திரியில் தனக்கு தானே மானியம் விட்டு கொள்ளும் சில அறிவாளிகள் என்ன எழுதுகிறோம் என்பதை தெரிந்து இனி பதிவிட்டால் நன்று.
இவர்களுடைய அறிவாளித்தனமான பதிவுகளால் மற்றவர்களும் பாதிப்புஉக்கு உள்ளாகி வருகின்றனர். தேவையில்லாத கமெண்ட்ஸ் மற்றவர்கள் பதில் பதிவு செய்யும்போது நம்மால் அதை பார்த்துகொண்டு சும்மாவும் இருக்கமுடியவில்லை.
நடிகர் திலகத்தின் படங்கள் அனைவரும் பார்த்து பரவசம் அடையும் வகையில் உள்ள திரைப்படங்கள்.
குப்பையை கோபுரம் என்று மற்றவர்கள் போல கூற உங்களை சொல்லவில்லை. அது குப்பை என்றாவது கூறாமல் இருக்கலாம் அல்லவா ?
நம்மவர்களே நம் படங்களை பற்றி தரமற்ற முறையில் விமர்சனம் செய்வதை இன்னியும் நிறுத்தாவிட்டால் அப்படி பதிவு செய்பவர்களை கடுமையாக தாக்கி நான் பதிவடவேண்டி வரும் என்பதை தாழ்மையுடன் எச்சரிக்கிறேன் !
பதிவு போட தெரிந்தால் போடவேண்டும் இல்லையென்றால் "லைக்" தேங்க்ஸ்" பொத்தான் இருக்கவே இருக்கிறது. அதை அழுத்தி செல்ல வேண்டியதுதானே !
இது ஒரு non stop nuisance ஆக இருக்கிறது !
Rks
Last edited by RavikiranSurya; 4th October 2014 at 11:05 AM.
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்றைய கலை, அரசியல் உலகிற்கு மட்டுமல்ல மக்களின் அன்றாட வாழ்விலும் நடிகர் திலகம் எந்தளவிற்கு relevant-ஆக இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டி பேசினார். இதே கருத்தை நாமும் இங்கே பலமுறை வழி மொழிந்திருக்கிறோம். அதன் எதிரொலியாகவே அண்மைக் காலத்தில் பலவேறு ஊடகங்களிலும் நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகள், நிகழ்ச்சிகள் இடம் பெறுவதையும் பார்க்கிறோம். நடிகர் திலகம் புகழ் பாடும் நிகழ்வுகளும் பொது மேடைகளில் அரங்கேறுகின்றன.
அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் நடைபெறும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளையும் பார்க்க வேண்டும். காங்கிரஸ் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் பங்கு பெறும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா இன்றைய தினம் சென்னையில் நடைபெறுகிறது. இது போன்றே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அதிகாரபூர்வமாக நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா திரு. ஞானதேசிகன் தலைமையில் அடுத்த வாரம் [11-ந் தேதி?] ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
நடிகர் திலகத்தையும் அவர் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் அண்மை காலம் வரை புறக்கணித்தே வந்த தினமலர் நாளிதழ் சில மாதங்களுக்கு முன்னர் திரு. ஒய். ஜி. மகேந்திரனின் நான் சுவாசிக்கும் சிவாஜி தொடரை வெளியிட்டது. அது நிறைவுற்று ஒரு சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு தொடர் தினமலர் வாரமலர் இதழில் நாளை முதல் தொடங்குகிறது. பல வருடங்களுக்கு முன் பொம்மை மாத இதழில் நடிகர் திலகமே எழுதிய கதாநாயகனின் கதை என்ற தொடர் வெளியானது. [இந்த தொடரை பொம்மை மாத இதழை வெளியிட்டுக் கொண்டிருந்த சந்தமாமா பதிப்பகமே புத்தகமாகவும் வெளியிட்டது]. இந்த தொடர்தான் இப்போது மீண்டும் தினமலர் வாரமலர் இதழில் தொடராக வெளியாகப் போகிறது.
எப்படி பார்த்தாலும் எந்த external push -ம் இல்லாமல், ஆட்சி அதிகார அரசியல் பின்புலங்கள் இல்லாமல் தமிழகத்தில் என்றென்றும் நடிகர் திலகம் relevant-ஆக இருப்பார் என்பதற்கு நமக்கு தேவைப்படாவிட்டாலும் கூட தேவைப்படுபவர்களுக்கு இவை சான்றுகள்.
நடிகர் திலகத்தையும் அவர் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் அண்மை காலம் வரை புறக்கணித்தே வந்த தினமலர் நாளிதழ் சில மாதங்களுக்கு முன்னர் திரு. ஒய். ஜி. மகேந்திரனின் நான் சுவாசிக்கும் சிவாஜி தொடரை வெளியிட்டது. அது நிறைவுற்று ஒரு சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு தொடர் தினமலர் வாரமலர் இதழில் நாளை முதல் தொடங்குகிறது. பல வருடங்களுக்கு முன் பொம்மை மாத இதழில் நடிகர் திலகமே எழுதிய கதாநாயகனின் கதை என்ற தொடர் வெளியானது. [இந்த தொடரை பொம்மை மாத இதழை வெளியிட்டுக் கொண்டிருந்த சந்தமாமா பதிப்பகமே புத்தகமாகவும் வெளியிட்டது]. இந்த தொடர்தான் இப்போது மீண்டும் தினமலர் வாரமலர் இதழில் தொடராக வெளியாகப் போகிறது.
by Murali Srinivas
ஊடகங்கள் ஊடுருவாத துறை என்று எதுவுமில்லை. திரைத்துறையும் பல்வேறு ஊடகங்களைச் சார்ந்தே செயல்பட்டாக வேண்டிய காலகட்டம் இன்னும் மாறவில்லை.
எந்தக்காலத்திலும் கூர்வாளினும் வலிய பேனாமுனை பத்திரிக்கைத்துறையின் பலமிக்க பின்புலம். நியாய அநியாயங்களுக்கு அப்பாற்பட்டு நேர்மை தவறாத பொய்கலப்பற்ற செய்திகளை வெளியிடுவது தனிநபர் விலை போவதைப் பொறுத்ததே. நடிகர்திலகம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு தன் உழைப்பை மட்டுமே அடித்தளமாக்கி தன்னிகரற்ற நடிப்பு சாம்ராஜ்யத்தை அதன்மேல் நிறுவி அண்ணாந்து பார்த்து மலைக்க வைத்த மகாகலைஞன். சில நாளிதழ்கள் இருட்டடிப்பு செய்தபோதும் ஒளிவீசிய திரைக்கதிரவன். மக்கள் மனதில் பசுமரத்தாணி யாக ஆலம்விழுதாக வேரூன்றி நிற்பவர் ஒதுக்கிய பத்திரிக்கைகளையே தன்னை நோக்கி வரவைத்ததில் வியப்பேதுமில்லை !
Last edited by sivajisenthil; 4th October 2014 at 03:26 PM.
அழிந்துவிடுவது - நிலையற்ற செல்வம்
புவியாள்பவர் முடிவு - முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடிசாம்பல்ஆவர்
பார்க்கமுடியாதது - அடக்கமில்லாமை
அதற்க்கு உதாரணம் - உங்களது ஆட்சி !!!
தளபதி அனைவரும் கேட்க அரசியை பாராட்டி ஒரே ஒரு கவி பாடிவிட்டு போ...!
வித்யாபதி நரஸ்துதி பாடுவதில்லை !!!!
அரசி எப்படி ? (சற்று திமிருடன் ! )
வித்யாபதி இறைவனை பாடும் வாயால் ...இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களை பாடுவதில்லை !!!!
வித்யாபதி என் ஆட்சியில் எனது நாட்டில் ....என்னுடைய பிரஜையாக இருந்துகொண்டு ...என்னை எதிர்க்க துணிவு வந்துவிட்டதா ?
வித்யாபதி நாடு...ஆட்சி...மன்னன் ...பிரஜை....இவை அனைத்தும் விதி விளயாடிவிட்டால் நாளை மாற்றான் கையில்....அதற்குள் இத்தனை நாடகமா ? வேடம் புனைந்து களைவது போல விடிந்தால் எத்தனை எத்தனை மாற்றங்களோ ...!
வித்யாபதி நேற்றிருந்தான் இன்றைகில்லை என்ற தத்துவத்தை நினைவிற்கொண்டு சற்று நிதானத்துடன் நடந்துகொள்ளுங்கள் ! மற்றவரை அடக்கியாள நினைத்தவர் அதிக நாள் வாழ்ந்ததில்லை ...வாழபோவதும் இல்லை !
தளபதி இவனை சிறையில் அடையுங்கள் ....!
வித்யாபதி நல்ல ஆட்சி....உயர்ந்த அரசு....சிறந்த தளபதி....பாவம் மக்கள் !!!
எக்காலத்திற்கும் ஏற்ற தீர்க்க தரிசன உரையாடல் !
Last edited by RavikiranSurya; 4th October 2014 at 06:30 PM.
Thalaivarin Thodar in Varamalar
கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன்[B]
வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை.
விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக உருவெடுக்கச் செய்து, 'நடிகர் திலகம்' கணேசன் என அன்புடன் அழைத்து, பத்மஸ்ரீ விருது பெரும் கணேசனாக மாற்றியது யார்?
கலை உள்ளம் கொண்ட நீங்கள் தான்! திருச்சி, சங்கிலியாண்ட புரத்து, என் இளமைக் காலத்து வாழ்க்கை, இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு வகை அலாதியான வாழ்க்கை! சங்கிலியாண்டபுரத்தில் எனக்கென்று தனியாக, ஒரு நண்பர்கள் கூட்டம் உண்டு.
ஊருக்குள் எங்களுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டு. அது, 'துஷ்டர்கள்!' ஆக, சின்ன வயதிலேயே எனக்கும், பட்டத்திற்கும் ஒரு தனிப்பிடிப்பு உண்டு.
வீதியிலே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். திடீரென்று ஏதேனும் ஒரு அழுகுரல் கேட்கும். 'யாரடிச்சா... பாவம் பையன் அழறானே...'என்று கேட்டால், 'கணேசன் அடிச்சிட்டான்...' என்று, பல குரல்கள் ஒலிக்கும். அந்த அளவுக்கு, அப்போது என் கை ஓங்கி, தவறு... நீண்டிருந்தது.
அடி வாங்கிய சிறுவனின் தாயோ, அக்காவோ என் தாயாரிடம், என் வீரத்தை பற்றி புகார் சொல்வர்.
என் தாயார் நான் வீடு திரும்புவதை எதிர்பார்த்து, கையில் வெங்காயத்துடன் ஆவலாக காத்திருப்பார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, 'வாடா மகனே... ஏன்டா என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறே...' என்று அன்புடன் அழைத்து, கையில் மறைத்து வைத்திருந்த வெங்காயத்தை, என் தந்தையின் துணையுடன், கண்களில் பிழிந்து விடுவார்.
துடிப்பேன்... கதறுவேன்... கண்ணீர் வடிப்பேன்.
'இனிமே இப்படிச் செய்ய மாட்டியே... வீண் வம்புக்கு போக மாட்டியே...'என்று, முதுகிலும் அன்பளிப்பு வழங்குவார்.
இவ்வளவு வாங்கியும், நான் திருந்தினேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.
மறுநாளே என் துஷ்டத்தனம் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்து விடும்.
இதனாலேயே என் பெற்றோர் எங்காவது வெளியே செல்வதென்றால், என்னை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டே செல்வர். சில சமயம், வெளிக்கதவை பூட்ட மறந்து, தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு போய் விடுவர். அதைத் தெரிந்து, நானும் கதவை சாமர்த்தியமாக ஆட்டி அசைத்து, தாழ்ப்பாளை விடுவித்து, மதில் சுவரை தாண்டி குதித்து வெளியேறி விடுவேன்.
'கணேசன் வந்துட்டான் டோய்...' என்று என் சகாக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்புவர்; அதைக் கேட்கும் போது, பெருமையாக இருக்கும்.
என் பெற்றோர் வீடு திரும்பியதும், நான் வீட்டில் இல்லாததைக் கண்டுபிடித்து விடுவர். இரவு வீட்டிற்கு வரும் போது, வழக்கம் போல வெங்காயம் காத்திருக்கும்.
அந்த அளவுக்கு படு துஷ்டை நான்.
ஒரு சமயம் என் அண்ணன் தங்கவேலுக்கும், எனக்கும் ஏதோ தகராறு வந்து விட்டது.
'வாடா வா... இன்னிக்கு ராத்திரி உன்ன அடிச்சுக் கொன்னுடறேன் பாரு...' என்று ஒரு தடியை துாக்கி வைத்துக் கொண்டேன்.
பயந்து போய் அம்மாவிடம் தஞ்சம் அடைந்து விட்டார் என் அண்ணன்.
'பாவிப்பய, உதவாக்கரை... செஞ்சாலும் செஞ்சுப்புடுவான்...' என்று, அன்றிரவு முழுவதும் துாங்காமல், என் அண்ணன் பக்கத்திலேயே படுத்திருந்தார் அம்மா.
ஆனால், நானோ தடியை பக்கத்தில் வைத்துக் கொண்டே நிம்மதியாக துாங்கி விட்டேன்.
அப்போது, ஊர்க்காவல் என்று ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருடர்கள் வராமல் தடுக்க, நான்கு வீட்டுக்கு ஒருவராக சிலர் சேர்ந்து, இரவு நேரத்தில் தெருவில் ரோந்து வருவது வழக்கம்.
திருடனை சமாளிக்க வேண்டுமென்றால், முரட்டுத்தனம் உள்ளவர்கள் தானே வேண்டும்? என்னிடம் அப்போது அது தாராளமாக இருந்ததால், இந்த ரோந்து காவல் குழுவில் நானும், என் வீட்டின் சார்பில் கலந்து கொண்டேன்.
எங்களுக்கு சின்ன வயதாக இருக்கலாம்; ஆனால் முரட்டுத்தனமும், பிடிவாதமும் எக்கச்சக்கமாக இருந்தன.
ஏதாவது பாட்டு பாடியோ, கோஷமிட்டபடியோ வீதியை சுற்றி வருவோம்.
சில சமயங்களில் விளையாடவும் செய்வோம்.
'பச்சை இலை கொண்டு வருவது' என்று ஒரு விளையாட்டு; 'கண்ணாமூச்சி' விளையாட்டைப் போன்றது.
'இன்ன இடத்தில், இன்ன மரத்தில் இருந்து, பத்து இலை பறித்து வா...' என்று ஒருவனிடம் சொல்வர். அவன் போவான்; அவன் கூடவே மற்றவர்களும் போவர். அவன் மரத்தில் ஏறி இலை பறிக்கும் நேரத்தில், மற்றவர்கள் ஓடிப் போய் ஒளிந்து கொள்வர். சொன்னபடி இலையை பறித்து திரும்பும் அவன், யாரை முதலில் பார்த்து பிடித்து விடுகிறானோ, அவன் தோற்றவனாகி விடுவான். தோற்றவன் இலை பறிக்க வேண்டும்.
இந்த விளையாட்டின் போது, சில சமயம் வேண்டுமென்றே, 'சுடுகாட்டு பக்கத்தில் உள்ள மரத்திலிருந்து இலை பறித்து வா...' என்று சொல்வர். ஒருசமயம் நானே இம்மாதிரி போய் பறித்து வந்திருக்கிறேன்.
இம்மாதிரியான விளையாட்டுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் முடியும்!
ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்த போது, ராஜு என்ற நண்பன், ஏதோ ஆத்திரத்தில் பேனாக் கத்தியால், என் முதுகில் குத்தி விட்டான். அந்தத் தழும்பு, இப்போதும் என் முதுகில் இருக்கிறது.
என் தாயார் என்னை கண்டிக்கும் போது, சில நேரம் எனக்கு கோபம் வந்து விடும்.
'வீட்டை விட்டு போய் விடுகிறேன்...' என்று சொல்லி, ஆத்திரத்துடன் வெளியே கிளம்பி விடுவேன்.
எங்கே போவேன் என்று நினைக்கிறீர்கள்... மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் போய் உட்கார்ந்து விடுவேன் அல்லது வேறு எங்காவது மரத்தடிக்கு போய் விடுவேன்.
மாலை வரும்; என் வீராப்பை விட்டு, 'ஜம்'மென்று வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன்.
என் தாயார் என்னைப் பார்த்ததும், பார்க்காதது போல நடிப்பார்.
எந்தப் பெற்றோருக்கும், தன் மகன் நன்றாக படித்து பெரிய உத்தியோகத்தில், சீரும் சிறப்புமாக இருப்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கை.
என் பெற்றோருக்கும், அந்த ஆவல் இருந்தது.
திருச்சியில், ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் என்னை சேர்த்து விட்டனர். அப்போதெல்லாம், நான் அருமையாகப் பாடுவேன். 'ஞான சங்கீதப்பன் மணி மண்டபம்...' என்று, நான் பாட ஆரம்பித்து விட்டால், அதைக்கேட்டு ரசிக்க, என்னைச் சுற்றி ஒரு கூட்டமே நிற்கும். பள்ளியில் படிக்கும் போதும், எனக்கு பாட்டில்தான் நிறைய மதிப்பெண் கிடைக்கும். அதில் தான், முதலில் வருவேன்; மற்றவற்றில் சுமாரான மதிப்பெண்கள் தான் கிடைக்கும். கணக்கிலோ பெரிய பூஜ்யம்!
'காட் சேவ் தி கிங்' (கடவுள் அரசரைக் காக்கட்டும்) என்ற ஆங்கில பாட்டுத்தான், அப்போது பள்ளியில் கடவுள் வணக்கப்பாட்டு. என் குரலில் இனிமையைக் கண்ட ஆசிரியைகள், என்னையும் கடவுள் வணக்கம் பாடும் மாணவர்கள் கோஷ்டியில் சேர்த்து விட்டனர்.
என் வீட்டுக்கும், பள்ளிக்கும் குறைந்த துாரமோ அல்லது நீண்ட துாரமோ அது எனக்கு தெரியாது. ஆனால், படிப்புக்கும், எனக்கும் வெகு துாரம் என்பது உடனே தெரிந்துவிட்டது.
அந்த பதினைந்து மாத பள்ளி வாழ்க்கைக்கு பின், என்ன நடந்தது...
— தொடரும்.
Last edited by Barani; 5th October 2014 at 01:40 AM.
நடிகர் திலகம் குதிரையேற்றத்தில் வல்லவர் என்பதை பலபடங்களில் நம்மை பரவசப்படுத்தியிருக்கிறார். யானைகளை கட்டுப்படுத்துவதிலும் வல்லமை பெற்றவர் என்பதையும் நமக்கு தெரியப்படுத்துகிறாரோ?!
Remember slim, sleek and slender NT rolling fast away from an elephant in Vilayaatuppillai!? In Thangamalai Ragasiyam too effortlessly he rides an elephant.
Last edited by sivajisenthil; 5th October 2014 at 09:33 AM.
உங்களிடம் நான் வேறு பட்டு நிற்பது ஒரு விஷயத்தில்.(உங்களை நான் ஆதரித்தாலும்) சிவாஜி முதலில் உலக நடிகர். கலை சார்ந்த விஷயங்களே அவர் பற்றி பேசும் போது ,செயல் படும் போது முன்னிலை படுத்த பட வேண்டும்.
அவர் தொடக்கத்திலிருந்தே ,அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தாலும்,தேச பற்று,மொழி பற்று,தெய்வ பற்று,சமூக பற்று கொண்ட உண்மை மனிதர் என்ற போதும் ,எந்த காலத்திலும் அதனால் லாபம் வேண்டி நேரடி அரசியலுக்கு வராதவர். வந்த போது நேரம் காலம் தவறி ,மிக மிக அபத்தமான முடிவெடுப்புகளால் தன் பொருளையும் ,புகழையும் பணயம் வைத்தார்.எல்லா கட்சியிலும் இருந்திருந்தாலும் (தி.க,தி.மு.க,காங்கிரஸ்,ஸ்தாபன காங்கிரஸ்,இந்திரா காங்கிரஸ்,சுய கட்சியால் அ .தி.மு.க வுடன், ஜன மோர்ச்சா (ஜனதா தளம்) ,எந்த கட்சியிலும் நன்றி உணர்ச்சி கொண்டவர்களோ அல்லது அவருக்கு கிடைக்க வேண்டிய இடைத்தை கொடுத்தவர்களோ இல்லை.
அவர் எப்போதுமே ,காற்று வீசும் திசையில் பயணம் செய்த சராசரி சந்தர்ப்பவாத அரசியல் வாதியல்ல.அதனால் லாபமடைய நினைத்தவரோ,தன் மனதுக்கே ஒவ்வாத கருத்து கொண்டவர்களிடம் வெற்று இணக்கம் காட்டியவரோ இல்லை.
நம்ம நாட்டின் கீழ்த் தர அரசியல் அவருக்கு வராத ஒன்று. சிவாஜி பேரவை அவரின் கலை வாழ்க்கைக்கு ,அதன் சாதனை சுமந்த மறுமலர்ச்சி காலங்களில் பங்கெடுத்து ,பணி புரிவது அத்யாவசியமே.அரசியல் நமக்கு இரண்டாம் பட்சமே.
Last edited by Gopal.s; 5th October 2014 at 10:21 AM.
Bookmarks