-
10th October 2014, 04:34 PM
#871
Junior Member
Veteran Hubber
15-10-14 தேதியிட்ட குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்ட கீழ்கண்ட செய்தி தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ளும் விஷயமாகும்.[
இந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், நமது திரியின் பார்வையாளரும், மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் பலவற்றினை திரு. வினோத் மூலம் இத்திரிக்கு அளித்தவரும், எம். ஜி. ஆர். ரசிகர்களில் மூத்தவருமான பெங்களூரு சி. எஸ்.குமார் அவர்களின் சகோதரர் (சிற்றப்பா மகன்). புரட்சித்தலைவரின் மீது பெரும் மதிப்பு கொண்டவர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 10th October 2014 at 04:42 PM.
-
10th October 2014 04:34 PM
# ADS
Circuit advertisement
-
10th October 2014, 04:35 PM
#872
Junior Member
Diamond Hubber
இந்த நாளில் அன்று (1.10.1973); பிரிவினை கோரிக்கை மறைமுகமாகவும் அ.தி.மு.க. எழுப்பாது; எம்.ஜி.ஆர். பேச்சு
இந்த நாளில் அன்று (1.10.1973)
பிரிவினை கோரிக்கை மறைமுகமாகவும் அ.தி.மு.க. எழுப்பாது;
எம்.ஜி.ஆர். பேச்சு
சென்னை, செப்.30 - அண்ணா தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையை மறைமுகமாகவும் எழுப்பாது என்று அக்கட்சியின் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் திட்டவட்டமாக அறிவித்தார்.
காலஞ்சென்ற அண்ணாதுரையின் 65வது பிறந்த தினத்தையொட்டி அண்ணா தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். பெருமழையையும் பொருட்படுத்தாமல் திருவல்லிக்கேணி சீரணி அரங்கத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டனர்.
தமது கட்சியினுடைய அரசியல், பொருளாதாக் கொள்கைகளை விளக்கிப் பேசிய எம்.ஜி.ராமச்சந்திரன், மாநில - மத்திய அரசுகள் சம பங்காளிகள் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு சோஷலிச சமுதாயத்தை அமைப்பதில் இரண்டு அரசுகளுக்கும் சமமான பொறுப்பு உண்டு என்றும் கூறினார்.
கருணாநிதி அமைச்சரவை லஞ்சத்திற்கு ஆளாகி விட்டதாகக் குற்றஞ்சாட்டிவிட்டு, அந்த அரசை வெளியேற்றும் வரை தமது கட்சி ஓய்ந்திருக்கப் போவதில்லை என்றும் எம்.ஜி.ஆர். கூறினார்.
courtesy dinamani
-
10th October 2014, 04:50 PM
#873
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகத்துடன் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் மற்றும் அவர் புதல்வர் எஸ். எஸ். பாலன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ்!
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 10th October 2014 at 05:11 PM.
-
10th October 2014, 05:01 PM
#874
Junior Member
Veteran Hubber

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Suriyan Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
-
10th October 2014, 05:09 PM
#875
Junior Member
Newbie Hubber
TITLE THADAM PATHITHAVARGAL
PURATCHI THALAIVAR Dr.MGR PROGRAMME IS GOING TO BE TELECAST IN VENTHAR TV ON COMING SUNDAY (12-10-2014) AT 1 PM. THIS PROGRAME WILL BE CONTINUED EVERY SUNDAY SAME TIME.
THANKING YOU,
R GOVINDARAJ
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th October 2014, 05:09 PM
#876
Junior Member
Seasoned Hubber
திரு. ஆர்.கே.எஸ்.
சகோதரர் யுகேஷ் பாபு அவர்கள் போட்ட பதிவை எடுத்து கிண்டல் செய்கிறீர்களோ என்று நினைத்தேன். ஆனால், lighter side ஆகத்தான் போட்டேன் என்று நீங்கள் விளக்கம் அளித்திருப்பதை பார்த்த பின் உங்கள் நோக்கத்தில் தவறில்லை என்று புரிந்து கொண்டேன்.
சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களும் உள்நோக்கத்தோடோ, வம்புக்காகவோ உங்கள் பெயரை இழுத்ததாக நினைக்கவில்லை. முரளிக்கு அவர் அளித்த விளக்கமாகவே பார்த்தேன். இப்போது, உங்கள் விளக்கத்தை நான் ஏற்கவில்லையா?
திரு.கோபால் அவர்களுக்கு அளித்த பதிலில் உங்கள் பெயரைப் பயன்படுத்தியது குறித்து நீங்கள் முதலில் ‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ’பதிவு போட்டபோதே விளக்கம் சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால், தேவையில்லாமல் பிரச்னை செய்கிறாரே என்று நினைத்து கோபம் வந்ததால் விளக்கத்தை தவிர்த்து, இது நியாயமா? என்று கேட்டிருந்தேன். உங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டதால் இப்போது விளக்கம் அளிக்கிறேன்.
‘தனக்குத் தானே.....’ சொற்றொடரைப் பொறுத்தவரை நீங்கள் அதை திறமையாக கையாண்டிருந்ததும் அதில் தொக்கியிருந்த நகைச்சுவையும் என்னைக் கவர்ந்ததால் அதை அப்படியே பயன்படுத்தினேன். காப்பி அடித்தது போலாகிவிடுமே என்பதால் உங்கள் பெயரை போட்டேன்.
ஐடி விவகாரத்தை பொறுத்தவரை உங்கள் திரியில்தான் அவ்வாறு உண்டு என்று பொதுவாகக் கூறினால், அப்படி எல்லாம் இல்லை என்று யாராவது கூறி, ஆதாரம் எங்கே? என்று கேட்டால் மீண்டும் நான் ஆதாரத்தை சொல்ல வேண்டியிருக்கும். சொல்லாமல் விட்டாலும் நான் பொய் கூறியது போல இருக்கும். விவாதத்தை மேற்கொண்டு தொடர விரும்பாமல் கேள்விக்கே வழி இல்லாத வகையில் ஆதாரத்தோடு சொல்ல நினைத்ததால் நீங்கள் ஏற்கனவே எழுப்பிய சந்தேகத்தை மேற்கோள் காட்ட வேண்டியதாகி விட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். திரு.கோபால் அவர்களுக்கு அளித்த பதிலைத் தொடர்ந்து விவாதத்தை விரும்பாதது போலவே இப்போதும் விவாதத்தை தொடர விரும்பவில்லை. என்றாலும், உங்கள் பெயரைப் பயன்படுத்தியதற்காக நீங்கள் வருந்தினால் அதற்காக நானும் வருந்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: பண்பாளர்கள், கண்ணியவான்கள் என்று கூறி திரு.ராகவேந்திரா, திரு.ஜி.கிருஷ்ணா, திரு. சிவாஜி செந்தில் ஆகியோர் பெயர்களையும் கூறியிருந்தேன். அதில் ஒரு பெயர் விட்டுப் போய் விட்டது. அவர்.. திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்கள்.(என்ன வாசு சார், எதிரணியில் நமக்கு நல்ல பெயர் உண்டு என்று இனி நீங்களாகவே நினைத்துக் கொள்ள வேண்டாம். நிஜமாகவே உங்களுக்கு இங்கு நல்ல பெயர் உண்டு. நீங்கள் மட்டுமல்ல, அடிப்படையில் எல்லாருமே நல்லவர்கள்தான், ராட்சச ரசிகர்கள் உட்பட) பண்பாளர்கள், கண்ணியவான்கள் பட்டியலில் உங்கள் பெயர்களை பயன்படுத்தியதற்காக எதிர்ப்பு தெரிவிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எதிர்ப்பு தெரிவித்தால் அப்படி சொன்னதற்காக மன்னிப்பு கோர தயாராக இருக்கிறேன்..... என்று எச்சரிக்கிறேன்.
-
10th October 2014, 05:11 PM
#877
Junior Member
Seasoned Hubber
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி.சார், திரு.செல்வகுமார் சார், திரு.எஸ்.வி.சார் போட்டிருந்த ஆவணப் பதிவுகள் அட்டகாசம். கோவை தலைவரின் கொடி பறக்கும் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது படங்கள் திரையீடுகளை தெரிவிக்கும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். களேபரத்தில் சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு வரவேற்பு கூறவும் மறந்ததுடன், எங்கள் தங்கள் திரைப்படம் பற்றிய எனது கருத்துக்களை கூறக் கூட நேரமில்லாமல் போய் விட்டது. திரு.முத்தையன் அம்மு அவர்களை திரிக்கு வரவேற்று தலைவரின் புகழ்பாட வாழ்த்துகிறேன்.
‘கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது தர்மம் வெளியேறலாம்’ என்று உரிமைக்குரல் படத்தில் தலைவர் பாடியதுபோல கண்ணை மறைத்ததால் திமுகவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நாள் இன்று. ‘தர்மம் அரசாளும் தருணம் வரும்போது தவறு வெளியேறலாம்’ என்பதையும் நிரூபித்தவர் தலைவர்.
*எங்கள் தங்கம் படத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு சிறப்புகள் உண்டு. தலைவராகவே அவர் வரும் இரண்டு படங்களில் இது ஒன்று. (மற்றொன்று தேர்த்திருவிழா)
*அண்ணாவிடம் இருந்து தலைவர் பரிசு பெறுவது போன்ற காட்சி இந்தப் படத்தில் மட்டுமே உண்டு.
* திரு.எஸ்.வி.சார், சகோதரர் யுகேஷ்பாபு ஆகியோர் கூறியதுபோன்று மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தையும் திரு. மு.கருணாநிதி குடும்பத்தையும் இப்படத்தில் இலவசமாக நடித்ததன் மூலம் கடனில் இருந்து மீட்டவர் தலைவர்.
*திரு.முரசொலி மாறன் நடித்த ஒரே படம். சிறுசேமிப்புத்துறை தலைவராக தலைவர் வரும் காட்சியில் அவர் அருகில் அமர்ந்திருப்பார். (அவரது கல்லூரிப் படிப்புக்கு பணம் கொடுத்தது தலைவர்தான் என்பது உபரித் தகவல்)
*அதிலும் கதாகாலட்சேப காட்சி. வழக்கமாக மொட்டை அடித்ததுபோல மேக்கப் போட்டிருப்பவர்களுக்கு தலையை சுற்றி paste செய்தது தெரியும். ஆனால், இதில் தலைவருக்கு கச்சிதமாக மேக்கப் போடப்பட்டிருக்கும். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் தலைவர் நடித்திருப்பார்.
* திரைப்படங்களில் பல கதாகாலட்சேப காட்சிகள் இடம் பெற்றதுண்டு. நல்ல தம்பி படத்தில் கலைவாணர், தெய்வப்பிறவியில் தங்கவேலு, அன்னபூரணியில் சோ போன்றவர்கள் அந்தக் காட்சிகளில் நடித்துள்ளனர். கலைவாணரைத் தவிர்த்துப் பார்த்தால் (முழு காலட்சேபமும் அவரே)மற்ற படங்களில் நடிக்கும் நடிகர்கள், இடையே வரும் பாடல்களைத் தவிர வசனங்களைத் தாங்களே பேசியிருப்பார்கள். ஆனால், தலைவருக்கு மட்டுமே பாடல்களோடு வசனங்களுக்கும் டி.எம்.எஸ். குரல் கொடுத்திருப்பார்.
பாடல் காட்சிகளுக்கு இசையோடு வரும் வார்த்தைகள் இழுவையாக இருக்கும் என்பதால் அதற்கு வாயசைப்பது கூட சற்று சுலபம். ஆனால், அடுத்தவர் பேசும் வசனத்துக்கு அந்த டைமிங்கில் வாயசைப்பது கடினம். (ஒருவரை பேசவிட்டு காட்சி எடுத்து பின்னர், திரையில் அவரது பேச்சுக்கேற்ப ஒலிப்பதிவு கூடத்தில் மற்றவர்கள் டப்பிங் கொடுப்பது வேறு. ஆனால் இதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டி.எம்.எஸ்.சின் வசனங்கள்) அதற்கேற்ப தலைவர் அசால்டாக பேசி நடித்திருப்பார். இத்தனைக்கும் நீண்ட ஷாட்டுகள் வேறு.
* நான் அளவோடு ரசிப்பவன் பாடலின் முதல் வரியை எழுதிய வாலி மேற்கொண்டு என்ன போடுவது என்று யோசித்து கொண்டிருந்தபோது, ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என்று எடுத்துக் கொடுத்தவர் திரு.மு.கருணாநிதி. இதை புரட்சித் தலைவரிடம் வாலி கூறியதும், பதிலுக்கு அவரை (கருணாநிதியை) பாராட்டுவது போல பாடலை அமைக்குமாறு தலைவர் வாலியை கேட்டுக் கொள்ள.... ‘நான் செத்துப் பிழைச்சவன்டா’ பாடலில் ‘ஓடும் ரயிலை இடைமறித்து....’ வரிகள் இடம் பெற்றன. இதை வாலியே பலமுறை கூறியிருக்கிறார்.
*ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் பாடலில் தலைவரின் மேக்கப் வித்தியாசமானது. தனக்கு ஆடத் தெரியாதது போலவே ஜெயலலிதாவுடன் அவர் போடும் ஸ்டெப்ஸ் அசத்தல். அந்தப் பாடலில், கத்திச் சண்டை, குத்துச் சண்டை, கம்புச் சண்டை, வம்புச் சண்டை என்ற இந்த வார்த்தைகள் 4 விநாடிகளுக்குள்தான் வரும். அந்த 4 விநாடிகளுக்குள் அந்தந்த சண்டைக்கேற்ற அபிநயங்களை காட்டும் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர் தலைவர் மட்டுமே. தொடர்வோம்...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
10th October 2014, 05:18 PM
#878
Junior Member
Veteran Hubber
சின்ன எம். ஜி. ஆர். என்றழைக்கப்பட்ட மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் "திரை உலகம்" இதழுக்காக அளித்த பிரத்தியோக பேட்டி :

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 10th October 2014 at 05:21 PM.
-
10th October 2014, 05:27 PM
#879
Junior Member
Veteran Hubber
அருமையான பதிவு திரு கலியபெருமாள் சார்

Originally Posted by
kaliaperumal vinayagam
எம்ஜிஆரிடம் உள்ள தனி சிறப்பு அவர் ஏற்படுத்திய வசூல் சாதனைகளை அவரே வென்று காட்டியதுதான்....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
10th October 2014, 05:27 PM
#880
Junior Member
Veteran Hubber
பொன்மனசெம்மலைப் போற்றி நடிகை சி. ஐ. டி. சகுந்தலா அவர்கள், "திரை உலகம்" இதழுக்காக அளித்த பேட்டி 
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Bookmarks