-
6th October 2014, 05:15 PM
#11
எம். ஜி. ஆரின் இதயவீணை, பல்லாண்டு வாழ்க, சிரித்து வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களுக்கு அவரோடு வேலை செய்திருக்கிறேன். சிரித்து வாழ வேண்டும் படத்தில் ஒரு காட்சியில் எம். ஜி. ஆர். சிறைச்சாலைக்குள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியை என்னை எடுக்கும் படி சுபா சுந்தரம் சொல்ல நான் கேமராவை எடுத்து கோணம் பார்த்தேன்.
இப்போ மாதிரி சைபர் சாட் கேமராக்கள் அப்போ கிடையாது. அதனால் போட்டோ எப்படி வர வேண்டுமோ அதற்கேற்ப மாதிரி நடிகர்கள் ஆக்ஷன் கொடுக்க வேண்டும். அதனால் நான் எம். ஜி. ஆரிடம் 'சார் கொஞ்சம் சாப்பாட்டு தட்டை மேலே தூக்கி சாப்பிடுவது போல கையை வையுங்கள்' என்றேன். உடனே பக்கத்தில் இருந்த எம். ஜி. ஆரின் உதவியாளர்கள் ஓடி வந்து என் கையைத் தட்டி விட்டு, 'நீ என்ன சொல்றே...? அவரு எப்படி இருக்காரோ அப்படியே எடு' என்றார்கள். உடனே எம். ஜி. ஆர் அவர்களிடம், 'நீங்க சும்மா இருங்க அவர் வேலையை சரியா செய்ய இடம் கொடுங்க. காட்சி தத்துரூபமா வரணும்ணு தம்பி நினைக்கிறான்' என்று கரகரத்த குரலில் சொன்னதும் நான் புல்லரித்து நின்றேன்.
புகைப்பட கலைஞர் ஸ்டில் ரவி அவர்கள் பேட்டியில் இருந்து
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th October 2014 05:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks