Page 179 of 400 FirstFirst ... 79129169177178179180181189229279 ... LastLast
Results 1,781 to 1,790 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1781
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் போற்றும் பெண் :

    1995 am aandu nagarkovilil nadandha oru thirumana nigazchiyil kalandhu kondu
    vazhthi pesiya nadigar thilagam sivaji ganesan kooriyathu:

    " palar thangalukku பெண் குழந்தை பிறந்தால் ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று வருத்தபடுகிரர்கள். மகாத்மா காந்திக்கு ஆண்
    குழந்தைகள் மட்டுமே பிறந்தன. இன்று உலகில் காந்திஜியை மட்டும்தான் தெரியும். அவர் பிள்ளைகளை யாருக்கு theiryum?
    Aanal, Nehruvirku ore oru பெண் குழந்தை than pirandhadhu. Ulagam போற்றும்
    piradhamar indiravaga அவர் thigalthandadai kankooda parthom. enave, பெண் குழந்தை பிறந்தால் kavalaipadathergal.

    From the issue of Kumudam dt 24.09.14

  2. Likes Russellmai, Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1782
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

    கடந்த பதிவின் இறுதி பகுதி.


    தர்மம் எங்கே படத்திற்கு ஜூலை 16-ந் தேதி மாலைக் காட்சி போவதற்கு நாங்கள் ஓட்டமும் நடையுமாய் தேவி டாக்கீஸ் சென்றோம். தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு மாசி வீதி கடந்து கிருஷ்ணாராயர் தெப்பக்குள தெரு தாண்டி B 4 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து தெருவில் நுழைந்தபோதுதான் புரிந்தது கூட்டம் பற்றி பல ரசிகர்களும் சொன்னது எந்தளவிற்கு சரி என்று!

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

    அந்த நாள் ஞாபகம்

    நான் என் சிறு வயது முதல் பல நடிகர் திலகத்தின் படங்களுக்கு பெரிய அளவில் மக்கள் கூட்டத்தைப் பார்த்திருக்கின்றேன். பிரம்மாண்ட கூட்டத்தையும் பார்த்திருக்கிறேன். முதல் நாள் அல்லாமல் படம் வெளியான சில நாட்களுக்குள் பெரிய கூட்டம் என்று சொன்னால் அது தங்கத்தில் கர்ணன் படத்திற்கும் ஸ்ரீதேவியில் திருவிளையாடல் படத்திற்கும் பார்த்த கூட்டத்தை குறிப்பிட வேண்டும். அவை இரண்டுமே மிக சிறிய வயதில் பார்த்தது என்பதனால் நாங்கள் சென்றது எத்தனையாவது நாள் என்பது எனக்கு தெரியவில்லை.

    ஆனால் ஓரளவிற்கு விவரம் தெரிய ஆரம்பித்தவுடன் முதல் நாள் கூட்டம் பார்த்தது என்றால் அது முதன் முதலில் 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று சென்ட்ரலில் ஊட்டி வரை உறவு படத்திற்கு பார்த்த கூட்டம்தான். இப்போதும் நினைவிருக்கிறது. யாரோ உறவினர்கள் அந்த தீபாவளிக்கு வந்திருந்ததால் ஒரு சினிமாவிற்கு போவோம் என்ற முறையில் வீட்டிலிருந்து சென்ற படம் என்பது நினைவில் இருக்கிறது.[ஏன் என்றால் அதற்கு முன்போ அல்லது பின்போ முதல் நாள் படம் பார்க்க வீட்டில் பெற்றோருடன் போனதேயில்லை. பின்னாட்களில் கசினுடன் சேர்ந்து முதல் நாள் போனதுண்டு]. தாயாருடன் சென்றதால் [தந்தை மற்றும் ஆன் உறவினர்கள் வெளியில் நிற்க] சென்ட்ரல் உள்ளே போக முடிந்தது. ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. அப்போது பார்த்த கூட்டம் சரியான கூட்டம்.

    அதன் பிறகு மதுரையில் பெரிய அளவில் வந்த முதல் நாள் கூட்டங்கள் என்று சொன்னால் தில்லானா, எங்க மாமா, சொர்க்கம், ராஜா, வசந்த மாளிகை, ராஜ ராஜ சோழன், எங்கள் தங்க ராஜா, கெளரவம், சிவகாமியின் செல்வன், தங்கபதக்கம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில் திரிசூலம் இவற்றையெல்லாம் குறிப்பிடலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை அல்லது நான் பார்த்தவரை பிரம்மாணடமான பயங்கரமான கூட்டம் என்று சொன்னால் நான் இரண்டு படங்களைத்தான் குறிப்பிடுவேன். ஒன்று சிவந்த மண் மற்றொன்று தர்மம் எங்கே! மற்ற படங்களுக்கு வந்தது பெரிய கூட்டம். ஆனால் சிவந்த மண் மற்றும் தர்மம் எங்கே படத்திற்கு வந்ததோ பிரம்மாண்டத்தையும் தாண்டியது.

    மதுரையில் ஸ்ரீதேவி திரையரங்கம் அமைந்திருந்த [ஆம், இப்போது அந்த அரங்கம் இல்லை. apartment ஆக மாறி விட்டது] தெருவிற்கு ஒர்க் ஷாப் ரோடு என்று பெயர். ஸ்ரீதேவி திரையரங்கம் அன்றைய நாட்களில் மதுரையில் ஏனைய அரங்குகளை விட [தங்கம் திரையரங்கை தவிர்த்து விட்டுப் பார்த்தால்] பெரிய வளாகத்தை கொண்டது. தெருவில் ஆரம்பித்தால் உள்ளே அரங்கம் அமைந்திருக்கும் இடம் வரை நல்ல விசாலமான ஏரியா. சைக்கிள் மற்றும் கார் பார்க்கிங் வரை செய்யலாம். இரு பக்கமும் நீளமான கம்பிகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ticket counter வரிசை. உள்ளே பெண்களுக்கு என்று தனி counter என பலவேறு வசதிகள். நான் முன்னர் குறிப்பிட்டது போல் அவையெல்லாம் இடிக்கப்பட்டு குடியிருப்பு வளாகமாக மாறி விட்ட போதிலும் அந்த திரையரங்கை காண வேண்டுமென்றால் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஹவுஸ் புல் [House Full] படத்தில் காணலாம். அந்த படம் முழுக்க ஸ்ரீதேவி திரையரங்கிலேதான் படமாக்கப்பட்டது.

    (தொடரும்)

    அன்புடன்

  5. Likes KCSHEKAR, Russellmai liked this post
  6. #1783
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    Dear Sir

    Please check your inbox. I have sent a mail to you !

    Regards
    RKS

  7. #1784
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    மனமார்ந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணாஜி... சமீப காலத்தில் அசுர வேகத்தில் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு 2000 பதிவுகளைக் கடந்து உள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1785
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Ancient Times Marina was called as Chola Mandala Kadarkarai then it was named as Coramandala Kadarkarai.

    Sivaji hailed from Cholas clan so the right man in right place



    Last edited by RavikiranSurya; 28th September 2014 at 01:52 PM.

  9. Thanks Russelldwp, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, Russelldwp liked this post
  10. #1786
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பம்மலார் ,

    தங்கள் calender மிக சிறப்பு என்று நண்பர்கள் சிலாகித்தனர். எந்த pose என்பதில்தான் போர் நடக்கிறதாம். நன்றிகள்.

    தங்களுக்கு அளிக்க நினைத்த பிறந்த நாள் பரிசு தாமதமானதற்கு மன்னிப்பு கோருகிறேன். நேரமின்மை (அதுவும் விடுமுறை நாட்களில் இதை செய்ய இயலாதே)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1787
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    தினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி - 28-09-2014

    தமிழகத்தின் அதிர்ஷ்டம் சிவாஜி கணேசன்! - ஏ.வி.எம். சரவணன்

    அக்., - 1 சிவாஜி பிறந்த நாள்


    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த் திரையில் அறிமுகமான படம், பராசக்தி. இப்படத்தை, பி.ஏ.பெருமாளுடன் இணைந்து தயாரித்தவர் ஏ.வி.மெய்யப்பன். ஏ.வி.எம்., மகனும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன், சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர்; சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி, அவரைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை, வாரமலர் இதழுக்காக பகிர்ந்து கொண்டார். அது:

    கடந்த, ஏப்., 9, 1958ஐ என்னால் மறக்க முடியாது. அன்று தான், ஏ.வி.எம்., ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு பொறுப்பாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். ஸ்டுடியோ நிர்வாகியான ரங்கஸ்வாமி அய்யங்கார், ஸ்டுடியோவில் இருந்தோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, ஸ்டுடியோவின் ஐந்தாவது தளத்தில், தெய்வப் பிறவி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு தான் முதன் முதலில் சிவாஜியைச் சந்தித்தேன். அவருடைய நல்வாழ்த்துக்களுடன் என் சினிமாப் பயணம் துவங்கியது.

    எங்கள் குடும்பத்தின் நல்ல நண்பர் சிவாஜி. என்னை எங்கு எப்போது சந்தித்தாலும், 'நல்லா இருக்கிங்களா?' என்று மனதார கேட்பார். அத்துடன், 'உங்க மனைவி லட்சுமி, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா...' என்று பாசத்தோடு கேட்பதுடன், 'மறக்காமல் உங்க மனைவி லட்சுமிகிட்டே நான், அவங்களை விசாரிச்சேன்னு சொல்லுங்க...' என்பார். அடுத்து, எப்பவாவது என் மனைவியை சந்திக்கும் போது, 'என்னம்மா லட்சுமி... நான் உங்களை விசாரிச்சேனே... உங்க வீட்டுக்காரர் சொன்னாரா?' என்று, 'கன்பர்மேஷனு'க்கு கேட்டு விடுவார்.

    என் தந்தையிடம் மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர் சிவாஜி. அவரது மகள் சாந்தியின் திருமணத்தின் போது, என் தந்தைக்கு தான் முதல் பத்திரிகை கொடுத்தார். எங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், சிவாஜியை முதல் வரிசையில் உட்கார வைப்பார் என் தந்தை.
    அதேபோன்று, தன் அமெரிக்க நண்பர்களிடம், சிவாஜியை அறிமுகம் செய்யும் போதெல்லாம், 'தமிழகத்தின் அதிர்ஷ்டம், சிவாஜி கணேசன் இங்கு பிறந்திருக்கிறார்; அமெரிக்காவின் துரதிருஷ்டம், அவர் அங்கு பிறக்கவில்லை...' என்று கூறுவார்.
    சிவாஜி சிறந்த நடிகர் மட்டுமல்ல; நல்ல குடும்பத் தலைவர். சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்று கூட்டுக் குடும்பமாக, ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்.

    இப்படத்தின் ஐம்பதாவது ஆண்டை, ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்று மிகவும் விரும்பினார் சிவாஜி. ஆனால், துரதிருஷ்டவசமாக விழா எடுக்க அவர் இல்லை. அப்படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் காட்சியில், 'சக்ஸஸ்...' என்று சொல்வார் சிவாஜி. அக்காட்சி, ஸ்டுடியோ தளத்திற்குள் எடுக்கப்படாமல், ஏ.வி.எம்.,மில் வெளிப்புற காட்சியாக எடுத்திருந்தனர். அதே இடத்தில், அவரது நினைவு சின்னம் ஒன்றை வைத்தோம். சிவாஜியின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும், 'நினைவுச் சின்னம் திறப்பதற்கு நடிகர் கமலை கூப்பிடலாம்; அது தான் பொருத்தமாக இருக்கும்...' என்றனர். தன் கலை வாரிசு என்று, சிவாஜியால் அறிவிக்கப்பட்ட கமல், அக்.,19, 2002ல், சிவாஜி சிலையை திறந்து வைத்தார்.

    அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு என்னை தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதைத்தொடர்ந்து சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற உலக அமைப்பிற்கு, ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற ஆசிய நாடுகளின் பிரதிநிதியாகவும், சர்வதேச சங்கத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். அதன் தலைமை செயலகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. இந்த பொறுப்பு எனக்கு கிடைத்ததற்காக, சிவாஜி தன்னுடைய தலைமையில் எல்லா நடிகர்களையும் அழைத்து, எனக்கு பாராட்டு விழா நடத்தினார். அத்துடன். தனிப்பட்ட முறையிலும், தேனீர் விருந்தும் கொடுத்தார். அவர், என் மீது கொண்டிருந்த பாசத்தை நினைத்தால், இன்னும் மெய் சிலிர்க்கிறது.

    சிவாஜி நடித்த, 125வது படம் ஏ.வி.எம்.,மின், உயர்ந்த மனிதன். உத்தர் புருஷ் என்ற வங்காள மொழி படத்தை, தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம். அப்படத்தை சிவாஜிக்கு போட்டு காண்பித்தோம். படத்தை பார்த்ததும், அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. உத்தர் புருஷ் படத்தின் கதைக் கருவை ஒட்டி எடுக்கபட்ட, உயர்ந்த மனிதன் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிய ஜாவர் சீதாராமனிடம், சிவாஜியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக எழுதும்படி கேட்டுக் கொண்டோம். கிருஷ்ணன் - பஞ்சு இயக்குனர்கள். இப்படத்திற்கு சிவாஜி முன்பணமோ, வேறு தொகையோ வாங்கிக் கொள்ளவில்லை. படம் வெளியான பின் தான் அவருக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டார்.

    கலைத்துறைக்கு சிவாஜி ஆற்றியுள்ள அளப்பரிய சேவையைப் பாராட்டி, பிரஞ்சு அரசு, மிக உயர்ந்த, 'செவாலியே' விருதை அளித்து கவுரவித்தது. அதை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சத்ரபதி சிவாஜி குதிரையில் அமர்ந்திருப்பது போன்று வெள்ளியில் செய்யப்பட்ட (தோட்டா தரணி உருவாக்கியது) சிலையை, தமிழ்த் திரை உலக சார்பில், சிவாஜிக்கு வழங்கினேன்.

    ஒரு முறை, திருலோகசந்தர் டைரக்ட் செய்யும் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தேன். அங்கு, படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை பார்த்து, 'ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள், உடம்பு சரியில்லையா?' என்று கேட்டேன். 'உடம்பைத் தொட்டுப்பார்...' என்றார். தொட்டுப் பார்த்தால், உடம்பு அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. 'உடம்பு கொதிக்கிறதே... ஓய்வு எடுத்துக்க வேண்டியது தானே?' என்று கேட்டேன்.
    'நாளை, 'வியட்நாம் வீடு'ன்னு ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்றேன்; அதிலே எனக்கு ஒரு பிராமணர் கேரக்டர். அதை சிறப்பாக செய்யணுமேன்னு டென்ஷன்; அதனால் தான் ஜுரம்...' என்றார் சிவாஜி. 'பிராமணர் கேரக்டரிலே நடிக்கிறது உங்களுக்கு ஒன்றும் சிரமமானது இல்லையே...' என்றேன்.
    'அது, சாதாரண பிராமணர் ரோல் இல்லை; பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற எமோஷனலான கேரக்டர். அந்த சீரியசான கேரக்டரிலே நடிக்கிறபோது, ஏதாவது தப்பா போயிட்டா மக்கள் காமெடியா நினைச்சு சிரிச்சுடுவாங்க...' என்றார்.

    அவர் அழைத்ததை அடுத்து, மறுநாள் மியூசிக் அகாடமியில் நடந்த, 'வியட்நாம் வீடு' நாடகத்தின் அரங்கேற்றத்திற்கு போயிருந்தேன்; திரை விலகியது... நான் அங்கே சிவாஜியைப் பார்க்கவில்லை; பிரஸ்டீஜ் பத்மநாபனைத்தான் பார்த்தேன்.

    ஒரு முறை கமல்ஹாசன், சிவாஜியைப் பற்றி கூறும் போது, 'ஒருவர் தன் நூறாவது படத்தில் நடிக்கிறபோது கிடைக்கிற பர்பெக் ஷனை தன் முதல் படத்திலேயே கொடுத்தவர் சிவாஜி...' என்று குறிப்பிட்டார். 'சிவாஜியிடம் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கப் பிடிக்கும்?' என்று கேட்டால், 'நடிக்க, 'ஸ்கோப்' இருக்கிற கேரக்டர்களில்...' என்று சொல்வார்.

    நடிப்பில் ஈடு இணை இல்லாத நடிகராக இருந்த போதும், கடைசி வரை சிறந்த நடிகருக்கான, 'பாரத்' விருது அவருக்கு தரப்படவில்லை என்பது வருத்தமான விஷயம். முதல் மரியாதை படத்துக்காக அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய விருது கூட நழுவி, ஒரு வங்காள நடிகருக்கு போய்விட்டது.
    எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய, 'பால்கே சாகிப்' விருது கூட, அரசியல் காரணமாக தள்ளிப்போய், 1997ல் தான் கிடைத்தது. அவருக்கு விருது அளித்ததற்காக, அப்போதைய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஜெயபால் ரெட்டியை சந்தித்து, நன்றி சொன்னேன். 'இந்த விஷயத்தில் நான் தலை இடவே இல்லை; அவார்டுக்குரிய தேர்வு கமிட்டி அவரை தேர்ந்தெடுத்தது; எனவே, எனக்கு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்...' என்று கேட்டார். 'ஒரு கமிட்டியை போட்டு, அதில் எந்தத் தலையீடுமின்றி சுதந்திரமாக தகுதியான நபரை தேர்ந்தெடுத்து, கவுரவிக்க வாய்ப்பு தந்ததற்காகவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்றேன் பதிலுக்கு!

    சிவாஜி - சினிமாவுக்கு, சினிமா ரசிகர்களுக்கு கிடைத்த வரம்!

    எஸ்.ரஜத்
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  12. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai, Russelldwp liked this post
  13. #1788
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி மாரிஸ் குரூப் சிவாஜி பக்தர்கள் நடிகர் திலகத்தின் 86 வது பிறந்தநாள் விழாவிற்கு வெளியிலட்ட 4 பிட் போஸ்டர்


  14. #1789
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post


    மனமார்ந்த வாழ்த்துக்கள்... சமீப காலத்தில் அசுர வேகத்தில் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு 2000 பதிவுகளைக் கடந்து உள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    நன்றி ராகவேந்தர் சார்
    நிச்சயம் பங்கு கொள்வேன் பதிவு இடுவேன் திரி வளர பாடுபடுவேன்
    என்றும் எல்லோர் நட்புடன்

    கிருஷ்ணா
    gkrishna

  15. #1790
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பம்மலார் ,

    தங்கள் calender மிக சிறப்பு என்று நண்பர்கள் சிலாகித்தனர். எந்த pose என்பதில்தான் போர் நடக்கிறதாம். நன்றிகள்.

    )
    மிக அருமையாக வந்து உள்ளது நண்பர் கோபால்
    ரசிகர்கள் அனைவரின் கையிலும் தவழ வேண்டிய ஒன்று
    ப்ம்மலரின் கடும் உழைப்பு நிச்சயம் தெரியும்
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •