-
12th October 2014, 01:09 PM
#111
Junior Member
Veteran Hubber
முனிசிபாலிட்டி control லில் உள்ளது திரைப்படங்கள் போவதில்லை வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது

Originally Posted by
RAGHAVENDRA
ராமமூர்த்தி சார்
வேலூர் அண்ணா கலையரங்கம் நிழற்படங்கள் அருமை...
அது முனிசிபாலிட்டியினுடையதா அல்லது தனியாருடையதா..
தற்போது கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவா...
ஏனெனில் பல பிரபல கலை நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவதைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் படித்ததாக நினைவு
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
12th October 2014 01:09 PM
# ADS
Circuit advertisement
-
12th October 2014, 02:06 PM
#112
Senior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
சி.க. சார்
பசுபதிகோயில் நான் போயிருக்கிறேன். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பிரத்யேகமான கோயில் உண்டு. அந்த வகையில் ஒரு முறை அந்தக் கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இன்றும் அந்த கும்பகோணம் தஞ்சாவூர் பாதை ரம்மியமாகத் தான் காட்சியளிக்கிறது. அந்த சாலை சற்றே குறுகலாகத் தான் இருக்கிறது. நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயில். தாங்கள் சொல்லும் அந்த டூரிங் டாக்கீஸ் அந்த குறுகிய தெரு வழியாகத் தான் போக வேண்டும் என நினைக்கிறேன். காரணம் நான் பார்த்த வரையில் நெடுஞ்சாலையிலிருந்து செல்லும் அந்த தெருவில் கோயிலுக்கு சற்று முன்னர் வலது புறத்தில் மிகப் பெரிய பரப்பிலான இடத்தில் ஒரு கட்டிடம் பழைய தோற்றத்தில் இருந்தது. ஒரு வேளை ஏதேனும் கம்பெனி இயங்கிக் கொண்டிருக்கலாம். தாங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்தக் கட்டிடம் தான் தாங்கள் சொன்ன டூரிங் டாக்கீஸாக இருக்கலாம்.
அந்த பிரபாகரனை அதற்குப் பிறகு பார்த்தீர்களா...
ராகவேந்தர் சார்.. பல வருடங்கள் ..கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இருக்கும்.. எனில் படம் போனது மட்டும் நினைவில்.. ப்ளஸ் அந்த இரவு நடை.. நெஜம்மாகவே த்ரில்ல்.. அந்தக் கட்டடமெல்லாம் நினைவில் கொஞ்சம் புகையாகத் தான் இருக்கிறது..
இல்லை..அப்புறம் அந்தப் ப்ரபாகரையும் அந்த அவளையும் பார்க்கவில்லை..
படம்பார்க்காமல் கீற்று க் கொட்டகை மட்டும் பார்த்தது மதுரை திருவாதவூரில்..இதுபற்றி மதுரகானங்க்ளில் எழுதியிருக்கிறேன்..
கீற்றுக் கொட்டகை மற்ற நண்பர்களின் உங்கள், கோபால், ரவிகிரண் சூர்யா,எஸ்வி சார் போன்ற அனுபவங்கள் வெகு சுவாரஸ்யமாக இருக்கின்றன..படங்களும் நன்று.. நன்றி..
-
12th October 2014, 05:34 PM
#113
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th October 2014, 06:50 PM
#114
Junior Member
Platinum Hubber
சென்னை மாகாணத்தின் பல இடங்களில் டூரிங் தியேட்டர்களில் மவுனப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. சென்னை மவுண்ட்ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து இருந்த ரகுபதி வெங்கையா என்பவர், தானும் சினிமாவில் காலடி வைக்க விரும்பினார். முதல் கட்டமாக பியல் பிஷ்ஷர்ஸ் ராஜாஸ் கேஸ்கட் என்ற 500அடி நீளம் கொண்ட இரண்டு மவுன படங்களை அமெரிக்காவில் இருந்து வரவழைத்தார். கூடவே க்ரோனோ மெகாபோன் என்ற திரையிடும் ப்ரொஜக்டர் கருவியையும் வரவழைத்தார். சென்னை ரிப்பன் கட்டிடம் அருகில் இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில் அந்த படங்களை திரையிட்டார். கூட்டம் அலைமோதியது. நல்ல வருமானம் கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு ஒரு டூரிங் சினிமாவை தொடங்கினார். டூரிங் என்றால் ஊர் ஊராக சென்று சினிமாவை திரையிடுவது. இவரும் குண்டூர் தொடங்கி கட்டாக் வரை பல நகரங்களில் அந்த படங்களை திரையிட்டு லாபம் பார்த்தார்.
கிடைத்த லாபத்தை வைத்து சென்னையில் மவுனப்படத்தை திரையிடும் ஒரு நிரந்தர சினிமா தியேட்டரை கட்டினார். தென் இந்தியாவில் இந்தியர் ஒருவர் கட்டிய முதல் தியேட்டர் இது தான். 1913ல் கட்டப்பட்ட அந்த தியேட்டருக்கு கெயிட்டி என்று பெயரிட்டார். 2005வரை அந்த தியேட்டர் இயங்கிவந்தது.
இவரே 1914ல்தங்கச்சாலை சந்திப்பில் கிரவுன் என்ற தியேட்டர், 1915ல்புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் க்ளோப் என்ற தியேட்டரையும் கட்டினார். பின்னர் க்ளோப் தியேட்டர் ராக்சி என்று பெயர் மாற்றப்பட்டது. மூன்று தியேட்டர்களுமே மவுன படங்களை திரையிட்டு வந்தன.
அமெரிக்காவில் பிரபலமான யுனிவர்சல் நிறுவனம் தயாரித்த க்ளட்சிங் ஹேன்ட் கிரேட் ரிவார்டு, கீஸ் ஸ்டோன்காப்ஸ் போன்ற மவுன படங்களை வரவழைத்து தனது மூன்று தியேட்டர்களிலும் திரையிட்டார். ஹாலிவூட் சினிமாக்களை தெனிந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் வெங்கையாதான். இதன் மூலம் தெனிந்திய சினிமாவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.
இந்த காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் ஹரிச்சந்திரா, கீசகவதம் போன்ற மவுனப்படங்கள் வெளிவந்தன. வெங்கையா இந்த இரண்டு படங்களையும் தனது மூன்று தியேட்டர்களிலும் மாறி மாறி திரையிட்டார். இவற்றின் வெற்றி இவரை படத்தயாரிப்பில் ஈடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தனது மகன் ரகுபதி பிரகாசாவை லண்டனுக்கு திரைப்படதுறையில் பயிற்சிபெற அனுப்பினார்.
இந்தியர் ஒருவர் தெனிந்தியாவில் கட்டிய இந்த மூன்று தியேட்டர்களிலுமே 1932ல் பேசும் படங்களை திரையிடும் நவீன கருவிகளை பொருத்தினார். இதன்பின்னர் இங்கு பல பேசும் படங்கள் திரையிடப்பட்டன.
Thanks - ravindran - net
-
12th October 2014, 06:59 PM
#115
Junior Member
Platinum Hubber
டூரிங் டாக்கீஸில் இருந்து மல்டிப்ளக்ஸ் தியேட்டர் வரை பார்த்திருக்கிறேன். நான் பார்த்து அதிசயித்த முதல் தியேட்டர் - தூத்துக்குடியில்
சார்லஸ் தியேட்டர்.
இந்த தியேட்டர் 1970 இல் கட்டப்பட்டது. நான் நினைவு தெரிந்து பார்த்த காலத்தில், இந்த தியேட்டர் தனது வயோதிக காலத்தில் இருந்தது. அது கட்டப்பட்ட காலத்தில் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்கும் என்று என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்திருக்கிறது. ஏனெனில், அது ஒரு அரண்மனை போல் வடிவமைத்து கட்டப்பட்டிருந்தது.
தென் தமிழகத்தின் முதல் தியேட்டரா என்று தெரியவில்லை. அப்படியே இல்லாவிட்டாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே திரையரங்குகள் அப்பகுதியில் இருந்திருக்கும். திரையரங்கை பார்ப்பதே அதிசயம் என்ற காலத்தில், இது போல் கட்டப்பட்ட திரையரங்கு எத்தகைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்?
இந்த தியேட்டரின் முன்பகுதியில் ஒரு தோட்டம். முன்பகுதியில் இருந்து சாய்வான நிலையில் மேல்நோக்கி பால்கனி உயரத்திற்கு செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலிருந்து இதில் நீர் பாய்ந்துக்கொண்டிருக்கும். மைசூர் பிருந்தாவன் நினைவுக்கு வருகிறதா? அது பார்த்திருக்காவிட்டால், ‘குரு சிஷ்யன் - வா வா வஞ்சி இளமானே’ நினைவுபடுத்துக்கொள்ளுங்கள். அதனுடைய சிறிய மாடல். பால்கனியில் இருந்து தியேட்டரின் வெளியே வர, இதன் இடையே படிகள் அமைத்திருப்பார்கள்.
நான் சென்ற காலத்தில் ‘இருக்கிற தண்ணி பிரச்சினையில் இது வேறயா?’ என்று வழிந்தோடும் தண்ணீரை நிறுத்திவிட்டார்கள். மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.
இந்த தியேட்டரில் இருப்பது போல் பால்கனியை எங்கும் பார்த்ததில்லை. பொதுவாக, பால்கனி திரையின் நேர் எதிர் பக்கம் இருக்கும். இங்கும் அந்த பால்கனி உண்டு. அது தவிர, இரு பக்கமும் இரு சிறு பால்கனிகள் உண்டு.
எல்லாம் பெஞ்ச், சேர் என்றாலும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று சாதாரணமாக பெயர் வைத்துவிடவில்லை. DUKES, MARQUESS, KINGS CIRCLE. இவைதான் இங்கு இருக்கும் வகுப்புகளின் பெயர்கள். அதுபோல், எந்த ஒரு விஷயத்தையும் சாதாரண கட்டிட வடிவமைப்பில் கட்டவில்லை. வட்டமாக சுற்றி சுற்றி செல்லும் படிக்கட்டுகள், வேலைப்பாடுகளுடன் தூண்கள். ஏன், குப்பைத்தொட்டி கூட ராஜா காலத்து மாடலில் தான் இருக்கும்.
இது நான் கேள்விப்பட்டது. இந்த தியேட்டரை கட்டிய சமயம், அதன் உரிமையாளரிடம் படம் வாங்கி திரையிட பணம் இல்லை. தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் கொண்டு, திரையரங்கைக் கட்டியிருந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆர் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை பணம் வாங்கிக் கொள்ளாமல் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கும் அப்படத்தை வெளியிடுவதில் சிரமம் இருந்தது. படம் வெளியாகி பெரும் வெற்றி. அந்த திரைப்படத்திற்கு வந்த கூட்டத்தின் வரிசை நெடுந்தொலைவுக்கு நின்றது. படத்தில் வசூலான பணத்தை கொண்டு, அந்த கடனை உரிமையாளர் திருப்பி கட்டினார்.
இப்படி பெருமையுடன் ஆரம்பிக்கப்பட்ட திரையரங்கு, பிற்காலத்தில் வெறுமையானது. முன்னால், கொட்டிக்கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. செடிகள் வளர்ந்திருந்த பகுதியில் ஜல்லியில் கான்கிரீட் போடப்பட்டது. பெரிய திரையரங்கு என்பதால், பராமரிப்பு சிரமம். இது தியேட்டர் அல்ல, குடோன் என்று விமர்சிக்கப்பட்டது. பொதுவாகவே, தூத்துக்குடி திரையரங்குகளில், இருக்கும் சீட் எண்ணிக்கைக்கு ஏற்ப டிக்கெட் கொடுக்க மாட்டார்கள். இண்டர்வெல் வரை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த தியேட்டரும் புதுப்படங்களின் ஆரம்ப நாட்களில் பாதி தூத்துக்குடியை அடைத்துக்கொண்டு இருக்கும்.
கடைசி வரை அந்த பெஞ்சை மாற்றவில்லை. சிலர் வசதியாக படுத்துக்கொண்டு படம் பார்த்தார்கள். திரைப்படங்களில் இசை வேறொரு கட்டத்தை அடைந்த போது, இத்திரையரங்கின் ஒலி அமைப்பு அதற்கு ஈடுக்கொடுக்கவில்லை. வௌவால்கள் குடியிருக்க தொடங்கின.
ஒரு கட்டத்தில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. வேறொருவர் வாங்கினார். பிறகும், மூடப்பட்டே கிடந்தது. நான் கடைசியாக ‘சேது’ படம் பார்த்ததாக நினைவு. சிறிது காலம் கழித்து, இன்னொரு நிறுவனம் இந்த இடத்தை வாங்கியது. கால மாற்றத்திற்கேற்ப, திரையரங்கு இடிக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்பட்டது.
COURTESY - KUMARAN KUDIL -NET
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th October 2014, 08:04 PM
#116
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஹாய் ஆல்..
அவளுக்கு ஒரு அண்ணன் என்றிருந்தேனே..அவன் பெயர் பிரபாகரன் என நினைக்கிறேன்.. ஹோட்டலில் ஃபுல் மீல்ஸ் ஆர்டர் செய்தால் ஒரு புளிப்பு ரைத்தா தந்தால் என்ன செய்வீர்கள்..அதைப் பொறுத்துக் கொண்டு மற்ற விஷயங்கள் நன்றாக இருக்கிறதா எனப் பார்ப்பீர்கள் அல்லவா..அதே போல அவளுக்காக இந்த்ப் புளிப்பு மிட்டாயிடம் பேசவேண்டியதாகி விட்டது..காலப்போக்கில் அவன் கொஞ்சம் ஹெல்ப் செய்ததால் (டேய் ப்ரபாகரா அந்தப் பெட்டிக் கடை வரைக்கும் போய்ட்டு வரலாமா.. ஓ..வரேங்க..) கொஞ்சம் நட்பும் ஆனான்..
சி.க சார்,
கொன்னுட்டீங்க போங்க. ஒரு படம் பார்த்த விஷயத்தை இவ்வளவு சுவாரஸ்யமா அதுவும் மத்தவங்க பொறாமைப்படும் அளவுக்கு எழுதிட்டீங்களே! கொஞ்சம் காதல், கொஞ்சம் காமடி, கொஞ்சம் நட்பு, கொஞ்சம் பாசம், கொஞ்சம் பயம், கொஞ்சம் வெட்கம் என்று அதில் அதிலிருந்து 100 கிராம் கலந்து பதிவை பளிச்சென்று ஆக்கிவிட்டீரே.
நே மேலே நிலா
சூப்பர் சார். அது எப்படிங்க? நீங்க இளைச்சுடுவீங்கன்னு அதுவும் கூடவே வந்ததா?
//அவளுக்காக இந்த்ப் புளிப்பு மிட்டாயிடம் பேசவேண்டியதாகி விட்டது//
எனக்குக் கூட இந்த மாதிரி அனுபவம் உண்டு சார். லஞ்சமாக பீர் எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் அவன் தங்கைக்காக அல்ல. எதிர் வீட்டுப் பெண் இங்கு லுக் விட்டதை அவன் பார்த்துத் தொலைத்ததினால்.
//அவள் வருவது என் சகோதரிக்கு ஹெல்ப் வேண்டுமா என்பதற்குத் தானேயொழிய வேறெதற்குமில்லை என இங்கு தெளிவு படுத் படுத்துகிறேன்//
நாங்க ஒண்ணுமே சொல்லலீங்களே ராசா.
சுவைமிகு பதிவு. பதில் பதிவு லேட்டானதற்கு மன்னியுங்கள். கொஞ்சம் வேலைப்பளு.
-
12th October 2014, 08:06 PM
#117
Senior Member
Diamond Hubber
சி.க.சார்,
'மாய மோதிர'த்தில் பாரதிதானே! ராஜஸ்ரீயும் இருக்கிறாரா? நான்தான் மறந்து விட்டேனோ!
-
12th October 2014, 09:18 PM
#118
Senior Member
Senior Hubber
அன்பின் வாசு சார்..
மிக்க நன்றி..அழகாய் ரசித்து எழுதியமைக்கும் பாராட்டுக்கும்.
அய்யம்பேட்டையில் இருந்த காலத்தில் இங்கிட்டு கும்பகோணம் அங்கிட்டு தஞ்சாவூர் என பஸ் பிடித்து பஸ் பிடித்து தியேட்டர் போய் படம் பார்த்ததுண்டு.. தஞ்சையில் பார்த்தது உயிரே உனக்காக..குடந்தையில் பார்த்தது மறந்து விட்டது.. ஆனால் சுற்றிலும் இருந்த சில கோவில்களை ஒரு சுற்று சுற்றித் தான் வந்தேன்..
மாய மோதிரம் பாரதியா.. தெரியலையே..மதுரை தேவி தியேட்டரில் பார்த்த நினைவு.. ராஜஸ்ரீயை.. எஸ்வி சார் ( நன்றி) வேறு ஒரு புகைப்படம் இட்டிருக்கிறாரே…
சார்லஸ் தியேட்டர் கெயிட்டி க்ரவுன் க்ளோப் தியேட்டர்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி எஸ்வி சார்.. ஒரு பதிவில் முரளி சார் எழுதியிருந்தார் மதுரை ஸ்ரீதேவி தியேட்டர் இடிக்கப் பட்டு அபார்ட்மெண்ட்டாக மாறி விட்டது என்று.. படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை (எனக்குத் தெரியாது..தவிர மதுரையில் இருந்த உறவுகளும் ஊர் மாறிவிட்டனர்) எவ்வளவு படங்கள் சின்ன வயது முதல் கல்லூரிப் பருவம் வரை தொடர்ந்து..கடைசியாய் அங்கே பார்த்த படம் காதல் மன்னன் 93 ம் வருடமோ 96ம் வருடமோ லீவில் வந்த போது.. அதுவே எனது கடைசி மதுரை விசிட்டாகி விட்டது.. சின்ன வயதில் 1.45 பைசா கொடுத்து பால்கனியில் பார்த்த சுகம் ரூ 12.50 என காதல் மன்னன் பார்த்த போது ரொம்ப மிஸ்ஸானது..
-
13th October 2014, 05:20 AM
#119
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
சி.க.சார்,
'மாய மோதிர'த்தில் பாரதிதானே! ராஜஸ்ரீயும் இருக்கிறாரா? நான்தான் மறந்து விட்டேனோ!
மாயமோதிரத்தில் பாரதி தான் நாயகி, ராஜஸ்ரீ வில்லி ரோல்.. பாரதியின் தந்தையை மயக்கும் வேடம்
-
13th October 2014, 05:27 AM
#120
Junior Member
Platinum Hubber
சென்னைக்கே புது நிறம் சேர்க்கும், சாஃப்ட் வேர் துறையின் அசுர வளர்ச்சி பழைய மகாபலிபுரம் சாலையில் பளீரென பிரதிபலிக்கும். இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பளபளா மினுமினு அலுவலகங்கள் அங்கு விண் முட்டி நிற்கும். அந்த வான் உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில் நாவலூரில் ஒளிந்திருக்கிறது என்.ஆர்.கே. டூரிங் டாக்கீஸ்.
நான்கு புறமும் தார்பாய் விரித்த திரை மறைப்பு, அழுக்கு ஏறிய பெஞ்சுகள் எனப் பழமை மாறாமல் இயங்கும் அந்த டாக்கீஸில், ஆச்சர்யமாக டி.டி.எஸ். வசதி இருக்கிறது. மாலைக் காட்சி ஆரம் பிப்பதற்கு அறிகுறியாக முதல் மணி அடித்த சமயம் அந்த டூரிங் டாக்கீஸுக்கு விசிட் அடித்தோம்.
''25 வருஷங்களா இயங்கும் இந்த தியேட்டரை 17 வருஷத்துக்கு முன்னாடி வாங்கினேன். அதுக்கு முன்னாடி பக்கத்து ஊர் தியேட்டர்ல ரெண்டு ரூபாய் சம்பளத்துக்கு ஆபரேட்டரா இருந்தேன். வழக்கமா தினமும் சாயங்காலம் ரெண்டு ஷோ போடுவோம். சனி, ஞாயிறுகளில் மட்டும் பகல்ல எக்ஸ்ட்ரா ஒரு ஷோ. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜயகாந்த் படங்கள் அதிகமா ஓடுச்சு. பிறகு விஜய், அஜீத் படங்கள். பெஞ்ச் டிக்கெட் 10 ரூபாய். பாக்ஸ் டிக்கெட் 15 ரூபாய். அதுக்கு முன்னாடி மண் தரை தான். தரையில் யாரும் உட்கார்ந்து படம் பார்க்கக் கூடாதுனு அரசாங்கம் சட்டம் போட்டதால், வேற வழி இல்லாம மண் தரையில் பெஞ்ச் போட் டோம்.
சாஃப்ட்வேர் கம்பெனி ஆட்கள், கட்டட வேலை செய்யும் வட இந்தியர்களுக்காக நாலஞ்சு வருஷமா ஹிந்தி படங்களும் நிறையப் போடுறோம். தொழிலாளிகள் வாங்குற சம்பளத்துக்கு இங்கே இருக்குற சினிமா மால்களில் 200, 300 கொடுத்து படம் பார்க்க முடியாது. அதான் இங்க வந்து திருப் தியா படம் பாத்துட்டு போறாங்க!'' எனும் தியேட் டர் உரிமையாளர் கன்னியப்பன், டூரிங் டாக்கீஸின் ட்ரெண்ட் குறித்து தொடர்கிறார்.
''இங்கே 'அம்மன் படம் 15 நாள் ஓடுச்சு. 'சூரிய வம்சம் மூணு வாரம் ஓடுச்சு. எங்க தியேட்டர்ல ரொம்ப நாள்(!) ஓடின படங்கள் இவைதான். இது போக, விஜய் நடிச்ச 'வசீகரா படம் நல்லா போகும். இதுவரை 10 தடவைக்கும் மேல அந்தப் படம் போட்டு இருக்கோம். இப்பப் போட்டாலும் தொடர்ந்து ஒரு வாரம் ஓடும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வாரக் கடைசிகளில் ஒரு ஷோவுக்கு ஆயிரம் பேர் வருவாங்க. டி.டி.எஸ். போட்டா இன் னும் கூட்டம் வரும்னு நினைச்சு, அஞ்சு லட்சம் வரை செலவு பண்ணி ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் டி.டி.எஸ். போட்டேன். எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டுல டி.டி.எஸ். இருக்குற ஒரே டூரிங் டாக் கீஸ் நம்மதுதான்னு நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு ஷோவுக்கு இப்ப 100 பேர் வர்றதே பெரிய விஷயமா இருக்கு.

செங்கல்பட்டு வட்டாரத்தில் மட்டும் 157 தியேட்டர் இருந்தது. இப்ப அது 56 தியேட்டர்களா குறைஞ்சிருக்கு. கேபிள் டி.வி, திருட்டு வி.சி.டி, இலவசமா கொடுத்த டி.வி-ன்னு எங்க பாதிப்புக்கு ஏகப்பட்ட காரணங்கள். முன்னே இங்க 15 பேர் வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. தியேட்டருக்கு வர்ற வங்களைவிட இங்கே வேலை செய் றவங்க கூட்டம் அதிகமாக இருந்த மாதிரி இருந்தது. அதான், இப்ப நாலு பேரை மட்டும் வேலைக்கு வெச்சிருக்கேன்!'' சோகப் புன்ன கையுடன் முடிக்கிறார் கன்னியப்பன்!
- பா.ஜெயவேல், படங்கள்: ஜெ.தான்யராஜு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks