-
2nd October 2014, 09:55 PM
#1921
Senior Member
Seasoned Hubber

கலையுலக சிரஞ்சீவி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 86வது பிறந்த நாள் விழாவில் விருது பெற்றோர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுடன் ராம்குமார் மற்றும் பிரபு அவர்கள்.
மேற்காணும் நிழற்படத்தில் அமர்ந்திருப்போர் .. (இடமிருந்து வலமாக) டாக்டர் பத்மா சுப்ரமணியம், செல்வி கே.ஜமுனா ராணி, திரு வி.எஸ்.ராகவன், திரு சி.ஆர். பார்த்திபன். நின்றிருப்போர் (இடமிருந்து வலமாக) - திரு துஷ்யந்த் ராம்குமார், திரு ராம்குமார் கணேசன், மத்திய அமைச்சர் திரு பொன். ராதாகிருஷ்ணன், திரு பிரபு கணேசன், திரு விக்ரம் பிரபு ஆகியோர்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd October 2014 09:55 PM
# ADS
Circuit advertisement
-
2nd October 2014, 10:01 PM
#1922
Senior Member
Seasoned Hubber
சென்னை முதல் கன்னியாகுமரி வரை: சிவாஜி ரசிகர்கள் மது விலக்கு வாகனப் பிரசாரம்
மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை முதல் கன்னியாகுமரி வரை வாகனப் பிரசாரத்தை நடிகர் சிவாஜி ரசிகர்கள் தொடங்கினர்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை அருகே இந்தப் பிரசாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தொடங்கி வைத்தார். மதுவிலக்கை வலியுறுத்தி போராடி வரும் காந்தியவாதி சசிபெருமாள், காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த வாகனப் பிரசாரத்துக்கு தமிழ்நாடு காமராஜர், சிவாஜி தேசியப் பாசறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, பாசறையின் தலைவர் சிவாஜிநாதன் கூறியது: மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வாகனப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம். சென்னையில் தொடங்கிய இந்தப் பயணம் பண்ருட்டி, கடலூர், புதுக்கோட்டை வழியாக அக்டோபர் 3-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடையும். இந்தப் பிரசாரப் பயணத்தில், 50 ஆயிரம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க இருக்கிறோம். நிறைவு விழாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, காந்தியவாதி சசிபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
http://www.dinamani.com/tamilnadu/20...cle2459095.ece
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd October 2014, 10:21 PM
#1923
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
2nd October 2014, 10:25 PM
#1924
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
3rd October 2014, 07:54 AM
#1925
Junior Member
Veteran Hubber
Today has been declared as a day for laughter too!
for a change....
Neeye unakku endrum nigaraanavan. True! You have no parallels our dear NT!! enjoy the elastic face of NT that expresses all...particularly when MRR clowns!!
Last edited by sivajisenthil; 3rd October 2014 at 08:01 AM.
-
3rd October 2014, 10:04 AM
#1926
Junior Member
Seasoned Hubber
Only in Hindu celebrations of NT given prominence. It is not the case of the other Newspapers.
-
3rd October 2014, 11:59 AM
#1927
Junior Member
Newbie Hubber
நடிகர்திலகத்தின் மதிப்புக்கும்,மரியாதைக்கும் உரிய ம.பொ .சி நடிகர்திலகத்தின் மிக பெரும் ரசிகர். வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன் உருவாக்கங்களில் பங்கு வகித்தவர்.
தமிழ் பற்றும்,மாநில பற்றும்,தேச பற்றும் கொண்ட இவர் ஆற்றிய சேவைகள் நினைத்து போற்ற தக்கன. தலைநகராம் சென்னையை காத்து தமிழர்களுக்கு அளித்தவர்.
பாரதியார் பக்தர். சிலப்பதிகார தேர்ச்சியால் சிலம்பு செல்வர் என்று அழைக்க பட்டவர்.
அன்னார் நினைவு தினத்தில் நினைவு கூர்வதில் பெருமை அடைகிறோம்.
Last edited by Gopal.s; 3rd October 2014 at 12:08 PM.
-
3rd October 2014, 05:10 PM
#1928
Junior Member
Seasoned Hubber
Dear Ragavendran sir,
Congrats for your well deserving award
-
3rd October 2014, 06:44 PM
#1929
Junior Member
Senior Hubber

Originally Posted by
ragulram11
dear ragavendran sir,
congrats for your well deserving award
true sir. Long awaited honour has come at last one satisfaction is that it was duly honured in the presence of large sivaji fans public and lot of dibnatories.
Congrats your sevices to be cotinued that is our wish.
-
3rd October 2014, 06:45 PM
#1930
Junior Member
Veteran Hubber
Ego : The Divide and Rule Tool
இன்று சரசுவதி பூஜையை முன்னிட்டு வசந்த் தொலைகாட்சி ஒளிபரப்பிய சரசுவதி சபதம் திரைப்படம் நடிகர்திலகத்தின் நினவு கூர்தலுக்கும் பொருத்தமாக அமைந்து விட்டது. 'Forgetting ego if we are united we stand. If our ego rules us to divide then we fall' is the one line description of the story combining the trinity of divinity with the eternity of humanity. இரு முற்றிலும் மாறுபட்ட ஜோடியில்லாத கதாபாத்திரங்களில் (கதைக்களத்தின் கருவை விதைத்து நன்மையிலேயே முடியும் கலகத்தை நடத்திச்செல்லும் நாரதமாமுனி மற்றும் தன்மானமிக்க கல்விச்செருக்கற்ற புலவராக) நடிகர்திலகம் நம்மைக்கட்டிப்போடும் நயம் மிக்க திரைக்காவியம். தெருப்பிச்சைக்காரி யானை மாலையிட்டதால் மமதை கொண்ட மகாராணியாகும் விஜயா, கோழையாக உலவி வீரமல்லனாக உருவெடுத்து வீரத்தின் அகங்காரத்தை வெளிப்படுத்தும் ஜெமினிகணேசன்.....
இந்த கல்வியா செல்வமா வீரமா முக்கோணத்தின் ஈர்ப்பு மையமாக நடிகர்திலக நாரதர் எவ்வண்ணம்
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா அதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா என்னும் தத்துவத்தை நிலைப்படுத்துவதே விறுவிறுப்பான திரைக்கதை. மூன்று கதாபாத்திரங்களுமே தங்கள் வாதங்களை நியாயப்படுத்தும் வண்ணம் வசன அமைப்பு, (சொல்வாக்கை செல்வாக்கு வெல்ல இயலுமா .....enjoy this one liner quip from NT) அருமையான வண்ணக்கலவையில் அற்புதமான அரங்க அமைப்புக்கள், செவிக்கினிய இசையும் பாடலும்.......காலத்தை வென்று இன்றும் என்றும் நின்று நிலைக்கும் நடிகர்திலகத்தின் வெற்றிக்காவியங்களில் தனியிடம் பெற்ற திரையோவியம்.
Last edited by sivajisenthil; 3rd October 2014 at 07:31 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks