Page 187 of 400 FirstFirst ... 87137177185186187188189197237287 ... LastLast
Results 1,861 to 1,870 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1861
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அன்பர்களே! இணையத் திருட்டு இப்போதெல்லாம் நிறைய நடக்க ஆரம்பித்துவிட்டது. யாரேனும் இதுபோன்ற ஓவியங்களை ஓவியரின் பெயரை நீக்கிவிட்டு எங்கேனும் பயன்படுத்த ஆரம்பித்தால் முடிந்த அளவு கண்டிக்க முயலுங்கள். முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஓவியர்களிடம் தெரிவிக்கலாம்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Thanks Gopal.s thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1862
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Irandhum Irava Pughazudan Irrukkum Em Thalaiva Unakku En Namaskarangal.

  5. #1863
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    There is a article by Mr NPN Ponnusamy about NT in Kungumam lates issue. If anyone have the facility can

    upload the same.


    Regards

  6. #1864
    Junior Member Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    26
    Post Thanks / Like
    MY DEAR NADIGAR THILAGAM WISHING YOU A MANY MORE HAPPY RETURNS OF THE DAY!!


    SUCCESS!!

    Even after going through
    A lifetime of struggle
    Even after having so many
    Responsibilities to juggle
    We are happy to see you
    Standing so strong and tall
    Celebrating your Eighty Seventh Birthday
    Is a proud moment for us all
    Happy 87th Birthday Dear Nadigar Thilgam (AVL)

    God gave a gift to the world when you were born—
    a person who loves, who cares,
    who sees a person's need and fills it,
    who encourages and lifts people up,
    who spends energy on others
    rather than herself,
    someone who touches each life,
    and makes a difference in the world,
    because ripples of kindness flow outward
    as each person you have touched, touches others.
    Your birthday deserves to be a National Holiday,
    because you are a SPECIAL TREASURE

    HAPPY BIRTHDAY GOD OF ACTING

    JAIHIND
    M. Gnanaguruswamy

  7. #1865
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    கலைமகளின் அவதாரமே,

    கலைமகள், அலைமகள், மலைமகள் மூவரையும் போற்றும் நவராத்திரி சமயத்தில் உலகத்தில் நீ அவதரித்ததே, நீ கலைமகளின் அவதாரம் என்பதைப் பறை சாற்றத்தானோ?

    எங்கள் ஊன், உடல், உயிர் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து விட்ட கலைக்குரிசிலே, நடிகர் திலகமே, எப்பிறவி எடுத்தாலும், என்னை உன் ரசிகனாகவே படைத்து விடு.

    இரா. பார்த்தசாரதி

  8. #1866
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Vasu for the Good write-up.

    'திரும்பிப் பார்' (நடிகர் திலகம் பிறந்தநாள் சிறப்பு ஆய்வுக் கட்டுரை)

    திரும்பிப் பார்

    நடிகர் திலகத்தின் 5 ஆவது அற்புதப் படைப்பு.

    வெளியான நாள் - 10.07.1953

    தயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ்

    கதை வசனம் - மு.கருணாநிதி

    சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், பிரபாத், சரஸ்வதி, நூர்ஜஹான்

    இசை - 'இசைமேதை' ஜி.ராமநாதன்

    படத்தொகுப்பு - எல்.பாலு

    ஒளிப்பதிவு - w.r.சுப்பாராவ்

    இயக்கம் - டி.ஆர். சுந்தரம்

    நடிக நடிகையர்:

    நடிகர் திலகம், பி.வி.நரசிம்ம பாரதி, பண்டரிபாய், கிரிஜா, கிருஷ்ணகுமாரி, டி.எஸ்.துரைராஜ், ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்

    கதை:

    பெற்றோரை இழந்து தன் தம்பி பரந்தாமனுடன் கோவையில் தனியே வாழ்ந்து வருகிறாள் நல்மனம் கொண்ட பூமாலை. தம்பி பரந்தாமனோ பரம அயோக்கியன். கபடதாரி, வேஷதாரி, காமுகன், நயவஞ்சகன் போன்ற பல பட்டங்களுக்கு முதல் சொந்தக்காரன். பெண்களிடம் காதல் போதையூட்டும் களிப்பான கனிமொழி வார்த்தைகளை தேன் குழைத்து பேசி, வாளிப்பான அவர்கள் அழகை சூறையாடி விட்டு அவர்கள் வாழ்வை நாசம் செய்து சுகம் காணுவதில் கை தேர்ந்த சூத்ரதாரி. தம்பியைத் திருத்த பல வழிகளில் முயன்று முடியாமல் முழிக்கிறாள் பூமாலை.

    கோவை சிவசக்தி மில் தொழிலார்களின் மேஸ்திரி புண்ணிய கோடியின் மகன் பாண்டியன் ஒரு எழுத்தாளன். நல்லவன். அவன் எழுதும் கதைகளைத் திருடி அவற்றை தான் எழுதுவதாக தன் பெயரை அச்சிட்டு ஊரை ஏமாற்றுகிறான் பரந்தாமன். அவனுக்கு உடந்தை கருடா பதிப்பகத்தின் உரிமையாளன் கருடன். அவனும் ஒரு எத்தன். பணப் பித்தன். இந்த ஏமாற்று அக்கிரமத்தைத் தட்டிக் கேட்கும் பாண்டியனுக்கும், பரந்தாமனுக்கும் அடிக்கடி தகராறு எற்பட்டு இருவரும் பகையாளியாகிறார்கள்.

    பாண்டியனின் எழுத்தை தன் எழுத்தாக கருதி தெரியாமல் ஏமாளியாக நம்பும் பாமா என்ற இளம் பெண்ணை தன் காதல் வலைக்குள் சிக்க வைக்கிறான் பரந்தாமன். அந்தப் பேதையும் இவனுடைய காதல் ரசம் சொட்டும் பேச்சுகளுக்கு மயங்கி அடிமையாகிறாள்.

    பூமாலைக்கு குமுதா என்றொரு சொந்தம். பரந்தாமனுக்கு முறைப்பெண். குமுதாவை தன் தம்பி பரந்தாமனுக்கு மணமுடித்து வைக்க எண்ணியிருக்கிறாள் பூமாலை. ஆனால் பரந்தாமன் பாமாவைக் காதலிப்பதை அறிந்து பாமாவை அவனுக்கு மணமுடித்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள் பூமாலை. திருமணத்தன்று பாமாவைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் அவளை வெறும் மணக் கோலத்திலேயே விட்டுவிட்டு தாலி கட்டாமல் யாருக்கும் தெரியாமல் வெளியே கம்பி நீட்டி விடுகிறான் கயவன் பரந்தாமன். தன் கல்யாணம் நின்று போனதை எண்ணிக் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள் பாமா.

    சில நாட்கள் சென்று வீட்டிற்கு திரும்பி வரும் தம்பி பரந்தாமனை பாமாவை ஏமாற்றி ஓடிய குற்றத்திற்காக அக்காள் பூமாலை கடுமையாக கடிந்து கொள்ள, திருமணத்திற்கு முன் பாமா நடத்தை கெட்டவள் என்று தனக்குத் தெரிந்தததால் கல்யாணம் பிடிக்காமல் ஓடி விட்டதாக வாய் கூசாமல் பொய் கூறி பாமாவின் மீது பழி சுமத்தி அக்காள் வாயை அடைத்து விடுகிறான் அந்த பசப்பு வார்த்தை பரந்தாமன் எனும் கபட நரி. என்றாலும் பூமாலை அதை நம்ப மறுக்கிறாள். தம்பியை எவ்வழியிலும் திருத்த இயலவில்லையே எனக் கவலை கொள்கிறாள்.

    பாண்டியனின் தந்தை அவனுக்கு திருமணம் செய்ய பாமாவைப் பெண் பார்த்து முடிக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பரந்தாமன் தன் விரோதியான பாண்டியனின் வாழ்வை சீர்குலைக்க முடிவு செய்கிறான். அவன் கல்யாணத்தை நாசமாக்கவும் சதி செய்கிறான்.

    அதனால் பாண்டியனுக்கு நிச்சயத்திருக்கும் பாமாவின் வீட்டிற்கு திரும்ப வந்து தன் சதித் திட்டங்களை நிறைவற்றத் தொடங்குகிறான் பரந்தாமன். திருமணத்தன்று தாலி கட்டாமல் ஓடிப் போன பரந்தாமன் தன் மேல் கோபமுற்றிருக்கும் பாமாவை பல கட்டுக் கதைகள் கூறி அவளை சமாதானப் படுத்தி, மறுபடியும் அவளுக்குக் காதல் போதையூட்டி, அவளை வீட்டை விட்டே தன்னுடன் ஓடி வந்து விடும் படியும் தூண்டுகிறான். இதனால் பாண்டியனின் வாழ்வு நாசமாகும் அல்லவா! அவன் எண்ணியபடியே எல்லாம் நடக்கிறது. அந்த அப்பாவி பாமாவும் இவன் பேச்சை நம்பி அவனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மணமகள் பாமா ஓடிப் போன நிலையில் திருமணம் தடைப் பட்டு பாண்டியன் பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறான். அன்று பரந்தாமன் பாமாவை திருமணத்தன்று தவிக்க விட்டு ஓடிப் போனான். இன்று பாமாவோ பாண்டியனைத் தவிக்க விட்டு விட்டு பரந்தாமனுடன் ஓடிவிட்டாள். இரண்டு குற்றங்களுக்கும் மூல காரணம் பகல் வேஷக்காரன் பரந்தாமனே!

    பாமாவை சென்னைக்கு அழைத்து செல்லும் பரந்தாமன் அவளுடன் சில நாட்கள் உல்லாசமாய் இருந்து விட்டு அவளை தன்னந்தனியே தவிக்க விட்டு விட்டு ஊருக்கு ஓடி வந்து விடுகிறான். தான் மீண்டும் பரந்தாமனால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த பாமா கடற்கரையில் மூர்ச்சையாகிறாள். வாழ வேறு வழி தெரியாமல் வேசியாகிறாள். தன் வாழ்வை சூறையாடிய பரந்தாமனை பழி வாங்க சமயம் பார்த்திருக்கிறாள்.

    தன் திருமணம் தடை பட்டதை எண்ணி வருந்தும் பாண்டியனை தற்செயலாக ரயிலில் சந்திக்கிறாள் பூமாலை. அவன் நிலைமை அறிந்து அவனை சென்னையில் உள்ள குமுதா வீட்டில் வைத்து ஆதரிக்கிறாள் அவள். பாண்டியன் மேல் ஒருதலைக் காதலும் கொள்கிறாள். ஆனால் குமுதாவும் பாண்டியனைக் காதலிக்கிறாள். பாண்டியனும் அவளை விரும்புகிறான்.

    ஊர் திரும்பிய பரந்தாமன் அங்குள்ள சிவசக்தி மில் தொழிலாளிகளின் நியாயமான போராட்டங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். 'பாட்டாளியின் குரல்' என்ற ஒரு புத்தகத்தை தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல் எழுதி அவர்களின் நம்பிக்கையை நயவஞ்சகமாகப் பெறுகிறான். தொழிலாளர்களின் தலைவனாகவும் ஆகி விடுகிறான்.வேலை நிறுத்தத்தையும் அறிவிக்கிறான். மேஸ்திரியும், தொழிலாளர்களும் அவனை மலை போல் நம்பி ஏமாறுகின்றனர்.

    இது சம்பந்தமாக பேச அழைக்கும் மில் முதலாளியிடம் தொழிலார்களை விலை பேசி பெரும் பணத்தையும் அவரிடமிருந்து லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு தொழிலார்களை ஏமாற்றுகிறான் பரந்தாமன். அது தெரியாத தொழிலார்கள் இன்னும் அவன் மாய்மாலப் பேச்சை நம்பி அவன் சொன்னபடி திரும்ப வேலைக்கு செல்கிறார்கள்.

    குமுதா பாண்டியன் இவர்களுடன் சென்னையிலிருந்து கோவை திரும்புகிறாள் பூமாலை. பாண்டியன் அங்கிருப்பது கண்டு ஆத்திரமுற்று அவனை அடித்து விடுகிறான் பரந்தாமன். இதனால் மனம் நொந்து தன் தந்தையிடமே சென்று விடுகிறான் பாண்டியன்.
    இதனால் வேதனையடையும் குமுதா பூமாலையிடம் தான் பாண்டியனைக் காதலிப்பதை சொல்ல அதிர்ச்சியடையும் பூமாலை தன் ஒருதலைக் காதலை மனதுக்குள்ளேயே பூட்டி அழுகிறாள். பாண்டியனை குமுதாவிற்கு திருமணம் செய்து தருவதாக உறுதி கூறுகிறாள்.

    பாண்டியனின் தந்தை மேஸ்திரி ஒரு ஊமைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் தன் மகனின் எதிர்ப்பை மீறி. . பாண்டியன் இது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். திரும்பவும் அவனைச் சந்தித்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாண்டியனுக்கும், குமுதாவிற்கும் திருமணம் செய்து வைக்கிறாள் பூமாலை தன் காதல் தோல்வியுற்ற நிலையில்.

    தான் இல்லாத நேரத்தில் சொன்னபடி குமுதாவை தனக்கு திருமணம் செய்து வைக்காமல் பாண்டியனுக்குத் திருமணம் செய்து வைத்த விட்டதாக அக்காளின் மேல் பாய்கிறான் பரந்தாமன்.



    பரந்தாமனின் தொழிலாளர் நயவஞ்சகத்தை எண்ணிக் கொதிப்படையும் பாண்டியன் தொழிலார்களிடம் பேசி பாண்டியனின் அக்கிரமங்களைப் பற்றி அவர்களுக்குப் புரிய வைக்கிறான். தவிர தொழிலாளர்களின் தலைவனாகவும் ஆகிறான்.தொழிலாளர்களுக்காக முதலாளியிடம் பரிந்து பேசுகிறான். முதலாளி தரும் கையூட்டையும் தூக்கி தூர எறிகிறான் அந்த நல்லவன். முதலாளியின் மகள் டாக்டர் உஷாவும் தொழிலாளர்களுக்காகப் பரிந்து பேசுகிறாள்.

    மேஸ்திரி புண்ணியகோடி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அந்த ஊமைப் பெண்ணையும் கூட சூறையாடத் துடிக்கிறான் பரந்தாமன். மேஸ்திரி புண்ணியகோடி பரந்தாமனின் உண்மையான சொருபத்தை அறிந்து கொள்கிறான்.

    உஷாவைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி முதலாளியிடம் நிர்ப்பந்திக்கிறான் பரந்தாமன். ஆனால் முதலாளி அதற்கு மறுத்து விடுகிறார்.

    குமுதாவை தன்னிடமிருந்து பிரித்து திருமணம் செய்து கொண்டது, தொழிலாளிகளிடம் தன் துரோக செயல்களை எடுத்துரைத்து தன் முகமூடியைக் கிழித்தது என்று பாண்டியன் மேல் கடும் கோபம் கொள்ளும் பரந்தாமன் பாண்டியனைக் கொலை செய்ய முயற்சிக்கிறான். இதை அறிந்த குமுதா பரந்தாமன் மேல் கடும் கோபம் கொள்கிறாள். இனியும் இருந்தால் தன் கணவனைக் கொன்று விடுவான் பரந்தாமன் என்று பயந்து கண்ணீர் வடிக்கிறாள். இதனால் பூமாலை அவர்கள் இருவரையும் திரும்ப சென்னைக்கே அனுப்பி விடுகிறாள்.



    சென்னையில் தங்கியிருக்கும் பாண்டியனை சாமர்த்தியமாக ஒரு திருட்டுக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறான் பரந்தாமன். கர்ப்பவதியான குமுதா ஆதரவற்று நிற்கிறாள். ஒரு ஆஸ்பத்திரி வாட்ச்மேன் அவளை ஆதரித்து தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

    வேலை நிறுத்தத்திற்காக தொழிலாளர்களைத் தூண்டி விட்டதற்காக போலீஸ் பரந்தாமனைத் தேட, பரந்தாமன் மாறு வேடத்தில் தப்பி சென்னை செல்கிறான். அங்கு எதிர்பாராவிதமாக வேசியாக பாமாவை சந்திக்கும் பரந்தாமன் அவளிடமிருந்தும் தப்பி விடுகிறான். போலீசிலும் சிக்கி கோர்ட்டாரிடம் தன் சாமர்த்திய வாதத் திறமையினால் முதல் மன்னிப்புப் பெற்று வெளியே வந்து விடுகிறான். ஆனால் தொழிலாளிகள் பாண்டியனின் கயமைத்தனத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.

    ஜெயில் வாழ்க்கையில் வாடும் பாண்டியனும் சுதந்திரதின நாளன்று கருணை விடுதலை செய்யப்பட்டு பல கஷ்டங்களுக்கிடையே கைக்குழந்தையுடன் கஷ்டப்படும் தன் மனைவி குமுதாவைத் தேடிக் கண்டு பிடித்து அவளுடன் சேர்கிறான். மில் முதலாளி வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலையை விட்டே நீக்கி விட, மேஸ்திரி புண்ணியகோடியும்,இதர தொழிலார்களும் பிச்சைக்காரர்களாய் சென்னை வந்து சேர, அவர்களை காணும் பாண்டியன் தன் தந்தையும், மற்றவர்களும் வேலை இழந்து தவிப்பதை அறிந்து அவர்கள் மீண்டும் வேலை பெற வேண்டி முதலாளியைச் சந்திக்க அனைவருடனும் கோவை செல்கிறான்

    பரந்தாமனின் பேச்சை நம்பி வேலை பறி போன தொழிலாளர்களுக்காக வேலைக் கேட்க முதலாளியைச் சந்திக்க செல்லும் பூமாலையின் வேண்டுகோளை நிராகரிக்கிறார் முதலாளி. அங்கு மயக்கமாகும் பூமாலையை முதலாளி மகள் டாக்டர் உஷா முதல் உதவி செய்து பூமாலையின் வீட்டிற்குக் கொண்டு சென்று உடன் இருந்து கவனிக்கிறாள். உஷாவின் மேல் ஒரு கண்ணாயிருக்கும் பரந்தாமன் அங்கே இரவில் உறங்கிக் கொண்டிருப்பது தன் அக்காள் பூமாலை என்பது தெரியாமல் அவளை உஷா என்று நினைத்து காம வெறியில் நெருங்கித் தொட, திடுக்கிட்டு எழுந்திருக்கும் பூமாலை தன் தம்பியின் கெட்ட எண்ணத்தைப் தெரிந்து கொண்டு கோபத்தின் உச்சத்தில் பொங்கி விடுகிறாள். "உனக்கு பெண் சுகம் தானே வேண்டும். இதோ உன் அக்காள் நான் இருக்கிறேன். என்னிடமே அதைப் பெற்றுக் கொள்' என்று அவனை வார்த்தை அம்புகளால் தைக்கிறாள். நீ ஏமாற்றிய பெண்களின் வாழ்க்கையைத் 'திரும்பிப் பார்'... நீ செய்த கொடுமைகளைத் திரும்பிப் பார்... நீ நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்' என்று கர்ஜிக்கிறாள். சற்றும் இதனை எதிர்பாராத பரந்தாமன் அக்காளின் கடும் கோபச் சொல்லையும், அக்காவே தன் காம வெறியைத் தீர்க்க அவளையே தனக்கு அர்ப்பணிக்கத் தயாரான நிலையையும், தன்னைத் திருத்த அவள் மேற்கொண்ட அந்த கொடுஞ் செயலையும் கண்டு துடித்துத் துவள்கிறான். கதறுகிறான். கண்ணீர் வடிக்கிறான். மனம் திருந்துகிறான். ஆனால் அக்காள் நம்ப மறுக்கிறாள்.

    தன் முறைப் பெண் கோமதி வாழ்வு தன்னால் தானே கேட்டது என்று எண்ணி அவளிடம் மன்னிப்பு கேட்க கோமதியின் விலாசம் தேடி அவள் வீட்டிற்கு செல்கிறான் பரந்தாமன்.ஆனால் அங்கு தன்னால் பாதிக்கப்பட்டு வேசியான பாமா துப்பாக்கியுடன் தன்னை சுட வந்தததை அவன் எதிர்பார்க்க வில்லை. தான் திருந்திவிட்டதைக் கூறும் பரந்தாமன் தன்னை சுடாமல் இருக்கும்படி பாமாவிடம் வேண்ட, வழக்கம் போல பரந்தாமன் நாடகமாடுகிறான் என்று பாமா மறுக்க, இருவரும் துப்பாக்கியுடன் போராடும் போது துப்பாக்கி வெடித்து பாமா கொலையுண்டு விழ, அங்கே தம்பி பரந்தாமனைத் தேடி வரும் பூமாலை பரந்தாமன் கோமதியைத்தான் பழி உணர்ச்சியின் காரணமாக சுட்டு விட்டான் என்ற தவறுதலான கோபத்தில் தம்பியையே தான் கொண்டு வந்த துப்பாக்கியால் சுட்டு விடுகிறாள். திருந்திய தம்பியாக பரந்தாமன் தான் இப்போது நல்லவன் என்று அக்காளிடம்கூறி உயிரை விடுகிறான். தன் தம்பியைத் தன் கையால் சுட நேர்ந்த துரதிருஷ்டத்தை எண்ணி கலங்குகிறாள் பூமாலை. இறந்தது கோமதி அல்ல...பாமா என்றும் கண்டு கொள்கிறாள்.

    ஊர் திரும்பி முதலாளியைச் சந்திக்கும் பாண்டியன் வேலை இழந்த அனைவருக்கும் வேலையைத் திருப்பித் தருமாறு அவரிடம் வேண்டுகிறான். மில் முதலாளி தன் மகள் உஷாவால் மனம் திருந்தி பாண்டியனிடம் மில் நிர்வாகத்தை ஒப்படைகிறார். தொழிலாளர் மனம் மகிழ்கின்றனர். அனால் செய்தித்தாளில் பூமாலை தன் தம்பி பரந்தாமனைக் கொலை செய்ததாக வந்த செய்தியைப் படித்து அதிர்ச்சியாகும் பாண்டியனைப் போலீஸ் கைது செய்கிறது. போலீஸ் பாண்டியனுக்கும் பரந்தாமனுக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாகவே பாண்டியன் பரந்தாமனைக் கொலை செய்தான் என்று பாண்டியனைக் கைது செய்கிறது

    கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. 'பூமாலை பரந்தாமனை சுட்டிருக்க முடியாது....முன் விரோதம் காரணமாக பாண்டியன்தான் பரந்தாமனை சுட்டு விட்டான். பாண்டியன் மேல் உள்ள அன்பினால் கொலைப் பழியை பூமாலை ஏற்றுக் கொண்டாள்' என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடுகிறார். ஆனால் பூமாலை 'தன் தம்பியைக் சுட்டுக் கொன்றது நானே! பாண்டியன் அல்ல... அவன் நிரபராதி' என்று நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்து, நடந்த கதைகள் அத்தனையையும் விளக்க, உண்மைகள் அனைவருக்கும் புரிகிறது. நீதிபதி பூமாலைக்கு மரண தண்டனை விதிக்கிறார். பாண்டியன் நிரபராதி என விடுவிக்கப் படுகிறான்.


    பரந்தாமனாக நடிகர் திலகம்




    பரந்தாமன் என்னும் அனைவரையும் மிரள வைக்கும் வில்லன் பாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆண்டி-ஹீரோ. ஹீரோவும் அவரே. (நரசிம்மபாரதி ஒப்புக்கு சப்பாணி நாயகர்) கதாநாயகர்கள் எவருமே செய்யத் துணியாத பாத்திரம். அதுவும் முதல் படத்தில் முழு ஹீரோவாக நடித்து விட்டு ஐந்தாவது படத்தில் கொடிய வில்லன் என்ற பாத்திரத்தை ஏற்று நடிக்க நடிகர் திலகத்திற்கு மட்டுமே துணிச்சல் வரும். அந்த அளவிற்கு தன் திறமை மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

    பல பெண்களை ஏமாற்றும் காமுகன் வேடம். அக்கா குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது குழந்தைகள் போடும் சப்தம் பிடிக்காமல் அக்காவிடம் சலித்துக் கொள்வது, சோம்பேறித்தனத்தின் உச்சியில் போட்டிருக்கும் நைட் கவுனுடனே ஷவர் பாத் எடுப்பது, கருடன் பதிப்பகம் நடத்தும் டி.எஸ். துரைராஜுடன் சேர்ந்து எழுத்தாளன் பாண்டியன் எழுத்துக்களைத் திருடுவது, பாண்டியனின் எழுத்தை தன் எழுத்து என்று நம்பி ஏமாறும் கிருஷ்ணகுமாரியிடம் காதல் மொழி வசனங்கள் பேசி ஏமாற்றுவது, கள்ளச் சிரிப்பு, பேச்சிலே நயம் காட்டி பசப்பு வார்த்தைகளால் பாவையரை மயக்குவது, பாண்டியன் தனக்குப் போட்டியாக தொழிளார்களுக்கு தலைவன் ஆகி விட்டானே என்ற பொறாமையில் வெந்து தணிவது, அக்கா தன்னைக் கண்டிக்கும் போதெல்லாம் ஏதாவது சமாதானம் சொல்லி அவள் வாயை அடைப்பது, தன் செயலுக்கு நியாயம் கற்பிப்பது, புத்திசாலித்தனமாக பேசி பிரச்னைகளிடமிருந்து தப்பிக்கும் சாமார்த்தியம், கிருஷ்ணகுமாரியை மீண்டும் மயக்கும் பேச்சுக்களால் மதி மயங்கச் செய்து சென்னை அழைத்துச் சென்று அவளை பரிதவிக்க விட்டு விட்டு ஓடி வந்து விடும் துரோகம், தொழிலாளர்களின் அவல நிலையை தனக்கு சாதகமாக்கி அவர்களை வேலை நிறுத்தத்திற்கு தூண்டும் மேடைப் பேச்சு சாமர்த்தியம், முதலாளியிடம் தொழிலாளர்களை அடகு வைத்து விட்டு லஞ்சம் வாங்கும் கோரம், பாண்டியனை கொலை செய்யவே போகும் அளவிற்கு கண்மண் தெரியாத ஆத்திரம், கோர்ட்டில் எசகுபிசகாக மாட்டிக் கொண்டவுடன் 'இது என்னுடைய முதற்குற்றம்... அதற்காகவே நான் மன்னிக்கப் படலாம்' என்று சாதுர்யமாக வாதிட்டு தண்டனையில் இருந்து தப்பிக்கும் விவேகம், மேஸ்திரி தங்கவேலுவின் ஊமை மனைவியியைக் கூட விட்டு வைக்காத காமுக குணம், முதலாளி மகள் டாக்டர் உஷா மீதும் கண், பாண்டியனின் மீது சாமர்த்தியமாக சுமத்தும் நகை திருட்டு குற்றம் என்று அத்தனை கெட்ட குணங்களையும் கொண்ட ஒரு வஞ்சக நரி கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்ய நடிகர் திலகத்தை விட்டால் செய்ய ஆளேது?

    மனிதர் கண்களாலேயே அசத்துகிறார். கண்களில் தெரியும் கள்ளத்தனம், ஓரப்பார்வையில் தெரியும் வஞ்சகக் குணம், சிரிப்பில் காட்டும் குரூரம் என்று அச்சு அசலாக ஒரு பெண்பித்தனையையும்,பஞ்சமாப் பாதகம் செய்யும் ஒரு கொடூரனையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் நடிகர் திலகம்.

    கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பின் பல பரிமாணங்களைத் தொடுகிறார் அந்த இளம் வயதிலேயே. டாக்டார் உஷா என்று நினைத்து படுக்கையில் படுத்திருக்கும் தன் அக்காளைத் தெரியாமல் தொட்டு விட , அக்கா பண்டரிபாய் எழுந்து இவருடைய அக்கிரமக் குணங்களை வசைபாடி 'என்னை எடுத்துக் கொள்' என்று அதிர்ச்சி தரும்போது மனம் திருந்தும் நடிகர் திலகத்தின் நடிப்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது. இறுதியில் நல்லவனாகத் திருந்தியும் தன் உடன் பிறந்த அக்காவினால் விவரம் அறியாமல் சுடப்பட்டு சாவின் வாசலைத் தொடும் போது 'நான் குற்றமற்றவன் அக்கா' என்று தன்னை நிரூபித்து கண் மூடும் போது எல்லோரையும் கலங்கடித்து விடுவார்.

    இந்தப்படத்தில் நடிகர் திலகம் வில்லனாக நடித்திருந்தாலும் முதன் முதலாக வில்லன் நடிப்பையும் ரசிக்க வைத்த பெருமைக்கு உரியவராகிறார். அதே போல நடிகர் திலகம் இப்படத்தில் வித விதமாக அணிந்து வரும் உடை அலங்காரங்கள் மிக பிரசித்தி பெற்றவை இன்றளவும் கூட.

    பரந்தாமனாக நடிகர் திலகம், பாண்டியனாக நரசிம்ம பாரதி, அக்கா பூமாலையாக பண்டரிபாய், கோமதியாக கிரிஜா, பாமாவாக கிருஷ்ணகுமாரி, கருடனாக டி.எஸ்.துரைராஜ், மேஸ்திரி புண்ணிய கோடியாக தங்கவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

    "திரும்பிப் பார்"

    திரும்பிப் பார்க்க வைக்கும் சில விசேஷ தகவல்கள்.

    1. நடிகர் திலகத்தின் ஐந்தாவது படம் இது.

    2. நடிகர் திலகமும், கலைஞரும் இணைந்த மூன்றாவது படம் இது.

    3. மாடர்ன் தியேட்டர்ஸ் சிவாஜி அவர்களை வைத்து தயாரித்த முதல் படம்.

    4. இயக்குனர் டி.ஆர். சுந்தரம் அவர்களின் சிவாஜிக்கான முதல் இயக்கம்.

    5. முதன் முதலாக கிருஷ்ண குமாரி (நடிகை சௌகார் ஜானகியின் தங்கை), கிரிஜா, தனலக்ஷ்மி ஆகியோர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தனர்.

    6. நடிகர் திலகமும், நரசிம்ம பாரதியும் நடித்த முதல் படம் இது.

    7. பராசக்திக்குப் பிறகு நிறைய புரட்சிக் கருத்துக்களும், புதுமையான வசனங்களும் நிறைந்த படம்.

    8. 'கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்" என்ற பாடல் அப்போது ரொம்பவும் பிரபலம். அரிசியில் கால், நெய்யில் டால்டா, காபித் தூளில் புளியங்கொட்டைத் தூள் என்ற கலப்பட சந்தையின் தகிடு தத்தங்கள் இப்பாடலில் அப்பட்டமாக எதிரொலிக்கும். காணொளி வடிவில் காணுங்கள்.



    9. திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படங்களை சாதகமாக்கி வளர்ந்து வந்த வேளையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பல்வேறு விமர்சனங்கள் செய்தது. இதனால் கோபமுற்ற நேரு திராவிட முன்னேற்றத் தலைவர்களை நான்சென்ஸ் என்று திட்டி விட்டார். இந்த சம்பவத்தை திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இப்படத்தின் வசனங்கள் மூலம் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். சிவாஜி அவர்கள் கூலிங் கிளாஸ் அணிந்து அடிக்கடி 'நான்சென்ஸ்' என்று பலரை அடிக்கடி கடிந்து கொண்டே இருப்பார். நேருவை நக்கல் செய்வதற்காகவே இப்படிப்பட்ட காட்சிகள் உருவாக்கப் பட்டனவாம்.

    10. இப்படத்தில் சிவாஜி அவர்கள் அணிந்திருந்த பல நவீன புதுவிதமான உடையலங்காரகளைக் கண்டு அனைவரும் அப்போது மிகவும் அதிசயப்பட்டனராம் . குறிப்பாக பத்திரிகைகள் சிவாஜி அவர்களின் உடை தேர்வினை பாராட்டி மகிழ்ந்தனவாம்.


    11. ஜி.ராமநாதன் அவர்கள் இசையமைத்த முதல் நடிகர் திலகத்தின் படம் இது.

    13. குறிப்பாக நடிகர் திலகத்தின் வில்லன் நடிப்பு அப்போது மிக மிகப் பேசப்பட்டது. 'திரும்பிப் பார்' படத்தின் புரட்சிமிகு வசங்கள் மிக பிரபல்யமாயின.

    14. 'கருடன் பதிப்பகம்' என்ற வாசகம் உள்ள பலகையில் 'க' என்ற எழுத்தை 'தி' என்று மாற்றி எழுதி 'திருடன் பதிப்பகம்' என்று மாற்றி வைத்து விட்டு செல்லுவார் அங்கு வேலை செய்யும் ஊழியர். இந்தக் காட்சியும் அப்போது மிகவும் பேசப்பட்ட ஒன்று.

    15. படத்தில் வரும் பரந்தாமன் (சிவாஜி ) எழுதும் 'பாட்டாளியின் குரல்' என்ற புத்தகத்தின் பெயரும் அப்போது ரொம்ப பிரபலமடைந்த ஒரு பெயராம்.

    16. அப்போது தெலுங்கில் புகழ் பெற்றுக் கொண்டிருந்த நாயகி கிருஷ்ணகுமாரி சிவாஜி அவர்களுடன் நடித்த ஒரே படம் இது.

    17. 'பராசக்தி' அளவிற்கு இந்தப் படம் பிரம்மாணடமான வெற்றியடைய முடியாவிட்டாலும் நல்ல வெற்றியடைந்த படம் இது. சிவாஜி அவர்களின் மறக்கவொண்ணா சிறந்த படங்களின் பட்டியலில் 'திரும்பிப்பாரு'ம் நிச்சயம் இடம் பெறும்.

    இக்கட்டுரைத்தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே!

    நன்றி!
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1867
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அவருடைய பிறந்த தினத்தில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ரிலீஸ் ஆன ஒரே காவியம் "துணை"(1/10/1982). ஆனால் மறக்க முடியாத பெருமைக்குரிய படமாக அமைந்தது.

    இதில் தசரத ராமன் பாத்திரம் பிரமாதமாக படைப்பு பெற்று நடிகர்திலகத்தால் அற்புதமான உருவம் பெற்றது. உயிர்ப்பு பெற்றது.உணர்வு பெற்றது. அமரத்துவம் பெற்றது.

    தசரத ராமன்-

    1)மகனுடன் தனித்து மகனுக்காகவே வாழும் possessive தந்தை.

    2)சமூக உயர் நோக்கம் கொண்ட அரசாங்க அதிகாரி.

    3)எந்த மாதிரி மனநிலையில் இருந்தாலும், extrovert ஆக எல்லோரிடமும் (பெண்கள் உட்பட) மிக நட்பாக பழகி,சரளமான நகைச்சுவை உணர்வோடு பழகும் இனிய மனிதன்.

    4)தன்னுடன் உடன் இருக்கும் அக்கம்பக்கத்தார் நண்பர்கள் நலனில் மிக அக்கறை செலுத்துபவன்.

    5)ஒரு சிறிய அசந்தர்ப்பம் (மகனும் நண்பனும் பேசி இவரிடம் சொல்லாமல்)அவருக்கு வாய்க்க போகும் மிக முக்கியமான (மருமகள் cum மகள்)ஒரு உறவை திரிந்த பார்வையில் பார்க்க வைக்கிறது.

    6)கல்யாணத்துக்கு பிறகும் உறவு சீர்படாமல் ,மேலும் திரிவே காண்கிறது.

    7)உன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை,காலம் செய்த கோலமடி ரீதியில்.

    8)தசரத ராமனின் outdated மனநிலை,புலம்பல்,possessiveness ,disciplinarian attitude (out of care ) சூழ்நிலையை சீர்கெடுத்து,மருமகளை இவரை எதிரியாகவே பார்க்க வைத்து கொஞ்சம் vicious ஆகவே மாற்றுகிறது.

    9)எனக்கு பிடித்த இரு அற்புத காட்சிகள். சம்பந்தியிடம் தேவையில்லாமல் பேசி,புலம்பி, (insulting tone கொண்டு )வாங்கி கட்டும் இடம்.வேறு ஏதோ நினைவில் இருக்கும் போது,அலுவலகம் வந்து கூப்பிடும் மகனிடம், சடாரென்று அங்கே இங்கே பார்த்து நினைவு வந்து சுதாரிக்கும் இடம்.

    10)தசரத ராமன், தன்னிலை மறந்து ,dejection ,depression ,loneliness ஆகியவற்றில் தவித்து ,வீட்டை விட்டு போகும் நிலைக்கு ஆளாகும் கட்டங்களில் நடிகர்திலகம் தவிர வேறு யாரையேனும் நினைத்தேனும் பார்க்க முடியுமா?

    இளைய தலைமுறையினர் பார்த்தே ஆக வேண்டிய எண்பதுகளின் நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய படம்.(இசையை மறந்து,தவிர்த்து விடவும்)

    வியட்நாம் வீடு சுந்தரம்,துரை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #1868
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    291
    Post Thanks / Like
    கள்ளம் கபடம் இல்லாத
    வெள்ளை உள்ளம் கொண்ட படிக்காத மேதை
    கலைத்தாயின் தவப்புதல்வன்
    கலைத்தாயின் ஒரே சூரியன்
    அண்ணன் சிவாஜி கணேசன்
    அவர்களின் இன்றைய பிறந்த நாளில்
    அனைவருக்கும் இனிய
    சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்

  11. #1869
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அக்டோபர் - உலக உத்தமர்களில் முதன்மையானவர்கள் பல திறமையாளர்கள் பல மகான்கள் பிறந்த மாதம்

    1ஆம் தேதி - திரை உலகின் அதிசயம்...தமிழ்நாட்டின் பெருமையாம் நடிகர் திலகம் உண்மை தமிழர்களின் தந்தையாம் நமது செவாலியர் சிவாஜி கணேசன் அவர்கள் அவதரித்த நாள் !

    தொழிலிலும் சரி, சொந்தவாழ்கயிலும் சரி ..ஒரு நடிகன் எப்படி இருக்கவேண்டும் ..நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியர், விளங்கிகொண்டிருப்பவர் நம்முடைய நடிகர் திலகம்.

    நாடக உலகிலும் சரி...திரை உலகிலும் சரி - அவர் நிகழ்த்திய சாதனைகள் பட்டியலிடமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

    தமிழ் திரை உலகில் ஒரு மிகபெரிய மாற்றத்தை விதைத்தவர் நமது சிம்மகுரலோன் ! விதைத்ததோடு அல்லாமல் அதை வழிநடத்தி காட்டியவர்.

    திரை உலகில் கதாநாயகனுக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்றால் அது இவர் ஒருவருக்குதான் ! காரணம் அதை கையாளும் திறமை கொண்ட ஒரு திரை உலக சித்தராக நமது நடிகர் திலகம் இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இவரை போட்டியாக நினைத்தவர்கள்....நினைப்பவர்கள் கூட....முதலில் இவரை போட்டியாக நினைத்து..அதன் பிறகு...இவருடைய நடிப்பிற்கும், கலைனயத்திர்க்கும் அடிமையாக போனார்கள் என்பதே உண்மை.

    இன்னும் சொல்லப்போனால் ....போட்டியே இல்லாமல் ஒரு தனி ராஜாங்கமே நடிகர் திலகம் அவர்கள் கிட்டத்தட்ட கலை உலகில் 60 வருடங்களுக்கு மேல் நடத்தினார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

    நடிகர் திலகம் -

    கதாபாத்திரம் - இவர் நடிப்பில் மெருகேறியது !
    அபிநயம் - இவர் நடிப்பில் தனது பசியை தீர்த்துகொண்டது !
    தமிழரின் கலை புகழ் - இவரால் உலகளவில் பேசப்பட்டது !
    நடிப்பு - இவர் ஒருவரே பல்கலைகழகம் என்று சரண் அடைந்தது !
    தனித்தன்மை - இவரிடம் இருந்துதான் அதன் பலம் அதிகரித்தது !
    திரை உலகம் - இவரால் புனிதமடைந்தது.
    கலை உலகம் - இவரால் சிரஞ்சீவித்தன்மை கண்டது !

    வல்லரசு நாடுகள் இவரால்

    அமெரிக்கா - தமிழனை அவன் திறமையை அடையாளம் கண்டு...இவரிடம் சரண் அடைந்து தனது மாநில மேயராக இரண்டு முறை அமரச்செய்து அழகு பார்த்தது. பண்டித நேருவுக்கு பிறகு நம் நடிகர் திலகம் ஒருவருக்குதான் அந்த பெருமை. இந்திய அமெரிக்காவின் காலச்சார தூதுவராக கௌரவித்து பெருமைக்கு பெருமை சேர்த்தது !

    ஆசிய - ஆப்ரிகா - இரண்டு கண்டங்களும் அதில் உள்ள அனைத்து கலைஞர்களும் - இவர் திறமை முன் சரண் அடைந்து - இவரே இந்த கண்டங்களின் சிறந்த நாயகன் என மார்தட்டி பெருமை பட்டுகொண்டது !

    ஐரோப்பா - மாவீரன் நெப்போலியன் உயிருடன் இருந்தால் எப்படி கெளரவம் செய்திருப்பானோ அந்த கௌரவத்தை இவர் இருக்கும் இடம் சென்று கௌரவித்து மகுடத்தில் வைரமாக மின்ன செய்தது !

    உலக விருதுகள் நோக்கி ஓடுபவர்கள் மத்தியில் உலக விருதுகளை தமிழனை நோக்கி வரவழைத்த சிங்க தமிழன் சிவாஜி கணேசன் அவர்கள்.

    முதல் படத்திலயே நாயக அந்தஸ்த்து - படம் வந்ததிலிருந்து உச்ச நட்சத்திரமாக இன்று வரை தொடர்வது ...நாயகனா...தீயவனா...நகைச்சுவயாளனா...இன்னும் எத்துனை விஷயங்கள் இருக்கிறதோ அத்தனையும் ஒரு கை பார்த்து ...அனைத்திலும் எவரும் கனவு கூட காண முடியாத வெற்றி திருமகன் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

    தான் பெற்ற பல உலக விருதுகளால் உண்மையான உலகநாயகனாக வலம் வந்த நம் நடிகர் திலகம் !

    எதிரிகளோ..அல்லது துரோஹிகளோ ...அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு தன்னுடைய வெற்றிகளை மட்டுமே பரிசாக கொடுத்து பழக்கப்பட்ட எங்க ஊரு ராஜா ....

    எண்ணிக்கையில் அடக்க முடியாத...எண்ணிக்கையில் அடங்காத வள்ளல் தவப்புதல்வன், நடிப்புலகின் தந்தை புகழ் எட்டு திக்கும் வானம் தொடட்டும் !

    இந்தியாவின் மகாத்மா காந்தி பிறந்த நாளுக்கு முதல் நாள் அவதரித்த இந்த திரை உலக மகான் நடிகர் திலகம் அவர்களின் புகழ் இந்த புவி உள்ளமட்டும் வளர்ந்துகொண்டே இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் !

    தமிழனை உலகளவில் பெயர் புகழ் பெறவைத்த நடிகர் திலகம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பணிவுடன் சமர்பித்து வளர்க திரை உலக சித்தரின் புகழ் தாரணி எங்கும் !



    Last edited by RavikiranSurya; 1st October 2014 at 10:29 AM.

  12. Likes Russellmai liked this post
  13. #1870
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Happy Birthday NT Sivaji Sir

    You are a true Legend we miss you always

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •