-
16th October 2014, 04:14 PM
#1071
Junior Member
Veteran Hubber
[QUOTE=puratchi nadigar mgr;1172413]இந்த வார சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் வெளிவந்த செய்தி.

[/QUOT
அதனால்தான் தலைவர் கலையுலக கடவுள் என்று அழைக்கபடுகிறார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
16th October 2014 04:14 PM
# ADS
Circuit advertisement
-
16th October 2014, 05:46 PM
#1072
Junior Member
Seasoned Hubber
‘தமிழகத்தின் தீபாவளி’
‘தமிழகத்தின் தீபாவளி’
தலைவரைப் பற்றி சிந்தித்தால் வரலாறு பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. பேசினாலும் எழுதினாலும் அப்படியே. தலைவரையும் வரலாற்றையும் பிரிக்க முடியாது. காரணம், அவரே ஒரு வரலாறுதானே. ஆறு என்றால் பாதை என்ற பொருள் உண்டு. வரல்+ஆறு = வரலாறு. வரும் பாதைதான் வரலாறு. அவர் வந்த பாதையில் வந்தவர்கள் நாம் என்பதாலும் அவர் நமக்கு வரலாறே.
இதை ஏதோ அவரது புகழை தூக்கிப் பிடிக்க சொல்லக் கூடிய வார்த்தைகள் அல்ல. எல்லாரும் சேர்ந்து தூக்கிப் பிடித்துத்தான் உயர்த்தக் கூடிய நிலையில் அவரது புகழ் இல்லை. உண்மையில், பேய் மழையில் இருந்து ஆயர்களைக் காக்க கோவர்த்தன மலையை தூக்கிய கோபாலன் (இவர் என் எழுத்தில் முதிர்ச்சி தெரிவதாக பாராட்டும் நண்பர் திரு. கோபால் அல்ல. பகவான் கிருஷ்ணன்) போல தலைவர் தூக்கிய அவரது புகழ் குடையின் கீழ் நாம் இருக்கிறோம். எனவே, அவர் இல்லாமல் வரலாறு இல்லை.
திரைத் துறையோ, அரசியல் துறையோ மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் புகழ் வானில் உச்சத்தில் இருந்தவர்களை வரலாறு பார்த்திருக்கிறது. சில, பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர்கள் பின்னர் படிப்படியாக புகழேணியில் இருந்து கீழே இறங்கியதற்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் துயர வாழ்வை அனுபவித்து இறந்த திரு. தியாகராஜ பாகவதர், திரு. பி.யு.சின்னப்பா, திரு.டி.ஆர்.மகாலிங்கம் போன்ற பலரை உதாரணம் காட்ட முடியும். அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. புகழின் உச்சியில் இருந்தவர்கள் செல்வாக்கு இழந்து போனதையும் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.
ஆனால், என்றுமே புகழ் வானில் ஒளிவீசும் துருவ நட்சத்திரமாக விளங்குபவர் தலைவர் மட்டுமே. இன்றும் அவரது புகழ், செல்வாக்கு, அவர் கண்ட கட்சி, கொடி, சின்னம் காரணமாகத்தான் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதற்கு பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை. கருவில் இருக்கும் சிசுவும் சொல்லும்.

தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் 10 வார்த்தைகளில் ஒன்று எம்.ஜி.ஆர். என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்ததைப் போல அவரது பெயரை தினமும் உச்சரிக்காத தமிழர்களே இல்லை. இதில் வியப்பு என்னவென்றால் MGR என்ற ஆங்கில வார்த்தைகளை தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழாக்கி அணைத்துக் கொண்டது அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் அற்புதம்.
அலகாபாத் தொகுதியில் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அப்போதைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி. ஏற்கனவே இதிகாச, புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும் சரியான சமயத்தில், சரியான வார்த்தைகளை, சரியான நபர்கள் சொல்லும்போது அதற்கு கிடைக்கும் முக்கியத்துவமே தனி. அந்த சமயத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறிய வார்த்தைகள் ‘விநாச காலே விபரீத புத்தி’.
அதாவது, அழிவு தோன்றும் நேரத்தில் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்பது பொருள். அந்த விநாச காலத்தை 1972 அக்டோபர் 10ம் தேதியன்று தத்தெடுத்துக் கொண்டவர் கருணாநிதி. திமுகவினரின் ஊழல் சொத்துக்கள் குறித்து கணக்கு கேட்டதற்காக அன்றுதான் தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தீயவை அழிந்தால்தானே நன்மை பிறக்கும். நரகாசுரன் அழிவிலே இருந்து அடுத்த வாரம் நாம் கொண்டாடப்போகும் தீபாவளி பிறக்கவில்லையா? தீபாவளிக்கென்று ஒரு சிறப்பு உண்டு. பல பண்டிகைகள், கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. தீபாவளி மட்டுமே ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், காரிருளை விரட்டி தீப ஒளியை ஏற்ற, தீயசக்தியை அழிக்க அதிமுவை தொடங்கிய புரட்சித் தலைவர் பின்னே ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் மக்கள் சக்தி திரண்ட தமிழகத்தின் தீபாவளி அக்டோபர் -17. கொண்டாடுவோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
16th October 2014, 06:32 PM
#1073
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
‘தமிழகத்தின் தீபாவளி’
மக்கள் சக்தி திரண்ட தமிழகத்தின் தீபாவளி அக்டோபர் -17. கொண்டாடுவோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன்
உங்களுடைய எழுத்தின் நடை நன்றாக உள்ளது ! ரசித்தேன் !
வாழ்த்துக்கள் நண்பரே !
அன்புடன்
rks
Last edited by RavikiranSurya; 16th October 2014 at 06:35 PM.
-
16th October 2014, 06:50 PM
#1074
Junior Member
Platinum Hubber
உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பாக மக்கள் திலகத்திற்கு இனிய மடல் .
எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகமே
உங்கள் நினைவாக என்றென்றும் உலகமெங்கும் வாழும் பல மொழி பேசும் ரசிகர்களும் , வெவ்வேறு மதங்களை
சேர்ந்தவர்களாகிய நாங்கள் எல்லோரும் ''எம்ஜிஆர் மதம்'' என்று சொல்லி கொள்வதில் பெருமை பட்டு கொண்டு
முதலில் உங்களுக்கு எங்கள் அன்பு வணக்கத்தையும் , நீங்கள் துவங்கிய அண்ணாதிமுக இயக்கத்தின் 43 வது
ஆண்டு விழா கொண்டாடும இன்றைய நன்னாளில் உங்களை நினைவு கூர்ந்து நன்றியினை தெரிவித்து
கொள்கின்றோம் .
மக்கள் திலகமே
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து 26 ஆண்டுகள் கடந்து சென்றாலும் உள்ளத்தால் என்றென்றும் எங்கள்இதயங்களில்
வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள் .
இந்த 26 ஆண்டுகளில் எத்தனை அரசியல் வெற்றி தோல்விகள் - மாற்றங்கள் . உங்கள் பெயரை சொல்லி 1991-2001-2011
மூன்று தேர்தல்களில் இமாலய வெற்றி . 2014ல் பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி .
உங்கள் அறிவுரைகளை பின் பற்றாததன் விளைவு .... இன்று நம் இயக்கம் ஒரு சோதனை யான சூழலில் உள்ளது .
மாற்று கட்சியனர்கள் பகல் கனவில் மிதக்கிறார்கள் .
உங்களை விரும்பாத சிலர் மனதளவில் இன்னமும் உங்களையே நினைத்து நிம்மதியின்றி தவிக்கிறார்கள் .
உங்களின் உண்மையான ரசிகர்கள் தினமும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் உங்கள் பாடல்கள் , படங்கள்
பார்த்தும் ,கேட்டும் மகிழ்ந்து வருகிறார்கள் .
எங்கள் இல்லங்களில் தினமும் உங்கள் படங்கள் - எங்களுக்கு கண்களுக்கு விருந்து
உங்களை விரோதியாக நினைத்தவர்கள் - இன்று உங்கள படங்களை ஒளி பரப்பி பிராயச்சித்தம் தேடுகிறார்கள் .
உங்கள புகழை பரப்ப வேண்டியவர்கள் [ ஆட்சியில் உள்ளவர்கள் ] - பலனை அனுபவிக்கிறார்கள் .
எல்லாம் உங்கள் செயல் தலைவரே
இன்றைய திரை உலகம் - தொழில் நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள நேரத்தில் புதிய படங்கள்
பெயர்கள் - நடிகர்கள் - நடிகைகள் - கதை - பாடல்கள் எல்லாமே ஏமாற்றங்கள் .
இப்போதுதான் மக்களும் மற்ற ரசிகர்களும் உங்கள் படத்தின் தலைப்புகள் - பாடல்கள் - நடிப்பு எல்லாவற்றையும்
பார்த்து மேலும் உங்களின் தீவிர ரசிகர்களாக மாறி வருகிறார்கள் .
சமீபத்தில் திரு தமிழருவி மணியன் அவர்கள் உங்களின் இயற்கையான நடிப்பை பாராட்டியும் நீங்கள் ஒரு
சரித்திரம் என்று பாராட்டியதையும் மறக்க முடியாது .
இந்த ஆண்டில் உங்களது சாதனைகள்
அரசியலில் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி
ஆயிரத்தில் ஒருவன் - சென்னையில் வெள்ளி விழா
விரைவில் உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் வடிவில் வருகிறது .
மையம் திரியில் உங்கள் புகழ் - தினமும் கொடி கட்டி பறக்கிறது .
விரைவில் அதிமுக 43வது துவக்க விழாக்கள் - செய்திகளுடன் உங்களுக்கு மீண்டும் ஒரு மடல் வரைகிறோம்
நன்றி . வணக்கம் மக்கள் திலகமே ..
என்றென்றும் உங்கள் நினைவாக வாழ்ந்திடும்
அனைத்துலக கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் ..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th October 2014, 07:12 PM
#1075
Junior Member
Diamond Hubber
புரட்சிதலைவர் கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்- மக்கள்திலகம் -அபிமானிகள் தெரிவித்து கொள்கிறோம்...
-
16th October 2014, 09:39 PM
#1076
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பாக மக்கள் திலகத்திற்கு இனிய மடல் .
எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகமே
உங்கள் நினைவாக என்றென்றும் உலகமெங்கும் வாழும் பல மொழி பேசும் ரசிகர்களும் , வெவ்வேறு மதங்களை
சேர்ந்தவர்களாகிய நாங்கள் எல்லோரும் ''எம்ஜிஆர் மதம்'' என்று சொல்லி கொள்வதில் பெருமை பட்டு கொண்டு
முதலில் உங்களுக்கு எங்கள் அன்பு வணக்கத்தையும் , நீங்கள் துவங்கிய அண்ணாதிமுக இயக்கத்தின் 43 வது
ஆண்டு விழா கொண்டாடும இன்றைய நன்னாளில் உங்களை நினைவு கூர்ந்து நன்றியினை தெரிவித்து
கொள்கின்றோம் .
மக்கள் திலகமே
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து 26 ஆண்டுகள் கடந்து சென்றாலும் உள்ளத்தால் என்றென்றும் எங்கள்இதயங்களில்
வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள் .
இந்த 26 ஆண்டுகளில் எத்தனை அரசியல் வெற்றி தோல்விகள் - மாற்றங்கள் . உங்கள் பெயரை சொல்லி 1991-2001-2011
மூன்று தேர்தல்களில் இமாலய வெற்றி . 2014ல் பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி .
உங்கள் அறிவுரைகளை பின் பற்றாததன் விளைவு .... இன்று நம் இயக்கம் ஒரு சோதனை யான சூழலில் உள்ளது .
மாற்று கட்சியனர்கள் பகல் கனவில் மிதக்கிறார்கள் .
உங்களை விரும்பாத சிலர் மனதளவில் இன்னமும் உங்களையே நினைத்து நிம்மதியின்றி தவிக்கிறார்கள் .
உங்களின் உண்மையான ரசிகர்கள் தினமும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் உங்கள் பாடல்கள் , படங்கள்
பார்த்தும் ,கேட்டும் மகிழ்ந்து வருகிறார்கள் .
எங்கள் இல்லங்களில் தினமும் உங்கள் படங்கள் - எங்களுக்கு கண்களுக்கு விருந்து
உங்களை விரோதியாக நினைத்தவர்கள் - இன்று உங்கள படங்களை ஒளி பரப்பி பிராயச்சித்தம் தேடுகிறார்கள் .
உங்கள புகழை பரப்ப வேண்டியவர்கள் [ ஆட்சியில் உள்ளவர்கள் ] - பலனை அனுபவிக்கிறார்கள் .
எல்லாம் உங்கள் செயல் தலைவரே
இன்றைய திரை உலகம் - தொழில் நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள நேரத்தில் புதிய படங்கள்
பெயர்கள் - நடிகர்கள் - நடிகைகள் - கதை - பாடல்கள் எல்லாமே ஏமாற்றங்கள் .
இப்போதுதான் மக்களும் மற்ற ரசிகர்களும் உங்கள் படத்தின் தலைப்புகள் - பாடல்கள் - நடிப்பு எல்லாவற்றையும்
பார்த்து மேலும் உங்களின் தீவிர ரசிகர்களாக மாறி வருகிறார்கள் .
சமீபத்தில் திரு தமிழருவி மணியன் அவர்கள் உங்களின் இயற்கையான நடிப்பை பாராட்டியும் நீங்கள் ஒரு
சரித்திரம் என்று பாராட்டியதையும் மறக்க முடியாது .
இந்த ஆண்டில் உங்களது சாதனைகள்
அரசியலில் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி
ஆயிரத்தில் ஒருவன் - சென்னையில் வெள்ளி விழா
விரைவில் உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் வடிவில் வருகிறது .
மையம் திரியில் உங்கள் புகழ் - தினமும் கொடி கட்டி பறக்கிறது .
விரைவில் அதிமுக 43வது துவக்க விழாக்கள் - செய்திகளுடன் உங்களுக்கு மீண்டும் ஒரு மடல் வரைகிறோம்
நன்றி . வணக்கம் மக்கள் திலகமே ..
என்றென்றும் உங்கள் நினைவாக வாழ்ந்திடும்
அனைத்துலக கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் ..
Nice Vinod Sir,
Regds
S.Ravichandran
-
16th October 2014, 09:53 PM
#1077
Junior Member
Diamond Hubber
-
16th October 2014, 11:00 PM
#1078
Junior Member
Platinum Hubber
-
16th October 2014, 11:02 PM
#1079
Junior Member
Platinum Hubber
-
16th October 2014, 11:03 PM
#1080
Junior Member
Platinum Hubber
Bookmarks