வீணையொன்றை கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன் வேறொருவன் சொந்தம் என்று மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்)

    நான் உள்ளதை சொல்லட்டுமா .. என்ன அழகான பாடல்

  9. #3257
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    வாசு ஜி நீங்கள் அளித்த வசந்த ராகம் பாடல் இயற்றியது வாலி ஐயா.

  10. #3258
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    உண்மை ராஜேஷ்ஜி! நல்ல பாடல்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3259
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    வாசு ஜி நீங்கள் அளித்த வசந்த ராகம் பாடல் இயற்றியது வாலி ஐயா.
    superji.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #3260
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    வாசு ஜி,

    இதோ உங்களுக்காக ஒரு இசையரசி பாடல். இசை பப்பி லஹரி.

    சுஹாசினியை சகித்து கொள்வது கஷ்டம் .. பாடலை கேட்டு மட்டும் ரசிக்கவும்
    ராஜேஷ்ஜி!

    ரசித்தேன். சுகாசினியை அறவே எனக்குப் பிடிக்காது. பாடல் நன்று. எந்த நகரத்து சுடிதார் பெண்மணி பசுமாட்டிடம் பால் கறக்கிறாள்? இதே போல தமிழ் பாடல் ஒன்று கேட்ட ஞாபகம். நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •