Page 95 of 400 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #941
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை முத்து ” அப்படின்னு இப்போ கூகிளில் தேடினால் "கலக்கப் போவது யாரு ?" முத்துவைத்தான்
    அது காட்டுகிறது ...
    ஆனால் 1970 களில் தமிழ் நாட்டையே கலக்கு கலக்குன்னு கலக்கிய ஒரு மதுரை முத்துவை நம்மில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை...
    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியான சமயத்தில் ,அந்தப் படத்தை வெளியிடாமல் தடுக்க அப்போதைய தி.மு.க.அரசு ...அசுர முயற்சி எடுத்தது....
    அந்த சமயத்தில் தி.மு.கவின் மதுரை சாம்ராஜ்யம் முழுக்க அப்போதைய மதுரை மேயர் “ மதுரை முத்து ” என்பவரின் கைகளில்தான் இருந்தது...

    மதுரை முத்து பகிரங்கமாக ஒரு சவால் விட்டார்...
    “எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளிவராது...
    வரவும் விடமாட்டேன்...
    அப்படி, படம் ரிலீஸ் ஆகி விட்டால் , நான் சேலை கட்டிக் கொள்கிறேன்...'”...
    இப்படி பகிரங்க சவால் விட்டு பதட்டத்தை உண்டாக்கினார் இந்த மதுரை முத்து....
    ஆனால் எம்.ஜி.ஆரின் சமயோசித மூளையினால் ...சாமர்த்திய வேலைகளால் .... உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி பெரும் வெற்றியும் பெற்றது...
    சவால் விட்ட மதுரை முத்துவுக்கு, சேலைகள் ஏராளமாக வந்து குவிந்தனவாம்......

    சில காலம் பின் கருணாநிதியோடு மதுரை முத்துவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட ..ஏகப்பட்ட தயக்கத்துக்குப் பின் ...எம்.ஜி.ஆருடன் வந்து இணைந்தார் மதுரை முத்து....!!!
    அன்றைய மாலை பொதுக்கூட்டத்திலேயே , கருணாநிதியை கடுமையாக தாக்கிப் பேசினாராம் மதுரை முத்து....
    அந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும் போது, 'வருங்கால மேயர்.. அண்ணன் முத்து அவர்களே...' என்று அழைத்ததோடு ...மதுரை மேயர் பதவியையும் வழங்கி, கவுரவித்தாராம் ...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #942
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "சில மன்னிப்புகள் கூட
    ஒருவகையில் தண்டனைதான்..! "..-நான் ரசித்த உண்மை இது...

    எம்.ஜி.ஆர். முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோது மதுவிலக்கை கடுமையாக அமல் படுத்தினார் ...
    இதுபற்றி ' கண்ணதாசன் ' பத்திரிகையில் ஒரு கேள்வி :

    "ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆணையிட்டிருக்கிறாரே..?"
    கண்ணதாசன் பதில் :
    "ஆண்டவனே வந்து கேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன் . உங்கள் எம்.ஜி.ஆரிடம் இன்னொரு சட்டம் போட சொல்லுங்கள் ...ஒரு காதலிக்கு மேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள் "

    யுத்தம் தொடர்ந்தது...
    கடைசியில் எம்.ஜி.ஆர்.கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக நியமித்தார் . உடனே கண்ணதாசன் சொன்னார்...
    " எம்.ஜி.ஆருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் ,
    கடைசியாக தோற்று விட்டேன் "


    courtesy facebook

  4. #943
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ன்பிருந்தால், ஆண்மையும் தாய்மையடையும்" - இதை அன்றே நிரூபித்தவர் அன்னை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர்...!

    இதோ ...எம்.ஜி.ஆருடன் கதாசிரியர் ஆரூர்தாசுக்கு ஏற்பட்ட அன்பு அனுபவங்கள்...ஆரூர்தாசின் வார்த்தைகளில்...

    "எம்.ஜி.ஆரின் ஒப்பனைஅறைக்குள் நுழைந்தேன்.சுழல் நாற்காலியில் அமர்ந்து மேக்-அப் போட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். , எதிர்க்கண்ணாடியில் என்னைப்பார்த்து திடுக்கிட்டுத் திரும்பி என் முகத்தைக் கையால் பிடித்துக்கொண்டு கண்களைக் கவனித்து ...
    எ ம்.ஜி.ஆர் : "என்ன, கண் இப்படி ரத்தக் கோளமா இருக்கு... சிவாஜி பிலிம்ஸ் படம் ராத்திரியில கண்ணு முழிச்சி எழுதுறீங்களா?"
    நான்: "ஆமாண்ணே."
    எம்.ஜி.ஆர்:- "சரி. என் குடும்ப டாக்டர் வி.ஆர்.எஸ்.கிட்டே போறீங்களா? போன் பண்ணி சொல்லட்டுமா?"
    நான்:- "வேண்டாண்ணே....எனக்கு அப்படி ஒண்ணும் இல்லே. நல்லாத்தான் இருக்கேன். தூக்கம் இல்லே. அவ்வளவுதான். தூங்கினா சரியா போயிடும். "

    மதிய வேளை வழக்கம்போல் மேக்-அப் அறையில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து சாப்பிட்டேன். "குழம்பைக் குறைச்சிக்கிட்டு நிறைய தயிர் போட்டுக்குங்க. தினமும் காபி, டீக்குப் பதிலா மோர் நிறைய குடிங்க. கெட்டித்தயிர்ல சர்க்கரை கலந்து சாப்பிடுங்க. இளநீர் குடிங்க. உஷ்ணம் குறைஞ்சிடும்.."
    "சரிண்ணே.."
    சாப்பிட்டு முடித்ததும் எம்.ஜி.ஆர். வழக்கம்போல் ’பாக்கெட் ரேடியோ’வில் மாநிலச் செய்திகள்கேட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தார். நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.
    வயிறார சாப்பிட்டது! ஏற்கனவே இருந்த களைப்பு! இரண்டுமாகச் சேர்ந்து என் கண்களைச் சொக்கிச் சுழல வைத்தன. அதை மட்டுந்தான் நான் உணர்ந்தேன். பின்னர் உணர்விழந்தேன்....
    எவ்வளவு நேரம் என்று தெரியாத நிலையில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன். இப்பொழுது என் தலை எம்.ஜி.ஆரின் மடி மீது இருந்தது!
    மிரள மிரள விழித்தபடி "அண்ணே.." என்றேன். ஏதோ கனவு கண்டதுபோல...
    எம்.ஜி.ஆர். என் முதுகைத்தடவியபடி சொன்னார் :

    "தூக்கத்திலே அப்படியே சோபாவுலே சரிஞ்சி விழுந்து ஒரு பக்கமா சாஞ்சிட்டிங்க. தலை தொங்குச்சி. சுளுக்கிக்கும் இல்லியா? அதனால ஒங்க தலையை என் மடியிலே வச்சிக்கிட்டேன். அதுகூட தெரியாத அளவுக்கு அடிச்சிப்போட்டதுபோல ஆயிட்டிங்க. பரவாயில்லே. இன்னும் நேரம் இருக்கு. அப்படியே என் மடியில படுத்து தூங்குங்க..."

    ஆரூர்தாசின் இந்த அனுபவங்களைப் படிக்கும்போது , எம்.ஜி.ஆர். இப்போது இல்லையே ..என்ற ஏக்கம் , எவருக்குமே ஏற்படுவது இயற்கை..!

    எங்கோ படித்தது...என் நினைவுக்கு வருகிறது...

    "நம் அன்புக்கும் ,அபிமானத்துக்கும் உரியவர்கள்
    நாம் வாழும் காலத்திலேயே நம் கண் முன் இறப்பதுதான்
    இயற்கை நமக்குத் தரும் மிகப் பெரிய சாபம்"


    courtesy net

  5. #944
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    PESUM PADAM -1971


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 11th October 2014 at 04:14 PM.

  6. #945
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம்..//
    சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்.. என்ற அரைப்பக்க விளம்பரம் பிரசுரமான அதே நாளில்,
    "எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்" என்ற அரைப்பக்க விளம்பரம் வேறு பக்கத்தில் பிரசுரமாகியது! இந்தப் படத்தை "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" தயாரிக்கப் போவதாகவும் அந்த விளம்பரம் கூறியது. அதாவது எம்.ஜி.ஆரின் சொந்தப்படம்!
    இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தனர். திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "சிவாஜி, எம்.ஜி.ஆர். இடையே பெரும் மோதல் உருவாகி விட்டது" என்று எல்லோரும் நினைத்தனர். ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டிருந்த நேரம் அது.
    இந்த விவகாரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட்டார். எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, "நீங்கள் ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தை தயாரித்து வருகிறீர்கள். அதில் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். சிவாஜி கணேசன் வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளை. உத்தமபுத்திரனை சிவாஜிக்கு விட்டுக்கொடுங்கள்" என்று கூறினார்.
    கலைவாணரிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் எம்.ஜி.ஆர். கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். எனவே, போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
    [நன்றி :மாலைமலர்]

  7. #946
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் தனக்கென்று சில இமேஜ்களை எப்போதும் வைத்திருந்தார்...!
    "யாதோன் கி பாரத்" ஹிந்திப் படத்தில் ஒரு காட்சியில் ,
    கதாநாயகி கோபித்துக் கொண்டு போக ,
    கதாநாயகன் அவள் பின்னே ஓடி ...[ஓ மேரி சோனி..]ஆடிப்பாடி ..சமாதானம் செய்வார்...
    அதே "யாதோன் கி பாரத்" தமிழில் "நாளை நமதே" ஆனபோது...அதே காட்சியில் நேர்மாறாக ..கதாநாயகன் கோபித்துக் கொண்டு போக ,கதாநாயகி , நாயகனின் பின்னே ஓடி ஆடிப் பாடி [காதல் என்பது காவியமானால் ..]கெஞ்சிக் கூத்தாடுவார்...
    நாடே அவர் பின்னால் போனபோது
    நாயகிகள் மட்டும் போகாமலிருக்க முடியுமா..?

  8. #947
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தி.நகரில் ஒரு ரெஸ்டாரண்டில் மாலை நேர அரையிருளில் அமர்ந்து நண்பன் ரவியோடு உணவு அருந்திக் கொண்டிருந்தேன்..எதிர்மேஜையில் ... அட..கவிஞர் முத்துலிங்கம்...நண்பன் ரவி ஆர்வமானான்...
    " ஜான்....பிளீஸ்..அவர்கிட்ட கொஞ்சம் பேசுவோமே..."
    கவிஞர் முத்துலிங்கம் அருகில் நாங்கள் அமர இடம் இல்லை...எங்கள் அருகே நிறைய இடம் இருந்தது...நான் கவிஞர் அருகே சென்று ,சற்று தயக்கத்துடன் கேட்க அவர் தயக்கமின்றி உடனே எங்களுடன் வந்து அமர்ந்தார்...நான் உண்மையை ஒத்துக் கொண்டேன்.."ஐயா ..உங்களை எங்களுக்குத் தெரியும்..ஆனா ..உங்க பாட்டெல்லாம் அவ்வளவா தெரியாது.."
    "பரவாயில்லை "என்ற முத்துலிங்கம் அவர்கள் ,தாம் எழுதிய சில பாடல்களை நினைவுபடுத்தி சொன்னார்...
    "மணி ஓசை கேட்டு எழுந்து(பயணங்கள் முடிவதில்லை)..ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ(பயணங்கள் முடிவதில்லை)..சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் (உதய கீதம்).."
    அவர் பாடல்களை சொல்ல சொல்ல நண்பன் ரவி உற்சாகமானான்...ஒரு புதிய நூறு ரூபாய் நோட்டை எடுத்து .."சார்...இதில உங்க கையெழுத்து வேணும்.."என்று கவிஞரிடம் நீட்ட ,அவர் தடுத்து..இன்னும் சில தன் பாடல்களை சொன்னார்..
    "சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே (முந்தானை முடிச்சு)
    ஆறும் அது ஆழமில்லை (முதல் வசந்தம்) .. செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா (செந்தூரப்பூவே).."
    நண்பன் ரவி உணர்ச்சிவசப்பட்டு மேலும் உற்சாகமாகி ,இப்போது ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து,மறுபடியும் கையெழுத்து கேட்க ,முத்துலிங்கம் இப்போதும் மறுத்து இன்னும் தன் பாடல்களை தொடர்ந்தார்....
    "இதயம் போகுதே எனையே பிரிந்தே (புதிய வார்ப்புகள்).. டாடி டாடி ஓ மை டாடி (மவுன கீதங்கள்)... .தேவன் கோயில் தீபம் ஒன்று (நான் பாடும் பாடல்)...பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் (ஊருக்கு உழைப்பவன்)...மாஞ்சோலை கிளிதானோ (கிழக்கே போகும் ரயில் ).."..இப்போது நண்பன் ரவி எல்லை கடந்த உற்சாகத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அதில் கையெழுத்து இடச் சொன்னான்..கவிஞர் முத்துலிங்கம் அமைதியாக சொன்னார்..."நண்பரே..எம்ஜியார் எனக்கு அன்பை கொடுத்ததோடு ... சில பதவிகளும் கொடுத்து அழகு பார்த்தவர்..நான் முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.அதனால் சொல்கிறேன்..சட்டப்படி ரூபாய் நோட்டில் கையெழுத்து போடக் கூடாது ...ஒரு துண்டுக் காகிதம் கொடுங்கள்.."....கொடுத்தோம்...அவர் எழுதிய பாடலையே எழுதி கையெழுத்து இட்டுக் கொடுத்தார்..."அன்புக்கு நான் அடிமை ..தமிழ் பண்புக்கு நான் அடிமை.."
    ரூபாய் நோட்டின் மதிப்பு மட்டும் அல்ல...கவிஞர் முத்துலிங்கத்தின் மதிப்பும் எங்களுக்கு முழுமையாக தெரிந்தது....
    அன்புக்கு நாங்களும் அடிமை...!

  9. #948
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. #949
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    courtesy dinamalar

  11. #950
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. the “Heart fruit of Arignar Anna”. [Tamil Speech.S.V.Ramani.]
    அனைத்து நெறிகளிலும்,வழிகளிலும் அண்ணா என்ற அற்புத நிலையை “அண்ணாவின் இதயக்கனி” புரட்சித் தலைவர் உருவாக்கினார்.

    In 1972, DMK leader Karunanithi started to project his first son in a big way in film industry and also in politics. Understanding the tactics played by Karunanithi to corner him, MGR started to claim that corruption had grown within the party after the demise of Annadurai and in a public meeting asked for the financial details of the party to be publicised which enraged the leadership of DMK. Consequently, as expected, MGR was expelled from the party, and floated a new party named Anna Dravida Munnetra Kazhagam (ADMK), later renamed All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), the only powerful opponent of the DMK.He mobilized the period between 1972-1977 to spread and preach his party ambition with films like Netru Indru Naalai(1974), Idhayakani(1975) etc..,.


    He became Chief Minister of Tamil Nadu on the 30th of July 1977, remaining in office till his death in 1987. The AIADMK won every state assembly election as long as MGR was alive. Although Anna Durai as well as Karunanidhi had acted in stage plays in trivial roles, in their younger days, before becoming chief minister, MGR was the first popular film actor to be a Chief Minister in India.Though the Congress won by a small margin of votes with the DMK in the 1980 parliamentary elections, the AIADMK under MGR won the state elections the same year. This made the Congress to ally with the AIADMK in the 1984 elections.


    Once he became Chief Minister of Tamil Nadu, he placed great emphasis on social development, especially education. One of his most successful policies was the introduction of the “Mid-day Meal Scheme” introduced by the popular Congress Chief Minister and Kingmaker K Kamaraj to a nutritious Mid-day Meal Scheme in the Government-run and aided schools in Tamil Nadu. He also introduced Women’s Special buses.


    He introduced Liquor ban in the state and Preservation of old temples and historical monuments, ultimately increasing the state’s tourist income. He set up a free school for the Cinema Technicians children in Kodambakkam called MGR Primary & Higher Secondary School which provided Free Mid-Day meals in the 1950s. He led the ADMK to victory in the 1984 assembly elections despite not taking part in the campaigning. At that time he was undergoing medical treatment in America and his images were broadcast in Tamil Nadu through cinema halls. This was an effective campaign and ADMK won the elections, indicating the depth of his popular support.


    He won the election in a double landslide victory in 1984.He still holds the record of being the chief minister with the highest consistent longevity of more than a decade.MGR in every way of his rule followed Arignar Anna and established that he was the Heart Fruit [Idhayakkani] of Arignar Anna.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •