-
10th October 2014, 06:00 PM
#891
Junior Member
Veteran Hubber
நல்ல விளக்கம் திரு கலைவேந்தன் சார்
அருமையாக உள்ளது
நன்றி சார்

Originally Posted by
KALAIVENTHAN
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி.சார், திரு.செல்வகுமார் சார், திரு.எஸ்.வி.சார் போட்டிருந்த ஆவணப் பதிவுகள் அட்டகாசம். கோவை தலைவரின் கொடி பறக்கும் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது படங்கள் திரையீடுகளை தெரிவிக்கும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். களேபரத்தில் சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு வரவேற்பு கூறவும் மறந்ததுடன், எங்கள் தங்கள் திரைப்படம் பற்றிய எனது கருத்துக்களை கூறக் கூட நேரமில்லாமல் போய் விட்டது. திரு.முத்தையன் அம்மு அவர்களை திரிக்கு வரவேற்று தலைவரின் புகழ்பாட வாழ்த்துகிறேன்.
‘கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது தர்மம் வெளியேறலாம்’ என்று உரிமைக்குரல் படத்தில் தலைவர் பாடியதுபோல கண்ணை மறைத்ததால் திமுகவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நாள் இன்று. ‘தர்மம் அரசாளும் தருணம் வரும்போது தவறு வெளியேறலாம்’ என்பதையும் நிரூபித்தவர் தலைவர்.
*எங்கள் தங்கம் படத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு சிறப்புகள் உண்டு. தலைவராகவே அவர் வரும் இரண்டு படங்களில் இது ஒன்று. (மற்றொன்று தேர்த்திருவிழா)
*அண்ணாவிடம் இருந்து தலைவர் பரிசு பெறுவது போன்ற காட்சி இந்தப் படத்தில் மட்டுமே உண்டு.
* திரு.எஸ்.வி.சார், சகோதரர் யுகேஷ்பாபு ஆகியோர் கூறியதுபோன்று மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தையும் திரு. மு.கருணாநிதி குடும்பத்தையும் இப்படத்தில் இலவசமாக நடித்ததன் மூலம் கடனில் இருந்து மீட்டவர் தலைவர்.
*திரு.முரசொலி மாறன் நடித்த ஒரே படம். சிறுசேமிப்புத்துறை தலைவராக தலைவர் வரும் காட்சியில் அவர் அருகில் அமர்ந்திருப்பார். (அவரது கல்லூரிப் படிப்புக்கு பணம் கொடுத்தது தலைவர்தான் என்பது உபரித் தகவல்)
*அதிலும் கதாகாலட்சேப காட்சி. வழக்கமாக மொட்டை அடித்ததுபோல மேக்கப் போட்டிருப்பவர்களுக்கு தலையை சுற்றி paste செய்தது தெரியும். ஆனால், இதில் தலைவருக்கு கச்சிதமாக மேக்கப் போடப்பட்டிருக்கும். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் தலைவர் நடித்திருப்பார்.
* திரைப்படங்களில் பல கதாகாலட்சேப காட்சிகள் இடம் பெற்றதுண்டு. நல்ல தம்பி படத்தில் கலைவாணர், தெய்வப்பிறவியில் தங்கவேலு, அன்னபூரணியில் சோ போன்றவர்கள் அந்தக் காட்சிகளில் நடித்துள்ளனர். கலைவாணரைத் தவிர்த்துப் பார்த்தால் (முழு காலட்சேபமும் அவரே)மற்ற படங்களில் நடிக்கும் நடிகர்கள், இடையே வரும் பாடல்களைத் தவிர வசனங்களைத் தாங்களே பேசியிருப்பார்கள். ஆனால், தலைவருக்கு மட்டுமே பாடல்களோடு வசனங்களுக்கும் டி.எம்.எஸ். குரல் கொடுத்திருப்பார்.
பாடல் காட்சிகளுக்கு இசையோடு வரும் வார்த்தைகள் இழுவையாக இருக்கும் என்பதால் அதற்கு வாயசைப்பது கூட சற்று சுலபம். ஆனால், அடுத்தவர் பேசும் வசனத்துக்கு அந்த டைமிங்கில் வாயசைப்பது கடினம். (ஒருவரை பேசவிட்டு காட்சி எடுத்து பின்னர், திரையில் அவரது பேச்சுக்கேற்ப ஒலிப்பதிவு கூடத்தில் மற்றவர்கள் டப்பிங் கொடுப்பது வேறு. ஆனால் இதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டி.எம்.எஸ்.சின் வசனங்கள்) அதற்கேற்ப தலைவர் அசால்டாக பேசி நடித்திருப்பார். இத்தனைக்கும் நீண்ட ஷாட்டுகள் வேறு.
* நான் அளவோடு ரசிப்பவன் பாடலின் முதல் வரியை எழுதிய வாலி மேற்கொண்டு என்ன போடுவது என்று யோசித்து கொண்டிருந்தபோது, ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என்று எடுத்துக் கொடுத்தவர் திரு.மு.கருணாநிதி. இதை புரட்சித் தலைவரிடம் வாலி கூறியதும், பதிலுக்கு அவரை (கருணாநிதியை) பாராட்டுவது போல பாடலை அமைக்குமாறு தலைவர் வாலியை கேட்டுக் கொள்ள.... ‘நான் செத்துப் பிழைச்சவன்டா’ பாடலில் ‘ஓடும் ரயிலை இடைமறித்து....’ வரிகள் இடம் பெற்றன. இதை வாலியே பலமுறை கூறியிருக்கிறார்.
*ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் பாடலில் தலைவரின் மேக்கப் வித்தியாசமானது. தனக்கு ஆடத் தெரியாதது போலவே ஜெயலலிதாவுடன் அவர் போடும் ஸ்டெப்ஸ் அசத்தல். அந்தப் பாடலில், கத்திச் சண்டை, குத்துச் சண்டை, கம்புச் சண்டை, வம்புச் சண்டை என்ற இந்த வார்த்தைகள் 4 விநாடிகளுக்குள்தான் வரும். அந்த 4 விநாடிகளுக்குள் அந்தந்த சண்டைக்கேற்ற அபிநயங்களை காட்டும் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர் தலைவர் மட்டுமே. தொடர்வோம்...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
10th October 2014 06:00 PM
# ADS
Circuit advertisement
-
10th October 2014, 06:04 PM
#892
Junior Member
Veteran Hubber
நிச்சயமாக மிக பெரிய கெட்டதில்,மிக மிக பெரியது கிடைத்தது நமக்கு
நன்றி திரு யுகேஷ் சார்

Originally Posted by
Yukesh Babu
கருணாநிதிக்கு நன்றி
11.10.1972 நமது புரட்சி நடிகர் திமுக வில் இருந்து வெளியேற்றப்பட்டார் கருணாநிதியால் , அன்று மட்டும் தலைவரை அவர் வெளியேற்றமால் இருந்து இருந்தால் நமது தமிழகம் பத்தாண்டு பொற்கால ஆட்சி தனை இழந்து இருக்கும் . நாம் எல்லோரும் ஒரு சிறந்த முதல்வரை இழந்து இருப்போம் ,
எல்லாவற்றிக்கும் மேலாக அ இ அ தி மு க என்ற மாபெரும் மக்கள் கட்சி இந்த உலகத்திற்கு வராமல் போயி இருக்கும். இப்படி பட்ட பெருமைகளை கொடுத்த கருணாநிதிக்கு நன்றி சொல்வோம் .
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2014, 06:05 PM
#893
Junior Member
Veteran Hubber
திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் பதிவிட்ட கோவை திரையரங்க செய்திகள் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
திரு. வினோத் அவர்களின் ஜெட் வேகப்பதிவுகள் வியப்பில் ஆழ்த்துகிறது.
திரு. கலியபெருமாள் அவர்களின் வித்தியாசமான பதிவுகள் விறுவிறுப்பானவை.
மக்கள் திலகம் படங்களின் பழைய வரலாற்று சாதனைகளை தொடர்ந்து பதிவிடும் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள் பாராட்டுக்குரியவர்.
திரு. கலைவேந்தன் அவர்களின் நச்சான பதிவுகள் மிகவும் அமர்க்களம்.
இதர சகோதரர்கள் அவ்வப்போது பதிவிடும் பதிவுகள் பளிச் !
புதிய வரவுகளான முத்தையன் அம்மு. சந்திரசேகர் ஆகியோரின் பதிவுகள் அதிகமான அளவில் இருக்க வேண்டும் என்பது என் ஆவல்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
10th October 2014, 06:16 PM
#894
Junior Member
Veteran Hubber

Courtesy: Suriyan Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
Last edited by kaliaperumal vinayagam; 10th October 2014 at 06:19 PM.
-
10th October 2014, 06:17 PM
#895
Junior Member
Diamond Hubber
-
10th October 2014, 06:20 PM
#896
Junior Member
Diamond Hubber
-
10th October 2014, 06:23 PM
#897
Junior Member
Diamond Hubber
-
10th October 2014, 06:24 PM
#898
Junior Member
Diamond Hubber
-
10th October 2014, 06:25 PM
#899
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
From the world records, M.G.R. Was the First actor to become the Chief minister of a State.
-
10th October 2014, 06:26 PM
#900
Junior Member
Diamond Hubber
Bookmarks