Page 328 of 401 FirstFirst ... 228278318326327328329330338378 ... LastLast
Results 3,271 to 3,280 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3271
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சினிமா சித்தன்' - மாயவநாதன்

    Author: புதுகை.கனகராஜ்

    First Published: May 8, 2011 12:00 AM
    Last Updated: Sep 20, 2012 3:32 AM

    மறைந்துபோன திரைப்படப் பாடலாசிரியர்களுள் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன். விளம்பர வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் புதைந்துபோன சினிமா சித்தன். கேட்கும் தொகையை வழங்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தபோதும், பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு பாடல் எழுதாத பத்தினிப் பாடலாசிரியர்.

    திரையிசைப் பாடல்கள் பிரசித்தம் பெறத்துவங்கிய காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர் கண்ணதாசன். அதனால் பிற கவிஞர்கள் எழுதிய நல்ல பாடல்கள் கூட கண்ணதாசன் எழுதியதாக இருக்கும் என்பதே வெகுஜனங்களின் யூகமானதால், மாயவநாதன் கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயே நின்றுவிட்டார்.

    சொந்த ஊர், நெல்லை மாவட்டத்திலுள்ள பூலாங்குளம். தீவிரமான காளிபக்தர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர், பாலமுருக சித்தர் என்று சித்தர்களுடன் சிநேகமாக இருந்தவர். படத்தயாரிப்பாளர் தேவரின் வேண்டுகோளை ஏற்று, மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை மாயவநாதன் எழுதிக்கொடுத்தார். அவரது அழியாப் புகழுக்கு அந்தக் கல்வெட்டு ஒரு நல்ல அடையாளமாகும்.

    சென்னை-மயிலாப்பூரில் உள்ள ஒரு விடுதியில்தான் அவர் வெகுகாலம் தங்கியிருந்தார். நடிகை சந்திரகாந்தாவின் நாடகக்குழு அப்போது மிகவும் பிரசித்தம். அந்தக் குழுவினரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் திரையுலகின் கவனத்தைக் கவர்ந்தவர் மாயவநாதன். 1960 முதல் 1971 வரை, சில படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். இவர் திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எழுதிய அத்தனை பாடல்களிலும் வெற்றிபெற்ற கவிஞன். "படித்தால் மட்டும் போதுமா' திரைப்படத்தில்,

    ""தண்ணிலவு தேனிரைக்க

    தாழைமடல் நீர்தெளிக்க

    கன்னிமகள் நடைபயின்று வந்தாள்-இளம்

    காதலனைக் கண்டு நாணி நின்றாள்''

    என்ற பாடல் மூலம் அறிமுகமாகி, தன் முதல் பாடலிலேயே தனி முத்திரையைப் பதித்தார். பழந்தமிழ்க் கவிதை சாயலில் இலக்கிய உணர்வலைகள் எழும்ப முதல் பாடலை எழுதி, "யார் இந்த மாயவநாதன்?' என்று திரையுலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய கவிஞர் அவர்.

    ""கண்ணதாசனின் செல்வாக்கை உடைத்த முதல் கவிஞன் என்ற பெருமையுடையவன் மாயவநாதன்'' என்று புதுக்கவிஞர் நா.காமராசன், தான் எழுதிய "சொர்க்க வசந்தத்தின் ஊமைக் குயில்கள்' என்ற நூலில் குறிப்பிட்டிருப்பது, மாயவநாதன் பற்றிய நேர்மையான மதிப்பீடாகும். இதயத்தில் நீ - திரைப்படத்தில்,

    ""சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ - இந்த
    கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைந்திட
    யார் வந்தவரோ? - அவர்
    தான் என்னவரே...''

    என்ற பாடல் இயற்றுவதில் கைதேர்ந்தவர் மாயவநாதன் என்பதற்கு இந்தப் பாடலின் மொழி லாகவம் ஒரு நிரூபணமாகும். சந்தச்சுவையும், கற்பனை வளமும் மிக்க இந்தப் பாடல் திரைப்படப் பாடல்களின் வரிசையில் ஒரு வாடாமலர் என்றுதான் கூறவேண்டும்.

    பூமாலை - திரைப்படத்தில், இருளில் ஓர் ஆடவனால் கற்பு சூறையாடப்பட்ட பெண் ஒருத்தியின் நிலையை விளக்க...

    ""கற்பூரக் காட்டினிலே கனல் விழுந்து விட்டதம்மா''

    என்று பளிச்சென்று நெஞ்சைத் தாக்குகின்ற மின்னல் வரிகளைப் படைத்தார்.

    மாயவநாதன் யார்க்கும் அஞ்சாத, பணிந்துபோகாத குணமுடையவர். ஒருமுறை "மறக்க முடியுமா' திரைப்படத்துக்குப் பாடல் எழுத வந்தவர், இசையமைப்பாளரிடம் "என்ன மெட்டு?' என்று கேட்டார். அந்த இசையமைப்பாளர், "மாயவநாதன்...மாயவநாதன்' என்று தத்தக்காரத்தைக் கிண்டலாகக் கூறினார். மாயவநாதனுக்கு "கவிக்கோபம்' வந்துவிட்டது. கிடைத்த வாய்ப்புக்காக மண்டியிடாமல் உடனே வெளியேறிவிட்டார். பிறகு அந்த மெட்டுக்கு மு.கருணாநிதி எழுதியதுதான் "காகித ஓடம் கடலலை மீது' - என்ற பாடல்.

    மாயவநாதனின் கவியாளுமையை முற்றிலும் அறிந்து, தான் எழுதித் தயாரித்த படங்களில் வாய்ப்புகள் அதிகம் வழங்கி, மாயவநாதனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் மு.கருணாநிதி என்பதும் மறுக்க இயலாத உண்மை. பூம்புகார் திரைப்படத்தில் மாயவநாதன் எழுதிய பாடல்கள், சினிமாப் பாடல்கள் என்பதை மறந்துவிட்டால் அத்தனையும் சித்தர் பாடல்கள்தான். தத்துவசாரமும், மனிதநேயமும் உள்ளடங்கிய பாடல்கள் அவை.

    பந்தபாசம் - திரைப்படத்துக்கு கண்ணதாசனுக்குப் பதிலாக யாரை வைத்து எழுதுவது என்ற கேள்வி எழுந்தது. மாயவநாதனைத்தான் தெரிவு செய்தார்கள். "பந்தபாசம்' படத்தில் வருகிற...

    ""நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? - நெஞ்சில்

    நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?

    கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?

    குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?''

    என்ற பாடல், அது வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் பிரபலமானது.

    பாலும் பழமும் - திரைப்படத்தில் ஒரு பாடல்,

    ""பழுத்துவிட்ட பழமல்ல நீ விழுவதற்கு

    பாய்ந்துவிட்ட நதியல்ல நீ ஓய்வதற்கு

    எழுதிவிட்ட ஏடல்ல நீ முடிவதற்கு

    இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?''

    வாழ்வின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைக்கும் அதே கணத்தில், சாவின் வாயிலில் அடுத்த அடியை எடுத்து வைக்க நேர்ந்துவிட்ட ஓர் இளம் கதாபாத்திரத்தின் நிலையை முதல் மூன்று வரிகளில் பெருஞ்சோகத்துடன் கூறிவிட்டு, நான்காவது வரியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். ""இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?'' அற்ப ஆயுளில் ஒரு ஜீவனை முடித்து வைக்கும் விதியின் பிடரியில் அறையும் கேள்வி இது.

    என்னதான் முடிவு - திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்

    ""பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்க வைக்காதே''

    என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார். நாத்திகவாதியின் மனதைக்கூட கரைந்துபோக வைக்கும் ஆன்மிக வரிகள் அவை.

    திரையிசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல்கள் தலைசிறந்தவை. இலக்கிய வகைகளில் இசைப்பாடலும் ஒருவகை. தமிழ் மரபில் இசைப்பாடல்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் அதன் நீட்சியாக திரையிசைப் பாடல்கள் உருவானது. அந்த திரையிசைப் பாடல்களுக்கு இசையின்பத்தைத் தாண்டி ஓர் இலக்கிய இன்பத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் முக்கியமானவர் மாயவநாதன்.

    1971-இல் மாயவநாதன் காலமானார். "டெல்லி டூ மெட்ராஸ்' - திரைப்படத்தின் பெயர் பட்டியலில் மாயவநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, அந்தக் கவிஞன் மீதிருந்த மதிப்பை வெளிப்படுத்தினார்கள்.

    மேதாவிலாசத்துடன் பாடல்கள் புனைந்த மாயவநாதன் சொற்ப வாய்ப்புகளையும், அற்ப ஆயுளையும் பெற்றது தமிழ்ப் பாடலுலகின் துரதிருஷ்டம் என்றுதான் கூறவேண்டும். பொய்யும், புரட்டும், போலி விளம்பரமும் மலிந்த சினிமா உலகில், சித்த நெறியும், சத்திய வெறியும்கொண்டு ஞானச் சிறகடித்துப் பறந்த கவிஞன் மாயவநாதன்.
    gkrishna

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3272
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகம் டீஸிங் பாடல் 9

    'புது நாடகத்தில் ஒரு நாயகி
    சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
    புதுமுக மாது அனுபவம் ஏது
    வயதோ 18'

    தங்கை போல் நடிக்க வந்தவளின் நோக்கத்தை சிகரெட்டை ஸ்டைலாகப் பிடித்தபடி கண்டு பிடித்து, அவளை (கே.ஆர்.விஜயா) டீஸ் செய்து நடிகர் திலகம் பாடும் அற்புத பாடல். 'ஊட்டி வரை உறவ'ளித்த பாடல்.

    இந்த பாடலில் நடிகர் திலகம் அணிந்திருக்கும் உடைதான் அந்தக் கால சினிமா சிலைடுகளில் பல விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப் பட்டது என்பது இன்னொரு விசேஷம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post
  6. #3273
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார் பாராட்டுக்கும் பாட்டிட்டமைக்கும் அகெய்ன் தாங்க்ஸ்.. பாடல் கண்ணதாசனா மாயவ நாதனா.. ? விசாலிகண்ணதாசன் பின்னூட்டம் பார்க்க வேண்டும்.. //தென்றல் அழைத்துவரத் தங்கத் தேரினில் வந்தாரே// மரக்கிளையில் அமர்ந்து ஆடும் தேவிகை..
    கலை முற்றும் அறிந்தவரோ என்பதற்கு இல்லை எனத் தலையாட்டல்
    காதல் முற்றும் தெரிந்தவரோ என்பதற்கு ஆமாம் எனக் கண்மூடித் தலையசைத்தல் - வெகு அழகு..
    ம்ம் டிவியில் ஒரு முறை பார்க்க வேண்டும் மறுபடி!!

    ஆலு பத்தி சும்மா கேட்டேன் வாசு சார்..லொள்ஸ்லாம் இல்லை மன்னிக்க

    டீஸிங்க் பாடல்களில் ராணிமகா ராணி – இ.கா பீரியடில் ஏதாவதொரு பொதுக்கூட்டம் என்றால் வைத்துவிடுவார்கள்..வெகு நாட்களுக்கு எனக்குப் புரியாமல் இருந்தது..

  7. #3274
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மாயவ நாதனைப் பற்றிய பதிவுக்கு நன்றி கிருஷ்ணா ஜி..என் சந்தேகத்தையும் போக்கி விட்டீர்கள்..

  8. #3275
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகம் டீஸிங் பாடல் 10

    'அஞ்சல் பெட்டி 520' படத்தில் அசிங்கமான ஒரு நீள் பொய் மூக்கு மாட்டிக் கொண்டு தன்னைப் பார்த்திராத சரோஜாதேவியை டீஸ் செய்து பாடும் பாடல்.

    'மஞ்சள் முகமடியோ
    மல்லிகைப் பூச்சரமடியோ
    கொஞ்சம் கிளியடியோ
    கோபம் கொண்டது ஏனடியோ'

    'சந்தனச் சிலையே கோபமா
    சாகசமா இல்லை நாணமா
    தளதளக்கும் இடை குலுங்க
    தனியே செல்வது சந்தோஷமா'

    'ஆட வாடி ஜிங்கி
    உன் அழகுக்கேற்ற மங்கி'

    Last edited by vasudevan31355; 27th September 2014 at 12:49 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post
  10. #3276
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    1963-ல் வந்த கற்பகம் வாலியைத் தனித்தன்மையுள்ள கவிஞராக நிறுத்தியது என்றே சொல்லலாம். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் வியத்தகு இசையும் சுசீலாவின் தேன்குரலும் வாலியின் சொற்களை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன.

    படத்தில் மொத்தம் நான்கே பாடல்கள். நான்கு பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. படத்தில் ஆண்குரலே இல்லை. வெறும் பெண்குரலில் நான்கே நான்கு பாடல்களைப்போட்டு அந்த நான்கு பாடல்களையுமே சூப்பர் ஹிட்டாக்கிக் காட்டும்

    வித்தையெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கடுத்து எந்த இசையமைப்பாளருக்கும்-ஆமாம் எந்த இசையமைப்பாளருக்கும், இதுவரை வாய்த்ததில்லை.

    ‘அத்தைமடி மெத்தையடி’ பாடல் தமிழகத்தையே குலுக்கிப்போட்டது. அதற்கடுத்த பாடல் ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’ மூன்றாவது பாடல் ‘பக்கத்துவீட்டு பருவமச்சான்’, நான்காவது பாடல் ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா’ வாலி தமிழக மக்களின் நாக்கில் நிரந்தரமாக வந்து உட்கார்ந்தது இந்தப் படத்தில் இருந்துதான்.

    இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சம்பவத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தின் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அந்தக் காலத்துப் படங்களின் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களில் இவரும் ஒருவர். இவரது வசனங்கள் புகழ்பெற்றவை. நடிகை கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். கற்பகம் படத்தை கே.எஸ்.ஜி ஆரம்பித்தபோது அந்தப் படத்தில் வெறும் சுசீலாவை மட்டும் பாடவைத்து பாடல்கள் போடுவது என்றெல்லாம் திட்டம் இருக்கவில்லை. அதேபோல வெறும் வாலியை மட்டும் வைத்து அனைத்துப் பாடல்களையும் எழுதவைப்பது என்பதும் திட்டமில்லை. கண்ணதாசன் இல்லாமல் அந்தக் காலத்தில் பெரிய படங்கள் வராது. அவர் இல்லாமல் மற்றவர்கள் பாடல்கள் எழுதுகிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தாம் இருக்கவேண்டும். ஒன்று அவர் கிடைத்திருக்கமாட்டார். அரசியலில் மிகவும் பரபரப்பாக அவர் இருந்த காலகட்டம் அது. இன்று ஒரு ஊர் நாளை இன்னொரு ஊர் என்று அலைந்துகொண்டிருந்த நாட்களில் மற்றவர்களைப் பயன்படுத்திப் பாடல்கள் எழுத வைப்பார்கள். இது ஒரு காரணம். அடுத்த காரணம், குறைவான பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

    கற்பகம் படத்துக்கு என்ன காரணத்தினால் வாலியை மட்டும் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பாடல்கள் இப்போதைய வார்த்தையில் சொல்லவேண்டுமானால் சூப்பர் டூப்பர் ஹிட். படமும் பிரமாத ஹிட். இந்தச் சமயத்தில் படத்தின் நூறாவது நாள் விழாவோ வெள்ளிவிழாவோ கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்குத் தலைமைத் தாங்க கண்ணதாசனைக் கூட்டிவருகிறார் கேஎஸ்ஜி. நம்மைப் பாடல் எழுதவைக்காத படவிழாவுக்கு நாம் வருவதா என்பதுபோன்ற ஆதங்கம் எல்லாம் எந்தக் காலத்திலும் வைத்துக்கொள்ளாதவர் கண்ணதாசன். மகிழ்ச்சியோடு வருகிறார். மேடையில் வாலியும் இருக்கிறார்.

    அந்த விழாவில் சின்ன அண்ணாமலை பேசுகிறார். “இந்தப் படத்தில் கவிஞர் பாடல் எழுதவில்லை. வேறொருவர் எழுதியிருக்கிறார். ஆனால் எல்லாப் பாடல்களுமே பிரபலமாகியிருக்கின்றன. இது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாய் இருக்கும். ஆச்சரியம்தான். பல ரேக்ளா ரேஸ்களில் ஒன்றுக்கும் ஆகாத சில சோப்ளாங்கி மாடுகள் அதுபாட்டுக்கு ஓடி முன்னால் வந்துவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் இது” என்று பேசிவிட்டார்.

    பதறி எழுந்தார் கண்ணதாசன். “நண்பர் சின்ன அண்ணாமலை தவறாகப் பேசிவிட்டார். கற்பகத்தில் வாலி எழுதியிருக்கும் பாடல்களை நான் கேட்டேன். இதோ இப்போது வெளியூரிலிருந்து சென்னைக்குக் காரில் பயணம் செய்தபோது வழியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டு அத்தைமடி மெத்தையடிதான். மிகவும் நன்றாக எழுதியிருக்கிறார். ஒன்றுமில்லாமல் சும்மாவெல்லாம் ஒரு பாட்டு இந்த அளவுக்குப் பிரபலமாகிவிடாது. இதே படத்தில் இன்னொரு பாட்டு..பக்கத்து வீட்டு பருவமச்சான் என்று. அந்தப் பாட்டில் ‘பார்வையிலே வடம் புடிச்சான்’ என்றொரு வரி வருகிறது. இப்படி ஒரு வரியை சாதாரணமானவர்கள் எழுதமுடியாது. ஒரு கவிஞனால்தான் எழுதமுடியும்” என்று பேசினார். கவிஞரிடமிருந்து வாலிக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் இதுதான்.

    இணையத்தில் திரட்டிய தகவல்
    gkrishna

  11. Likes Russellmai, chinnakkannan liked this post
  12. #3277
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    thanks ceekay sir

    regards

    gk
    gkrishna

  13. #3278
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    ஆலு பத்தி சும்மா கேட்டேன் வாசு சார்..லொள்ஸ்லாம் இல்லை மன்னிக்க
    மன்னிக்க என்ற பெர்ர்ர்ரிய வார்த்தையெல்லாம் போட்டால் மன்னிக்கவே முடியாது. அப்புறன் அழுதுருவேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #3279
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்று விடை பெறட்டா? மதிய ஷிப்ட்.

    கிருஷ்ணா சார், சி.க சார்,

    பார்த்துக்கோங்க. கலக்குங்க. ஜமாயுங்க.

    நாளைக்குப் பாக்கலாம். பை.
    Last edited by vasudevan31355; 27th September 2014 at 12:47 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #3280
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    அருமையான நடிகர் திலக டீசிங் பாடல்கள் 10க்கும் மேல் வழங்கி உள்ளீர்கள்.

    வாழ்த்துகள்
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •