-
8th October 2014, 10:02 AM
#2021
Junior Member
Newbie Hubber
முக்தாவின் பதிவுகளை போட்டால், அதே முக்தா ,ஏ.பீ.என் படபிடிப்பில் நடந்ததை சொன்ன பதிவை நாங்கள் போட வாய்ப்புண்டு. பல தருணங்களில் உயர் ரக கொள்கைகள் எவ்வளவு மேம்போக்கானவை என்று விமர்சிக்க பட்ட ஏராள விஷயங்கள் உள்ளன. அவற்றை போட்டால் பெருந்தன்மையாளர்கள் தாங்குவார்களா?என்னிடம் ஏக பட்ட சர்ச்சை பதிவுகள் உண்டு.ஆனால் யாரையும் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று அமைதி காக்கிறேன்.
கலை வேந்தன்,
ஆனந்தன் கூட மூன்று படங்களில் காதல் காட்சிகள்,நடனம்,சண்டை என்று அசத்தியுள்ளார். ஒன்றிரண்டு கருத்து பாடல்களும் பாடியுள்ளார். முதல்வராகும் தகுதி கொண்டவர் என்றால் ஒப்பு கொள்வீர்களா? நாங்களும் ரங்கராவ்,பாலைய்யா,ராதா போன்றவர்களின் ரசிகர்களே.
அவர்களின் உயரங்கள் ஒரு சில பாத்திரங்களோடு சுருங்கி விடுபவை.
அது சரி,சில நேரங்களில் தங்கள் எழுத்தில் ஒரு பளிச் இருக்கிறது. சில நேரங்களில்??? நீங்கள் ஒருவரா? அல்லது ஒரே ஐ.டியில் பலரா என்ற வியப்பு கூட தோன்றியதுண்டு. எங்கள் ரசிகர்கள் கூட தொடராத என் எழுத்தை தொடரும் தங்கள் ரசனை,சிவாஜியை அறிந்து எங்களுடன் இணையும் நாள் அருகில் என்று என் மனத்தில் படுகிறது.
தங்களுக்கு முன் கூட்டிய வரவேற்பளிக்கிறோம்.
-
8th October 2014 10:02 AM
# ADS
Circuit advertisement
-
8th October 2014, 10:12 AM
#2022
Junior Member
Seasoned Hubber
a recap of Saradha Madam old post
ராஜபார்ட் ரங்கதுரை
நேற்றிரவு நானும் "ராஜபார்ட் ரங்கதுரை" திரைக்காவியத்தை, கண்கொட்டாமல் கண்டு ரசித்தேன். (எத்தனையாவது முறை என்று தெரியவில்லை... நாற்பதாவது அல்லது நாற்பத்தைந்தாவதாக இருக்கலாம்). இன்னொரு விசேஷம், இப்படத்தை என்னோடு அம்ர்ந்துபார்க்க என் தந்தையை அழைத்திருந்தேன். அவரும் மயிலையில் இருந்து அண்ணா நகர் வந்திருதார். காரணம் இத்திரைப்படம் வெளியானபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாக இருந்தவர் அவர். அதை அவர் விளக்க நானும் என் கணவரும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நடிகர்திலகத்தின் மற்ற படங்களைப்போல் அல்ல இது. பெருந்தலைவரின் தீவிர தொண்டனாக இருந்த நேரம், பல்வேறு அரசியல் சுவாரஸ்யங்களைப்போர்த்தி வந்த படம் 'ராஜபார்ட் ரங்கதுரை'.
இங்கே முரளி அண்ணா குறிப்பிட்டதைபோல, 'இங்குலாப் ஜிந்தாபாத்' பாடல் காட்சியிலும், கொடிகாத்த குமரன் காட்சியில் இடம் பெற்ற வசனங்களிலும் அன்றைய அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறு பாடல் வரிகளும், வசனங்களும் கையாளப்பட்டிருந்தன. ஸ்தாபன காங்கிரஸின் சார்புப் பத்திரிகைகளாக விளங்கிய 'நவசக்தி', 'அலை ஓசை' பத்திரிக்கைகளும் பாடலில் நுழைக்கப் பட்டிருந்தன. இதற்கு முன் வந்திருந்த 'எங்கள்தங்கராஜா' வும் 'கௌரவமும்' நடிகர்திலகத்தின் நடிப்பை பொதுப்படையாக விரும்புவோர்க்கு விருந்தாக அமைந்திருந்தன என்றால், 'ராஜபார்ட் ரங்கதுரை' சிவாஜி மன்றத்தோடும், காங்கிரஸ் பேரியக்கத்தோடும் ஒன்றியிருந்த ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக அமைந்தது.
வழக்கமாக திரைத்துறையினருக்கு மட்டுமே ஸ்பெஷல் காட்சிகள் காண்பிக்கப்படும் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களுக்காக ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பெருந்தலைவர் காமராஜ், குமரி அனந்தன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, மணிவர்மா, எம்.பி.சுப்பிரமணியம், இளையபெருமாள், சிவாஜி மன்ற தலைவர் சின்ன அண்ணாமலை, எழுத்தாளர் சாவி, ஜெயகாந்தன், தமிழ்வாணன், சோ, கண்ணதாசன், ஜி.உமாபதி போன்றவர்கள் கலந்துகொண்டு படத்தைப்பார்த்து பாராட்டினராம். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தியவாறு நடிகர்திலகம் இறக்கும் காட்சியைப்பார்த்து பெருந்தலைவர் கண்கலங்கினாராம்.
இந்த விவரங்கள் படம் வெளியாகும் முன்பே ரசிகர்களுக்கு எட்டப்போக, அவர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்க சென்னை 'பைலட்' தியேட்டரில் கூடினராம். 'ஹேம்லெட்' நாடகத்தில் நடிகர்திலகம் கையில் வாள் பிடித்து நிற்கும் காட்சி பெரிய கட்-அவுட்டாக வைக்கப்பட்டிருந்ததாம்.
இன்குலாப் ஜிந்தாபாத் பாடல் முடிவில், நடிகர்திலகம் தூக்கில் தொங்கும் காட்சியைக்கண்டு அவரது மனைவி உஷா நந்தினி அலற... அதைத்தொடர்ந்து நாடகம் பார்க்கும் ரசிகர்களும் 'இன்குலாப்' கோஷம் போட அதோடு நாடகத்தில் திரை விழும். உடனே பைலட் தியேட்டரில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று 'இன்குலாப் ஜிந்தாபாத்.. இந்துஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட, திரையரங்கமே அதிர்ந்ததாம். இப்படி பல்வேறு உணர்ச்சிமயமான நிகழ்ச்சிகளை அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார்.
கடைசியில் இயற்கை எய்தும் காட்சியில் நடிகர்திலகம் பேசும் வசனம் "யாரும் அழக்கூடாது. இந்த மேடையில் இந்த கொடியோடு சாகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்". (மேடை என்று குறிப்பிட்டது அவரது உயிர்மூச்சான நடிப்புக்கலையும், கொடி என்று குறிப்பிட்டது அவர் கண்ணாக மதித்த காங்கிரஸ் பேரியக்கமும் தான்).
படம் முழுக்க பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். அதனால் இடையிடையே நமது பரிதாபத்தை கிளறிவிடும் காட்சிகளும் வந்துபோகும். அதில் ஒன்று, தன் நாடகத்துக்கு எதிராக தன் மாமனாரே திரைப்படக் கொட்டகைபோட்டு தன் தொழிலை நலிவடைய செய்ய, நாடகம் பார்க்க வந்திருக்கும் மிக சொற்பமானவர்களுக்காக, தன்னுடைய 'அரிச்சந்திரா' வசனத்தை பேச ஆரம்பிக்க, கூட்டத்தின்ர் சினிமா பாடல் பாடும்படி வற்புறுத்த, "ஐயா எனக்கு அந்தப்பாட்டெல்லாம் தெரியாது" என்று அவர் பரிதாபமாக கூறிநிற்கும் இடமும், அதைத்தொடர்ந்து, ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்துப்போட்டு விட்டுப்போக, அவர் மௌனமாக அவற்றின் நடுவே நடந்து வரும் இடமும் கண்களில் நீரை வரவழைக்கும் பல கட்டங்களில் ஒன்று.
இன்னொரு விசேஷம், 'மிகை நடிப்பு' என்று யாரும் சொல்ல இடம் கொடுக்காத படம் இது.
-
8th October 2014, 10:19 AM
#2023
Junior Member
Seasoned Hubber
NT can act whatever role acted by Ranga Rao & M R Radha whereas just imagine whether it is possible to view if both of them act in a duet
song. Who will watch if both of them act in such scenes. That is the greatness of NT.
-
8th October 2014, 10:41 AM
#2024
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
<Dig>
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
உங்கள் எதிர் வினைக்கு நன்றி. உங்களுடன் interact செய்ய மாட்டேன் என்று சொன்னது சிவாஜி- எம்ஜிஆர் வாதப் பிரதிவாதங்களில் interact செய்ய மாட்டேன் என்ற அர்த்தத்தில்தான். மற்றபடி உங்களிடம் தனிப்பட்ட முறையில் கோவம் அல்லது வருத்தம் கொள்ளுமளவிற்கு நம்மிடையே எந்த பகையும் இல்லையே. உங்களுக்கு பிடித்தவரை நீங்கள் உயர்த்தி பிடிக்கிறீர்கள். அதே போன்றே எனக்கு பிடித்தவரை நானும்.
உங்களுடன் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டை கூட நான் எடுக்க காரணம் [நான் நினைப்பது தவறாக கூட இருக்கலாம். உங்கள் மனதை சரியாக அறியாமல் நானாகவே ஒரு அனுமானத்தின் பேரில் இந்த முடிவுக்கு வந்ததாக கூட இருக்கலாம்] உங்கள் எழுத்துகளைப் படிக்கும்போது [நீங்கள் இல்லையென்று மறுத்தாலும்] உங்கள் ஆழ்மனதில் ஒரு நிரந்தர சிவாஜி வெறுப்பு குடிக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. நாம் தர்க்கம் செய்யக் கூடிய விஷயங்களில் உண்மை நிலவரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு pre conceived notion என்று சொல்லுவார்களே அது போன்ற ஒரு mindset உங்களுக்கு இருப்பதாக எனக்கு தோன்றுவதனால்தான் நான் அப்படி சொன்னேன். என் எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் எனக்கு மகிழ்ச்சியே!
இரு திரிகளின் பங்களிப்பாளர்களுக்கிடையே வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் என்ற எண்ணத்தினாலும் அருமை நண்பர் செல்வகுமார் மற்றும் உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்று எப்போதும் நண்பர் RKS அவர்களின் பதிவுகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த காரணத்தினாலும் RKS அவர்களால் எம்ஜிஆர் திரியில் எந்த இடையூறும் ஏற்படாது என்று நான் உறுதி சொல்லி அதை அந்த வார்த்தையை இன்றுவரை நண்பர் RKS அவர்கள் காப்பாற்றி வருகிறார்.
ஆனால் நண்பர் செல்வகுமார்தான் அதை மறந்து விட்டு எம்ஜிஆர் அவர்களின் கலையுலக எதிரிகளுக்கு பதில் என்று முக்தா ஸ்ரீனிவாசனின் பேட்டியை வெளியிடப் போவதாக சொல்லிருக்கிறார். நண்பர் செல்வகுமாருக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை. திடீரென்று இப்படி ஒரு பதிவை இடுவதற்கு. எப்படி இருப்பினும் நடிகர் திலகம் திரியிலிருந்து யாரையும் provoke செய்யும் போக்கினை நாங்கள் கடைப் பிடிக்க மாட்டோம்.
சில விஷயங்களை தெளிவுபடுத்த உங்கள் பதிவு உதவியது, அதற்கு மீண்டும் நன்றி!
<end dig>
அன்புடன்
Dear Murali Srinivas Sir,
I did not mean Late Respectable Sivaji Ganesan as foe to our beloved God M.G.R. in the Cine-field and also you cannot presume and assume that the antogonist is late Respectable Sivaji Ganesan. Our beloved God MGR's rivals in the Cine-field, in those days were many. Conspiracy took place in those days to keep apart our beloved God M.G.R. from Tamil Cine Field itself.
My intention is to publish this matter in reply to Mr. RKS's Implausible Remark, posted some time back, with intolerance, when Mr. Muktha Srinivasan, praised our Makkal Thilagam during the release of Ithayakkani, in 1975 which was posted recently, in M.T. Thread.
Similarly when Actor Mr.Sathyaraj praised about our beloved Makkal Thilagam M.G.R., with much prejudice, criticism was made by Mr. RKS.
At times, Dear Friend, Mr. Gopal also, by his peculiar write-up, is attacking indirectly our Makkal Thilagam and others who pay tribute to our beloved God Makkal Thilagam M.G.R.
One thing, to be borne in mind is that we should accept the verdict of praising a personality, for his good qualities.
For your kind information, I (belonging to the Janaki Faction during the split in AIADMK in 1988) had pasted the Poster appearing Late Respectable Sivaji Ganesan, and canvassed for Mr. K.V.P. Boominathan who contested as TMM candidate, at that time, from Tiruvottiyur Constituency, where I still have VOTE.
If you feel that I am provoking, I am not the person to publish the article about Muktha Srinivasan's speech.
I always would like to maintain a DECORUM, unless and until, our beloved Makkal Thilagam is not censured in the N.T. Thread.
I extend my full co-opoeration in smooth running of both the Threads and please understand that though I am a stamped AGRESSIVE MGR DEVOTEE but I won't believe the concept of attacking opponent(s) and thus prove or establish my Allegiance / Loyalty.
With Lot of Regards,
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
8th October 2014, 10:48 AM
#2025
Senior Member
Seasoned Hubber
நண்பர் திரு.j .ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
8th October 2014, 10:53 AM
#2026
Junior Member
Seasoned Hubber
Wish you many more happy returns of the day Mr Radhakrishnan.
Regards
-
8th October 2014, 11:05 AM
#2027
Junior Member
Newbie Hubber
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் நினைவுநாள் இன்று.
-
8th October 2014, 11:06 AM
#2028
Junior Member
Newbie Hubber
Wish you many more happy returns of the day Mr Radhakrishnan.
-
8th October 2014, 11:07 AM
#2029
Senior Member
Senior Hubber
Dear Mr. Radhakrishnan,
Wish you many more happy returns of the day.
Regards,
R. Parthasarathy
-
8th October 2014, 11:27 AM
#2030
Junior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
மய்யம் இணைய தளத்தில் பங்கேற்பாளர்களில் சில வகை உண்டு. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எந்த தலைப்பு தங்களைக் கவர்கிறதோ அதில் தங்களுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கென சில நண்பர்கள் வட்டாரத்தை அறிந்து தேர்ந்தெடுத்து அவர்களோடு சம்பந்தப்பட்ட தலைப்புகளில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் தொய்வேற்பட்டால் அவற்றில் வம்பு வளர்ப்பது போன்று சில சர்ச்சைகளை உருவாக்கி அவற்றின் மூலம் அத்தலைப்புகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைப்பது.
இவற்றைத் தாண்டி இம்மய்யத்தில் பங்கு கொள்வதற்கென்றே தங்களுடைய உழைப்பு, நேரம், திறமை போன்றவற்றை அர்ப்பணித்து தங்களுடைய கருத்துக்களை மட்டுமின்றி தங்களுடைய உழைப்பின் மூலம் அரிய ஆவணங்களையும் பகிர்ந்து கொள்வது. இவ்வகையினரின் பங்கேற்பின் மூலம் சமீபகாலமாக சில ஆண்டுகளில் நம்முடைய மய்யம் இணைய தளம் உலக அளவில் அதிகமாக பேசப்படும் இணையதளமாகியுள்ளது என்பது உண்மை. இத்தகைய உழைப்பினை அவர்கள் அளிப்பதற்காக அவர்கள் எதிர்பார்ப்பது ஆதாயம் ஏதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதிகபட்சம் நம் நண்பர்களின் பாராட்டுக்கள் தான் இந்த உழைப்பிற்கேற்ற அங்கீகாரம். இந்த ஆவணங்கள் தமிழ் திரையுலக வரலாற்றிற்கும் பயன்படுவது நமது மய்யம் இணையதளத்திற்கும் சிறப்பாகும்.
சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் போது அவற்றின் மதிப்பு அளவிடமுடியாததாகும். இவற்றை இங்கு தரவேற்றுவதற்கும் பேருழைப்பு தேவைப்படும்.
இவ்வளவும் செய்து இங்கு தரவேற்றும் போது அவற்றை குப்பைகள் என்றும் பக்கங்களை நிரப்புவதற்கான உத்திகள் என்றும் கொச்சையாக விமர்சனங்கள் வரும் போது எந்த படைப்பாளியும் உள்ளம் வருந்தத்தான் செய்வான். இப்படிப்பட்ட கேலிகளும் கிண்டல்களும் விமர்சனங்களும் சில சமயம் திட்டமிட்டே செய்யப்படுபவையாகக் கூட இங்கே தோற்றமளித்தன. இதனால் மன வருத்தத்துடன் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி நின்ற நண்பர்களில் ஒருவர்தான் நமது அன்பிற்குரிய நெய்வேலி வாசுதேவன் அவர்கள். மற்றவர்களில் அன்பிற்குரிய பம்மலார் அவர்களும் அடியேனும் அடங்குவோம். இதே போல இம்மய்யத்திற்கு புகழ் சேர்க்கும் அரிய ஆவணங்களை - அவை பத்திரிகை விளம்பரங்களாகட்டும் - பாட்டுப்புத்தகப் பக்கங்களாகட்டும் - நிழற்படங்களாகட்டும் - வேற்று மொழி பத்திரிகை விளம்பரங்களுமாகட்டும் - பழைய திரையரங்க நிழற்படங்களாகட்டும் - அவற்றை வழங்குவதில் எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் அன்பிற்குரிய வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், வேலூர் ராமமூர்த்தி, செல்வகுமார் உள்பட பலர் உள்ளனர்.
எந்த அளவிற்கு திறனாய்வு படைப்புத்திறன் சார்ந்ததோ அதைவிட அதிகமாகவே ஆவணங்கள் தரவேற்றலும் படைப்புத்திறன் சார்ந்ததுவே.
துரதிருஷ்டவசமாக நடிகர் திலகம் திரியில் தான் ஆவணங்கள் சிறுமைப்படுத்தப்பட்டன, அதுவும் வழங்கப்ப்ட்ட ஆவணங்கள் எல்லாமே அந்நாளைய விளம்பரங்கள், பத்திரிகை பக்கங்கள் என அரிய வகையிலானவை. வெறும் நிழற்படங்களைக் கொண்டு நடிகர் திலகம் திரியில் பக்கங்கள் நிரப்பப் படவில்லை.
இவற்றின் அடிப்படையில் தான், பங்கேற்பாளரின் உழைப்பை சிறுமைப்படுத்தப் பட்ட மனவேதனையின் அடிப்படையில் தான் வாசுதேவன் போன்ற சிறந்த உழைப்பாளிகளின் பதிவுகளைப் பார்க்க வேண்டும். அவருடைய மனவேதனையைப் புரிந்து கொண்டால் தான் ஒரு படைப்பாளியின் கஷ்டங்களை உணர முடியும்.
வாசுதேவன், பம்மலார், வினோத், போன்ற சிறந்த ஆவணக்காப்பாளர்கள் கிடைத்தது நம்முடைய மய்யத்தின் மிகச்சிறந்த பெருமை.
அதை பெருமையாகக் கருதி அவர்கள் மனம் நோகாமல் ஊக்கமளிப்பது மற்ற நண்பர்களின் கடமை என நான் எண்ணுகிறேன்.
Dear Raghavaendra Sir,
A GOOD COMPLIMENTS. WE WERE HONOURED BY YOUR NICE WRITE-UP,. SIR. YOU ARE REST ASSURED OF OUR BEST CO-OPERATION AT ALL TIMES.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Bookmarks