Results 1 to 10 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால்,

    வந்த உடனேயே ஆரம்பிச்சாச்சா!

    இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார். பொறுங்கள். நிறைய வரும். அதற்குள் அவசரம் வேண்டாமே! நீங்களும் ஒரு குறுகிய வட்டத்துக்குக் சிக்கி கொள்ளாமல் சற்று வெளியே வாருங்கள். எனக்கும் நிறைய பிடிக்காத பாடல்கள் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை மீண்டும் நினைவுபடுத்தி திரும்பக் கேட்கும் போது அவற்றுள்ளும் சில ரசிக்கக் கூடிய இனிமையான விஷயங்கள் உள்ளன.

    அவரவர்கள் கண்ணோட்டத்தில் அவரவர்களின் ரசனை வேறு. ஆளாளுக்கு ஒன்று பிடிக்கும். தனக்குப் பிடித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் அனைவரும் விரும்புவார்கள். அதில் தவறில்லை. நீங்களும் அதில் விதிவிலக்கல்லவே.

    உங்கள் ரசனையோடு ஒத்துப் போகக்கூடிய பாடல்களை இடுகை செய்யவேண்டும் என்று நினைத்தால் மதுரகானங்களின் இரண்டு பக்கங்களே போதும்.

    உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ரசனை மேம்பட்டது. அது எனக்குப் புரியும். ஏனெனில் இருவர் ரசனையும் ஒன்றே.

    அதனால் உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு ஏற்றார் போல தர என்னால் முடியும். அதற்கு நமக்குள் இருக்கும் தினத் தொடர்பு (கைபேசி) முக்கியப் பங்கு வகிக்கிறது.

    நீங்கள் ரசிக்கும் பாடல்களைத்தான் அனைவரும் ரசிக்க வேண்டும் என்பது சரியாகாது. அவர்கள் ரசிக்கும் பாடல்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதும் சரியாகாது. ஒருவர் திரியை தன் தலை மேல் சுமக்கும் போது அவரை ஆரம்பத்திலேயே உற்சாகத்தை இழக்க வைக்க வேண்டாம். ராஜேஷ் சாரிடம் அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

    புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    உங்கள் ரசனைகளைப் பார்த்து வியந்து போனவன் நான். அது என்னுடன் ஒத்துப் போகிறது என்பதில் பெருமகிழ்வும் கொண்டவன் நான். ரசனை மிகுந்த ஒரு ராட்சஷ ரசிகனின் நட்பு கிடைத்ததற்கு பூரித்துப் போனவன் நான். அதற்காக மற்றவர்கள் ரசிப்புத்தன்மையை நாம் குறை கூற வேண்டாம். நம்மைப் போல ரசனை உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஞாபகசக்தி என்பது இறைவன் தந்த வரம். அது இங்கு எல்லோரிடமும் வேண்டிய அளவைவிட அதிகமாக இருக்கிறது என்பது எவ்வளவு சந்தோஷப்பட வேண்டிய விஷயம்?

    தனக்குத் தெரிந்ததை நினைவுகூர்ந்து அதைப் பதிந்து அதற்கான மற்றவர்கள் கருத்துக்களை அறியும் போது ஏற்படும் சுகம் எவராலும் தர முடியாது பெற முடியாது நடிகர் திலகம் என்ற அந்த இறைவனைத் தவிர. (உங்களுக்கும், எனக்கும்)

    ஒரு மேம்பட்ட ரசிகனாக திருத்தங்களை அடுத்தவர் மனம் புண்படாமல் சொல்லுங்கள். சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள். அதுவே திமிர்ப்பதிவுகளாக வந்தால் வெளுத்து வாங்குங்கள். நானும் உடன் வருகிறேன்.

    உற்சாகப்படுத்துங்கள் கோபால். நீங்கள் உற்சாகப்படுத்தினால் ஆதாயம் உங்களுக்கே.

    'ஒருவன் காதலனை' வெளுத்து வாங்கி விட்டோமே!

    இன்னொன்று பாருங்கள். உங்களிடம் எவ்வளவு மரியாதை வைத்திருந்தால் பங்களிப்பு கார்டில் ராஜேஷ் உங்கள் பெயரை முதலில் குறிப்பிட்டிருப்பார். அதை பயம் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

    எப்படி உங்களைத் தூக்கி வைத்துக் கொண்ட்டாடுகிறோம்.. கொண்டாடுகிறார்கள்.

    இதையெல்லாம் நீங்கள் கவனித்து கருத்தில் கொள்ள வேண்டும் தலைவா. சரி! இட்லி ஆறுகிறது. சாப்பிட்டுவிட்டு வருகிறேன்.

    அதற்குள் திட்டி எழுத ஆயத்தமாகுங்கள்.
    Last edited by vasudevan31355; 9th October 2014 at 09:50 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •