Results 1 to 10 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    நம் இதயம் நிறைந்த புரட்சித்தலைவர் நிறுவிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 43 வது ஆண்டு துவக்க நாள் இன்று ! இந்த நன்னாளில், திராவிட இயக்க வரலாற்றின் சில நிகழ்வுகளையும், திரி பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    சுதந்திர இந்தியாவிற்கு முன்பு, 1916ல், சமூக நீதி, சமத்துவம் போன்ற நோக்கங்களுடன், சர் பி. டி. தியாகராசர், டாக்டர் பி. டி. ராசன், டாக்டர் சி. நடேச முதலியார், ஏ. டி. பன்னீர்செல்வம், டி.எம்.. நாயர், மற்றும் சில முன்னணி தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி, பின்னர் 1920ல் நடைபெற்ற சென்னை மாகாண பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    1919ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த , பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் போராட்டம் மூலம் ஏற்பட்ட அனுபவத்தினால் 1926ம் ஆண்டு "சுயமரியாதை இயக்கம்" கண்டார். காங்கிரஸ் கட்சியின் எதேச்சாதிகார போக்கும், அக்கட்சி கையாண்ட அணுகுமுறைகளும் பிடிக்காத காரணத்தால், வைக்கம் வீரராம், தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசில் நீண்ட காலம் நீடிக்க முடிய வில்லை.




    சீர்திருத்த செம்மல், வெண்தாடி வேந்தன், தந்தை பெரியார் அவர்கள் பின்னர் 1935ல் நீதிக்கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து, நடைபெற்ற 1937ம் ஆண்டு பொது தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. நீதிக்கட்சி தேய்பிறை போல் தேய்ந்து வந்த நிலையில், ஈரோட்டு சிங்கம். தந்தை பெரியார் அவர்கள், 1944ல் திராவிட கழகத்தை நிறுவினார். இதில் முக்கிய தலைவர்களாக தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி பேரறிஞர் அண்ணா அவர்கள், நாவலர் நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், அன்பழகன், சி. பி. சிற்றரசு, என்.வி.நடராசன், க. ராசாராம் கலைஞர் கருணாநிதி, குத்தூசி குருசாமி ஆகியோர் கருதப்பட்டனர்.

    திராவிட கழகத்தின் முக்கிய கொள்கையாக தனித்திராவிட நாடு காண்பதே என்றிருந்தது. மேலும், தந்தை பெரியார் அவர்கள், மணியம்மையாரை மணம் புரிந்த காரணத்தால், தந்தை பெரியாருடன் கொண்ட கருத்து வேறுபாட்டால், மக்கள் திலகத்தால் அன்புடன் இதய தெய்வம் என்றழைக்கப்பட்ட, காஞ்சித்தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1949 செப்டம்பர் 17ம் தேதியன்று, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் கட்சியை ஆரம்பித்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக முக்கிய தலைவர்கள் அனைவரும் அவரது தலைமையில் அணி திரண்டனர். தி. மு.க. வின் ஐம்பெரும் தலைவர்களாக - பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், ஈ. வி.கே. சம்பத் மற்றும் என். வி. என். நடராசன் ஆகியோர் விளங்கி வந்தனர்.


    சேலம் சித்தையன், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, குடந்தை நீலமேகம், தூத்துக்குடி கே. வி. கே. சாமி போன்ற தியாக சீலர்களால் மெல்ல வளர்ந்த இயக்கம், 1953ல் நம் பொன்மனச்செம்மல் தி. மு. க. வில் இணைந்த பிறகு, அசுர வளர்ச்சி கண்டது.

    கட்சி சார்ந்திருந்தாலும், சுயேட்சை வேட்பாளராகத்தான் நகரசபை தேர்தலில் போட்டியிட முடியும் என்றிருந்த அப்போதைய நிலையில், கோவில்பட்டியில் ஈ. வே. அ. வள்ளிமுத்து அவர்களும், திருவண்ணாமலையில் ப. உ. சண்முகம் அவர்களும், உடுமலைபேட்டையில் சாதிக் பாட்சா அவர்களும் நகரசபை தலைவர்களாக, தேர்ந்தேடுக்கப்பட்டனர்.

    தன்னுடைய திரைப்படங்களில், அவர் சாம்ர்த்தியமாக புகுத்திய தி. மு. க. ஆதரவு கொள்கைகளும், சின்னத்தை பட்டி தொட்டியெங்கும், பரப்பிய விதமும், காங்கிரசாரை கதி கலங்கச் செய்தது.

    உதாரணத்துக்கு சில :

    விக்கிரமாதித்தன் திரைப்படத்தில் நெற்றியில் உதய சூரியன் சின்னத்தை, திலகமாக வைத்துக் கொண்டது,

    சக்கரவர்த்தி திருமகள் படத்தில், கதாநாயகன் பெயரையே "உதயசூரியன்" என்று சூட்டிக்கொண்டது,

    உதய சூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே என பாடல் காட்சியில் பாடி நடித்தும் ,

    தான் ஏற்றுக் கொண்ட தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களை திரைப்படங்களில் இடம் பெறவைக்கும் காட்சிகளிலும், மக்கள் மனதில் நிலைபெறச் செய்தது,

    இப்படி தி. மு. க. வின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய பெருமை நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களையே சாரும்.


    10-10-1972 அன்று, தான் வளர்த்த கட்சியிலிருந்தே நீக்கப்படுவார் என்று சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள், நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சதிகாரர்கள் பின்னிய சதி வலையின் காரணமாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்று சத்யா ஸ்டுடியோ வாசலில் கூடிய ஆயிரக்கணக்கானோரில் அடியேனும் ஒருவன். மறு நாள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகலிருந்தும், குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்தும், லட்சக்கணக்கானோர் புரட்சித்தலைவர் இல்லம் முன்பும், அலுவலகம் முன்பும், சத்யா ஸ்டுடியோ வாசல் முன்பும் எழுச்சியுடன் தொண்டர்கள் திரண்டனர்.

    தனிப்பட்ட ஒருவரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வுக்காக, தமிழகமே ஸ்தம்பித்த சரித்திரம், புரட்சித் தலைவர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பு நடந்தது. அவரது உருவப்படம் தாங்கிய வாகனங்கள்தான் தமிழகத்தில் ஓட முடிந்தது என்ற நிலையும் ஏற்பட்டது. இந்த சாதனையை அவர் ஒருவரால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

    புரட்சித்தலைவர் முடிவெடுக்கும் முன்பே, தொண்டர்கள் முடிவெடுத்தனர், புரட்சித்தலைவர் தலைமையில் தனி இயக்கம் காண்பதற்கு ! சுயநலத்துக்காக கட்சி ஆரம்பிக்காமல், தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து கட்சி ஆரம்பித்தவர் நம் புரட்சித் தலைவர். ஊழலை ஒழிப்பதே, தனது கட்சியின் பிரதான நோக்கமாக கொண்டு, தன் இறுதி மூச்சு வரை கட்சியை நேர்மையாக வழி நடத்தி சென்றார் நம் புரட்சித் தலைவர்.

    இவ்வளவு ஏன் - தனது தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட அளவற்ற அன்பு காரணமாக, மதிப்பின் காரணமாக, சென்னை நகரின் மையப்பகுதியில் அவருக்கு சிலை நிர்மாணித்து, அவரை அனுதினமும் துதி பாடினார்.


    .

    அண்ணா தி. மு. க . என்ற பேரியக்கத்தை கண்ட புரட்சித் தலைவர் அவர்கள், எங்கும் தான் போற்றி வணங்கும் பேரறிஞர் அண்ணாவின் திருநாமத்தையே உச்சரித்து வந்தார்.

    கட்சி கொள்கை - அண்ணாயிசம்,
    கட்சி கொடியில் - அண்ணா அவர்களின் உருவம்,
    கட்சியின் பெயரில் - அண்ணா,
    பொதுக்கூட்ட மேடை பேச்சுக்களின் இறுதியில் - அண்ணா நாமம் வாழ்க என்று முடிப்பது.

    தனக்கென்று ஒரு லட்சியக் கூட்டம் இருந்த போதிலும், உறுதியான பலத்த வாக்கு வங்கி இருப்பதை உணர்ந்த போதிலும், தான் போற்றும் தலைவர் அண்ணா அவர்களைத்தான் எங்கும், எதிலூம் முன்னிலைப்படுத்தினார்.



    கழக உறுப்பினர் அட்டையிலும், பேரறிஞர் அண்ணாவின் உருவத்தை பெரிய அளவில் வடிவமைத்து, தான் அவரை வணங்கும் காட்சியை சிறிய அளவில் இடம்பெறச் செய்தவர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் பொன்மனச்செம்மல்.

    ஆட்சியில் வந்த பின்பு, சொத்து சேர்க்காத முதல்வர் என்ற பட்டியலில் இடம் பெற்ற பெருமை புரட்சித் தலைவருக்கே உண்டு.

    லட்சக்கணக்கில் கழகத்தில் உறுப்பினர்களை சேர்த்தது மட்டுமல்லாமால் அந்த உறுப்பினர்களின் குடும்பத்தினர் அனைவரையும் அவர் கண்ட இயக்கத்துக்கு மட்டுமே வாக்களிக்கும் மனப்பாங்கினை ஏற்படுத்திய பெருமை புரட்சித் தலைவருக்கு மட்டுமே உண்டு.

    ஆட்சி - அதிகாரத்தில், ஊழலை அறவே களைந்தெடுத்த பெருமையை பெற்றவர் நம் புரட்சித்தலைவர்.

    மூத்தவர்களை மதித்து, அவர்களை கவுரவிப்பதிலும் முதன்மை பெற்றவர் நம் புரட்சித்தலைவர். (உதாரணத்துக்கு - மேற்கூறிய கோவில்பட்டி வள்ளிமுத்து அவர்களை அண்ணா தி. மு. கவின் அவைத்தலைவராகினார். அவரது அரசியல் பணிகளுக்காக, கட்சி நிதியிலிருந்து, அவருக்கு கார் ஒன்றையும் பரிசளித்து அகமகிழ்ந்தார் நம் புரட்சித்தலைவர். தள்ளாத வயதிலும், அவர் புரட்சித் தலைவரின் கால்களில் விழுந்து வணங்க முற்பட்ட போது, புரட்சித்தலைவர். தனது கால்களை விலக்கி கொண்டு, அவரை நெஞ்சாரத் தழுவிய போது, கோவில்பட்டி வள்ளிமுத்து அவர்களின் நா தழு தழுத்தது, வார்த்தைகள் வராமல்.

    நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை கழக பொதுச் செயலாளராக்கி, அழகு பார்த்து, அவரின் கீழ் கழகப் பணியாற்றினார்.
    அதே போன்று, ப. உ. சண்முகம் அவர்களையும் பொதுச்செயலாளர் ஆக்கி அவரது தலைமையையும் ஏற்றுகொண்டார்.

    கட்சியில் ஒரு சாதாரண தொண்டனையும் இழக்க விரும்பாதவர் என்ற பெருமையும் புரட்சித் தலைவருக்கு உண்டு.

    எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாக பாவிக்காமல், அவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்தி, சட்டமன்ற நாகரீக நெறி முறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்த பெருமையும், புரட்சித் தலைவருக்கே உண்டு.

    சட்டமன்ற பொது தேர்தல்களில், தோல்வியே சந்திக்காமல், தொடர்ந்து வெற்றி பெற்ற முதல்வர் என்ற பெருமையை பெற்று, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரே தலைவர், இதய தெய்வம் பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம், கொள்கை வேந்தனாம் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்கள்.

    கழகம் வென்ற தொகுதிகள் எதையும் இடைத்தேர்தல்களில் கூட மாற்றுக் கட்சியினர் வசம் செல்ல விடாமல் செய்து, மக்களின் செல்வாக்கை முழுமையாக பெற்ற மாபெரும் சக்தி படைத்த ஒரே தலைவர் புரட்சித்தலைவர்.

    தனது ஆட்சிக்காலம் முழுவதும், ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல்களில், பண நாயகர்களை வென்றுக்காட்டிய உன்னதமான உத்தமத் தலைவர் எம். ஜி. ஆர்.

    எளிமையின் உருவமாக, பந்தா இல்லாமல், பொது மக்களிடையே கலந்து, சர்வ சாதாரணமாக அவர்களுடன் உரையாடி, அவர்களின் குறைகளை அவ்வப்போது களைந்த கண்ணியவான் நம் புரட்சித்தலைவர்.

    அமைச்சரைவையை அடிக்கடி மாற்றியமைக்காமல், அமைச்சர்களை முழுமையாக நம்பி, அவர்கள் (நடிக்காமல்) உண்மையிலேயே அவரது விசுவாசிகளாக மாற்ற வைத்த பெருமை புரட்சித் தலைவருக்கே உண்டு !

    தன் தலைவரை மதித்ததினால்தான், துதித்த்தினால்தான், போற்றி வணங்கியதால்தான், மக்கள் மனதில் என்றும் நீங்காத இடத்தை பெற்றார் நம் புரட்சித்தலைவர் என்று கூறினால் அது மிகையாகாது.

    தனி ஒரு மனிதனாம் நம் புரட்சித் தலைவரின் புகழால் மட்டுமே ஒரு இயக்கம் 42 ஆண்டுகள் கடந்து, 43வது ஆண்டை துவக்குகிறது என்றால் அது ஒரு சகாப்தம், வரலாறு, பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சாதனை.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 18th October 2014 at 06:28 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •