Page 181 of 400 FirstFirst ... 81131171179180181182183191231281 ... LastLast
Results 1,801 to 1,810 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1801
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    Dear Sir
    Please check your inbox. I have sent a mail to you !
    Regards
    RKS
    Dear R.K.S Sir,

    தங்களுடைய PM பார்த்தேன்.

    தங்களுக்கு PRIVATE MESSAGE ஆகவே பதிலை அனுப்பலாம் என்று முயற்சி செய்தேன்.

    (The following errors occurred with your submission
    • RavikiranSurya has exceeded their stored private messages quota and cannot accept further messages until they clear some space.)
    அது இயலவில்லை.

    இது ரகசியமான ஒன்றல்ல என்பதாலும், மற்றவர்களுக்கும் என்னுடைய விளக்கம் தெரியவேண்டும் என்பதற்காவும், இதனை இங்கே பதிவிடுகிறேன்..

    தங்களுடைய கடிதம்.
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    A LETTER TO CONSIDER
    திரு சந்திரசேகர் சார் அவர்களுக்கு

    நடிகர் திலகம் அவர்களுடைய திரைப்படங்களை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்கள் சிலரை (அவர்கள் அடிப்படையில் நடிகர் திலகம் அவர்களின் பரம ரசிகர்கள்) சந்திக்க நேர்ந்தது. அவர்கள் நம்முடைய சிவாஜி சமூக நல பேரவை பற்றி சிறிது குறைபட்டுகொண்டார்கள். அதாவது, நடிகர் திலகம் திரையிடப்படும் திரை அரங்குகளின் பேரவையில் உள்ள எவரும் திரைப்படம் பார்க்க வராததுதான் அந்த குறை.

    பேரவை நண்பர்கள் அனைவரும் அந்த நிலையை கடந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் நம்முடைய நடிகர் திலகம் அவர்கள் திரைப்படங்கள் திரையிட மிக பெரிய முயற்சி மேற்கொள்ளும்போது, மிகுந்த ஸ்ரமத்துக்கிடையில் திரையிடும்போது, உங்கள் அமைப்பை சேர்ந்தவர் எவரும் வராமல் இருப்பது நல்ல எடுத்துக்காட்டு அல்ல !

    நடிகர் திலகம் அவர்கள் பெயரில் இயங்கும் இயக்கம் என்பதாலேயே சற்று உரிமையுடன் தங்களிடம் கேட்கவேண்டிய நிலை. திரைப்படம் தான் நடிகர் திலகம் அவர்கள் முதலில் வந்தது. அதன் விரிவாக்கம்தானே அரசியல், பொதுநலம் எல்லாம் .

    ஆகையால் நடிகர் திலகம் திரைப்படங்கள் திரையிடும் இடங்களில் நல்லதொரு ஊக்கம் கொடுத்து பேரவையின் மூலம் நல்ல ஒரு SUPPORT பேரவையின் நண்பர்களை கொடுக்கும்படி நீங்கள் அறிவுரைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைகிறார்கள்..!

    தங்களுடைய ஒத்துழைப்பு இதற்க்கு மிகவும் அவசியம் என்று நானும் கருதுகிறேன் !

    நம்மிடம் இல்லாதது ஒற்றுமை ஒன்றுதான்.

    மாற்றுமுகாம் நண்பர்களிடம் உள்ளது ஒற்றுமை ஒன்றுதான் !
    இதில் எதற்கு பலம் ...எதற்கு பலவீனம் என்பதை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை சார் !

    PLEASE ADVISE YOUR PERAVAI PEOPLE TO GO & SUPPORT ALL NADIGAR THILAGAM FILMS WHEN IT IS GETTING SCREENED IN THEATERS !!!

    OUR FRIENDS ARE TRYING OUR BEST TO BRING BACK THE HUGE POPULARITY OF NT BY RELEASING HIS FILMS, MAKING PUBLIC TO SEE IT .....!!!

    END OF THE DAY, YOUR ASSOCIATION TOO WOULD GET THE BENEFIT IS N't IT ?
    THANKS
    RKS

    என்னுடைய பதில்

    டியர் R .K .S சார்,

    நான் என்றுமே நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்படும்போதெல்லாம் ஆதரவு தெரிவித்தே வந்திருக்கிறேன். அதுமட்டுமால், டிஜிட்டலில் மறுவெளியீடு செய்யப்பட்ட, கர்ணன், வசந்தமாளிகை, பாசமலர் என்று எல்லா படங்களுக்கும், தமிழகம் முழுவதும் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் விளம்பரங்கள், விழாக்கள் செய்ததை அனைவரும் அறிவார்கள். என்னைப்பொறுத்தவரை, (சமீப காலமாக) மகாலட்சுமி போன்ற திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பதை விரும்புவதில்லை. அதே நேரத்தில், யாரையும் செல்லாதீர்கள் என்று சொல்லியதும் இல்லை.

    தாங்கள் நடிகர்திலகத்தின் படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் குறைப்பட்டுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். அத்தகையவர்களிடம் எனக்குள்ள குறைகளையும் அவர்களிடம் கேட்டு தாங்கள் பதிலளித்தால் நன்றாக இருக்கும்.

    1) இவர்கள் நடிகர்திலகத்தின் திரைப்படத்தை வாங்கி வெளியிட்டு சம்பாதிக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு பகுதியையாவது, நடிகர்திலகத்தின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்கு விளம்பரம், போஸ்டர் என்று ஏதாவது செய்தது உண்டா?

    2) நாங்களெல்லாம் (நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை) மற்றும் தனிப்பட்ட முறையில் கூட சிவாஜி ரசிகர்கள் பலர் பிறந்தநாள், நினைவுநாளுக்கு, அவரவர்களுடைய சொந்த சம்பாத்தியத்தில் ஒரு பகுதியைக் கொண்டு, அன்னதானம், நோட்டுப் புத்தகங்கள் கொடுத்தல் என்று பணிகளை செய்துவருகிறார்கள். ஆனால், இந்த விநியோகஸ்தர்கள் என்ன செய்தார்கள்?

    3) நடிகர்திலகத்தின் சிலைக்கு பிரச்சினை என்றபோது, அதற்காக குரல் கொடுத்ததோடு, வழக்கு மன்றத்திலும், களத்தில் இறங்கிப் போராடவும் செய்தது நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை. இன்றளவிலும், நடிகர்திலகத்தின் சிலை அதே இடத்தில் நீடிப்பது என்பது மட்டுமல்ல, நடிகர்திலகத்திற்கு போராட இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று உணர்த்தியது நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை.

    ஆனால், அப்போதெல்லாம், இத்தகைய விநியோகஸ்தர்கள் எங்கே போனார்கள்? (அவர்கள் அடிப்படையில் நடிகர் திலகம் அவர்களின் பரம ரசிகர்கள் என்று வேறு குறிப்பிடுகிறீர்கள்)

    திரியிலும், முகநூலிலும் கண்டனங்களைத் தெரிவித்தவர்கள் கூட, களத்தில் இறங்கவில்லையே? அது சிவாஜி பேரவையுடன் இணைந்துதான் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டுமென்றில்லை, தனிப்பட்ட முறையிலோ, போஸ்டர்கள் மூலமோகூட கண்டனங்களைத் தெரிவிக்கவில்லையே?

    மாற்றுமுகாம் நண்பர்களிடம் உள்ளது ஒற்றுமை ஒன்றுதான் ! என்று குறிப்பிடிருக்கிறீர்கள். உண்மைதான். அந்த ஒற்றுமை திரைப்படம் பார்ப்பதில் மட்டுமல்லாமல், சமூக நல, பொது விஷயங்களிலும் அவர்களிடம் ஒற்றுமை இருக்கிறது என்பதை தாங்கள் அறியாதவர் அல்ல.

    இதுமாதிரி தொடர்ந்து என்னுடைய, என்னைப்போன்றவர்களுடைய குறைகள் இன்னும் ஏராளம் இருக்கிறது. அடிப்படையில் சிவாஜி ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு, நடிகர்திலகத்தின் திரைப்படங்களை மறு வெளியீடு செய்பவர்களை, முதலில் அவர்களை சரிசெய்துகொண்டு மற்றவர்களைக் குறைகூறச் சொல்லுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

    ஒரு ரசிகன் என்ற முறையிலும், ஒரு அமைப்பை பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் நடத்தி வருபவன் என்ற முறையிலும் என்னுடைய உணர்வுகளையும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    நன்றி.

    K . சந்திரசேகரன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Likes joe liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1802
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வசந்த மாளிகை-1972

    எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.

    மதனுடன் ரதி இணையின் இன்பம் இத்தரணி க்கல்லவோ
    அதனுடன் விடுக்க பட்ட விரக பாணங்கள் வீசிய காதற்புயல்

    ஆனந்தன் தன் கண்ணான லதாவை காணு முன்பு கிண்ணத்தை ஏந்திய எண்ணங்களில்
    ஞானந்தனை முறித்து மது மாது ஆனந்தங்களில் தன்னை தொலைத்தவன்

    கெட்டு போனவனே அன்றி கெட்டவனுமல்ல கெடுத்தவனுமல்ல
    விட்டு விட்ட மனசாட்சியை தேடியலையும் தூய துணையரியா வீட்டு அனாதை

    தொட்டு பார்த்து தூசு தட்டி கலைமகள் கைபொருளை சீராட்ட வந்தாள் ஒரு வாணி
    விட்டு பட்ட வீட்டு சொந்தங்களோ தங்களுக்குள் விலங்கிட சுயநல சூழல் வளர்க்க

    குடிலில் இணைந்தாலே குதூகல இணைப்பு மாளிகையில் வசந்தமாக தரும் மயக்கமென்ன
    முடிவில் வசந்த மாளிகையில் யாருக்காக என உலகே உணர்ந்து ஊருக்கும் உணர்த்தியது

    தாயிருந்தும் செவிலி மடியில் உறங்கிய சேய் இரவல் தாயை கௌரவ கொலை கொள்ளும்
    பேயிடமிருந்து ஞாயமற்ற காயங்களில் மனதை தொலைக்க சுயம் தொலைத்தவன்

    வசந்த மாளிகை வடித்து தன்னை மீட்டியவளால் தான் தன்னை மீட்ட அதிசயம்
    கசந்த மாளிகையானதோ காயம் தரும் இங்கிதமற்ற ஒரே கேள்வியால்

    மருந்தானவளே காயம் தருகிறாள் தன் சுயம் காக்க மீட்ட வீணையின் தந்தியருக்கிறாள்
    அருமையான ஆத்மாவை மீட்க ஆட்கொண்ட தேவதையின் சிரத்தில் செய்த சத்தியம்

    மருத்துவரோ மதுவை மருந்தாக்க நாடிய மாதுவுக்கு நாடேன் மதுவை என்ற
    இருமனம் கேட்கும் வாலிப சேயை நாடாதே என சொந்தமின்றி சொல்லி விட

    திருமணம் முடிக்க செல்லும் திருமகளை தீர வாழ்த்தி நஞ்சுதனை
    விரும்பி நாடி ஓலமிடும் ஊமை காதலனின் உரத்த ஓசையின் உளமறிந்து

    அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.

    மானிட ஜாதியை விளித்து துவங்கும் நடிப்பு தேவன்
    வானிடை உலவும் வனிதா தேவதையின் கை கோர்க்கும்

    வைபவம் காண வசந்த மாளிகைகளின் கொட்டகை வாசல்களில்
    எய்பவன் எங்கோ இருக்க எங்கள் மீதெல்லாம் மன்மத அம்புகள்

    கிண்ணத்தை ஏந்தி களிநடம் புரிபவன் விசையுறு பந்தாக
    எண்ணத்தை எல்லாம் வண்ண ஜாலமாய் வாரியிறைப்பதை

    கண்ணதாசன் பாடலுக்கு என்னத்தை சொல்ல இதய கண்ணனின்
    விண்ணதிரும் சிருங்கார ஜால வித்தை விண்ணவரும் காணா விந்தை

    கன்னியருடன் கன்னமிடும் இக்கள்வனா எல்லோரின்
    இன்னுயிரை கவ்வி சென்ற ஆலம் விழுதுகள் போல் வந்த

    ஆயிரம் உறவுகளுடன் கண்ணீர் கடலில் குளிக்க செய்தவன்
    பாயிர பாடல்களில் ஆலத்துடனே ஆடி களிக்கிறான்

    வண்ண காஞ்சனாவுடன் சிவந்து மண்ணில் ஒருநாள் கண்டு
    கன்னமிட்டவன் இந்த சின்ன காஞ்சனாவையும் கொஞ்சி சுவைக்கிறான்.

    அப்பராக அப்பர் மக்களை அதி உன்னத அமைதியால் அசத்தியவன்
    தப்பராக தோன்றி லோயர் தளத்தையும் துதி பாட துள்ளுகிறான்

    வானத்து தேவதையோ வரவேற்பறையில் வரவேற்க வாலிப வண்ணங்கள்
    கானத்தின் கணத்தில் காமுகன் கண்களுக்கு கன்னல் கரும்பாக

    வாலிப வண்ண எண்ண விடலை கனவுகளில் கடலை கடக்கும் காற்றாக
    ஜாலி பண்ண ஜோலி பார்க்கும் வெறி வேங்கையின் வெற்றிகாணா

    இந்த நேரம் இன்னும் கூடாதா என் கனவு கன்னியின் தனங்கள் தரிசனம்
    வந்த வாலிப மதனோ காக்கும் கரங்களாய் கனவை கலைக்க

    உந்தலுடன் உன்மத்தினிடம் வேண்டாமெனில் விடு விரும்பினால் தொடு
    கந்தலை மேலுடையால் போர்த்தி கன்னியை கனிய காண்பான்

    குடிமகனை களிக்க வரும் கணிகையை காம கண்களால் களித்து
    கடித்து முடிக்கும் கள்வெறியுடன் காந்த கவர் கண்களின் கவர்ச்சி

    உதைத்து தள்ளி உன்மத்தம் ஊட்டி பதைத்து எழுப்பி பஞ்சணையில்
    கதைத்து நெஞ்சணைத்து உடையென்ற திரை உடைக்கும் ஆனந்தனின் ஆனந்தம்

    வீணை மீட்டும் வாணியை வீண் பொருளாய் வாட்டிஎடுத்து வெகுண்டவன்
    இணை தேடும் இன்ப பரப்பின் பரபரப்பின் பார்வையில் கனிந்த நோக்கு

    காந்தமென்ற சொல்லுக்கு கண்ணழகன் கண்களே காணு பொருளாய் கண்டோம்
    சாந்தம் வென்ற சந்தத்தில் சாந்தியை பெற்றவன் சாந்தி பெரும் சாரம்

    பறப்பதை தடுக்க விரும்பா திருந்திய குறும்பனின் விருதா விருப்பம்
    திறப்பதை திறந்த திருமகளை தீர தீண்டுமன கரும்பனான விரும்பன்

    ஆதி மனிதன் ஆடும் நடனம் வருணனையே வானம் திறக்க செய்யும்
    பாதியில் நின்று ராசாவுடன் ராணி இணைவு காண குடிலில் மன்மத

    பாணத்துடன் பருவ தாக போக பார்வையுடன் பழத்தை சுவைக்கும்
    நாணத்துடன் நல்கி நாடும் நல்லிதயம் விளித்து கொள்ளியால் புகை நாடும்

    இளமானுடன் இளமானுடன் இதம் காணும் இளமையுடன் தனிமை
    வளமான வாலிபனுக்கு வருமோ உளம்நாடும் உள்ளத்துணிவு

    குடிலிலே இணைவு காணும் இணைக்கு இல்லம் காண மாளிகை
    மடியிலே மகிழ்ந்து கன்னத்தில் முத்தமிட்டு கள்வெறி கொள்வதும்

    கழுத்திலே முத்தமிட்டு காண்போரையல்லாம் கனவு கடலில் கவிழ்த்து
    எழுத்திலே வடிக்கவொன்னா ஏந்திழையாளுடன் மெல்லிசைவு அசைவு நடமாடி

    பிரிவு துயருக்கு பெருங்காப்பியமே படித்து துவண்டு துடித்து
    பரிவு துயர் ஊட்டி இருமனம் வேண்டிய பெருமன வேள்வி வடித்து

    யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
    பாருக்காக இது ஊருக்காக என்று உலகே வியந்து ஊரறியா வெற்றி தந்து

    முடியா மாளிகையாய் காதல் காவியங்களுக்கு கதை மாளிகையாய்
    அடிமுடியறியா நடிப்பு சுரங்கத்தின் விடிவெள்ளி வடிவு வண்ணம்

    கண்டங்கள் கண்டு வென்ற நடிப்பினை கண்டெங்கள் இதயம்
    வண்டென நாடி நல்கும் வண்ண மலர் வாணிக்கும் வாழ்த்து சொல்லி வணங்கும்
    Last edited by Gopal.s; 29th September 2014 at 01:07 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes Harrietlgy, KCSHEKAR liked this post
  6. #1803
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to ESVEE for his write-up on Vasanthamaligai.


    நடிகர் திலகத்தின் "வசந்த மாளிகை" ஒரு காவியம்!

    தெய்வமாக மதிக்கவேண்டிய அம்மா ஒரு தாய்ப்பாசம் இல்லாத ஒரு ஜமீந்தாரிணி, கொலைகாரி என்று அறிந்து குடிக்க ஆரம்பித்து குடிகாரனாக வளர்ந்தவிட்ட நல்ல இதயம்கொண்ட இளைய ஜமீந்தார், ஆனந்த் என்கிற சின்னதுரை தான் சிவாஜி. இவரை ஏன் நடிகர் திலகம் னு சொல்றாங்க னு யாருக்கும் இன்னும் சந்தேகம் இருந்தால் இந்த டி வி டி பார்க்கவும்!

    குடிகாரராக இருக்கும் இளைய ஜமீன் இடம் பர்சனல் செக்ரட்டரியாக வேலைக்கு சேரும் அழகான கவர்ச்சியான, நேர்மையான அகம்பாவம் பிடித்த, சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக்கொடுக்காத லதாவாக நடித்துள்ளார் வாணிஸ்ரீ.

    லதா, குடிகாரராக, பெண்பொறுக்கியாக இருக்கும் சின்னதுரை ஆனந்தை நற்பாதைக்கு கொண்டு வருகிறார், ஆனந்த் தன் மனதை லதாவின் அழகுக்கும், அன்புக்கும் பறிகொடுக்கிறார். தன்னை நல் வழிப்படுத்திய லதாவுக்கு தன் இதயத்தை அளிக்கிறார். லதா ஆசையுடன் அந்த அன்பு இதயத்தை பெற்றுக் கொள்கிறார்.

    ஜமீந்தார் ஏழைப்பெண்ணை மணப்பதா? அவ்வளவு சீக்கிரம் ஜமீன் விட்டுவிடுமா? இதுதான் படம்! தெலுங்கு படத்தை ரி-மேக் செய்த படம் இது. தமிழில் சுமூகமாக முடிகிறது.


    இந்தப்படத்தில் சிவாஜி பேசும் சில வசனங்கள்!

    * தன்னிடம் புதிதாக வேலைக்கு வரும் பெண்ணிடம்:

    இதுதான் அழகாபுரி ஜமீன். இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க ஆனால் கடைசியில் மனுஷனுக்கு தேவை ஆறடிமண்!

    * தன்னைப்பெற்ற தாய்ப்பாசமில்லா அம்மாவிடம்:

    பாசமா? அது ஏதும்மா இந்த வீட்டிலே?

    *லதாவை கற்பழிக்க முயலும் கெட்டவனிடம்:

    இடியட்! சரினா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. அதுதான் நம்ம ப்ரின்சிப்பிள்.

    * தன்னை தன் சுற்றத்தார் அவமானப்படுத்தும்போது, லதாவிடம்:

    குடிகாரன்கூட வருத்தப்படுமளவுக்கு பேசுவதுதான் இவர்களுக்கு தெரிந்த மரியாதை.

    * நன்றியுள்ள வேலைக்காரனிடம்:

    பொறந்தநாளா? எனக்கா? நான் பிறந்தது எப்போ என்று என்னைப்பெத்த தாய்க்கும் தெரியாது, என்னை படச்ச ஆண்டவனுக்கும் தெரியாது, ஏன் எனக்கே தெரியாது. ஆனால் என் பொறந்த நாளை நீ மட்டும் ஞாபகம் வச்சிருக்கியே? இதை பாசம்னு சொல்வதா? இல்லை விஸ்வாசம்னு சொல்வதா? இதுதான் தூய்மையான அன்பு! அதான் அன்பை கடவுளுக்கு சமமா சொல்றாங்க இல்லையா? நான் யாருக்காக் பிறந்தேனோ, தெரியலை? ஆனால் நீ பிறந்தது மட்டும் எனக்காகத்தான்!


    பாடல்கள்:

    கண்ணதாசன் பாடல்வரிகள் எழுத கே வி மஹாதேவன் இசையமைக்க டி எம் சவுந்தர்ராஜன், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி பாடியவை.

    * மானிட ஜாதியே * ஏன் ஏன் ஏன் * குடிமகனே * கலைமகள் கைப்பொருளே * மயக்கமென்ன
    * இரண்டு மனம் வேண்டும் * யாருக்காக! எல்லாமே நல்ல பாடல்கள்!


    இந்தப்படத்தில் காதல் கட்டமா இருக்கட்டும், வசனமா இருக்கட்டும், ஸ்டயிலாக இருக்கட்டும், சிவாஜி பின்னி இருப்பார்.

    வாணிஸ்ரீ இவருக்கு ஈடுகொடுத்து நடித்து இருப்பார். கவர்ச்சியிலும், காதலிலும், தன் சுயமரியாதயை காப்பாற்றும் சீன்களிலும் கிளப்பி இருப்பார் வாணிஸ்ரீ.

    பாலாஜி, மேஜர் சுந்தர் ராஜன், ஸ்ரீகாந்த், நாகேஷ், வி கே ராமசாமி, ரமாபிரபா, சுகுமாரி, பேபி ஸ்ரீதேவி எல்லோரும் நடித்துள்ளார்கள்

    வசந்த மாளிகை, 1972 வில் வந்த ஒரு காவியம்தான்!
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1804
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ]







    Last edited by Gopal.s; 29th September 2014 at 01:35 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #1805
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Maalaimalar



    வசந்த மாளிகையில் நடித்த வாணிஸ்ரீ

    இன்றைய திரைப்பட ரசிகர்களாலும் 'காதல் காவியம்' என்று போற்றப்படுகிற 'வசந்தமாளிகை'யில், சிவாஜியுடன் நடித்தவர், வாணிஸ்ரீ.மற்றும் 'உயர்ந்த மனிதன்', 'சிவகாமியின் செல்வன்', 'வாணி- ராணி', உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

    வாணிஸ்ரீயின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் நெல்லூர். அவரது இயற்பெயர் ரத்தினகுமாரி. நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறியது, வாணிஸ்ரீ குடும்பம். அப்போது மயிலை ஆந்திரசபையில் படித்து வந்தார்.பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது நடனம் கற்றுக்கொள்ள ஆசைப் பட்டார். அந்த ஆசையை பெற்றோரிடம் வாணிஸ்ரீ தெரிவித்தார். எனவே, ஒரு நடனஆசிரியரை ஏற்பாடு செய்தார்கள்.

    நடனம் கற்றுமுடித்ததும் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன்விளைவாக நாடக மேடைகளில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது 'பீஷ்மர்' என்ற தெலுங்குப்படத்தில் சிறுவேடத்தில் நடிக்கவாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் நாடகத்தில் நடிக்கத்தொடங்கினார்.

    'சில்லரகொட்டு சின்னம்மா' என்ற நாடகத்தில் கதாநாயகியாக தோன்றிய இவரது நடிப்பு, பலரையும் கவர்ந்தது.

    அதன்பின்னர் முதன்முதலாக 'வீரசங்கல்ப்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.

    இந்த சமயத்தில் 'காதல் படுத்தும் பாடு' என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்தார். அந்த படம் வெளிவந்த பிறகு தமிழ்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடி வரத்தொடங்கின.

    1968-ம் ஆண்டு வெளியான 'உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜியுடன் வாணிஸ்ரீ ஜோடி சேர்ந்தார்.

    ஏவி.எம்.தயாரிப்பில் வெளிவந்த 'உயர்ந்த மனிதன்' வெற்றிப் படமானது.

    சிவாஜியுடன் நடித்தது பற்றி வாணிஸ்ரீ கூறியதாவது:-

    'நெல்லூரில் நான் வசித்தபோது, சிவாஜி நடித்த 'மனோகரா' தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு வெளிவந்தது. அந்த படத்தில் தான், முதல் முதலாக சிவாஜியை பார்த்தேன்.

    பின்னர், சிவாஜியுடன் நடிக்க ஆரம்பித்த பிறகுகூட, அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏவி.எம்மின் உயர்ந்த மனிதன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற இருந்தது. அதில் நடிக்க, நானும் சென்றேன்.

    இதில் சிவாஜி எனக்கு ஹீரோ என்றதும், இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. மறுநாள் காலையில் சிவாஜியுடன் நடிக்கவேண்டும். முன்பின் அறிமுகம் கூடநமக்கு இல்லையே, எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று கலக்கமாக இருந்தது.

    நெல்லூரில் திரையில் பார்த்தவரை, நேரில் பார்த்தேன். அதுவும் அவரது கதாநாயகியாக.

    சிவாஜி என்னை பார்த்தவுடன் 'உன் போட்டோக்களை பத்திரிகைகளில் பார்த்து இருக்கிறேன். நல்லா நடிப்பியா? தமிழ் நன்றாக பேசவருமா?" என்று கேட்டார். நான் சிரித்தபடி தலை அசைத்தேன்.

    'வெள்ளிக்கிண்ணம் தான்' என்ற பாட்டுக்குத்தான் முதன் முதலாக சிவாஜியுடன் நடித்தேன்'.

    இவ்வாறு வாணிஸ்ரீ கூறினார்.

    'உயர்ந்த மனிதன்' படத்திற்கு பிறகு சிவாஜிக்கு ஜோடியாக அதிக படங்களில் நடிக்க வாணிஸ்ரீக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

    அப்படி நடித்தப்படங்களில் `சிவகாமியின் செல்வன்', `வசந்தமாளிகை' ஆகிய படங்களில் வாணிஸ்ரீ நடிப்பின் சிகரத்தைத் தொட்டார் என்று கூறலாம். இந்தியில் வெளியாகி, சக்கைபோடு போட்ட 'ஆராதனா' படம், 'சிவகாமியின் செல்வன்' என்ற பெயரில் தமிழில் தயாராகியது. சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கன்னா நடித்த இரட்டை வேடத்தில் சிவாஜி நடித்தார். சார்மிளா டாகூர் நடித்த வேடத்தில் வாணிஸ்ரீ நடித்தார்.

    முன் பகுதியில் இளமையான கதாநாயகி. பின் பகுதியில், வயோதிகத் தோற்றம்! மாறுபட்ட இரு வேடங்களில் அற்புதமாக நடித்தார், வாணிஸ்ரீ. அதேபோலத்தான் தமிழத் திரைப்பட ரசிகர்களால், காதல் காவியம் என்று போற்றப்படும் 'வசந்தமாளிகை' திரைப்படத்தில் வாணிஸ்ரீ நடிப்பில் அசத்தி இருந்தார்.

    எந்த நேரமும் போதையில் தள்ளாடும் சிவாஜியை திருத்தி காதலிக்கும் விமானப் பணிப்பெண் கதாபாத்திரத்தில் வாணிஸ்ரீ நடித்தார். அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்த 'வசந்தமாளிகை', சிவாஜி, வாணிஸ்ரீ நடிப்பால், என்றென்றும் வாழும் காவியமாக இருந்து வருகிறது.
    Last edited by Gopal.s; 29th September 2014 at 02:24 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1806
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kcshekar View Post
    dear r.k.s sir,

    தங்களுடைய pm பார்த்தேன்.

    தங்களுக்கு private message ஆகவே பதிலை அனுப்பலாம் என்று முயற்சி செய்தேன்.

    (the following errors occurred with your submission
    • ravikiransurya has exceeded their stored private messages quota and cannot accept further messages until they clear some space.)
    அது இயலவில்லை.

    இது ரகசியமான ஒன்றல்ல என்பதாலும், மற்றவர்களுக்கும் என்னுடைய விளக்கம் தெரியவேண்டும் என்பதற்காவும், இதனை இங்கே பதிவிடுகிறேன்..

    தங்களுடைய கடிதம்.

    [b][u]
    திரு kc சேகர் சார் அவர்களுக்கு

    தாங்கள் அனுப்பிய இன்பாக்ஸ் மின் அஞ்சல்உம் கிடைத்தது.

    சம்பந்தம் உள்ளது சபைக்கு வந்தபிறகு சபையில் என் எண்ணங்களை பகிர்வது தானே முறை. ஆகையால் இங்கு இந்த சபையில் நான் உங்களுடைய சில கேள்விகளுக்கு பதில் தர கடமைபட்டவனாகிறேன் !

    தாங்கள் கூறியவற்றை படித்து நிலைமையை புரிந்துகொண்டேன். உங்களுடைய எண்ணங்கள் மற்றும் பேரவையின் இதர உறுப்பினர்களின் எண்ணங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டவை சரியான ரீதியில் புரிந்துகொள்ள முடிகிறது !

    என்னிடம் குறைபட்டுக்கொண்ட, ஆதங்கப்பட்டு கூறியவற்றை தங்களிடம் பகிர்ந்துகொண்டேன். அவ்வளவே. அவர்கள் குறைபட்டு, ஆதங்கபட்டார்களே தவிர கோபம் கொள்ளவில்லை.

    ஆனால் தங்களுடைய பதிலில் ஒரு மறைமுக கோபம் தெரிகிறது.

    எனக்கு தெரிந்த வரையில் நடிகர் திலகம் திரைப்படம் வெளியிடும் அனைவரும் வியாபாரிகள் அல்ல !

    வியாபாரம் என்றால் ஒரு பொருளை வாங்கி அதனை அதிக விலைக்கு விர்ப்பதாகும் அல்லவா ? அல்லது ஒரு பொருளை வாங்கி திரும்ப திரும்ப அந்த பொருளை பயன்படுத்தி வாங்கிய விலை வந்த பிறகும் கூட அதில் இருந்து வருமானம் பார்த்தால் அது வியாபாரமாகும் என்று நினைக்கிறன். அப்படி செய்பவன் வியாபாரி ஆவான் என்பதுவே நான் அறிந்தவரை வியாபாரம் அல்லது வியாபாரி என்பதன் பொருள் !

    ஓர் இருவர் இருக்கலாம்..திரு சொக்கலிங்கம் போன்றவர்கள் ..இதை தொழிலாக செய்பவர்கள். அவர்களுக்கு வியாபாரி என்ற பட்டம் பொருந்தும் என்பதை நீங்கள் அல்ல நான் அல்ல அனைவருமே அறிவார்கள்.

    மீதம் இருப்பவர்களில் பலர் நீங்கள் கூறியதைப்போல உங்களையும் உங்கள் பேரவையின் மற்ற உறுப்பினர் போல அவர்களுடைய சொந்த மாத சம்பளத்திலிருந்து தான் இதை செய்கிறார்கள். அவர்களுக்கும் யாரும் எந்த நன்கொடையும் கொடுத்து அதில் படத்தை வாங்கி திரையிடுவதில்லை என்றே நினைக்கிறன்.

    மேலும் அவர்களுடைய அந்த முயற்சி ரசிகர்களின் ஆதங்கத்தை தீர்பதற்காக செய்யப்படும் முயற்சியே தவிர அதில் நீங்கள் கூறியிருப்பதை போல வியாபார நோக்கம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    காரணம் முதலில் வெளியாகும் திரை அரங்கு தவிர வேறு எங்கும் அவர்கள் திரையிடுவதில்லை. நடிகர் திலகம் திரைப்படத்தை வெளியிடுவதை நீங்கள் கூறுவதை போல வியாபாரமாக அதை பார்ப்பார்களேயானால் அப்படி, ஒரு திரைஅரங்குடன் நிறுத்திகொள்வார்களா என்று சற்றே யோசித்துப்பார்க்க வேண்டுகிறேன்.

    நீங்கள் கூறியதை சரியா தவறா என்று எப்படி ஆராய வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது ! இது என்னுடைய opinion அவ்வளவே !

    நீங்கள் செய்வது ஒரு சமூக சேவை. நிச்சயம் போற்றத்தக்கது ! பெருமை படத்தக்கது ! அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது சார் !

    அதே சமயத்தில் நகரில் நடிகர் திலகம் அவர்கள் படங்கள் வரவிடாமல் பல சதிகள் திரை அரங்குகளில் நடந்தேறியபோது, அதை முறியடித்து, மறுத்த திரை அரங்குகளில் நடிகர் திலகம் திரைப்படங்களை திரை இட செய்து இப்போது தமிழகமெங்கும் அவர் படங்கள் காண்பிக்க படுகிறது என்றால் ...மக்களால் தங்களுடைய வாழ்வில் பயன்படும் அளவிற்கு கருத்துக்களை கொண்ட நடிகர் திலகம் படங்களை சமீப காலமாக பார்க்க முடிகிறது என்றால் ...இதை செய்பவர்கள் பொருத்தவரை அதுவும் ஒரு சேவை தான் சார் !

    அந்த சமயத்தில் அதே ரசிகர்கள், சமூக நல பேரவை அப்போது எங்கே சென்றது ? நடிகர் திலகம் படங்கள் திரையிட என்ன செய்தார்கள் என்று வினா எழுப்பினால் அது சரியா ? முறையா ? எழுப்பதான் முடியுமா ?

    நடிகர் திலகம் சிலை விவகாரம் பற்றி நான் இங்கு எதுவும் பேசவில்லை. உங்களுடைய அந்த செய்கைக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள், வந்தனங்கள், தலைவரின் ஆன்மா ஆசிகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி !

    நடிகர் திலகம் திரைப்படம் திரையிடும் வியாபார நோக்கம் அல்லாத ரசிகர்கள் ஒரு சிலர் முகநூல் வழியாக, இணையத்தளம் வழியாக மின் அஞ்சல் வழியாக இதனை கண்டித்தும், இதனை பற்றி எண்ணங்களை பகிர்ந்தும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் சரியாக விஷயத்தை உணரும் வண்ணம் செய்திகளை பகிர்ந்துள்ளார்கள் !

    அதன் தாக்கம் ஒரு tv , ஒரு பத்திரிகை என்று ஒரு வட்டத்திற்குள் மட்டுமே அடங்காது உலகம் முழுதும் தாகத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதும் கூட என்பதை நான் கூறிதான் நீங்கள் அறியவேண்டுமா சார் ! தாங்கள் அனுபவசாலி !

    தொலைகாட்சியில் வந்தால்தான், போஸ்டர் அடித்து ஓட்டும் முறையில்தான், அன்னதானம் மற்றும் இதர உதவி திட்டங்கள் செய்தால்தான் ஒருவர் நடிகர் திலகத்திற்கு சேவை செய்கிறார் என்று பொருள் இல்லை !

    நடிகர் திலகத்தை பற்றி, அவருக்கு சேவை செய்வது மேற்கூறிய முறை மட்டுமே சரியான முறை என்பதில்லை,.

    ஒரு brand / society name இல்லாமல் கூட, விளம்பரம் செய்யாமல் கூட சேவைகள் செய்யலாம் என்ற கருத்து உள்ளவன் நான். இவ்வளவு ஏன்...நடிகர் திலகம் அவர்கள் கூட பல நல்ல காரியங்களை வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் என்பது போல செய்துள்ளார். அவருக்கு advertisement தேவை இல்லை மற்றும் அவருக்கு அப்படி செய்வதில் எந்த உள்நோக்கமும் இல்லை. There is no hidden agenda ....in whatever good deeds he did !!!

    விளம்பரம் செய்யாமல் கூட பல நல்ல காரியங்களை செய்யலாம். அப்படி செய்யும் பல ரசிகர்களை எனக்கும் பரிச்சயம் உண்டு...எதற்கு சொல்கிறேன் என்றால்...நமக்கு தெரியாத விஷயத்தை பற்றி ஆணித்தரமாக நாம் உரைத்தல் கூடாது ! நம்முடைய எண்ணங்களை மற்றவர் மேல் திணிக்கவும் கூடாது !

    மேலும் சிவாஜி சமூக நல பேரவை பல நல்ல காரியங்கள் செய்து வருவது அனைவரும் அறிந்தது. இது பாராட்டபடவேண்டியது, பெருமைபடவேண்டிய விஷயமும் கூட ...!

    அனைவரும் அறியாதது என்னவென்றால், பேரவை மற்ற நடிகர் திலக குழுக்களுடன் கலந்தாலோசனை செய்து நல்ல காரியம் செய்யும்போது எந்த banner உம் ...அதாவது "சிவாஜி சமூக நல பேரவை" ...அல்லது " இதயராஜ சிவாஜி மன்றம் " இப்படி எந்த ப்ராண்டிங்கும் இல்லாமல்

    " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் பொது நல வைபோகம் " என்று இதை செய்யலாம் என்று எப்போதாவது கலந்தாலோசனைக்கு அழைத்ததுண்டா ? அல்லது மற்ற குழுக்கள் தான் தங்களிடம் அணுகினார்களா ? இரெண்டும் இல்லை ...!

    காரணம் அவர் அவர்களுக்கு அவர் அவர் organization பிராண்டிங் ஏதோ ஒரு காரணத்திற்க்காக அவசியமாகிறது. ! சுயநலம் இல்லாத ஒரு இடத்தில் நடிகர் திலகம் மட்டுமே பிரதானமாக இருப்பார் ! அந்த நல்ல காரியங்கள் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் !

    என்னிடம் பேசியவர்கள் மையம் பற்றி அவ்வளவு KNOWLEDGE இல்லாதவர்கள் ! ஆகையால் அந்த எண்ணங்களை உங்களிடம் through inbox பகிர்ந்தேன்.

    நடிகர் திலகம் அவர்களுடைய படங்களை திரையிடுபவர்கள் ஒற்றுமையை முன்னிட்டு அவர்கள் கருத்துக்களை முன்வைத்தார்களே தவிர, பேரவை உள்ளவர்களின் financial support கிடைக்கவில்லை ..அதாவது...இன்னும் பச்சையாக சொல்லப்போனால் ...பேரவை சேர்ந்தவர்கள் ஒரு 50 பேர் வந்திருந்தால் 50 டிக்கட் இன்னும் போயிருக்கும் ...1000 மோ 500 ஒ அதிகம் வசூல் ஆகி இருக்கும் என்ற ரீதியில் கூறவில்லை. !

    இதை நான் இங்கு குறிப்பிட காரணம் உங்களுடைய மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை நீக்கிவிட இது வழி வகை செய்யும் என்பதால் குறிப்பிடுகிறேன். காரணம் உங்களுடைய பதிலில் ஆதங்கத்திற்கு பதில் என்கிற தொனியில் பொருள் குறைவாகவும்...கோபத்தின் தொனி சற்று அதிக சதவிகிதத்தில் இருப்பது என்னால் உணர முடிகிறது !

    பேரவை எந்த நல்ல காரியம் செய்யும்போதும் அதன் உறுப்பினர்கள் நம் ரசிகர்களை ..அவர்கள் வெறும் ரசிகராக இருந்தாலும் சரி...நடிகர் திலகம் திரைப்படம் வெளியிடும் ரசிகராக இருந்தாலும் சரி அல்லது உங்கள் எண்ணப்படி அப்படி ஒரு வியாபாரியாக இருந்தாலும் சரி...பேரவை உறுப்பினர்கள் அணுகியிருந்தால் நிச்சயம் அவர்களும் அந்த நல்லகாரியங்களில் பெரும் பங்கு வகிப்பார்கள் !

    அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள் ..நான் இங்கு கூறுவது உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள் !

    Regards
    rks
    Last edited by RavikiranSurya; 29th September 2014 at 01:50 PM.

  10. #1807
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like




    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1808
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like








    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Likes Russellmai liked this post
  13. #1809
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like






    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Likes Russellmai liked this post
  15. #1810
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Listed the centres where VM had celebrated runs.

    1. Chennai - Shanthi -176 Days

    2. Chennai - Crown - 140 Days

    3. Chennai - Bhuvaneswari - 140 Days

    4. Madurai - New Cinema- 200 Days

    5. Tiruchy - Raja - 140 Days

    6. Coimbatore - Raja -107 Days

    7.Salem - Jaya - 107 Days

    8. Erode -Muthukumar - 107 Days

    9. Thanjai - Jupiter - 119 Days

    10. Kudandhai - Noor Mahal- 101 Days

    11. Mayiladuthurai - Alagappa - 101 Days

    12. Colombo - Capitol - 287 Days

    13. Jaffna - Wellignton - 217 Days.

    Such was the power of Vasantha Maligai.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •