-
13th October 2014, 05:28 AM
#121
Senior Member
Seasoned Hubber
மெர்ரிலாண்ட் ஸ்டூடியோ
பல அருமையான படங்களை தயாரித்த திரு பி.சுப்பிரமணியம் அவர்களின் ஸ்டூடியோ
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th October 2014 05:28 AM
# ADS
Circuit advertisement
-
13th October 2014, 02:58 PM
#122

Originally Posted by
chinnakkannan
அன்பின் வாசு சார்..
மிக்க நன்றி..அழகாய் ரசித்து எழுதியமைக்கும் பாராட்டுக்கும்.
அய்யம்பேட்டையில் இருந்த காலத்தில் இங்கிட்டு கும்பகோணம் அங்கிட்டு தஞ்சாவூர் என பஸ் பிடித்து பஸ் பிடித்து தியேட்டர் போய் படம் பார்த்ததுண்டு.. தஞ்சையில் பார்த்தது உயிரே உனக்காக..குடந்தையில் பார்த்தது மறந்து விட்டது.. ஆனால் சுற்றிலும் இருந்த சில கோவில்களை ஒரு சுற்று சுற்றித் தான் வந்தேன்..
மாய மோதிரம் பாரதியா.. தெரியலையே..மதுரை தேவி தியேட்டரில் பார்த்த நினைவு.. ராஜஸ்ரீயை.. எஸ்வி சார் ( நன்றி) வேறு ஒரு புகைப்படம் இட்டிருக்கிறாரே
சார்லஸ் தியேட்டர் கெயிட்டி க்ரவுன் க்ளோப் தியேட்டர்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி எஸ்வி சார்.. ஒரு பதிவில் முரளி சார் எழுதியிருந்தார் மதுரை ஸ்ரீதேவி தியேட்டர் இடிக்கப் பட்டு அபார்ட்மெண்ட்டாக மாறி விட்டது என்று.. படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை (எனக்குத் தெரியாது..தவிர மதுரையில் இருந்த உறவுகளும் ஊர் மாறிவிட்டனர்) எவ்வளவு படங்கள் சின்ன வயது முதல் கல்லூரிப் பருவம் வரை தொடர்ந்து..கடைசியாய் அங்கே பார்த்த படம் காதல் மன்னன் 93 ம் வருடமோ 96ம் வருடமோ லீவில் வந்த போது.. அதுவே எனது கடைசி மதுரை விசிட்டாகி விட்டது.. சின்ன வயதில் 1.45 பைசா கொடுத்து பால்கனியில் பார்த்த சுகம் ரூ 12.50 என காதல் மன்னன் பார்த்த போது ரொம்ப மிஸ்ஸானது..
அன்புள்ள கண்ணா,
உங்கள் எழுத்து நடையில் ஒரு வசீகரம் இருக்கிறது என்பதை ஏற்கனவே சொல்லிருக்கிறேன். அது மீண்டும் கீற்றுக் கொட்டகையில் வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இளமையின் துள்ளல் கட்டங்களில் எதிர்பாலினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பும் அதை சார்ந்த அனுபவங்களை பதிவு செய்யும்போதும் சுவை கூடுகிறது. இது போன்ற இனிமையான அனுபவங்கள் மட்டும் எத்தனை வருடம் ஆனாலும் எப்போது அசை போட்டாலும் மனதுக்குள் மயிலிறகால் வருடுவது போல் மழைத்துளி விழுவது போல் அத்துனை இனிமையாக இருக்கும் என்பது உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட அனுபவப் பதிவுகளில் எப்போதும் முடிவு சோகமாக(?) [அதன் பிறகு சந்திக்கவேயில்லை என்பது போன்ற] இருப்பதனாலேயே இது மனதிற்கு நெருக்கமாகி விடுகிறது. இது "போன்ற" பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன்.
இந்த இனிமையைப் பற்றி பேசும்போது வேறொரு சோகத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். அதுதான் நமது ஸ்ரீதேவி டாக்கிஸ் இன்று அபார்ட்மெண்டாக மாறி நிற்கும் நிலை. உண்மையிலே மிக மிக சோகமான விஷயம். நீங்கள் நடிகர் திலகம் திரியை ரெகுலராக படித்து வருவீர்கள் என நினைக்கிறேன். நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தைப் பற்றிய தொடர் ஒன்று எழுதி வருகிறேன். அதில் இப்போது தர்மம் எங்கே படம் ஸ்ரீதேவியில் வெளியான் போது நடந்தவற்றை எழுதி வருகிறேன், [நீங்களும் அப்போது அங்கேதான் இருந்திருப்பீர்கள். 1971 ஜூலை சவாலே சமாளி டயத்தில் இருந்தேன் என்று சொளியிருந்தீர்கள். ஆகவே 1972 ஜூலை தர்மம் எங்கே படத்திற்கும் அங்கே இருந்திருக்க வேண்டும்] அதை பற்றி எழுதும்போதெல்லாம் எனக்கு தியேட்டர் நினைவு வந்து மனம் மிக கனமாகி விடுகிறது.. அது போலவே ராஜேஷ் போட்ட நியூசினிமா தியேட்டரின் முகப்பு போட்டோ. அதுவும் எத்தனை எத்தனை இனிய அனுபவங்களை நமக்கு தந்திருக்கிறது? அது போன்றே சிந்தாமணியும். ஒரே ஆறுதல் [இதை ஆறுதல் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை] நியூசினிமாவும் சிந்தாமணியும் இன்று செயல்படவில்லையே தவிர கட்டிடங்கள் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் யோசித்தோமென்றால் இவை எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இரண்டாம் வீடுகளாகவே விளங்கியிருக்கின்றன.[have been second homes to us].
இனியவற்றையும் அல்லாதவற்றையும் ஒரு சேர அனுபவிக்க தந்தற்கு நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th October 2014, 04:59 PM
#123
Junior Member
Newbie Hubber
கீற்று கொட்டாய் மின்னுகிறது. எஸ்.வீ போடும் பதிவுகள் (net ) சுவையாகவே உள்ளது. high light முரளியை ஓடி வர செய்த மதுரை பதிவு. சுவையான பதிவு சின்ன கண்ணன்.(முரளிக்கு எப்பவுமே மதுரை மதுரை மதுரைதான்.)
பொதுவாகவே இந்த தலைப்பு எல்லோர் நினைவலைகள்,சிறு வயது ஏக்கங்கள்,மகிழ்வுகள்,nastolgia ,அழகுணர்ச்சி,அனுபவங்கள்,இழப்புகள் எல்லாவற்றையும் தூண்டி விட சாத்தியகூறு கொண்டது. நிறைய பங்களிக்க போகிறேன். இது வரை போட்டது teaser மட்டுமே. வெங்கி ,நீங்களும் வாருங்கள்.
-
13th October 2014, 08:48 PM
#124
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
அன்புள்ள கண்ணா,
உங்கள் எழுத்து நடையில் ஒரு வசீகரம் இருக்கிறது என்பதை ஏற்கனவே சொல்லிருக்கிறேன். அது மீண்டும் கீற்றுக் கொட்டகையில் வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இளமையின் துள்ளல் கட்டங்களில் எதிர்பாலினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பும் அதை சார்ந்த அனுபவங்களை பதிவு செய்யும்போதும் சுவை கூடுகிறது. இது போன்ற இனிமையான அனுபவங்கள் மட்டும் எத்தனை வருடம் ஆனாலும் எப்போது அசை போட்டாலும் மனதுக்குள் மயிலிறகால் வருடுவது போல் மழைத்துளி விழுவது போல் அத்துனை இனிமையாக இருக்கும் என்பது உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட அனுபவப் பதிவுகளில் எப்போதும் முடிவு சோகமாக(?) [அதன் பிறகு சந்திக்கவேயில்லை என்பது போன்ற] இருப்பதனாலேயே இது மனதிற்கு நெருக்கமாகி விடுகிறது. இது "போன்ற" பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன்.
இந்த இனிமையைப் பற்றி பேசும்போது வேறொரு சோகத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். அதுதான் நமது ஸ்ரீதேவி டாக்கிஸ் இன்று அபார்ட்மெண்டாக மாறி நிற்கும் நிலை. உண்மையிலே மிக மிக சோகமான விஷயம். நீங்கள் நடிகர் திலகம் திரியை ரெகுலராக படித்து வருவீர்கள் என நினைக்கிறேன். நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தைப் பற்றிய தொடர் ஒன்று எழுதி வருகிறேன். அதில் இப்போது தர்மம் எங்கே படம் ஸ்ரீதேவியில் வெளியான் போது நடந்தவற்றை எழுதி வருகிறேன், [நீங்களும் அப்போது அங்கேதான் இருந்திருப்பீர்கள். 1971 ஜூலை சவாலே சமாளி டயத்தில் இருந்தேன் என்று சொளியிருந்தீர்கள். ஆகவே 1972 ஜூலை தர்மம் எங்கே படத்திற்கும் அங்கே இருந்திருக்க வேண்டும்] அதை பற்றி எழுதும்போதெல்லாம் எனக்கு தியேட்டர் நினைவு வந்து மனம் மிக கனமாகி விடுகிறது.. அது போலவே ராஜேஷ் போட்ட நியூசினிமா தியேட்டரின் முகப்பு போட்டோ. அதுவும் எத்தனை எத்தனை இனிய அனுபவங்களை நமக்கு தந்திருக்கிறது? அது போன்றே சிந்தாமணியும். ஒரே ஆறுதல் [இதை ஆறுதல் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை] நியூசினிமாவும் சிந்தாமணியும் இன்று செயல்படவில்லையே தவிர கட்டிடங்கள் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் யோசித்தோமென்றால் இவை எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இரண்டாம் வீடுகளாகவே விளங்கியிருக்கின்றன.[have been second homes to us].
இனியவற்றையும் அல்லாதவற்றையும் ஒரு சேர அனுபவிக்க தந்தற்கு நன்றி!
அன்புடன்
Murali sir, yes "aaruthal is the right word" while many movie halls are becoming muti complex, chinthamani still shines which is little comfort ..
All those memories - Vijayalakshmi, Jeyaraj, Saraswathi, Thangam, chinthamani, cinipriya/minipriya, midland, new cinema, regal, mathi innum niraya niraya
-
14th October 2014, 05:23 AM
#125
Junior Member
Platinum Hubber
வண்ணநிலவன் தன்னுடைய கொட்டகை அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.
இப்போதுபோல் வாரந்தோறும் சினிமா படம் ரிலீசாகும் காலமல்ல அது. மாதத்திற்கு ஒரு படம் வெளி வந்தாலே அபூர்வம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் மூன்று நான்கு படங்கள் வெளியாகும்.
நான் பார்த்த முதல் திரைப்படம் ஜெமினியின் 'சம்சாரம்', திருநெல்வேலி ஜங்கஷனில் பாலஸ் டி.வேல்ஸ் என்ற தியேட்டர் ரயில்வே லயனை ஒட்டி இருந்தது. அந்தத் தியேட்டரில்தான் சம்சாரம் படத்தை என் அப்பாவைப் பெற்ற அம்மாவுடன் (ஆச்சி) பார்த்தேன். சிறு வயதில் பார்த்த பல படங்கள் இன்றும் ஞாபகத்திலிருக்கின்றன. ஜெனோவா, குணசுந்தரி, ஜனக்ஜனக் பாயல்பாஜே.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் டூரிங் டாக்சீஸை 'டெண்ட் கொட்டகை' என்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளில் டூரிங் டாக்கீஸ் என்று தான் பெயர். கூரை தென்னங்கீற்றால் ஆனது. ஆபரேட்டர் ரூம் மட்டும்தான் செங்கல் கட்டிடம். சுற்றுலுமுள்ள காம்பவுண்ட் கூட தென்னங்கீற்றுத் தடுப்புதான். தரை டிக்கெட் என்றால், அசல் தரைதான். மணல் பரப்பியிருப்பார்கள். வெறும் மரப்பலகைகளுக்கு இரண்டு பக்கமும் முடுக் கொடுத்து ஆணியால் அடித்திருப்பார்கள். இதுதான் பெஞ்ச் டிக்கெட். ஆபரேட்டர் ரூமை ஒட்டி ஏழெட்டுப் பிரம்பு நாற்காலிகளைப் போட்டிருப்பார்கள். அதுதான் ஸோபா டிக்கெட்.
ஸோபா டிக்கெட் பகுதி வரை கீழே தரையில் மணலைப் பரப்பியிருப்பார்கள். அதனால் தரை குளிர்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்தில் டூரிங் டாக்கீஸ்களில் மேட்னி ஷோக்களை போட மாட்டார்கள். இரவு நடைபெறும் இரண்டே காட்சிகள்தான். மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த திரைப்படங்களைத்தான் திரையிடுவார்கள்.
என்னுடைய சொந்த ஊரானா தாதன்குளம் என்ற கிராமம், திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. எங்கள் ஊரின் வடக்குப் பகுதியில் வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலைத் தாண்டிப் போனால் கருங்குளம் என்ற ஊர் வரும். எங்கள் ஊருக்கும் கருங்குளத்துக்கும் நடுவே பிரதான சாலையில் ஒரு ரைஸ்மில் உண்டு. சுற்றுப் பகுதியிலுள்ள பல ஊர்களுக்கு இந்த மில் ஒன்று தான் பயன்பட்டு வந்தது.
இந்த ரைஸ்மில்லின் உரிமையாளருக்கு நாசரேத். தினசரி ரயிலில் தாதன்குளம் ஸ்டேஷனில் வந்திறங்கி, அதேபோல் மாலை ரயிலில் மீண்டும் தன் ஊருக்குத் திரும்புவார். 1960-ம் ஆண்டு வாக்கில் இந்த மில் உரிமையாளர், தனது ரைஸ் மில் அருகிலிருந்த காலியிடத்தில் ஒரு டூரிங் டாக்கீசை ஆரம்பித்தார். 'ரீகல்' டூரிங் டாக்கீஸ் என்று பெயர் வைத்தார். அப்போது எங்கள் குடும்பம் கருங்குளத்துக்குக் குடியேறியது. ஸ்ரீவைகுண்டம் குமரகுபேர சுவாமிகள் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது படித்து வந்தேன்.
தினசரி பஸ்ஸில் ஸ்ரீவைகுண்டம் சென்று படித்து வந்தேன். ரீகல் டூரிங் டாக்கீஸில் மானேஜராக அப்பாவின் நெருங்கிய நண்பர் கொம்பையா வேலை பார்த்து வந்தார். அநேகமாக எல்லா சனி, ஞாயிறுகளிலும் இந்த டூரிங் டாக்கீசுக்குப் படம் பார்க்கச் சென்று விடுவேன். கொம்பையா மாமா என்னை பெஞ்ச் டிக்கெட்டில் உட்கார வைத்து விடுவார். எங்கள் குடும்பத்திலிருந்து எத்தனை பேர் சென்றாலும் டிக்கெட் வாங்க விட மாட்டார் மாமா.
அந்த நாட்களில் எங்கள் பக்கத்துக் கிராமங்களில் மின்சாரம் கிடையாது. ஆங்காங்கே மினுக் மினுக்கென்று எரியும் லாந்தர் விளக்குகள் தான் எங்காவது மூலைக்கொன்று எரிந்து கொண்டிருக்கும். அதனால் சினிமா பார்க்கச் செல்லும்போது கையோடு ஒரு அரிக்கேன் விளக்கையும் எடுத்துச் செல்வோம். அந்த அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் இரவு வீடு வந்து சேர வேண்டும். பக்கத்தில் அரிக்கேன் விளக்கை வைத்துக் கொண்டு படம் பார்ப்பது வேடிக்கையாகப் படலாம். ஆனால், அந்தக் காலத்தல் இது சர்வ சாதாரணமானது.
காட்சி துவங்குவதற்கு முன்னால் டாக்கீஸின் மேல் கட்டப்பட்டிருக்கும் நீளமான குழாய் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவார்கள். முதல் காட்சி ஏழு, ஏழே காலுக்குச் சாவகாசமாகத் துவங்கும். தரை டிக்கெட் 25 பைசா. பெஞ்ச் டிக்கெட் 39 பைசா. ஸோபா 75 பைசா. 27 பைசா இருந்தால் தரை டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஒரு முறுக்கும் சாப்பிடலாம். ஒரு முறுக்கின் விலை 2 பைசாதான். டீ 5 பைசா. அது ஆறு பைசாவுக்கு இரண்டு வாழைப்பழம் விற்ற காலம்.
ரீகல் டூரிங் டாக்கிஸில் நான் பார்த்த முதல் படம் சிவாஜிகணேசன் நடித்த காத்தவராயன் படம்தான். அன்னையின் ஆணை, திருமணம், சுமங்கலி, என்று பல படங்களை அந்த டூரிங் டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்துப் படங்களெல்லாம் மூன்று மணி நேரம் ஓடும். ஒவ்வொரு படமும் 18 ரீல்கள் இருக்கும். டூரிங் தியேட்டர்கள் டபுள் புரொஜக்டர்கள் கிடையாது. சிங்கிள் புரொஜக்டர்தான் அதனால் நான்கு முறை படத்தை நிறுத்தி நிறுத்தி ரீலை மாட்டி ஓட்டுவார்கள். முதல் காட்சி முடியும்போது இரவு பத்து மணியாகி விடும். இரண்டாவது காட்சி இரண்டு மணிவாக்கில்தான் முடியும்.
சிவகங்கைச் சீமை இரண்டாவது காட்சிக்குச் சென்று வந்தது. இன்றும் நினைவிருக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த சிறிது நேரத்தில் விடிந்து விட்டது. ஆற்றுக்குக் குளிக்கக் கூட்டிக் கொண்டு போக நண்பர்கள் வந்து விட்டார்கள். எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள சேரகுளம், கார்சேரி, முள்ளிக்குளம் போன்ற ஊர்களிலுள்ளவர்களுக்கு சினிமா பார்க்க வேண்டுமென்றால் ரீகல் டூரிங் டாக்கீசுக்குத்தான் வரவேண்டும். 1961ல் பாளையங்கோட்டைக்கு எங்கள் குடும்பம் குடிபெயரும் வரை ரீகல் டூரிங் டாக்கீஸ்தான் எனது சினிமா பார்க்கும்ஆசையைப் பூர்த்தி செய்து வந்தது.
I
என் ஆரம்பக்கல்வி திருநெல்வேலி டவுனில்தான் நடந்தது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில். பாளையங்கோட்டையில் இருந்தபோதுதான் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. 61,62 லேயே ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் ஸைக்கோ, ரியர் ஷண்டோ போன்ற படங்களைப் பார்க்க முடிந்தது.அப்போது பார்வதி டாக்கீஸீல் ஏராளமான ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன. கான் வித் த விண்ட், கவுண்ட் ஆஃப் மியூஸிக், பென்ஹர், டென்கமாண்மெண்டஸ், ஹன்ச்பேக் ஆஃப் நாட்டர்டேம், ஜெர்ரி லூயிஸின் பல அற்புதமான நகைச்சுவைப் படங்களை எல்லாம் பார்வதி டாக்கீஸில்தான் பார்த்தேன்.
தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை நான் ஸ்ரீதருடைய ரசிகன். கே. பாலசந்தர் வந்த பிறகு அந்த ரசனை அவர் பக்கம் திரும்பிற்று. கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏபி.நாகராஜன் போன்ற பிற இயக்குனர்களின் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். என்றாலும் ஸ்ரீதரும், பாலசந்தரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். 59,60ல் எங்கள் குடும்பம் திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையிலுள்ள கருங்குளம் என்ற சிற்றூரில் வாழ நேர்ந்தது.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th October 2014, 09:21 AM
#126
Junior Member
Platinum Hubber
கிராமத்தின் விடியற்காலைகள் வேப்பம்பழக்காலங்களில் காக்கைகளின் கூக்குரலோடு விடியும். அதுவும் வேப்பம்பழக்கால ஆரம்பித்த ஓரிரு நாட்களில் வேம்பின் வாசம் ஒரு வித போதையூட்டும் . வீட்டின் வாசலில் இருந்த பெரிய வேப்பமரம் நல்ல காற்றுக்கும் விடுமுறை நாட்களில் ஊஞ்சல் கட்டி ஆடுவதற்கும் வசதியாக இருந்தது அதுவும் என் வீட்டில் காரின் டயர் இருந்தது டயரின் இரு முனையிலும் கயிறைக்கட்டி ஊஞ்சலாடுவது எங்கள் தெருவின் அனைத்துப்பசங்களுக்குமே ஒரு கனவு. வீட்டின் எதிரில் ஆறு , வீட்டின் பக்கத்தில் சாலை என பலவிதங்களில் எனக்குப் பெருமை தேடித்தந்தது என் வீடு. அதே நேரத்தில் தண்டனைகளின் போதும் ஊர் முழுவதும் எளிதில் செய்திப்பரவிடவும் அந்த இடமைப்பு ஒரு பெரிய தொல்லையாகவும் இருந்தது.
ஊரில் பெரும்பாலான வீடுகளின் வாசலிலோ கொல்லைப்புறங்களிலோ கட்டாயம் ஒரு வேப்பமரமாவது இருக்கும் கிராமத்தில். அதுவும் என் வீட்டில் ஒரு வேப்பமரமும் வீட்டிற்கு எதிரிலிருக்கும் முனீஸ்வரனின் கோவிலில் ஒரு பெரிய வேம்பும் இருந்தது. கோவில் வேம்புக்கும் அரசமரத்திற்கும் கல்யாணம் நடந்திருந்ததால் அதன் மேல் ஏறுவது தெய்வக்குற்றம் என்று பெரிதாக பேசப்பட்ட காலம் அது. எனக்கோ முனீஸ்வரனுக்கு அதன் மேல் பெரிதாய் நம்பிக்கையில்லை.
கிராமத்திலிருந்து இரண்டாவது கிமீட்டரில் சங்கரன்பந்தல் என்றொரு சிற்றூர் இருக்கிறது. அது எங்களின் கனவு ஊர் ஏனென்றால் அங்குதான் ஓடியன் தியேட்டர் இருந்தது. சிறு வயதில் எங்களின் பெரிய கனவுகளில் ஒன்று எங்களின் வீடுகள் சங்கரன்பந்தலுக்கு மாறிட வேண்டுமென்பதும் தினமும் படம் பார்க்க வேண்டுமென்பதாகவும் இருந்தது.
கிட்டத்தட்ட என் பதினொன்றாம் வயதில் அந்த தியேட்டரின் பெஞ்ச் டிக்கெட்டின் விலை 60 பைசா. பேக் பெஞ்ச் டிக்கெட்டின் விலை 1.20 பைசா. முன்னால் மணல்குவித்து உட்காருமிடத்தின் விலை 45 பைசா. எங்களுக்கு எப்போதுமே பேக் பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்த்திட துடித்தாலும் அப்போதைய பொருளாதார நிலை பெஞ்ச் கிளாஸின் 60 பைசாவில் தள்ளிடும் எப்போதும்.
பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் மட்டுமே வரும்.அதுவும் ஒரு எம்ஜிஆர் படமென்றால் அடுத்த படம் சிவாஜி படம். அதுவும் எம்ஜிஆர் படங்கள் மாதக்கணக்கில் ஓடும் . இந்த நிலையில் தான் ஆயிரத்தில் ஒருவன் வந்தது. எம்ஜிஆரின் படங்களைப்பற்றி நிறையக்கதைகள் சொல்ல எங்களூரின் துருத்தி ஆசாரி இருந்தார். தீவிர எம்ஜிஆர் ரசிகர் அவர். எப்போதும் தலைவரைப்பற்றி பேசியபடியே இருப்பார். மாயூரம் கூட்டத்தில் தலைவர்க்கு இந்தக்கையை கொடுத்தேன் என்றபடி அவரின் கைகளைக்கண்களில் ஒத்திக்கொள்ளும் பக்தர். அவர் சொல்லும் எம்ஜிஆரின் படக்கதைகளைக் கேட்கவே சனி , ஞாயிறுகளில் பசங்களின் கூட்டம் கொல்லுப்பட்டறையில் நிரம்பி வழியும். அவர் கதைகள் சொல்லியபடியே தேவையான வேலையையும் வாங்கிக்கொள்வார்.
ஆசாரியின் கதையில் மதி மயங்கி வாழ்நாளில் எப்படியாவது ஆயிரத்தில் ஒருவன் படத்தைப்பார்த்திட வேண்டும் என்கிற நிலைக்குத்தள்ளப்பட்ட நாளொன்றில் ஓடியன் தியேட்டரின் நோட்டீஸ்கள் எங்களூரில் மூன்று இடங்களில் மட்டுமே ஒட்டப்படும் காலமது. ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தது ஓடியன் தியேட்டருக்கு.
அதுவும் ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ என்ற பாட்டை முழுவதும் ஆசாரி நடித்தே காண்பித்திருந்தார். நம்பியாரின் வில்லத்தனம் , கப்பல் , கடற்கொள்ளை, நாகேஷ் , ஜெயலலிதா என்று ஒரு வாரம் முழுக்க கதைக்கேட்டுவிட்ட நிலையில் படம் வந்திருந்தது.
இப்போது எங்கள் முன் இருந்த பெரிய பிரச்சனை பள்ளி நாளில் படத்திற்கு போக முடியாது, போவதாயிருந்தால் முதலில் காசு இல்லை, இரண்டாவது சங்கரன்பந்தலுக்கு இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்கு போய்விட்டு திரும்பும் தைரியம் இருந்தாலும் வீட்டில் விட மாட்டார்கள்.
ஒரு வாரத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் மாறிப்போக போவதான வதந்தி வேறு எங்களின் வயிற்றில் புளிக்கரைத்துக்கொண்டிருந்தது. பள்ளியில் முழுக்க ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு போவதான பேச்சு வேறு எரிச்சலைக்கிளப்பிக் கொண்டிருந்தது.
அம்மாவிடம் கெஞ்சிக்கூத்தாடி பார்த்தும் சினிமா பார்க்க விட முடியாதென்று விட்டாள். எம்ஜிஆர் படமென்றாலும் இரண்டாம் ஆட்டம் போவதென்றால் நாவமரங்களைக்கடந்து போக வேண்டுமென்பதாலும் அந்த நாவ மரத்தில் மோகினிப்பேய் இருப்பதாய் பல கால பேச்சு என்பதாலும் பிடிவாதமாய் மறுத்து விட்டாள். இனி அம்மாவிடம் பேசிப்பயனில்லை என்று முடிவு செய்தேன். ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் வாளோடு நிற்கும் போஸ்ட்டரை நள்ளிரவில் பிய்த்து வந்து வீட்டின் கதவுக்குப்பின்னால் ஒட்டி வைத்தேன்.
இதனிடையே இரண்டு நாள் போய் விட்டிருந்தது. அப்போதுதான் சாதிக் வந்தான் உலக மகா யோசனையோடு. வேப்பப்பழக்காலமது. ஊர் முழுவதும் வேப்பப்பழங்கள் கொட்டி தெருவெங்கும் சிதறி நசுங்கி வாசமெடுக்கும் காலமது. வேப்பபழங்களைப்பொறுக்கி விற்பதுதான் அந்த யோசனை. படி 10 பைசா என்றும் சனிக்கிழமைக்குள் ஆளுக்கு ஆறு படிகள் சேர்த்திட்டால் சனிக்கிழமை மதியக்காட்சிக்கு எவருக்கும் தெரியாமல் போய்விட்டு சாயங்காலம் ஆறு மணிக்குள் வீட்டிற்குத் திரும்பிடலாம் என்பதுதான் அந்த யோசனை. எனக்கும் வெகு எளிதான யோசனையாகவே பட்டது. தினமும் அம்மா தெருக்கூட்டி ஒதுக்கி வைத்திருக்கும் வேப்பம்பழங்களை எடுத்தாலே ஆறு படி மூன்று நாட்களில் தேறிடும் என்பதால், சாதிக் ஆயிரத்தில் ஒருவன் பாத்திட்டோம்னு நினைச்சுக்க என்றேன்.
அந்த சாயங்காலமே என் கனவில் பெரிய மண் விழுந்தது. அம்மா சேர்த்து வைத்த வேப்பப்பழங்கள் நாத்தங்காலில் போடுவதற்காய் அப்பா எடுத்துக்கொண்டு போய்விட்டிருந்தார். தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்து விடியற்காலையில் முழிப்பு வந்தவுடன் எழுந்து வாசலுக்கு ஓடினேன்.
பார்த்தால் ஊரின் குஞ்சுக்குளுவான்களெல்லாம் ஆளுக்கொரு பையுடன் வேப்பப்பழம் பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். சாதிக்கைப்பார்க்க அவனோ வெகுவாய் அழுகிற முகபாவத்துடன் தான் ஒரே ஒருவனிடம் மட்டும் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்கப்போகும் யோசனையை சொன்னதாகவும் அதுவும் ஒரு வெல்லக்கட்டி வாங்கித் தின்றதற்கு பதிலாய் சொன்னதாகவும் அது இப்படி ஊருக்கே தெரிந்த ரகசியமாகிவிட்டதாகவும் சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கோ அதலபாதாளத்தில் குரல் கேட்பதாயிருந்தது.
ஊர் முழுக்க தெருவில் இருந்த வேப்பமரங்களை மொட்டையடித்துப்போயிருந்தார்கள் தெருப்பசங்கள். இப்போது எங்கள் முன்னால் இருந்தது முனீஸ்வரனின் வேப்பமரம். அரசமரத்தோடு பின்னிப்பிணைந்து வானத்துக்கும் பூமிக்குமாய் வளர்ந்து நிற்கும் வேம்பு அதுவும் முழுவதுமாய் அரச மரத்துக்குள் புதைந்து கிளைகள் மட்டும் வெளியில் தெரிய ராட்சச அரக்கனாய் தெரியும் வேம்பு. ஒரு பயலும் சாமிக்குப்பயந்து அந்த மரத்தின் பக்கம் மட்டும் போகவில்லை. நான் சாதிக்கைத்தனியா தள்ளிக்கொண்டு போய் திட்டத்தை விளக்கினேன். சாயங்காலம் ஏழு மணிக்கு மேல் ஒரு பயலும் முனீஸ்வரன் கோவிலின் பக்கம் போக மாட்டார்கள். விளக்கு வெளிச்ச ஏதுமில்லாமல் சூலமும் அரசமரமும் வேப்ப மரமுமாய் பறவைகளின் சப்தங்களோடு சில்வண்டுகளின் சப்தமும் பயமுறுத்திட , இரவு நேரத்தில் வெள்ளைக்குதிரையில் முனீஸ்வரன் உலா வருவதாய் சொல்லப்பட்ட கதையின் காரணமாகவும் அந்த நேரத்தில் குறுக்கே போகிறவர்கள் ரத்தம் கக்கி செத்துப்போய்விட நேரிடும் என்பதாலும் ஒரு காக்கா குருவிக் கூட இருட்டியப் பின் அந்த பக்கம் போவதில்லை.
முதலில் பயந்து வர மறுத்த சாதிக் , எம்ஜிஆரின் வாள் வீசும் போஸ்ட்டரைக்காட்டிய பின் ஒரு அரைமனதாக ஒப்புக்கொண்டான். ஏதோ ஒரு வேகத்தில் இதை சொல்லி விட்டாலும் இரவில் மரமோ ஒரு ராட்சச அரக்கனாய் முணுமுணுத்துக்கொண்டு காத்திருப்பதாய் பயமேற்பட்டது.
இருவரும் ஆளுக்கொரு பையுடன் வரவழைத்துக்கொண்ட தைரியத்துடன் கோவில் மரத்துக்குக் கீழாய் காலால் கூட்டி சேர்க்கத்துவங்கினோம். அரை மணி நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க இரு பையையும் நிரப்பி விட்டிருந்தோம். இப்போது பிரச்சனை எங்கு கொண்டு வைப்பது என்பதில் இருந்தது. வீட்டில் வைத்தால் அப்பா வயலுக்குக்கொண்டு போய்விடுவார். அம்மாவுக்கு தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டும் எங்கு வைக்கலாம் என்ற யோசனையின் முடிவில் சாதிக் வீட்டின் சந்துக்குள் ஒளித்து வைத்திட முடிவெடுத்தோம்.
சனிக்கிழமையின் முடிவில் கோவில் மரத்தை முழுவதும் சுத்தம் செய்திருந்தோம். காலையிலிருந்தே வேப்பம்பழக்காரனைத் தேடிக்கொண்டிருந்தோம். எங்க எந்த வியபாரி போனாலும் வேப்பம்பழம் வாங்கிறீங்களா என்று கேட்டு அலைந்துக்கொண்டிருந்தோம்.
வந்தான்யா கடைசியா ஆறு மணிக்கு வியாபாரி, நாங்களோ அரைச்சாக்கை தூக்கமுடியாமல் தூக்கி வந்து பெருமையாக பார்த்தோம். அவனோ இவ்ளோதானா இருக்கு என்றபடி எடுத்தான் படியை.
எனக்கோ அதுவரை என் வீட்டின் ஒரு லிட்டர் அளக்கும் அரிசிப்படி ஞாபகம்தான் இருந்தது. அவன் வைத்திருந்த படியோ தகரத்தில் செய்யப்பட்ட படியாய் ஒரு மரக்கால் அளவுக்கொள்ளுமாய் இருந்தது. எங்களின் அரைச்சாக்கு வேப்பம்பழம் வெறும் ஐந்து படிகளில் முடிந்து போயிருந்தது.
அதிலும் நான்கு நாட்களில் பழங்கள் காய்ந்துப்போய் விட்டதால் அளவு இன்னும் குறைந்துப்போய் விட்டிருந்தது. நாப்பது பைசா மட்டுமே தரமுடியுமென்றும் அவன் பேரம் பேசத்துவங்க எனக்கு தூரமாய் எம்ஜிஆர் நகர்ந்துப் போய்க்கொண்டிருப்பதாய் பட்டது.
ஐம்பது பைசாவை சாதிக் சண்டைப்போட்டு வாங்கி விட்டிருந்தான், அதுவரை கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் கனவோடு இருந்த நானும் அவனும் நொந்துப்போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்.
இன்னும் நாப்பது பைசா தேறினால் மண் டிக்கெட்டுக்காவது படத்திற்கு போகலாம் என்றான் சாதிக். வேறு என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டிக்கொண்டுருக்கையிலே அம்மா தலைவிரிக்கோலமாய் வந்து ஆளுக்கொரு அடியை முதுகில் வைத்தாள். முனீஸ்வரன் கோவில் வேப்பம்பழம் விவகாரத்தை அதற்குள் யாரோ சிண்டு முடித்து வைத்திருந்தார்கள்.
கையில் வைத்திருந்தக் காசைப்பிடுங்கி 25 காசுக்கு சூடமும் வாங்கிக்கொளுத்த செய்தாள், 25 காசை உண்டியலிலும் போட செய்தாள். ஞாயிறு முழுவதும் ஆற்றுத்தண்ணீர் கொண்டு வந்து கோவிலை சுத்தம் செய்ய வைத்தாள். ஆளுக்கு ஐம்பது தோப்புக்கரணம் வேற.
வீட்டிக்குள் வைத்து சிறப்பு அடி வேறு கிடைத்தது. கதவின் பின்னால் எம்ஜிஆர் வாள் வீசும் போஸ்ட்டரில் பார்த்துக்கொண்டிருந்தார்.
--
- கென் -
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2014, 10:43 AM
#127
Senior Member
Senior Hubber
///அன்புள்ள கண்ணா,
நியூசினிமாவும் சிந்தாமணியும் இன்று செயல்படவில்லையே தவிர கட்டிடங்கள் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் யோசித்தோமென்றால் இவை எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இரண்டாம் வீடுகளாகவே விளங்கியிருக்கின்றன.[have been second homes to us]. /// அன்பின் முரளி சார்.. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும்..அண்ட் உங்கள் நினைவலைகளுக்கும்.. ஸாரி நேற்றே என்னால் எழுத இயலவில்லை..
ஸ்ரீதேவி - எங்கிருந்தோ வந்தாள், தர்மம் எங்கே, சவாலே சமாளி நாளை நமதே இன்னும் பல படங்க்ள் வெகுசின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.. அம்மா, சகோதரிகளுடன் தான் பின் கொஞ்சம் வளர்ந்த பிறகு பற்பல படங்கள்..ம்ம் இன்னொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்..
கோபால் சார் மிக்க நன்றி..
ராஜேஷ் ஜெயராஜ் விஜயலஷ்மி.மினிப் ப்ரியா சினிப்ரியா.. நீங்க ஆற்றுக்கு அந்தக்கரைப்பக்கமா இருந்தீர்கள்..அண்ணா நகர் கேகே நகர்..?..
-
14th October 2014, 12:59 PM
#128

Originally Posted by
esvee
வண்ணநிலவன் தன்னுடைய கொட்டகை அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.
இப்போதுபோல் வாரந்தோறும் சினிமா படம் ரிலீசாகும் காலமல்ல அது. மாதத்திற்கு ஒரு படம் வெளி வந்தாலே அபூர்வம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் மூன்று நான்கு படங்கள் வெளியாகும்.
நான் பார்த்த முதல் திரைப்படம் ஜெமினியின் 'சம்சாரம்', திருநெல்வேலி ஜங்கஷனில் பாலஸ் டி.வேல்ஸ் என்ற தியேட்டர் ரயில்வே லயனை ஒட்டி இருந்தது. அந்தத் தியேட்டரில்தான் சம்சாரம் படத்தை என் அப்பாவைப் பெற்ற அம்மாவுடன் (ஆச்சி) பார்த்தேன். சிறு வயதில் பார்த்த பல படங்கள் இன்றும் ஞாபகத்திலிருக்கின்றன. ஜெனோவா, குணசுந்தரி, ஜனக்ஜனக் பாயல்பாஜே.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் டூரிங் டாக்சீஸை 'டெண்ட் கொட்டகை' என்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளில் டூரிங் டாக்கீஸ் என்று தான் பெயர். கூரை தென்னங்கீற்றால் ஆனது. ஆபரேட்டர் ரூம் மட்டும்தான் செங்கல் கட்டிடம். சுற்றுலுமுள்ள காம்பவுண்ட் கூட தென்னங்கீற்றுத் தடுப்புதான். தரை டிக்கெட் என்றால், அசல் தரைதான். மணல் பரப்பியிருப்பார்கள். வெறும் மரப்பலகைகளுக்கு இரண்டு பக்கமும் முடுக் கொடுத்து ஆணியால் அடித்திருப்பார்கள். இதுதான் பெஞ்ச் டிக்கெட். ஆபரேட்டர் ரூமை ஒட்டி ஏழெட்டுப் பிரம்பு நாற்காலிகளைப் போட்டிருப்பார்கள். அதுதான் ஸோபா டிக்கெட்.
ஸோபா டிக்கெட் பகுதி வரை கீழே தரையில் மணலைப் பரப்பியிருப்பார்கள். அதனால் தரை குளிர்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்தில் டூரிங் டாக்கீஸ்களில் மேட்னி ஷோக்களை போட மாட்டார்கள். இரவு நடைபெறும் இரண்டே காட்சிகள்தான். மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த திரைப்படங்களைத்தான் திரையிடுவார்கள்.
என்னுடைய சொந்த ஊரானா தாதன்குளம் என்ற கிராமம், திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. எங்கள் ஊரின் வடக்குப் பகுதியில் வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலைத் தாண்டிப் போனால் கருங்குளம் என்ற ஊர் வரும். எங்கள் ஊருக்கும் கருங்குளத்துக்கும் நடுவே பிரதான சாலையில் ஒரு ரைஸ்மில் உண்டு. சுற்றுப் பகுதியிலுள்ள பல ஊர்களுக்கு இந்த மில் ஒன்று தான் பயன்பட்டு வந்தது.
இந்த ரைஸ்மில்லின் உரிமையாளருக்கு நாசரேத். தினசரி ரயிலில் தாதன்குளம் ஸ்டேஷனில் வந்திறங்கி, அதேபோல் மாலை ரயிலில் மீண்டும் தன் ஊருக்குத் திரும்புவார். 1960-ம் ஆண்டு வாக்கில் இந்த மில் உரிமையாளர், தனது ரைஸ் மில் அருகிலிருந்த காலியிடத்தில் ஒரு டூரிங் டாக்கீசை ஆரம்பித்தார். 'ரீகல்' டூரிங் டாக்கீஸ் என்று பெயர் வைத்தார். அப்போது எங்கள் குடும்பம் கருங்குளத்துக்குக் குடியேறியது. ஸ்ரீவைகுண்டம் குமரகுபேர சுவாமிகள் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது படித்து வந்தேன்.
தினசரி பஸ்ஸில் ஸ்ரீவைகுண்டம் சென்று படித்து வந்தேன். ரீகல் டூரிங் டாக்கீஸில் மானேஜராக அப்பாவின் நெருங்கிய நண்பர் கொம்பையா வேலை பார்த்து வந்தார். அநேகமாக எல்லா சனி, ஞாயிறுகளிலும் இந்த டூரிங் டாக்கீசுக்குப் படம் பார்க்கச் சென்று விடுவேன். கொம்பையா மாமா என்னை பெஞ்ச் டிக்கெட்டில் உட்கார வைத்து விடுவார். எங்கள் குடும்பத்திலிருந்து எத்தனை பேர் சென்றாலும் டிக்கெட் வாங்க விட மாட்டார் மாமா.
அந்த நாட்களில் எங்கள் பக்கத்துக் கிராமங்களில் மின்சாரம் கிடையாது. ஆங்காங்கே மினுக் மினுக்கென்று எரியும் லாந்தர் விளக்குகள் தான் எங்காவது மூலைக்கொன்று எரிந்து கொண்டிருக்கும். அதனால் சினிமா பார்க்கச் செல்லும்போது கையோடு ஒரு அரிக்கேன் விளக்கையும் எடுத்துச் செல்வோம். அந்த அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் இரவு வீடு வந்து சேர வேண்டும். பக்கத்தில் அரிக்கேன் விளக்கை வைத்துக் கொண்டு படம் பார்ப்பது வேடிக்கையாகப் படலாம். ஆனால், அந்தக் காலத்தல் இது சர்வ சாதாரணமானது.
காட்சி துவங்குவதற்கு முன்னால் டாக்கீஸின் மேல் கட்டப்பட்டிருக்கும் நீளமான குழாய் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவார்கள். முதல் காட்சி ஏழு, ஏழே காலுக்குச் சாவகாசமாகத் துவங்கும். தரை டிக்கெட் 25 பைசா. பெஞ்ச் டிக்கெட் 39 பைசா. ஸோபா 75 பைசா. 27 பைசா இருந்தால் தரை டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஒரு முறுக்கும் சாப்பிடலாம். ஒரு முறுக்கின் விலை 2 பைசாதான். டீ 5 பைசா. அது ஆறு பைசாவுக்கு இரண்டு வாழைப்பழம் விற்ற காலம்.
ரீகல் டூரிங் டாக்கிஸில் நான் பார்த்த முதல் படம் சிவாஜிகணேசன் நடித்த காத்தவராயன் படம்தான். அன்னையின் ஆணை, திருமணம், சுமங்கலி, என்று பல படங்களை அந்த டூரிங் டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்துப் படங்களெல்லாம் மூன்று மணி நேரம் ஓடும். ஒவ்வொரு படமும் 18 ரீல்கள் இருக்கும். டூரிங் தியேட்டர்கள் டபுள் புரொஜக்டர்கள் கிடையாது. சிங்கிள் புரொஜக்டர்தான் அதனால் நான்கு முறை படத்தை நிறுத்தி நிறுத்தி ரீலை மாட்டி ஓட்டுவார்கள். முதல் காட்சி முடியும்போது இரவு பத்து மணியாகி விடும். இரண்டாவது காட்சி இரண்டு மணிவாக்கில்தான் முடியும்.
சிவகங்கைச் சீமை இரண்டாவது காட்சிக்குச் சென்று வந்தது. இன்றும் நினைவிருக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த சிறிது நேரத்தில் விடிந்து விட்டது. ஆற்றுக்குக் குளிக்கக் கூட்டிக் கொண்டு போக நண்பர்கள் வந்து விட்டார்கள். எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள சேரகுளம், கார்சேரி, முள்ளிக்குளம் போன்ற ஊர்களிலுள்ளவர்களுக்கு சினிமா பார்க்க வேண்டுமென்றால் ரீகல் டூரிங் டாக்கீசுக்குத்தான் வரவேண்டும். 1961ல் பாளையங்கோட்டைக்கு எங்கள் குடும்பம் குடிபெயரும் வரை ரீகல் டூரிங் டாக்கீஸ்தான் எனது சினிமா பார்க்கும்ஆசையைப் பூர்த்தி செய்து வந்தது.
I
என் ஆரம்பக்கல்வி திருநெல்வேலி டவுனில்தான் நடந்தது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில். பாளையங்கோட்டையில் இருந்தபோதுதான் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. 61,62 லேயே ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் ஸைக்கோ, ரியர் ஷண்டோ போன்ற படங்களைப் பார்க்க முடிந்தது.அப்போது பார்வதி டாக்கீஸீல் ஏராளமான ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன. கான் வித் த விண்ட், கவுண்ட் ஆஃப் மியூஸிக், பென்ஹர், டென்கமாண்மெண்டஸ், ஹன்ச்பேக் ஆஃப் நாட்டர்டேம், ஜெர்ரி லூயிஸின் பல அற்புதமான நகைச்சுவைப் படங்களை எல்லாம் பார்வதி டாக்கீஸில்தான் பார்த்தேன்.
தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை நான் ஸ்ரீதருடைய ரசிகன். கே. பாலசந்தர் வந்த பிறகு அந்த ரசனை அவர் பக்கம் திரும்பிற்று. கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏபி.நாகராஜன் போன்ற பிற இயக்குனர்களின் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். என்றாலும் ஸ்ரீதரும், பாலசந்தரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். 59,60ல் எங்கள் குடும்பம் திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையிலுள்ள கருங்குளம் என்ற சிற்றூரில் வாழ நேர்ந்தது.
எஸ்வி சார்
திரு வண்ணநிலவன் டூரிங் கொட்டகை அனுபவம் அருமை.
இந்த ஸ்ரீவைகுண்டம் தான் நான் பிறந்த ஊர் .60 களில் இந்த ரீகல் கொட்டகை மிகவும் famous .அவர் கூறியது போல் ஒரே கொட்டகை . இதற்கு அருகில் தான் கருங்குளம் ஊர் .ஸ்ரீவைகுண்டம் ஊரில் இருந்து 8 km தூரம்.
கருங்குளம். பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கி அவர்கள் சொல்வது போல் திருநெல்வேலி திருசெந்தூர் ராஜபாட்டையில் உள்ள சிற்றூர். இங்கு தான் 'இன்று முதல்' சிகப்பு கலர்,மஞ்சள் கலர்,நீல கலர் போஸ்டர் எல்லாம் ஓட்டுவார்கள். போஸ்டர் இறுதியில் 'பாட்டு சண்டை அருமை .கண்டிப்பாக இரண்டு தினங்கள் மட்டும்' என்று இருக்கும். இந்த வாசகம் எல்லா போஸ்டர்களிலும் கான்ஸ்டன்ட் ஆக பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும். பின் ஒரு டிசைன் போட்டு செல்வி ,ஸ்ரீவை என்று இருக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்று நண்பர்கள் எல்லோரும் சண்டை போட்டு கொள்வோம் . அப்போது நான் கொஞ்சம் புத்திசாலி .(சினிமா பார்ப்பதில் மட்டும்). அது 'செல்வி அச்சகத்தில் அட்சடிகப்படது ' என்று சொல்லி காலரை தூக்கி விட்டு கொள்வேன்.
இதற்கு விடை தெரியாதவர்கள் எல்லாம் இன்று அமெரிக்கா ,இங்கிலாந்த் ,ஜப்பான் என்று வெளிநாடுகளில் குப்பை கொட்டுகிறார்கள் . விடை சொன்ன நான் தமிழ்நாட்டில் ஜல்லி அடித்து கொண்டு இருக்கிறேன் 
ஸ்ரீவைகுண்டம் ஊர் ராஜபாட்டையில் இருந்து 2 km உள்ளே போக வேண்டும்.நடுவில் தாம்பிரபரணி ஆறு ஓடி கொண்டு இருக்கும். முதலில் தாம்போதி என்ற சிறு பாலம் இருந்த நினைவு . பின்னாட்களில் பெரிய பாலம் கட்டிய நினைவு. அங்கு இருந்து சைக்கிள் மிதித்து கொண்டு கருங்குளம் வந்து போஸ்டர் பார்த்து விட்ட சென்ற நினைவு .உண்டு
துடிக்கும் துப்பாக்கி,துப்பாக்கியே துணை,கத்தி குத்து கந்தன் (எல்லாம் ரங்கராவ் நடித்த டப்பிங் படங்கள் ) பார்த்த நினைவு உண்டு. ஜெய், ரவி நடித்த 'நாம் மூவர்' ஒரு தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு தினம் மட்டும் போட்டு தீபாவளிக்கு முன் தினம் இரவு காட்சி பார்த்த நினைவு . இரவு இரண்டு மணிக்கு படம் பார்த்து விட்டு அண்ணனின் சைக்கிள் இல் doubles சென்ற நினைவு. அவர் நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற பொறுப்பில் இருந்தார் 68-70 களில்.
பின்னாட்களில் அருகில் உள்ள இன்னொரு கிராமம் செய்துங்க நல்லூர் என்று பெயர் .அங்கே சென்ட்ரல் என்று ஒரு டூரிங் கொட்டகை திறந்தார்கள் .ஜி ஆர் எட்மண்ட் என்று மந்திரி (மக்கள் திலகம் முதல் அமைச்சரவையில் கல்வி மந்திரி) திறந்த நினைவு. இதற்கு எல்லாம் புகை படம் என்னிடம் இல்லை . ஆனால் இப்போது தான் தெரிகிறது புகை படம் சேகரிக்காதது எவ்வளவு பெரிய தவறு என்று .70 களில் படிப்பிற்காக திருநெல்வேலியில் குடியேறினோம் .
மலரும் நினைவை மீட்டியதற்கு நன்றி எஸ்வி சார்
மன்னிக்கவும் என்னால் regal கொட்டகை,சென்ட்ரல் கொட்டகை புகைப்படம் கொடுக்க முடியவில்லை .அதற்கு பதிலாக அந்த ஊர் கருங்குளம் பின்னணியை கொடுக்கிறேன்.

தாமிரபரணி ஆறு பிரிக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊர்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th October 2014, 01:49 PM
#129
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணா ஜி.. ஸ்ரீ வைகுண்டம் கருங்குளம் நினைவுகள் நன்று.. புகைக்கபடங்கள் அருமை..ம்ம்
-
14th October 2014, 03:37 PM
#130
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
உங்கள ஊர் வரலாற்றை நிழற் படங்கள் மூலம் காணும் போது பசுமையான கிராமம் என்பதை உணர முடிகிறது .பசுமையான நினைவலைகளை பகிர்ந்து கொள்ள இந்த திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .கேரளாவில் இருந்த ஒரு டூரிங் டாக்கீஸ் .
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks