-
11th October 2014, 11:46 AM
#931
Junior Member
Platinum Hubber

Originally Posted by
MGR Roop
From which magazine you are posting Vinod sir.
Roop Sir
I got it from ''sama needhi '' and ''Mandram '' old magazines.
-
11th October 2014 11:46 AM
# ADS
Circuit advertisement
-
11th October 2014, 12:32 PM
#932
Junior Member
Newbie Hubber
-
11th October 2014, 12:37 PM
#933
Junior Member
Newbie Hubber
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கே பீ ராமகிருஷ்ணன் அவர்கள் இடம் பெட்ர காட்சி தொகுப்பு
-
11th October 2014, 01:04 PM
#934
Junior Member
Platinum Hubber
OLD POSTER - KOVAI - GANGA 1996
-
11th October 2014, 02:20 PM
#935
Junior Member
Diamond Hubber
ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பிறகு, அவர் மகன் எம்.எஸ்.காசி, படத்தொழிலில் இறங்கினார். ஸ்ரீதர் டைரக்ஷனில் "நெஞ்சம் மறப்பதில்லை'' படத்தைத் தயாரித்தார். காசி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் "பி.எஸ்.சி'' முதல் ஆண்டு படித்து வந்தபோது, தந்தை சோமுவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், தனக்கு உதவியாக மகன் காசியை படத்தொழிலில் இறக்கினார். 1959ம் ஆண்டு "தங்கப்பதுமை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை காசி கவனித்தார்.
இதன்பின் எம்.ஜி.ஆர். நடித்த "அரசிளங்குமரி'' தயாரிக்கப்பட்டு வந்தபோது, சோமு மரணம் அடைந்தார். இதனால், அந்தப்படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பை காசி ஏற்றார்.
இந்த அனுபவம் பற்றி காசி கூறியதாவது:
"மாணவ பருவத்திலேயே, ஜுபிடர் படங்களின் படப்பிடிப்பை பார்த்திருக்கிறேன். எனவே, சின்ன வயதிலேயே எனக்கு சினிமா பற்றி ஓரளவு தெரியும்.
என் தந்தை உடல் நலம் குன்றியதால், நான் படத்தொழிலுக்கு வந்தேன். படத்தயாரிப்பின் நுட்ங்கள் பற்றி, எனக்கு என் தந்தை பயிற்சி அளித்தார்.
"அரசிளங்குமரி'' தயாராகி வந்தபோது என் தந்தை காலமாகிவிட்டதால், அந்தப் படத்தை முடிக்க எம்.ஜி.ஆர். செய்த உதவி மறக்க முடியாதது. கிட்டத்தட்ட பாதி படத்தை அவர்தான் டைரக்ட் செய்தார் என்று கூறவேண்டும்.
ஒரு காரியத்தை எடுத்தால், அதை முடிக்கும் வரை சாப்பாடு, தூக்கம் எதைப்பற்றியும் எம்.ஜி.ஆர். நினைக்கமாட்டார். "எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்க வேண்டும்'' என்பதே அவர் கொள்கை. அவரிடமிருந்து நான் கற்ற முக்கிய பாடம் இது.''
இவ்வாறு காசி கூறினார்.
"அரசிளங்குமரி'' படத்திற்குப் பிறகு, ஜுபிடர் பிக்சர்ஸ் பேனரில் படம் எதுவும் தயாரிக்கப்படவில்லை.
-
11th October 2014, 02:31 PM
#936
Junior Member
Diamond Hubber
கலைவாணர் ஒரு புரியாத புதிர்!
1966 ம் ஆண்டு ஆனந்த விகடனில் என்.எஸ்.கே. பற்றி எம்.ஜி.ஆர்.எழுதியது...
கலைவாணர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தார்..., அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ''ராமச்சந்திரனைப் பார்க்கணும்...அவனை வரச் சொல்லுங்கள்'' என்றாராம். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார்.
''யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது'' என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால், உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் ...எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன்.
பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ''ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா?
பல பேர் வர்றாங்க. வந்து, பார்த்துட்டுப் போறாங்க. பத்திரிகைக்காரங்க, 'அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடுறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கிற செய்திதான் வெளியே தெரியும்.
எனக்காக நீ செய்துவருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறா நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச் சொன்னேன்'' என்றார்.
என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்து கொள்ள முடியும்?
அவர் தனக்காகவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது? எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!
# எம்.ஜி.ஆரின் இந்த பேட்டியைப் படித்தபோது எனக்கு எம்.ஜி.ஆரின் ஒரு பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது...
ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா!
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா! அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா!
-
11th October 2014, 02:32 PM
#937
Junior Member
Diamond Hubber
-
11th October 2014, 02:33 PM
#938
Junior Member
Diamond Hubber
-
11th October 2014, 02:35 PM
#939
Junior Member
Diamond Hubber
super answer given by tamilaruvi about makkalthilagam natural acting and fight scenes

Originally Posted by
ravichandrran
-
11th October 2014, 02:42 PM
#940
Junior Member
Diamond Hubber
கோடம்பாக்கம் மேம்பாலம் கட்டாத காலத்தில் அந்த பக்கம் கார் போனாலே அது சினிமாக்காரனின் கார்தான் என்று சொல்வார்கள்.
ஒரு நாள் அந்தப் பக்கம் வந்த காரை வழி மறித்து பிச்சை கேட்ட கிழவிக்கு , காரின் உள்ளிருந்த ஒரு கை ஐந்து ரூபாய் பிச்சை போடுகிறது. அந்த கிழவி கருணை முகத்துடன் ..."எம்.ஜி.ஆர். நல்லாயிருக்கணும்...''னு வானத்தை நோக்கி பிரார்த்தித்தாராம் .... ஆனால் ஐந்து ரூபாய் பிச்சை போட்டவர் எஸ்.எஸ்.ஆர்.
இந்த சுவாரஸ்யமான தகவலை சொன்னவர் இயக்குனர் நடிகர் ஆர்.சுந்தரராஜன் ...
சரி ..இன்னைக்கு எல்லோரும் வாத்தியார் தின வாழ்த்து சொல்லிட்டாங்க...
வாத்தியார்களைப் பத்தி ஸ்டேடஸ்சும் போட்டுட்டாங்க...
நாமளும் வாத்தியார் பத்தி ஸ்டேடஸ் போட்டுட்டோம்...
..அதாங்க ..எம்.ஜி.ஆர். னாலே வாத்தியார்தானே...!!!
Bookmarks