-
20th October 2014, 05:49 AM
#2311
Junior Member
Newbie Hubber
Courtesy- B.G.S.Manian(Edited version from his original writings )
"படிக்காத மேதை" - நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் "ரங்கன்" என்ற ஒரு கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட மனிதனாக நடித்த - அல்ல - வாழ்ந்து காட்டிய படம். அவருடன் எஸ்.வி. ரங்காராவ், கண்ணாம்பா, சௌகார் ஜானகி, முத்துராமன், அசோகன், சந்தியா, ஈ.வி. சரோஜா ஆகியோரும் நடித்திருந்தனர்.
பீம்சிங்கும் கே.வி. மகாதேவனும் இணைந்த முதல் படம் இது.
கண்ணதாசன், மருதகாசி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடலும் படத்தின் ஒரு முக்கிய திருப்புமுனைக் காட்சிக்கு பயன்படுத்தப் பட்டிருந்தது.
படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மகாதேவனின் முழுத் திறமையும் தெரிந்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை பத்து.
படம் வெளிவந்த அறுபதில் டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் மற்ற பாடகர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவர்கள் இருவரையுமே பிரதானப் படுத்திக் கொண்டிருந்த நேரம் அது.
ஆனால் கே.வி, மகாதேவனோ "படிக்காத மேதை" படத்துக்காக அவர்கள் இருவரை மட்டும் அல்லாமல் எம்.எஸ். ராஜேஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல். ராகவன் என்று பலரையும் பாடவைத்தார்.
கதாநாயகனின் குணாதிசயத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டும் பாடல்
"உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது." என்ற பாடல்.
தனக்கு மற்றவர்களைப் போல கல்வி அறிவு இல்லையே என்று வருந்தும் கணவனை மனைவி தேற்றுவதாக அமைந்த பாடல் "படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு." - சௌகார் ஜானகிக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியை இந்தப் பாடலுக்கு பின்னணி பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.
கண்ணதாசனின் வரிகளும், ராஜேஸ்வரியின் மழலை பொங்கும் குரலும் பாடலுக்கு தனி அழகைத் தருகின்றன. கீரவாணி ராகத்தின் அடிப்படையில் இந்த பாடலை அருமையாக வடிவமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
"ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா" - என்ற காதுகளை சுகமாக வருடும் பாடலை டி.எம்.எஸ். - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவரையும் பாடவைத்து தாலாட்டு வகையில் அமைந்த இந்தப் பாடலை இரவில் கேட்கவேண்டும். அதிலும் "சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை" என்று துவங்கும் கடைசி சரண வரிகளின் போது நம் கண்கள் தானாகவே சொக்கத் தொடங்கி விடும். அவ்வளவு அருமையாக இந்த சரணம் அமைந்திருக்கிறது. டி.எம். எஸ். ஸும் மிகவும் நயமாக பாடி இருக்கிறார்.
"ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்" - பி.லீலா.
"இன்ப மலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்காரத்தோட்டம்" - பி. சுசீலா - எல், ஆர். ஈஸ்வரியின் குரல்களில் ஒலிக்கும் பாடல்.
"பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண்பார்வை போடுதே துடுப்பு" - ஏ.எல். ராகவன்- ஜமுனாராணி.
"சீவி முடிச்சு சிங்காரிச்சு" - டி.எம்.சௌந்தரராஜன்.
என்று இப்படி பல பாடகள் இருந்தாலும் கே.வி. மகாதேவன் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு ரசித்து ஒவ்வொரு வரியாக அனுபவித்து அமைத்த பாடல் என்றால் அது "எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நானென்றான்" - என்ற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்தான்.
கண்ணனைத் தன் சேவகனாக வரித்து பாரதியார் அமைத்திருக்கும் பாடல் இது.
ஏற்கெனவே இந்தப் பாடலை இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் "கூலி மிகக் கேட்பார்" என்று துவங்கி அருமையாகப் பாடி தனது சொத்தாகவே மாற்றிக்கொண்டிருந்தார்.
"பெரியவரோட (ஜி. ராமநாதன்) பாட்டு இது. அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் நம்மாலே முடிஞ்ச அளவுக்கு பாட்டைக் கெடுக்காம கவனமா பண்ணனும்" என்று புகழேந்தியிடம் சொல்லிக்கொண்டே சிரத்தை எடுத்துக்கொண்டு மகாதேவன் இசை அமைத்து சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்தார். சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல் இன்றளவும் உயிரோட்டத்துடன் அமைந்திருக்கிறது.
இன்று ஜி. ராமனாதனின் "கூலி மிகக் கேட்பார்" பாட்டு மறைந்துவிட்டது.
ஆனால் அவரைத் தன் குருவின் ஸ்தானத்தில் வைத்துக்கொண்டு மிகுந்த மரியாதையுடன் பக்தி சிரத்தையுடன் கே.வி. மகாதேவன் உருவாக்கிய "எங்கிருந்தோ வந்தான்" பாடல் காலத்தை வென்று அமரத்துவம் எய்திய பாடலாக காற்றலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
*******************
“அகிலன்" - தமிழ் எழுத்தாளர்களில் இந்தப் பெயருக்கு ஒரு தனிச் சிறப்பும், மரியாதையும், பெருமையும் உண்டு.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள "பெருங்கலூர் " என்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் அகிலன்.
அமரர் கல்கி அவர்களின் பெரும்புகழ் பெற்ற சரித்திர நாவலான "பொன்னியின் செல்வ"னின் தொடர்ச்சியாக அகிலன் எழுதிய நாவல்தான் "வேங்கையின் மைந்தன்".
ராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த நாவல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிவாஜி நாடக மன்றத்தால் மேடை நாடகமாக உருமாறி பெருவெற்றி பெற்றது.
"சித்திரப்பாவை" - ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மகத்தான வெற்றிபெற்ற நாவல். "ஞான பீடம்" - என்ற மிக உயர்ந்த இலக்கியத்துக்கான விருதை தமிழுக்குப் பெற்றுத்தந்த நாவலும் இதுதான்.
இத்தனைச் சிறப்புகளுக்கெல்லாம் சொந்தக்காரரான அகிலனின் நாவலான "பாவை விளக்கு"க்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதினார் ஏ.பி. நாகராஜன்.
கே.சோமு அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் குமாரி கமலா, சௌகார் ஜானகி, எம்.என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் - ஒரே ஒரு பாரதியார் பாடலைத் தவிர - கவிஞர் மருதகாசி எழுதி இருந்தார்.
ஏ.பி.நாகராஜன் - கே.சோமு - மருதகாசி கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம். இசை அமைப்பு கே.வி. மகாதேவனைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?
அருமையான பாடல்களை அற்புதமாக எழுதித் தள்ளியிருந்தார் மருதகாசி.
அவற்றுக்கு மகாதேவன் அமைத்திருந்த மெட்டுக்களோ?
பாடல்களுக்கான மெட்டுக்களா இல்லை மெட்டுக்களுக்கான பாடல்களா என்று கேட்போர் வியக்கும் அளவுக்கு மருதகாசியின் பாடல்வரிகளும் மகாதேவனின் இசையும் போட்டி போட்டுக்கொண்டு கனகச்சிதமாக வெகு சிறப்பாக அமைந்த படம் இது.
இன்னும் சொல்லப்போனால் "பாவை விளக்கு" படத்துக்கு பலமே அதன் பாடல்கள் தான்.
பாடல்கள் தான் இந்தப் படத்தை ஓரளவுக்காவது தூக்கி நிறுத்தின.
அந்த வகையில் "பாவை விளக்கு" படத்தின் பாடல்கள் ஐம்பது வருடங்களைக் கடந்த பிறகும் உயிர்ப்புடன் காற்றலைகளில் நிலைத்து நிற்பது பிரமிக்க வைக்கும் சாதனைதான்.
படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கான அனைத்துப் பாடல்களையும் சி. எஸ். ஜெயராமனைப் பாடவைத்திருந்தார் கே.வி. மகாதேவன்.
தனது முதல் படமான "பராசக்தி"யில் தனக்குப் பாடிய சி.எஸ். ஜெயராமனின் குரலின் மீது நடிகர் திலகத்துக்கு ஒரு தனி மோகமே உண்டு. ஆரம்பத்தில் "தூக்கு தூக்கி" படத்தில் தனக்காக டி.எம். சௌந்தரராஜனைப் பாடவைக்க முடிவெடுத்தபோது அவர் "ஜெயராம பிள்ளையை எனக்காக பாடவைக்காம வேற யாரையோ பாடவைக்கனும்னு சொல்லறீங்களே" என்று குறைப்பட்டுக்கொண்டது கூட உண்டு.
அப்படிப்பட்ட சி.எஸ். ஜெயராமனின் குரலில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே பிரபலமான பாடல்களாக அமைந்துவிட்டன.
குற்றாலத்தின் அழகையும், சிறப்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமா? அதனைப் பார்த்து ரசிக்க இரண்டு கண்கள் போதாதாம். ஆயிரம் கண்கள் வேண்டுமாம். இல்லை இல்லை. ஆயிரம் கண்களும் போதாதாம்! அப்படித்தான் மருதகாசி சொல்கிறார்.
"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே"
"மாண்ட்" - ராகத்தில் கே.வி. மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமோ ஆயிரம் முறைகள் கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாடல்.
இந்தப் பாடல் ஏ.பி. நாகராஜனின் மனதில் ஒரு அழுத்தமான இடத்திப் பிடித்து விட்டது.. அதனால் தானோ என்னவோ பின்னாளில் தான் இயக்கிய "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் இந்தப் பாடலை அப்படியே நாதஸ்வரத்தில் வாசிக்கவைத்து பயன்படுத்திக்கொண்டுவிட்டார் அவர்.
அடுத்து "வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்" - என்ற பாடல்..
வசன நடையில் ஆரம்பித்து ஒவ்வொரு வார்த்தைகளாக கூட்டிக்கொண்டே ஆரம்பிக்கும் பல்லவி. ஒவ்வொருக்கு அடிக்கு பிறகும் பாடலாக உருமாறுகிறது.
பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்
தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்.
வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள். - என்று என்று படிப்படியாக வார்த்தைகளைக் கூட்டிக்கொண்டே போகும்போது மகாதேவனின் கற்பனைத் திறனும் இசை ஆளுமையும் பிரமிக்கவைக்கிறது. சி.எஸ். ஜெயராமனுடன் ஹம்மிங்காக எல்.ஆர்.ஈஸ்வரி இணையும் பாடல் இது. சங்கராபரண ராகத்தை வெகு அற்புதமாக மகாதேவன் கையாண்டு பாடலை கொடுத்திருக்கிறார்.
"நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக்கண்ணே" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் குரலில் அருமையான ஒரு குழந்தையைக் கொஞ்சிச் சீராட்டும் பாடல்.
இப்படி இத்தனைப் பாடல்கள் இருந்தாலும் "பாவை விளக்கு" என்றதுமே நம் உதடுகள் தாமாகவே உச்சரிக்கும் பாடல் ஒன்று உண்டு என்றால் அது "காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா" பாடல்தான்.
காதலுக்கும் முகலாயர்களின் கட்டிடக்கலைக்கும் காலத்தால் அழிக்க முடியாத அற்புதச் சின்னமாக விளங்கும் தாஜ் மஹாலின் அழகை வருணிக்கும் பாடல்.
இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் கே.வி. மகாதேவனின் திறமை - அவரது இசை ஆளுமை எல்லாமே உலக அதிசயமான தாஜ் மகாலுக்கு நிகராக நம்மை பிரமிக்க வைக்கிறது.
பல்லவியை சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைத்தவர்.. பல்லவி முடிந்தபிறகு வரும் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையிலும் தொடரும் சரண வரிகளிலும் அரேபிய இசைப் பிரயோகங்களை அற்புதமாக இணைத்திருக்கிறார். அதற்கு அவருக்கு கை கொடுத்த ராகம் "சரசாங்கி".
கர்நாடக இசையில் 27வது மேளகர்த்தா ராகமான சரசாங்கி ஒரு சம்பூரணமான சுத்த மத்யம ராகம்.
முழுக்க முழுக்க இந்த மேளகர்த்தா ராகத்தை அரேபிய இசைக்கான ராகமாகப் பயன்படுத்தி மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமும், அதனை சி.எஸ். ஜெயராமனும், பி. சுசீலாவும் பாடியிருக்கும் விதமும் .. வருணிக்க வார்த்தைகளே இல்லை.
அதுவும் "முகலாய சாம்ராஜ்ய கீதமே" என்று சுசீலா ஆரம்பிக்கும் அழகும், சரணத்தின் கடைசி வரிகளில் "என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே என்னைச் சொந்தம் கொண்ட தெய்வமே" - என்றும், "கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவது உண்மைக்காதலே" என்றும் பாடும் போது அவரது குரலில் வெளிப்படும் இனிமையும் உண்மையிலேயே காதுகளில் தேன் பாய்வது என்பார்களே அது இதைத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.
கே.வி. மகாதேவனின் இசையில் சங்கராபரணமும், சரசாங்கியும் தான் எப்படி எல்லாம் மருதகாசியின் வரிகளுக்கு ஜீவன் தருகின்றன!
உண்மையிலேயே இது ஒரு காவியப்பாடல் தான்.
1963ஆம் வருடத்தில் மொத்தம் வெளிவந்த 45 தமிழ்ப் படங்களில் கே.வி. மகாதேவனின் இசையில் மட்டுமே இருபத்து மூன்று படங்கள் வெளிவந்தன.
அவற்றில் பெரும்பாலான பாடல்கள் பெரு வெற்றி பெற்ற பாடல்கள்.
எழுத்தாளர் அகிலனின் "வாழ்வு எங்கே" என்ற புகழ் பெற்ற நாவல் ஏ.பி.நாகராஜனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சரோஜாதேவி - தேவிகா நடிக்க "குலமகள் ராதை" படமாக வெளிவந்தது.
கே.வி.மகாதேவனின் இசையில் மருதகாசி, கண்ணதாசன் இருவரின் பாடல்கள் அனைத்துமே இன்றளவும் மறையாத பாடல்கள்.
"உலகம் இதிலே அடங்குது" - டி.எம்.எஸ். பாடும் இந்த விறுவிறுப்பான பாடலுடன்தான் படமே தொடங்குகிறது.
"ராதே உனக்கு கோபம் ஆகாதடி" - எம்.கே. தியாகராஜா பாகவதர் பாடிப் பிரபலமான ஒரு பாடல். அதே மெட்டில் டி.எம். சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் அப்படியே வார்த்தெடுத்திருந்தார் கே.வி. மகாதேவன்.
"சந்திரனைக் காணாமல் அல்லிமுகம் மலருமா" - டி.எம்.எஸ் - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலில் முதல் சரணம் முடிந்ததும் நடைபேதம் செய்து அடுத்த சரணத்தை அமைத்து கடைசியில் மீண்டும் பல்லவிக்கேற்ற நடைக்குத் திரும்பிவந்து .. என்று நகாசு வேலை காட்டி இருக்கிறார் கே.வி.மகாதேவன்.
"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" - படத்திலேயே டி.எம்.எஸ். குரலில் மிகவும் பிரபலமான இந்தப் பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதம் - வித்யாசமான மெட்டு மனதை வருடுகிறது.
"பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்" - பி.சுசீலாவின் குரலில் ஒரு சோகப் பாடல்.
"கள்ளமலர்ச் சிரிப்பிலே" - பி.சுசீலாவின் குரலில் செந்தேனாக இனிக்கும் பாடல்.
டி.எம்.எஸ். அவர்களுக்கு என்று பிரபலமான பாடலைக் கொடுத்த மகாதேவன் படத்தின் பெயர் சொன்னாலே நினைவில் நிற்கும் அளவுக்கு பி.சுசீலாவின் குரலில் கொடுத்த பாடல் "இரவுக்கு ஆயிரம் கண்கள்".
பாடல் வரிகளும், இணைப்பிசையும், பாடலை அமைத்த விதமும் படத்திலேயே முதல் இடம் பெற்ற பாடலாக இந்தப் பாடலை நிற்க வைத்துவிட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொந்தமாக "சிவாஜி பிலிம்ஸ்" பானரில் தயாரித்த முதல் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி.மகாதேவனுக்கே கிடைத்தது. படம் "அன்னை இல்லம்". பி. மாதவன் இயக்கிய முதல் சிவாஜி படம் இது.
இந்தப் படத்தில் மகாதேவனின் இசையில் பாடல்கள் வெற்றிபெற்று படத்தின் வெற்றிக்கு கைகொடுத்தன.
"நடையா இது நடையா" - டி.எம்.எஸ். - குரலில் ஒரு ஈவ் டீசிங் பாடல்.
"மடிமீது தலைவைத்து" - இன்றளவும் அனைத்து தொலைக்காட்சிச் சானல்களாலும் தவறாமல் ஒளிபரப்பப் படும் பாடல். டி.எம்.எஸ். - சுசீலாவின் குரல்களில் அருமையான ஒரு மெலடி.
"எண்ணிரண்டு பதினாறு வயது" - டி.எம்.எஸ்ஸுடன் "ஹம்மிங்கில்" எல்.ஆர். ஈஸ்வரி இணையும் பாடல்.
"பாசமலர்" தயாரித்த மோகன் தனது "ராஜாமணி பிக்சர்ஸ்" பானரில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாரித்த "குங்குமம்" படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.
சிவாஜிக்கு ஜோடியாக விஜயகுமாரி நடித்த முதல் படம் இது. இவர்களுடன் எஸ்.எஸ். ஆர்., சாரதா, எஸ்.வி. ரங்கராவ், எம்.வி.ராஜம்மா, நாகேஷ், மனோரமா - ஆகியோரும் நடித்திருந்தனர்.
பாடல்களில் ஒரு இசைச் சாம்ராஜ்யமே நடத்தி இருந்தார் கே.வி.மகாதேவன்.
"குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம்" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி.சுசீலா இணைந்து பாடும் இந்தப் பாடலை முழுக்க முழுக்க கர்நாடக ராகமான "ஆபேரி"யில் அற்புதமாக அமைத்திருந்தார் அவர்.
"பூந்தோட்டக் காவல்காரா" - பி.சுசீலாவில் குரலில் துள்ளலாகவும் டி.எம்.எஸ். குரலில் விருத்தமாகவும் ஒலிக்கும் பாடல் இது.
.
"இசைச் சக்ரவர்த்தி" ஜி.ராமநாதன் பிரபலப்படுத்திய ராகம் சாருகேசி.
இந்த ராகத்தில் ஒரு அருமையான ஜோடிப்பாடலை வெகு சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
"தூங்காத கண்ணின்று ஒன்று" - டி.எம். எஸ். - சுசீலா பாடும் இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?
இதே போல "தர்பாரி கானடாவில்" டி.எம்.எஸ். - எஸ். ஜானகியின் குரல்களில் ஒலிக்கும் - பிரபலமான "சின்னஞ்சிறிய வண்ணப் பறவை" இசை இன்றளவும் இசை வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறதே.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வைப்பதற்காக தனது அடுத்த கதையை தயார் செய்தார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.
அதுவே நடிகர் திலகத்தின் நூறாவது படமாகவும் அமைந்தது.
ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் அசத்திய "நவராத்திரி" படம் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்தது.
நடிகர் திலகத்துடன் நடிகையர் திலகம் இணைந்து நடித்த இந்தப் படத்தில் மகாதேவன் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்தன.
"நவராத்திரி சுபராத்திரி" - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலை பீம்ப்ளாஸ் ராகத்தைப் பயன்படுத்தி இசை அமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.
இன்றுவரை ஒவ்வொரு நவராத்திரி பண்டிகைக்கும் தவறாமல் ஒளிபரப்பாகும் பாடல் இது.
"சொல்லவா கதை சொல்லவா" - பி.சுசீலா.
"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்" - டி.எம். எஸ். பாடும் பாடல்.
மனநோய் மருத்துவமனையில் ஒரு கதம்பப் பாட்டு - பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குழுவினருடன் பாடும் பாட்டு.
"போட்டது மொளைச்சுதடி கண்ணம்மா" - டி.எம்.எஸ்.
நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகளில் சத்தியவான்-சாவித்திரி நாடகப் பாடல்களை தொகுத்து அமைத்த தெருக்கூத்துக்கான பாட்டு. டி.எம்.எஸ். - பி.சுசீலா - எஸ்.சி. கிருஷ்ணன் ஆகியோருடன் வசனப் பகுத்திக்கு நடிகர் திலகமும், நடிகையர் திலகமும். இந்தப் பாடல் முழுக்க ஹார்மோனியத்தையும் தபேலாவையும் மட்டுமே பயன்படுத்தி அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
"நவராத்திரி" படத்தை விமர்சனம் செய்த ஆனந்த விகடன் "நடிப்பிலும், கதையிலும் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் சற்று செலுத்தி இருக்கலாம்" - என்று விமர்சனம் செய்திருந்தது.
ஆனால் "நவராத்திரி" பாடல்கள் அப்படி ஒன்று சோடை போகவில்லை என்பது இன்றளவும் உண்மை.
படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு பாடல்களும் உறுதுணையாக இருந்தாலும் ஆக்கிரமித்ததென்னவோ நடிகர் திலகத்தின் நடிப்புத்தான்.
Last edited by Gopal.s; 20th October 2014 at 07:34 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th October 2014 05:49 AM
# ADS
Circuit advertisement
-
20th October 2014, 08:31 AM
#2312
Junior Member
Newbie Hubber
புதுமை இயக்குனர் ஸ்ரீதர்.
இன்று அவரின் 6 வது நினைவு நாள்.
சிவாஜியுடன், எதிர்பாராதது,அமரதீபம்,உத்தமபுத்திரன்,புனர்ஜென்மம், சித்தூர் ராணி பத்மினி,கலாட்டா கல்யாணம் படங்களில் எழுத்தாளராகவும், விடிவெள்ளி,ஊட்டி வரை உறவு,நெஞ்சிருக்கும் வரை,சிவந்தமண் ,வைரநெஞ்சம்,மோகன புன்னகை முதலிய படங்களில் இயக்குனராகவும் ,கடைசி வரை உயரிய நண்பராகவும் தொடர்ந்தவர்.
மறைவதற்கு சில நாட்கள் முன்பு,தன்னை சந்தித்த அமீர் என்ற இயக்குனரிடம்,தனக்கு மிக பிடித்த நடிகராக நடிகர்திலகத்தை குறித்துள்ளார்.
புதுமை இயக்குனர் , தமிழ் கதைகளுக்கு புதிய தளத்தை வடிவமைத்து,இயக்குனர் என்ற பதத்திற்கே புது அர்த்தம் தந்தவர்.காமிரா வழியாக கதை சொன்னவர்.
சிவாஜிக்கு இவர் கொடுத்த அமர தீபம்,உத்தமபுத்திரன்,ஊட்டி வரை உறவு,சிவந்த மண் போன்ற காவியங்கள் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
இவருடைய மூன்று மிக சிறந்த படங்கள் காதலிக்க நேரமில்லை,சுமைதாங்கி,நெஞ்சில் ஊர் ஆலயம். 70 களில் மிக மோசமான படங்களால் தன் தரத்தை தாழ்த்தி கொண்டாலும் ,இளைய தலைமுறையினரிடம் இணைந்து இவரளித்த இளமை ,ஊஞ்சலாடுகிறது.அழகே உன்னை ஆராதிக்கிறேன் ஆகியவை முத்திரை.
எது எப்படி இருப்பினும் இவருக்கு அமைந்த அளவு பாடல்கள், எந்த இயக்குனருக்கும் அமைந்ததில்லை என்பது சத்தியம்.
சிவாஜியை ,இவர் ஒரு பீம்சிங்,பந்துலு,ஏ.பீ.என்,ஏ.சி.டி,மாதவன் ,பாரதிராஜா அளவு பயன் படுத்தி, காவியங்களை அளிக்காதது எனக்கு வருத்தமே. ஆனாலும் பாலசந்தர் அளவு ஏமாற்றமில்லை.
Last edited by Gopal.s; 20th October 2014 at 10:47 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th October 2014, 08:39 AM
#2313
Junior Member
Newbie Hubber
நண்பர்களே,
நான் விளையாட்டாக மற்றவர் பாணியில் எழுதிய அங்கதங்களை சிலர் நிஜமாகவே செய்ய தொடங்கி விஷ பரீக்ஷை ஆரம்பித்தாயிற்று.
ஜெயகாந்தன் கதைகளுக்கும்,தி.ஜானகிராமன் கதைகளுக்கும் செய்த ஆய்வுகளை காப்பியடித்து,ராஜேஷ் குமார் கதைகளுக்கு செய்ய ஆரம்பித்தால்?
புலிகளுக்கு கோடு இருப்பதுதான் அழகு. பூனைகள் அடுப்படியில் உறங்கியிருப்பதே நல்லது.
-
20th October 2014, 10:19 AM
#2314
Junior Member
Senior Hubber
நெல்லை சென்ட்ரலில் தீபாவளியை முன்னிட்டு 22.10.2014 முதல்
நமது தலைவர் நடிகர்திலகம் நடித்த நீதி வெளியீடு.

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
20th October 2014, 10:37 AM
#2315
Junior Member
Senior Hubber
நெல்லை சென்ட்ரலில் தீபாவளியை முன்னிட்டு 22.10.2014 முதல்
நமது தலைவர் நடிகர்திலகம் நடித்த நீதி வெளியீடு.
http://i1373.photobucket.com/albums/...ps39deeae4.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
20th October 2014, 10:39 AM
#2316
Junior Member
Senior Hubber
நெல்லை சென்ட்ரலில் தீபாவளியை முன்னிட்டு 22.10.2014 முதல்
நமது தலைவர் நடிகர்திலகம் நடித்த நீதி வெளியீடு.

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
20th October 2014, 10:58 AM
#2317
Junior Member
Newbie Hubber
இன்று ஸ்ரீதர் நினைவு தினம். அவரை நினைவு கோரும் விதமாக,அவரால் உளவியல் ரீதியில் படைப்பு பெற்று ,மிக சுருக்கமான,கூர்மையான ,ஈர்ப்பான ,இயல்பான வசனங்களால், சிவாஜியின் மேதைமை மேலும் மெருகேற்றி, அமரத்துவம் பெற்று ,அனைத்து தரப்பினராலும் ,இன்றளவும் பாராட்ட பெற்று, எல்லோர் நெஞ்சிலும் நிலைக்கும்
உத்தம புத்திரன்.
உத்தம புத்திரன்-1958
எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)
முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான் ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .
இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.
முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.
இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.
நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.
கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.
கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.
உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.
குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.
இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........
விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.
அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.
தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.
தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.
ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.
மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.
இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.
விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.
விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.
இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.
கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.
இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).
குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.
அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.
ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...
ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...
பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..
சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....
இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?
Last edited by Gopal.s; 20th October 2014 at 11:05 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
20th October 2014, 11:18 AM
#2318
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
இன்று ஸ்ரீதர் நினைவு தினம். அவரை நினைவு கோரும் விதமாக,அவரால் உளவியல் ரீதியில் படைப்பு பெற்று ,மிக சுருக்கமான,கூர்மையான ,ஈர்ப்பான ,இயல்பான வசனங்களால், சிவாஜியின் மேதைமை மேலும் மெருகேற்றி, அமரத்துவம் பெற்று ,அனைத்து தரப்பினராலும் ,இன்றளவும் பாராட்ட பெற்று, எல்லோர் நெஞ்சிலும் நிலைக்கும்
உத்தம புத்திரன்.
இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?
டியர் கோபால் சார்,
இயக்குனர் ஸ்ரீதர் நினைவுநாளை - உத்தமபுத்திரன் திரைப்படம் மூலம் நினைவுகூர்ந்தது மிகவும் பொருத்தம் - சிறப்பு.

Originally Posted by
Gopal,S.
உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.
மிகச் சிறப்பான வர்ணனை.
இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய படங்களில் எனக்குப் பிடித்தது நெஞ்சிருக்கும்வரை & ஊட்டிவரை உறவு.
Last edited by KCSHEKAR; 20th October 2014 at 11:26 AM.
-
20th October 2014, 01:37 PM
#2319
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
நண்பர்களே,.
-
20th October 2014, 01:39 PM
#2320
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks