Page 31 of 397 FirstFirst ... 2129303132334181131 ... LastLast
Results 301 to 310 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #301
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இது கனிமுத்து பாப்பா படத்தின் ஏழுமலை வாசா பாடலின் ஒலிப்பதிவு. இசையரசிக்கு அருகில் இருப்பவர் ஜோதி கண்ணா (இசையரசியின் அக்கா மகன் பாடகர் ராமகிருஷ்ணாவின் மனைவி). முகனூலில் இசையரசியின் குழுமத்தில் இவரும் உள்ளார். இந்த பாடல் பற்றி நிறைய நாட்களுக்கு முன் பேசி அலசினோம். அவரும் அவரது கருத்துக்களை சொன்னார்.

  2. Thanks Richardsof thanked for this post
    Likes Russellcaj, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #302
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like



  5. Likes Russellcaj, Russellmai, chinnakkannan liked this post
  6. #303
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    மதுரகான வாசகர்கள் நேயர்கள் அன்பர்கள் நண்பர்கள்
    அனைவருக்கும் வணக்கம்

    வாசு சார் உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிரமிப்பாக
    இருக்கின்றன வாழ்த்துக்கள்

    எனக்கு ஒரு பாடல் வேண்டும்

    தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்த
    தெய்வதிருமகள் படத்தில் இடம்பெற்ற

    சந்தையிலே நான் கண்ட சரக்கு
    நல்ல தங்கச்சிலை போல இருக்கு
    என்ற பாடல்

    யாராவது முடிந்தால் பதிவேற்றம்
    செய்யுங்கள்
    நன்றி


    ஆஹா! வாருங்கள் எங்கள் சிவா சார்! உங்களை இருகரம் கூப்பி இனிதே 'மதுர கான'த்திற்கு வரவேற்கிறேன். இலங்கை தந்த எங்கள் 'ஆவணச் செம்மலே'! 'உயர்ந்த மனிதன்' புகழ் ஒன்றே லட்சியம் என்று வாழ்ந்திருக்கும் எங்கள் உயர்ந்த, இனிய நண்பரே! வருக வருக!

    தங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு என் உளம் கனிந்த நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes rajeshkrv liked this post
  8. #304
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    எஸ்.வி.சார்..காலையில் தேவிகையின் பொங்கல் வாழ்த்துக்கும் இதர ஆவணங்களுக்கும் நன்றி..

    //இந்த பாடல் பற்றி நிறைய நாட்களுக்கு முன் பேசி அலசினோம். அவரும் அவரது கருத்துக்களை சொன்னார்.// ராஜேஷ் அதை இங்கு கொடுக்கலாமே.. அப்புறம் ராஜஸ்ரீ வில்லியா..எனிவே ஷி இஸ் தேர் இன் மாய மோதிரம் (வரலாறு முக்கியம் அமைச்சரே! ) தாங்க்ஸ் குரு..

    அழகிய ஸோலோ கொடுத்த ராகதேவன் ஜி உங்களுக்கு ஒரு ஓ..

  9. #305
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சி.க அவர் இந்த பாடலை இசையரசியுடன் பாடியது பாக்கியம் என்று கூறினார்.

    ராஜஸ்ரீ பாரதியின் தந்தையை மயக்கி ஒரு மயக்க நிலையில் வைத்திருக்கும் நடன மாது..

  10. Thanks vasudevan31355 thanked for this post
  11. #306
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிவா சார்,

    நீங்கள் கேட்டு இல்லாமலா? இதோ நீங்கள் கேட்ட அந்த வித்தியாசமான அருமையான பாடல். அப்படியே ஈழத்தமிழ் பாடல் போல குதூகலிக்க வைக்கும். அதனால்தான் இதை விருப்பமாக தேர்ந்தெடுத்தீர்களோ?
    மிக அரிய பாடலைக் கேட்டு தங்கள் வித்தியாசமான ரசனையை இங்கு வெளிப்படுத்தியமைக்கு நன்றி! பலருக்கு இப்பாடல் தெரிய வாய்ப்பில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். (ஏற்கனவே ராஜேஷ் சார் பதிவிட்டு விட்டார். பரவாயில்லை)

    'சந்தையிலே நான் கண்ட தளுக்கு
    நல்ல தங்கச் சிலை போல இருக்கு
    கண்ணாலே நான் போட்ட கணக்கு
    அது பொன்னாக விளைந்தது எனக்கு'

    Last edited by vasudevan31355; 13th October 2014 at 12:33 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #307
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (92)

    மிக மிக ஸ்பெஷல் பதிவு

    'மகனே நீ வாழ்க' என்றொரு படம். 1969- ல் வெளியானது. ஜெய்சங்கர், லஷ்மி, நாகேஷ், அஞ்சலிதேவி நடித்தது. அற்புதமான பாடல்களை கொண்ட படம்.

    'இன்றைய ஸ்பெஷலி'ல் இந்தப் படத்தின் அதியற்புதமான ஒரு பாடலைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.




    ஒரு ஏழை அண்ணன். அவனுக்கு ஒரு தங்கை. தங்கை மேல் கொள்ளைப் பிரியமும், பாசமும் அவனுக்கு. தங்கையை ஒரு பெரிய பணக்கார வீட்டு நல்ல மனது வாலிபன் காதலிக்கிறான். அந்த ஏழைப் பெண்ணுக்கு அந்த பணக்கார இடத்தில் சம்பந்தம் நடைபெறுகிறது. அது பணக்கார வீடுதானே ஒழிய குணம் நிறைந்த வீடு. கோயில். அந்த வாலிபனின் தாய் அதாவது அந்த குடும்பத்தின் தலைவி தங்கமான குணம் கொண்ட நல்ல பெண்மணி. குணக்குன்று.

    அந்தக் குடும்பத்திற்கு தன் தங்கையை தாரை வார்த்துக் கொடுக்கிறான் அந்த அன்பு அண்ணன் திருமணம் நடப்பதற்கு முன்னால். அதாவது நிச்சயத்தன்று.

    அந்த அதிர்ஷ்டக்கார ஏழைப் பெண்ணை அந்த பணக்கார வருங்கால மாமியார் எப்படி வரவேற்கிறாள் பாருங்கள்! தன் சொந்த மகளை அந்த வீட்டுக்கு அழைப்பது போல தன் வீட்டிற்கு அழைக்கிறாள். தன் மகனுடன் காலம் முழுதும் குடும்பம் நடத்தி அவனை நல்லபடியாக கவனித்துக் கொள்ள அந்தக் குடும்பத்தின் மருமகளாகும் அந்த இளம் பெண்ணை மனம் நிறைந்து வாழ்த்தி வரவேற்கின்றாள். எப்படி?


    'அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
    ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க
    இளைய மகள் போல வரும் புதிய மகள் வருக
    இன்ப மனை ஆள வரும் அன்பு மகள் வாழ்க'


    இப்படி.



    'என் மருமகளே! பூங்கொடி போன்றவளே! நீ சுதந்திரமாக வாழ்க்கை நடத்த இங்கு தடை இருக்காது... உன் இஷ்டம் போல் இங்கு நீ இருக்கலாம்... கொடுமை என்பதையே நீ இங்கு இன்னதென்று அறிய மாட்டாய்' என்பதை எவ்வளவு அழகாகச் சொகிறாள்?

    'பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடம் உண்டு'

    அது மட்டுமா?

    'என்னை வேறாக நினைக்காதே! உன்னைப் பெற்ற தாயாக நினைத்துக் கொள்' என்று ஆசீர்வதிக்கிறாள்.

    'தாய்வழி உறவென்று நினைத்து வாழிய நலம் கொண்டு'

    எந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு மாமியார் அமையும்?

    மருமகள் கர்ப்பத்தைக் கலைப்பதும், விஷம் வைத்துக் கொள்வதும், அவளை வாழாவெட்டி ஆக்கத் துடிப்பதும், சமையல் கேஸை ஒப்பன் செய்து அவளை எரிக்கப் பார்ப்பதுமாக தொலைக்காட்சி சீரியல்களின் மாமியார்களைப் பார்த்துப் பார்த்து அலுத்து, சலித்துப் போய் மனம் கெட்டுப் போன நமக்கு இப்பாடல் எவ்வளவு ஆறுதலையும், படிப்பினையையும், நற்குணத்தையும் போதிக்கிறது. அன்பு என்ற சொல்லுக்கு ஆதாரமே இப்பாடல்தான்.


    இப்போது தங்கையைத் தாரை வார்த்துக் கொடுக்கும் அண்ணன் ஆனந்தக் கண்ணீருடன் தன் தங்கைக்கு 'நல்லதொரு பண்பான, அன்பான இடத்தில் வாழ்க்கை அமையப் போகிறதே' என்ற சந்தோஷத்தில் பாட ஆரம்பிக்கிறான்.

    'தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு
    வைத்து தாய் போல உன்னை வருக என்றழைக்கும்
    உள்ளத்தைக் களிப்பாக்கு கண்ணே உள்ளத்தைக் களிப்பாக்கு'


    'தங்கத் தட்டிலே வெற்றிலையும், களிப் பாக்கையும் வைத்து உன்னை வரவேற்கும் உன் அன்னை போன்ற மாமியாரின் உள்ளத்தை களிப்பாக்கு... அதாவது சந்தோஷமாக்கு' என்று தங்கையிடம் பாடுகிறானே! எப்படிப்பட்ட வரிகள்!

    களிப் பாக்கு - வெற்றிலையுடன் சேர்ந்து தரும் கொட்டைப் பாக்கு
    களிப்பாக்கு - சந்தோஷமாக்கு

    (ஒரே வாத்தையை பிரித்து இரண்டு அர்த்தமாக்கிய கவிஞனின் கற்பனையை எப்படிப் பாராட்ட!)


    'கண் அவன் என்பதே கணவனாகும் அவன் நெஞ்சம் மயங்கும் வண்ணம் நீ அவனிடம் குடும்பம் நடத்து' என்கிறான் அண்ணன்.

    தங்கைக்கு அறிவுரை முடித்து நேரே அந்த மாமியாரிடம் வருகிறான் பாடலின் மூலம். தன் தங்கையைப் பற்றி அவனுக்கு முழுதாகத் தெரியும். ஆனால் அவள் காலடி எடுத்து வைக்கப் போகும் அந்த நல்ல குடும்பத்திற்கு அவ்வளவாகத் தெரியாதல்லவா? அதனால் தன் தங்கையின் பொன்னான குணத்தை சில வரிகளிலேயே சொல்லி அவர்களுக்கு அவளைப் பற்றி விளக்கி விடுகிறான்.


    'நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை
    ஒரு நினைவும் கனவும் ஏழைத் தங்கை நிழலைத் தொட்டதில்லை'




    அடடா! தன் தங்கையின் குணத்தை எப்படி புரிந்து வைத்து அதை இங்கே தெரியப்படுத்துகிறான்.

    'என் தங்கை இதுநாள் வரை நிலத்தைப் பார்த்துதான் நடந்திருக்கிறாள். தலை நிமிர்ந்து எவரையுமே பார்க்காத மாதர் குல மாணிக்கம் அவள்.. ஒரு ஆடவரைக் கூட இதுவரை அவள் நிமிந்து பார்த்திருப்பாளா?'

    என்று பூரிக்கிறான்.

    'அவள் இதுவரை எந்தக் கற்பனையும் மனதுக்குள் செய்து வைத்ததில்லை. அவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த நினைவும் வைத்துக் கொள்ளவில்லை... அல்லது இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று எந்தக் கனவும் நெஞ்சில் வைத்ததில்லை'

    என்றும் கண்ணீர் விட்டபடி அவள் மீது பெருமிதம் கொள்கிறான். 'அவள் உங்கள் குடும்பத்திற்கு முழுத் தகுதியானவளே' என்று சொல்லாமல் சொல்கிறான்.

    பின்,

    'என் தங்கை என்ற மாணிக்கத்தை, என் வீட்டுப் பெண்ணையா உங்களுக்கு தருகிறேன்... இல்லை இல்லை... என் கண்களையேதான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதுவும் உங்கள் நல்ல மனங்களை நம்பித்தான் அவளைத் தருகிறேன். நீங்கள்தான் அன்னை போல இருந்து அவளைக் காக்க வேண்டும்'

    என்று கண்ணீர் மல்க வேண்டுகிறான். என்ன இருந்தாலும் இதுநாள் வரை கண்மணி போலக் காத்த தங்கையைப் பிரிய வேண்டிய தருணம் வந்து விட்டதல்லவா? அதுதான் அவன் கண்களில் கண்ணீர்.


    அவன் கண்ணீரைக் கண்டு அந்த மாமியார் அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.

    'கவலைப்படாதே அப்பா! நானும் ஒரு காலத்தில் இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்தவள் தானே! அதன் கஷ்ட நஷ்டங்கள் புரிந்தவள் தானே! பயப்படாமல் உன் பெண்ணைக் கொடு. அவளைத் தாய் போல் வைத்து நான் காப்பாற்றுவேன்"

    என்று உறுதி அளிக்கிறாள்.

    பின் மருமகளை வாழ்த்தி வரவேற்று உச்சி முகர்கிறாள்.




    என்ன ஒரு காவியப் பாடல்! அண்ணனின் நிலைமையையும், அந்த மாமியாரின் மனநிலைமையையும் எவ்வளவு அழகாக வடித்து எடுத்துரைக்கிறார் கவிஞர்.

    அண்ணனாக நாகேஷ் கண்ணீர் மல்க, ஆனந்தத்துடன் தன் தங்கை லஷ்மியை அஞ்சலிதேவி, மேஜர் குடும்பத்திற்கு ஜெய்சங்கர் மனைவியாக அனுப்பி வைக்கும் அர்த்தம் தொனிக்கும் அன்பு கலந்த ஒன்று பட்ட நெஞ்சங்களின் உணர்வுகளின் சங்கமப் பாடல். நடிகர்கள் அனைவரும் அற்புதமாக நடித்திருப்பார்கள் ஜெய்சங்கர் உட்பட.

    இப்படிப்பட்ட மாமியாரும், இப்படிப்பட்ட அண்ணனும் நமக்குக் கிடைக்க மாட்டார்களா என்று பெண்கள் ஏங்கிப் போகும் பாடல்.

    சற்று பெரிய பாடல். நீளமான வரிகள். நாகேஷுக்கு சீர்காழியும், அஞ்சலி தேவிக்கு சுசீலா அம்மாவும் குரல் தந்து இப்பாடலை ஜொலிக்க வைத்திருப்பார்கள். பாடல் பலவித டியூன்களில் நம் நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறது.


    பெண்ணின் அண்ணனும், அந்தப் பெண்ணிற்கு வரப் போகும் மாமியாரும் இணைந்து பாடும் பாடல் தமிழ்ப் படங்களிலேயே இந்த 'மகனே நீ வாழ்க' திரைப் படத்தில்தான் இருக்க வேண்டும். இது ஒரு புதுமைதானே!

    எக்காலத்திலும் மறக்க முடியாத ஏற்றமிகு பாடல்.

    எனதருமை டி.ஆர். பாப்பா என்பதனால் தான் இப்படிப்பட்ட அருமையான ஒரு பாடல். இப்பாடல் அவரால் மட்டுமே முடிந்த ஒரு அதிசயம்.


    இந்தப் பாடல் என்னை மிகவும் பாதித்த ஒரு பாடல். இப்பாடலைக் கேட்கும் போதோ அல்லது பார்க்கும் போதோ எனக்கும் பல இனம் புரியாத உணர்வுகள் வந்த போகும். இப்பாடல் காட்சி சினிமா பாடல் போலவே இராது. நம் குடும்பத்தில் நிகழும் ஒரு சம்பவம் போலவே நம்மை பாதிக்கும். நம் கண்களில் நம்மையுமறியாமல் நீர் தேங்கி நிற்பதை உணரலாம். நீங்கள் கண்டிப்பாக இப்பாடலை வரிகளுடன் சேர்த்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இப்பதிவை எழுதுகிறேன்.



    இனி பாடலின் வரிகள்.



    அஞ்சலிதேவி

    அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
    ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க
    அழகு மயில் கோலமென பழகும் மகள் வருக
    ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க
    இளைய மகள் போல வரும் புதிய மகள் வருக
    இன்ப மனை ஆள வரும் அன்பு மனம் வாழ்க

    பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடம் உண்டு
    பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடம் உண்டு
    பொன்மணிச் சரத்தோடு வாழ்த்தும் புன்னகை முகம் உண்டு
    தாய்வழி உறவென்று நினைத்து வாழிய நலம் கொண்டு
    தாங்கிடக் கிளை உண்டு மயிலைத் தழுவிடத் துணை உண்டு

    நாகேஷ்

    தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு
    தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு
    வைத்து தாய் போல் உன்னை வருக என்றழைக்கும்
    உள்ளத்தைக் களிப்பாக்கு கண்ணே! உள்ளத்தைக் களிப்பாக்கு

    கண் அவன் என்றே கணவன் என்றார் கன்னித் தமிழினிலே
    கண் அவன் என்றே கணவன் என்றார் கன்னித் தமிழினிலே
    அந்த மன்னவன் நெஞ்சம் மயங்கிட வேண்டும்
    வாழ்க்கை உறவினிலே வாழ்க்கை உறவினிலே

    நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை
    நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை
    ஒரு நினைவும் கனவும் ஏழைத் தங்கை நிழலைத் தொட்டதில்லை

    கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெண்ணைத் தரவில்லை
    கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெண்ணைத் தரவில்லை
    உங்கள் நல்ல மனங்களை எண்ணித் தந்தேன் வேறொரு நினைவில்லை

    மஞ்சள் பூசி மாலை அணிந்து மாளிகை வரும் பெண்ணை
    மஞ்சள் பூசி மாலை அணிந்து மாளிகை வரும் பெண்ணை
    தன் மடியில் வைத்துக் காத்திட வேண்டும் நீங்கள்தான் அன்னை
    இனி நீங்கள்தான் அன்னை

    அஞ்சலிதேவி

    மாமி என்றால் அவள் தானொரு காலத்தில்
    மருமகள் தான் அல்லவா
    குலசாமியின் பெயரால் சத்தியம் செய்தேன்
    தாய்க்கொரு மகளல்லவா

    மகளே மகளே மணமகளே என் வாசலில் வரவேண்டும்
    என் வாழ்நாள் முழுதும் கூட இருந்து மங்களம் பெற வேண்டும்
    என் வாழ்நாள் முழுதும் கூட இருந்து மங்களம் பெற வேண்டும்

    அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
    ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க


    இந்தப் பாடல் முன்பு இணையத்தில் இருந்தது. இப்போது தேடியதில் கிடைக்கவில்லை. (ஒருவேளை என்னால்தான் கண்டு பிடிக்க முடியவில்லையோ என்னவோ) எனவே என்னுடைய டி.வி.டி யை எடுக்க வேண்டியதாயிற்று. பாடலின் ஆடியோவைக் மட்டும் கேட்டால் இப்பாடலின் அருமை அவ்வளவாகத் தெரியாது. வீடியோவுடன் பார்க்கும் போதுதான் இப்பாடலின் முழு அருமையையும் உணர முடியும். அதனால்தான் எல்லோரும் கண்டு இன்புற வேண்டுமென்று 'you tube' ல் இன்று இப்பாடலை அப்லோட் செய்துள்ளேன்.

    Last edited by vasudevan31355; 13th October 2014 at 11:17 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Thanks Russellcaj thanked for this post
    Likes Russellmai, Russellcaj liked this post
  14. #308
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்,

    பி..எம்.பார்க்கவும்.
    Last edited by vasudevan31355; 13th October 2014 at 11:00 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #309
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ்ஜி,

    காலை வணக்கம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #310
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார் பி.எம். பார்த்தேன்..

    அழகு மயில் கோலமென பழகு மகள் வருக.. மெல்ல ஆரம்பிக்கும் பாடல் வேகம் பிடிக்கும் வித் சீர்காழி.. ஈவன் இந்த ப் பூங்கொடி விளையாட் இந்தப் பூமியில் இடமுண்டு..என்ற சரணத்திலும்..

    தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு.. களிப்பாக்கு என்பது கொட்டை ப்பாக்கு என எனக்குத்தெரியாது..பாடல் கேட்ட போது களிப்பாக்கு சந்தோஷமாக்கு தமிழில் ஹேப்பியாக்கு எனத் தான் நினைத்துக் கொண்டேன்.. உங்கள் மூலமாகத்தான் தெரிந்தது..

    மாமியென்றால் ஒரு காலத்திலே மருமகள் தானல்லவா.. ஆமாம் தான்..ஆனால் வருஷம் வர வர ஜெனரேஷன்கேப்ங்கறது வந்துடுமே

    (உங்களுக்குத் தெரியுமா சிலமாதங்களுக்கு முன்னால் நண்பரின் மகனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அந்தப் பெண் அந்தப் பையனிடம் கேட்டதாம்.. எதை..ஸேலரி ஷீட் கேட்டதெல்லாம் இருக்கட்டும்.. கல்யாணம் செய்த பிறகு லக்கேஜும் கூட வருமா என.. என்ன செய்வது காலம்..!)

    நிலத்தைப் பார்த்து நடந்தலல்லால் நேரேபார்த்ததில்லை..ரொம்ப அந்த்க்காலப் பொண் போல இருக்கு..

    வாசு சார்...ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.. நன்றி அழகான பதிவிற்கு.. வீடியோ பார்த்து விட்டு மீண்டுமெழுதுகிறேன்..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •