Results 1 to 10 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

Threaded View

  1. #10
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    மக்கள் திலகம் எம்ஜிஆர்

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' திரியினை படித்து விட்டு தன்னுடைய கருத்தை

    தெரிவித்து இருந்தால் .....ஒரு கற்பனை பதிவு


    என் இனிய ரத்தத்தின் ரத்தமான மையம் திரியில் பதிவுகள் வழங்கி கொண்டிருக்கும் என் அன்பு உள்ளங்களே

    என் மீது இவ்வளவு அளவு கடந்த பாசம் வைத்து என்னுடைய திரைப்பட வரலாற்றையும் , அரசியல்

    வெற்றிகளையும் பற்றிய கட்டுரைகள் , ஆவணங்கள் , செய்திகள் என்று தொடர்ந்து பதிவிட்டு எனக்கு பெருமைகள்

    சேர்த்து வரும் உங்களை பற்றி ஓரிரு வரிகள் பாராட்ட நினைக்கிறேன் .


    பேராசிரியர் திரு செல்வகுமார் - என்னுடைய முரட்டு பக்தன் . சிறந்த உழைப்பாளி .ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீட்டில் அவர் காட்டிய வேகம் அசூரம் .என் நெஞ்செமெல்லாம் நிறைந்த பண்பாளர் .

    திருப்பூர் ரவிச்சந்திரன் - மென்மையான மனிதர் .என்னுடைய நிழற் படங்கள் பலவற்றை தன்னுடைய கை வண்ணத்தில் புதிய டிசைனில் வடிவமைத்த சிந்தனை சிற்பி . சிறந்த உழைப்பாளர் .

    சேலம் திரு ஜெய் சங்கர் - மின் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றும் அருமை நண்பர் . இரவு பகல் பாராமல் உழைக்கும் நண்பர் . என்னுடைய திரை உலக செய்திகளை அழகாக படம் பிடித்து காட்டியவர் . அவர் மகனும் என் ரசிகன் என்பது அறிந்து மிக்க மிகழ்ச்சி .

    புதுவை திரு கலிய பெருமாள் - அரசு பணிகளுக்கிடையே என்னுடைய திரை உலக வரலாற்றையும் , அரசியல் வரலாற்றையும் உடனுக்குடன் மையம் திரியில் பதிவிடும் சிறந்த நெறியாளர் .

    வேலூர் திரு ராமமூர்த்தி - அடேயப்பா ... இவரின் காமிரா - இரு சக்கர வாகனம் .... ஒரு மாவட்டத்தை சுற்றி இரவும் பகலும் என் படங்கள் படம் பிடித்து உடனே இனைய தளத்திலும் பதிவிட்டு சாதனை புரிந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர் .இன்னும் பல அதிசயங்கள் நிகழ்த்த போகிற வெற்றியாளர் .

    சென்னை திரு ரூப் குமார் - பல வருடங்களாக ஸ்ரீ எம்ஜிஆர் .காம் நடத்தும் சிறந்த பண்பாளர். அமைதியானவர் . இவரின் பதிவுகள் , கட்டுரைகள் , ஆங்கில பதிவுகள் -மிகவும் அருமை . மறக்க முடியாத என் ரசிகர் .

    திரு லோகநாதன் - வங்கியில் பணி புரிந்தாலும் இவர் கால்கள் என்றுமே என்னுடைய படம் ஓடும் அரங்கங்களுக்கும் , என்னுடைய போஸ்டர் , கடவுட் , பதாகைகள் கண்டவுடன் நேரில் சென்று படம் பிடித்து உடனே திரிக்கு அனுப்பி வைக்கும் அழகே அழகு .நல்ல உழைப்பாளி . இவரை பல முறை ஆல்பர்ட் அரங்கில் பார்த்திருக்கிறேன் .


    திரு யுகேஷ் பாபு - இன்றைய தலைமுறை ரசிகர் . என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளவர் . அவர் தந்தையும் என்னுடைய தீவிர ரசிகர் . 11 வது பாகத்தை துவக்கிய உழைப்பாளி . வாழ்த்துகிறேன் .

    திரு சைலேஷ் பாசு - கடல் கடந்து வாழும் என் அபிமான ரசிகர் .இவரின் கை வண்ணத்தில் என்னுடைய பல படங்களின் பஞ்ச் வசனங்களை அழகாக வெட்டி , ஒட்டி பரவசபடுத்திய கலை உள்ளம் படைத்த பண்பாளர் .

    திரு பிரதீப் பாலு - என் அன்பு பேரன் . என்னுடைய வரலாற்றை வீடியோ வாக தயாரித்து வரும் இளம் வாலிபர் .அபூர்வ படங்களை திரிக்கி வழங்கி வரும் புதுமை விரும்பி .

    திரு தெனாலி ராஜன் - வீடியோ தொகுப்பாளி . கடின உழைப்பாளி . பாராட்டுக்குரியவர் .

    திரு கலைவேந்தன் - தென்றலாய் உருவாகி , புயலாக பதிவுகளை வீசும் திறமையாளர் . நல்ல ரசிகர் . ஒரு காட்சியை வைத்து இவர் விவரிக்கும் பாங்கே ஒரு தனி அழகு . ஓட்டல் துசிதானி -மறக்க முடியாது திரு கலைவேந்தன் .இன்னும் உங்களிடமிருந்து சுவையான பல பதிவுகளை படிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன் .


    புதியதாய் இணைந்துள்ள திரு கோவிந்தராஜ் மற்றும் திரு சந்திரசேகர் இருவரின் பதிவுகளை படித்த பின்னர் என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன் .

    விடுபட்ட சில ரசிகர்களின் பெயர்களையும் அவர்களை பற்றியும் அடுத்த மடலில் சொல்லுகிறேன்

    விரைவில் சந்திப்போம்

    அன்புடன்

    உங்கள் எம்ஜிஆர் .
    Last edited by esvee; 3rd October 2014 at 04:41 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •