-
3rd October 2014, 07:32 PM
#11
Junior Member
Seasoned Hubber
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி.சார், திரு. கலியபெருமாள் சார் வெளியிட்ட தலைவரின் அரிய புகைப்படங்கள் தொகுப்பு, பொக்கிஷம். தலைவர் சம்பந்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் பதிவிடும் திரு.லோகநாதன் சார், கோவை தலைவரின் கோட்டை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடும் திருப்பூர் ரவிச்சந்திரன் சார் ஆகியோருக்கு நன்றி. திரு.ராமமூர்த்தி சார் பதிவிட்டுள்ள உரிமைக்குரல் ஸ்டில் சூப்பர்.
திரு.எஸ்.வி.சார், விரக்தியாளர்களின் மன நிலையை தாங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய விதம் நன்று. சின்னப்பா தேவர், பந்துலு, வேலுமணி, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் தொடர்ந்து தலைவரை வைத்து படம் எடுத்து லாபம் பார்த்தது மட்டுமல்ல. இன்றும் விநியோகஸ்தர்களுக்கு அவரது படங்கள் காமதேனுவாக உள்ளன. தலைவரின் படங்களை இன்றும் ரசிகர்கள் மட்டுமின்றி, எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கின்றனர். ஆனால், மற்ற நடிகர்களின் படங்களை பார்க்கும் பொறுமை அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை அந்தந்த நடிகர்களின் ரசிகர்களே ஒப்புக் கொள்வார்கள்; ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். (இதுபோன்ற சம்பவங்களுக்கு சமீபத்தில் கூட ஆதாரங்கள் உண்டு)
நமது திரியில் புதிதாக இணைந்திருக்கும் நண்பர்கள் திரு. கோவிந்தராஜன், திரு.சந்திரசேகர் ஆகியோரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். திரியில் பங்கு பெறும் தலைவரின் பக்தர்கள் அதிகரிப்பது மகிழ்ச்சி. முக்கியமாக, மற்றவர்கள் நம்மைப் பற்றி ரகசியமாக பேசிக் கொள்ளும்போது கூட பாராட்டுவது நமது ஒற்றுமையை. பிறர் நம்மை தூற்றும்போது இருப்பதை விட போற்றும்போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம். எனினும், இப்போது போல எப்போதுமே நாம் ஒற்றுமையுடன் இருக்க தலைவரின் ஆசி நிச்சயம் உண்டு. காரணம், நம் யாருக்குமே தலைவரின் புகழை காப்பதுதான் முக்கியமே தவிர, நம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் எண்ணம் அறவே கிடையாது. அந்த வகையில், நமது திரியில் புதிதாக சேர்ந்திருக்கும் நான்கு கரங்களும் புரட்சித் தலைவரின் புகழ்த் தேரை இழுப்பதில் இணையட்டும். வாருங்கள் தோழர்களே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 3rd October 2014 at 07:45 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
3rd October 2014 07:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks