Quote Originally Posted by vasudevan31355 View Post
மிக்க நன்றி ராகவேந்திரன் சார். உங்களை மறப்பேனா?

'வா இந்த உலகத்தின்' பாடல் பதிவின் மூலம் அன்றைய வானொலி நிகழ்ச்சிகளின் விவரங்களைபிட்டு பிட்டு வைத்து விட்டீர்களே! தங்களுக்கும் அந்தப் பாட்டு உயிர் என்று எனக்கு முன்னமேயே தெரியும். என்னதான் கோபால் வெளியே பேசினாலும் அவர் மனது முழுக்க நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனால் அவருக்குப் போட்ட பதிவு உங்களுக்கும்தானே!

தங்களுடைய 'இரவின் மடியில்' ஹூட் ஹூட் போல வெளுத்து வாங்குகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவை. அதில் உச்சம் 'முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ' பாடத்தான். இந்த ஒரு பாட்டு போதும் சார் வாழ்நாள் முழுக்க இசை இன்பம் அளிக்க.

என்ன வரிகள்!

முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ
அது கண்குளிர தண்ணொளியை வழங்கவில்லையோ

தண்ணொளி அதாவது குளிச்சி தரும் வெளிச்சம் என்ற அர்த்தம். இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் போல. தன்னொளி அதாவது நிலவு தான் வழங்கும் ஒளி என்றும் பொருள் கொள்ளலாம்.

அடடா! எப்படி வேண்டுமானாலும் இன்பமாகப் பருகலாம்.

பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப் பறவை நான்.
உன் கண்ணிரடில் குடியிருக்கும் வண்ணப் பறவை நான்

பிரித்து மேய்கிறார் கவிஞர்.

இன்னும் ஒரு படி மேலே போய் மனைவியின் பொறுப்புகளை வார்த்தைகளில் வடித்து இறுதியில் தாம்பத்ய உறவில் எவ்வளவு அழகாக முடிக்கிறார் கவிஞர்! அதுவும் கொஞ்சம் கூட விரசம் இல்லாமல். கவனியுங்கள்.

'என்றும் இரவினிலே தனிமையிலே துணைவியாகினேன்'

எல்லா வேலைகளும்,பொறுப்புகளும் முடிந்து தனிமையிலே இருக்கும் போது அதுவும் இரவில் மட்டுமே துணைவி ஆகினேன் என்று பொருள் தருவது அருமையிலும் அருமை.

அற்புதமான பாடலைத் தந்து அகம் மகிழச் செய்ததற்கு நன்றி ராகவேந்திரன் சார்.
ஆம் வாசு ஜி, நான் கோட் செய்ய நினைத்த வரிகளையே அழகாக சொல்லியுள்ளீர்கள்(வாலி ஐயாவிற்கு கோடி கோடி நமஸ்காரம்) ... என்றும் இரவினிலே தனிமையினிலே என்று இசையரசி பாடும் விதம்.... பெண்மையின் மென்மையை குரலில் கொண்டுவந்தவர் எங்கள் இசையரசி