Page 78 of 400 FirstFirst ... 2868767778798088128178 ... LastLast
Results 771 to 780 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #771
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்னா செய்தாரை(யே)ஒருத்து _அவர் நாண நன்னயம் செய்துவிடல்!_- by THALAIVAR


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #772
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
    உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது !
    பாடும் பறவை.. பாயும் மிருகம்..
    பாடும் பறவை பாயும் மிருகம்
    இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
    ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை !
    சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
    ஏவல் செய்யும் காவல் காக்கும்
    நாய்களும் தங்கள் குணத்தாலே
    இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
    உறவை வளர்க்கும் காக்கைகளே
    இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
    மனிதன் வகுத்த வாழ்க்கையிலே !
    வானில் நீந்தும் மேகம் கண்டால்
    வண்ண மயில்கள் ஆடாதோ ?
    வாழை போல தோகை விரிய
    வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
    அழகும் கலையும் வாழும் நாடு
    ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
    இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
    சரித்திரம் உன்னை இகழாதோ ?
    நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
    அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
    இறைவன் ஒருவன் இருக்கின்றான்
    இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் !
    தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
    மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
    மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
    மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு !

  4. #773
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த சரித்திர சாட்சியயை
    இந்த நேரத்தில்பகிறுவுவது
    பொருத்தமாக இருக்கும்
    ஆம் கடன்காரணக வலம் வந்த
    கருணாநிதியை -நம் தலைவரும்
    நம் அம்மாவும் கடனை மீட்டுகொடுக்க
    உதவியதாய் கருணவும் மாறன்னும்
    கூறிய பேட்டீ


  5. Likes gkrishna liked this post
  6. #774
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Chandrasekar Iyer View Post
    திருப்பூர் குமரன்: 04 OCTOBER 1904 (It is better late than never. Please forgive me for posting this two days later)
    காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

    தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.

    'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

    அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். திருப்பூரில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியில் இரக்கமற்ற போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், 'பாரதமாதாகி ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழங்கி உயிர்விட்ட தியாகி தான் இந்தத் திருப்பூர் குமரன். உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். அப்போது அவனுக்கு வயது வெறும் 28. ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த குமரன் தன் குடும்பத்தினரை பரிதவிக்கவிட்டுவிட்டு நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தார்.
    அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.

    திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:
    (தமிழன் இதயம்)

    மனமுவந்து உயிர் கொடுத்த
    மானமுள்ள வீரர்கள்மட்டிலாத துன்பமுற்று
    நட்டுவைத்த கொடியிது
    தனமிழந்து கனமிழந்து
    தாழ்ந்து போக நேரினும்
    தாயின் மானம் ஆன இந்த
    கொடியை என்றும் தாங்குவோம்.

    நேற்றைய முன்தினம் தான் சென்னிமலை குமரன் என்றழைக்கப்படும் கொடிகாத்த குமரனின் பிறந்த நாள். மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.
    அப்பேர்பட்ட குமரனின் குடும்பத்தையும் வாழ வைத்தவர் நம் புரட்சித்தலைவர் தான். ஆமாம். இவரது துணைவியார் ராமாயி அம்மாள் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் அவரைத் தேடிச்சென்று எல்லா உதவிகளையும் செய்தவர் நம் புரட்சித்தலைவர் தான். அதனால் தான், தான் உயிர் வாழ்ந்த காலம் (1998) வரை பொன்மனச்செம்மலை தான் பெறாத பிள்ளையாகவே போற்றி வந்தார் ராமாயி அம்மாள். “எங்க வீட்டுப்பிள்ளை” என்று நாம் எல்லோரும் அழைப்பது போல் அவரும் அழைத்தார் என்பதை விட வேறு பெருமை புரட்ச்சித்தலைவரின் பக்தர்களான நமக்கு வேண்டுமா? திருப்பூர் கிருஷ்ண்னின் இந்த உரையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும். தலைவரின் மனம் பொன் மனம் என்பlது அனைவருக்கும் புரியும். என் மனம் பொன் மனம் என்பதைக்காணலாம் என அவரால் மட்டுமே ஆணித்தரமாக கூற இயலும் வேறு எந்தக்கொம்பனாலும் அவர் அருகில் கூட நிற்க இயலாது.. p
    Thank u for uploading this matter with video.

  7. #775
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    மற்ற நடிகர்களின் 25 படங்கள் ஒரு எம்.ஜி. ஆர். படத்துக்கு சமம் ! என்ற தலைப்பில் -

    1965 - 1978 களில் வெளிவந்து, மக்கள் திலகத்தின் கலையுலக எதிரிகளுக்கு தக்க பதிலடிகள் அளித்து அசத்திய, அற்புதமான, " திரையுலகம் " இதழுக்காக - பட அதிபர் முக்தா சீனிவாசனின் பிரத்தியோக பழைய பேட்டி -

    விரைவில் முழு செய்தியுடன் பிரசுரிக்கப்படும்.

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. ;செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  8. #776
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    அக்டோபர் - 5

    30 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் 3வது பிறவி எடுத்து தான் ஒரு தனிப்பிறவி என்பதை நிரூபிப்பதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தலைவர் சேர்ந்த நாள். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளோ, உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் செல்போன், இணையதளம் ஆகியவை கிடையாது. மாலைப் பத்திரிகையில்தான் தலைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியை பார்த்தேன். சிறியதாகத்தான் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், மருத்துவமனைக்கு செல்வதை விரும்பாத தலைவர் அதுவும் பரிசோதனை முடிந்து உடனே திரும்பாமல் அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால்.... லேசாக பொறி தட்டியது.

    அதற்கேற்பவே அடுத்தடுத்த நாட்களில் தலைவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும் மேல் சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்காக செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தன.

    MISSING COMPONENT IN THIS NEWS - ANOTHER REASON BEHIND Mrs. INDIRA GANDHI's VISIT :




    பிரதமர் இந்திரா காந்தியே அப்பல்லோ வந்து தலைவரை சந்தித்து அமெரிக்க பயணத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.

    பிறகு தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அங்கிருந்தபடியே தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்து திரும்பி வந்து 3வது முறையாக முதல்வராகி 3 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது வரலாறு.


    அன்புடன்: கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    .....
    Last edited by RavikiranSurya; 7th October 2014 at 09:33 PM.

  9. #777
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பார்ந்த நண்பர் திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு,

    தங்கள் விளக்கத்துக்கும் என் மீது தனிப்பட்ட கோபமோ வருத்தமோ கொள்ளும் அளவுக்கு நம்மிடம் எந்த பகையும் இல்லையே என்று கூறியதற்கும் நன்றி.

    அதேபோல ‘நான் நினைப்பது தவறாக இருக்கலாம், எனக்குப்படுகிறது, எனக்கு தோன்றுகிறது’ என்று நீங்களே உறுதியாக நம்ப மறுக்கும் அளவுக்கு, எனக்கும் அமரராகி விட்ட திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மீது எந்த கோபமோ வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இன்னமும் சொல்கிறேன். திரு.சிவாஜி கணேசன் அவர்கள் சிறந்த நடிகர். ஆனால், அவர் மட்டுமே சிறந்த நடிகர் என்று ஒப்புக் கொண்டால்தான் அவர் மீது வெறுப்பு இல்லை என்று அர்த்தம் என சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது.

    உதாரணமாக, அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பலே பாண்டியா படத்தில் வரும் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடல் காட்சியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பை ரசித்திருக்கிறேன். அதேபோல, அந்த பாடலில் கிண்டலும் கேலியுமாக ஸ்வரம் சொல்லும் நடிகவேள் திரு.எம்.ஆர்.ராதா அவர்களின் நடிப்பை பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். நீங்களே மனசாட்சிப்படி சொல்லுங்கள். அந்த பாடலில் நடிப்பில் யாரை யார் விஞ்சினார்கள்? என்று யார்தான் சொல்ல முடியும்?

    என்னைப் பொறுத்தவரை இருவரும் சிறந்த கலைஞர்களே. இத்தனைக்கும் திரு.எம்.ஆர்.ராதா அவர்கள் காழ்ப்புணர்ச்சியால் புரட்சித் தலைவரை சுட்டவர் என்ற போதும் அவரது நடிப்புத் திறமையை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. இதுவே எங்களது நடுநிலைக்கு சான்று. திரு. எம்.ஆர்.ராதா அவர்கள் மீதே வெறுப்பு கொள்ளாத எங்களுக்கு‘ எனது தம்பி ’என்று தலைவரால் அழைக்கப்பட்ட திரு.சிவாஜி கணேசன் அவர்கள் மீது என்ன வெறுப்பு இருக்கப் போகிறது?

    சகோதரர் செல்வகுமார் அவர்கள் மற்ற நடிகர்களின் 25 படங்கள் ஒரு எம்.ஜி.ஆர் படத்துக்கு சமம் என்று திரு. முக்தா சீனிவாசன் தலைவரைப் பற்றி புகழும் செய்தியைத்தான் வெளியிடப் போவதாக சொல்லியிருக்கிறார். இதில் என்ன provoke இருக்கிறது? ஆனால், எங்கள் தலைவரை மறைமுகமாக தாக்கும் வகையில் ‘அந்நிய கள்’ என்றும் பஜனைக் கூட்டம் என்று எங்களையும் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? சரி அதுதான் போகட்டும். வேறு யாரையோ கூறியதாகவே இருக்கட்டும். ஆனால், சிவா என்பவர் எங்கள் தலைவரை நேரடியாக கிண்டல் செய்யும் வகையில் ‘நீ தானய்யா உண்மையான பொன்மனச் செம்மல்’ என்று உங்கள் அபிமான நடிகரைப் போற்றுவது provoke இல்லையென்று எப்போதும் நடுநிலையோடு செயல்படுவதாக கூறும் நீங்கள் கூறமாட்டீர்கள் என நம்புகிறேன். நானும் சில விளக்கங்களை தெளிவுபடுத்த உதவிய உங்களுக்கு சிறப்பு நன்றி.

    அன்புடன்: கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  11. #778
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post


    புரட்சித் தலைவரின் இயல்பான தோற்றம் - அருகில் இயக்குனர் ப. நீலகண்டன்

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. ;செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    மிகவும் அருமையான ஸ்டில் திரு செல்வகுமார் சார்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  12. #779
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    மற்ற நடிகர்களின் 25 படங்கள் ஒரு எம்.ஜி. ஆர். படத்துக்கு சமம் ! என்ற தலைப்பில் -

    1965 - 1978 களில் வெளிவந்து, மக்கள் திலகத்தின் கலையுலக எதிரிகளுக்கு தக்க பதிலடிகள் அளித்து அசத்திய, அற்புதமான, " திரையுலகம் " இதழுக்காக - பட அதிபர் முக்தா சீனிவாசனின் பிரத்தியோக பழைய பேட்டி -

    விரைவில் முழு செய்தியுடன் பிரசுரிக்கப்படும்.

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. ;செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் விரைவில் பதிவு செய்யவும்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  13. #780
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Chandrasekar Iyer View Post


    You can call them as Super Stars, Thalais, Dhalpathis, Supreme Stars, Ulaga Nayagans etc., etc.; Whatever you may feel like. But how long?
    Bhagwan Budha quoted that three things cannot be hidden , the Truth, the Sun and the Moon. Likewise, the Charisma of MGR, the three letters magic word would only exist for ever as far as tamil cinemas are concerned.
    Yes, no one could have even imagined the tremendous response given by the public at Albert Theatre on the eve of 100th day celebration of “Ayirathil Oruvan” which was originally released in 1965, 50 years back, when most of us were not even born. He had left this world for his heavenly abode in 1987, almost 27 years completed. But still, the gratitude without any expectation given away by the tamil speaking people towards their beloved leader had been proven beyond any doubts which could not be expressed in words. The gratefulness shown by them on that day to a great man who was a dedicated altruistic was awesome. He is still being remembered by them all over the world irrespective of their cast, creed and religion, he lives in their hearts. Time may pass and fade away but memories of him will live for immortal ages.
    On that day, the 1040 seated capacity movie hall was jam-packed with around 1500 die-hard fans of MGR, most of them standing near the screen, sitting on the pathway – shouting, dancing and whistling whenever their demigod appeared on the screen. Most of them born after 1965 and I saw hundreds of people in their twenties and early thirties who have born after his death or were kids at the time of his death respectively. The stylish hero had carved a niche for himself not only in the field of acting but in every field of cinema. His body language and the elegant style of fighting (especially fencing) are not only magnetising the younger generations but will definitely create a centre of attention in the minds of future generation too. He had marked an indelible link which will remain eternally.
    ஆஹா, சூப்பர். தொடர்ந்து திரியில் அசத்துங்கள் திரு சந்திரசேகர் சார்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •