-
8th October 2014, 05:08 PM
#11
Junior Member
Platinum Hubber
'எங்கள் தங்கம்' படத்தில் 'கதாகாலட்சேப' பாடல் காட்சி ஒன்று உண்டு. கவிஞர் வாலி எழுதிய அந்தப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்., உச்சிக்குடுமியுள்ள பாகவதர்போல், "நம்ம பகுத்தறிவு பதையே"... என்று பாடித் தொடங்குவார்.
'சந்திர மண்டல விஜயம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கதாகாலட்சேபம் முழுவதும், நிலவில் மனிதன் கால் வைத்த நிகழ்வு பற்றியே அமைந்ததாகும்.
டி. எம்.எஸ்., எம்.ஜி.ஆருக்காக பாடிய அந்த பாடலில் நிலவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங் பற்றி, "ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா... வா... உனது காலை எடுத்து வைத்து வா வா..." என்ற வரிகள் சாரதா படத்தில் வரும் "மணமகளே மணமகளே வா வா..." என்ற பாடல் டியூனில் வருவது போல், வேறு சில தமிழ்ப்பட பாடல்களும் கதம்பமாக இடம் பெற்றிருக்கும்.
அப்படி சிவாஜி நடித்த 'இருமலர்கள்' படத்தில் வரும் "மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்" என்ற வரிகளை எம்.ஜி.ஆர்., "மன்னிக்க வேண்டுகிறேன் செய்த தவறுக்கு வருந்துகிறேன்" என்று அதே டியூனில் பாடுவது போல் வரும்.
படத்தின் இசைத்தட்டில் "போகாதே... போகாதே... என் கணவா... பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்ற 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' பாடல் வரிகளை எம்.ஜி.ஆர்., "போகாதே போகாதே நரசிம்மா- பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்று பாடுவது போல் இடம் பெற்றது. ஆனால் படத்தில் பெறவில்லை.
-
8th October 2014 05:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks