-
21st October 2014, 01:59 PM
#2381
Junior Member
Veteran Hubber
Deepaavali as flamboyant as NT! Greetings!!
தீபாவளி என்பது நடிப்புப்பண்டிதர் நடிகர்திலகத்தைப் போலவே நவரசம் ததும்பும் பண்டிகை.. எத்தனை வகையான இனிப்புக்கள், எத்தனை விதமான புத்தாடைகள் பலரகங்களிலும் வண்ணம் தெறிக்கும் பட்டாசு வாணவேடிக்கைகள்.. எத்துணை விதமான வாழ்த்துக்கள் ..........இதயம் கனிந்த இன்பம் நிறைந்த ஒளிவீசும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அடுத்த தீபாவளி நம் எண்ணங்களின் வண்ணக்கனவுகள் நனவாகி 'பாரதரத்னா' 'உலக்த்திரைவாழ்நாள்சாதனையாளர்' சிவாஜிகணேசனின் பண்டிகையாக இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன் !
You are the invincible emperor in our hearts, minds and souls! You must be the Bharatharathnaa when this dream among all other rathnams, pearls, diamonds, coins, money, gold, silver ...and what not ...comes true by God's grace!!
Last edited by sivajisenthil; 21st October 2014 at 06:00 PM.
-
21st October 2014 01:59 PM
# ADS
Circuit advertisement
-
21st October 2014, 02:52 PM
#2382
ஒரு சில விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்ல நேர்வது மிகுந்த சங்கடத்துக்குரியது. அது சொல்பவர்களுக்கும் சரி சொல்லப்படுபவர்களுக்கும் பொருந்தும். வேறு வழியின்றி சில நேரம் அதை செய்ய வேண்டியிருக்கிறது.
செந்தில் சார்,
நான் ஏற்கனவே ஒரு முறை சொன்னதுதான். கொஞ்சம் வீடியோக்களை குறைக்கலாமே! அனைத்துப் பதிவுகளிலும் ஒரு வீடியோவை பதிப்பது தவிர்க்கலாமே! அதே போன்று ஸ்ரீதர் நினைவு நாள் என்றால் ஸ்ரீதர் நடிகர் திலகம் கூட்டணியில் வந்த படங்களின் பாடல்கள், காட்சிகள் போதுமே ஏன் ஸ்ரீதரின் பிற படங்களின் பாடல்கள்? வேண்டுமென்றால் அவற்றை பதிவிட வேறு திரிகள் உள்ளனவே! நான் சொல்ல வருவதை சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
RKS,
நான் பலமுறை சொன்னதைத்தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்ல விழைகிறேன். ஏன் எல்லாவற்றிருக்கும் பதிலளிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? நாம் இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் நம் கருத்துக்கு திருப்ப முடியாது. இந்த இணையதளத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் பதில் சொல்லுகிறீர்கள். நமக்கு தெரியாத வேறு பல இணையதளங்கள் அல்லது வலைப்பூக்கள் இருக்கலாம். அங்கேயெல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய விமர்சனங்கள் வைக்கப்படலாம். அது நமக்கு தெரிய வருவதில்லை. அதற்கு என்ன செய்ய முடியும். ஒவ்வொரு பதிவிற்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அதற்குதான் நேரம் இருக்கும். நான் முன்பே சொன்னது போல் உங்கள் உடல்நலம்தான் கெடும். நீங்கள் உடனே உணர்ச்சிவசப்படுவீர்கள் என்று தெரிந்து உங்களை சீண்டுவதற்காகவே சில பதிவுகள் போடப்படுகின்றன என்றே எனக்கு தோன்றுகிறது. உங்களை சீண்டி விட்டுவிட்டு பதிவை போட்டவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். நீங்கள் தேவையற்ற டென்ஷனில் இருப்பீர்கள். முக முத்து மற்றும் தேங்காய் பாடல்கள எல்லாம் நமது திரிக்கென்றே உள்ள மாண்பை குறைக்கவில்லையா? அதே போன்று நடிகர் திலகம் பற்றி யார் என்ன சொன்னாலும் அது அவரவர்களின் கருத்தே தவிர அது பொது மறை அல்ல. யாரோ x,y,z ஏதோ சொல்வார்கள். அதற்கு ஏன் மெனக்கெட்டு நாம் பதில் சொல்ல வேண்டும்? worst cum worst சிவாஜி சிறந்த நடிகர் இல்லை என்று சொல்லுவார்களா இல்லை சிவாஜியின் எந்தப் படமும் ஓடவில்லை என்று சொல்லுவார்களா? அதனால் நடிகர் திலகம் என்ன குறைந்து விடப் போகிறார் இல்லை நாம் என்ன இழக்க போகிறோம்? நான் உங்களிடம் சொல்வதெல்லாம் உங்கள் சக்தியை தேவையின்றி வீணடிக்காதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதில் கவனம் செலுத்துங்கள். Please ignore provacative comments.
கோபால்,
நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் உங்கள் உயரத்திலிருந்து இறங்காதீர்கள் தேவையற்ற விவாதங்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு தொடர்பில்லாத பதிவுகளுக்கு கருத்து சொல்லப் போய் வீண் பழி தேடிக் கொள்கிறீர்கள். இது உங்களுக்கு தேவையற்ற ஒன்று. நான் எதை குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.
அது போன்றே நடிகர் திலகத்தின் படங்கள் பற்றிய பதிவுகளுக்கு ஏன் எதிர் வினை புரியவில்லை என்று கேட்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் நான் ஏன் எழுதவில்லை என்று. மீள் பதிவுகளைப் போட்டு You are taking the easy way out. பயனில்லாத சர்ச்சைகளில் ஈடுபடும் நேரத்தில் உங்களால பாபு பற்றி புதிய பத்து பதிவுகள் எழுத முடியும். கெளரவம் பற்றி நூறு கருத்துக்கள் உத்தம புத்திரன் பற்றி ஆயிரம் எண்ணங்கள் உங்களால் எழுத முடியும். அதில் கவனம் செலுத்துங்கள் அதை படிக்கும் இளம் தலைமுறைக்கு அது ஒரு புதிய knowledge ஆக விளங்கும்.
ஜோ சொன்னது போல சிவாஜி திரியில் அவரை பற்றிய செய்திகளை விட வேறு விஷயங்கள் அதிக இடம் பெறுவது இந்த திரிக்கு புதிதாக வருபவர்களின் ஆர்வத்தை குறைத்து விடும் அபாயம் இருக்கிறது.
ஆகவே அனைவரும் தயவு கூர்ந்து நடிகர் திலகம் பற்றிய செய்திகள் தகவல்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து பதிவுகளை தொடருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
21st October 2014, 04:04 PM
#2383
Junior Member
Senior Hubber
உலகத்தமிழர்களுக்கும் திரி நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள
அடுத்த தீபாவளிக்குள் தலைவருக்கு பாரத்ரத்னா விருது கிடைத்து அவ்விருதுக்கு பெருமை சேர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்திப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st October 2014, 04:30 PM
#2384
Junior Member
Newbie Hubber
முரளி,
சிறு வயது முதல் ,தலைமை பண்புகள் என்னுள் ஊறியது. ஆனால் பயன் தரும் ,நல்ல முடிவுகளை தரும் சர்வாதிகார தன்மை நிறைந்த பண்பு.(Singapore லீ போல)ஒரு பொது ஜனநாயகம் என்பது, நான் வேலை பார்த்த தனியார் நிறுவனங்களில் தேவை படவில்லை.அதனால் கருத்துக்களை ஓங்கி கூறுதல்,நினைத்தவற்றை நினைத்த படியே சாதித்தல்,வேறு வழியில் சிந்திப்போரை முறை படுத்தல்,கூர்மை படுத்தி செப்பனிடுதல்,நகைசுவை உணர்ச்சி நிறைந்த தலைவனாகவே வெற்றி கண்டு விட்டேன். மக்களுக்கு நிறைய கவனம் கொடுத்து ,மனிதாபிமானத்திலும் சிறந்ததால் ,எல்லோரும் என்னை ஏற்றனர். என் வெற்றி முழுக்க எனக்கே சொந்தம்.
நான் விரும்பி ஏற்ற பதிவர் பாத்திரத்தில்,நான் புதியவன்,இது ஜனநாயக களம் என்பதை அறிந்தே இருந்தாலும்,என் பதிவுகள் நேசிக்க பட்ட அளவு,என் வழிமுறை நேசிக்க படவில்லை என்று உணர்ந்து விட்டேன். என்னை மாற்றி கொள்வது கடினம். என் வழியை மாற்றி blog இல் நுழைகிறேன்.எவ்வளவோ சொல்ல ஆசை. என்னும் பல விஷயங்கள் புதைந்து கிடக்கிறது.அதனால் நான் தினம் ஒரு விஷயம் போடும் போது புத்தெழுச்சி கொள்ளலாம். Blog ,feedback வருமே
தவிர,interaction இல்லை.வீடியோ தடைகள் இல்லை.
எல்லோருக்குமே நன்றி.80 களுக்கு பிறகு,தமிழில் ஒரு வார்த்தை கூட எழுதாமல்(படிப்பதை நிறுத்தியதில்லை) இருந்த என்னை (type பண்ணுவது அறவே பிடிக்காது), 2012 இல் மீண்டும் தமிழை சுவைக்க வைத்த மையம் திரிக்கு நன்றி. தட்டச்சு (ஒரே விரலில் என்றாலும்)பழக்கமாகி விட்டது. இத்தனை பயிற்சிகளும் உலகத்திலேயே நான் மிக அதிகமாக நேசிக்கும் அந்த உலகத்திலேயே சிறந்த என் தமிழ் நாயகனுக்கு நான் செய்த பூஜையாகவும் ஆனது.
சமீபத்தில் எனக்கு,ஈடுபாடு குறைந்தே வந்துள்ளது திரிகளில். அதனால் சற்றே விலகி,மற்றவற்றை தொடர போகிறேன். யாராவது வருவார்கள்.முன்னெடுத்து செல்வார்கள். முதலில் ஜோ போன்றவர்கள்,பிறகு சாரதா,கார்த்திக், பிறகு முரளி,பிறகு ராகவேந்தர்,பம்மலார் ,பிறகு வாசு, பிறகு நான். என் பின் யாரோ அவருக்கு சத்ய பூஜை தொடர வர வேண்டும். அவன் என் உயரத்தினும் மேல் செல்ல வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன். உங்களிடமிருந்து மட்டுமல்ல. அனைத்து நண்பர்களிடமிருந்தும். இது நிரந்தர பிரிவல்ல. சிறிய விலகல் மட்டுமே. கோபமில்லை.வருத்தமில்லை. மாற்றம் வேண்டியுள்ளது.
என்னை ஊக்க படுத்திய அனைவருக்கும் நன்றி.(யுகேஷ்,கலை,எஸ்வி உட்பட)தீபாவளி வாழ்த்துக்கள்.
Last edited by Gopal.s; 21st October 2014 at 04:39 PM.
-
21st October 2014, 04:57 PM
#2385
Senior Member
Devoted Hubber
No way relate to this thread. but NT set an example as VOC in this video presented by Nakheeran
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
joe liked this post
-
21st October 2014, 07:34 PM
#2386
மய்யம் நடிகர் திலகம் திரியின் பங்களிப்பார்கள், திரியின் வாசகர்கள், மற்றுமுள்ள அனைத்து திரிகளின் பங்களிப்பாளர்கள், மய்யம் உறுப்பினர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் உளங்கனிந்த தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்!
அன்புடன் .
-
21st October 2014, 08:13 PM
#2387
Junior Member
Senior Hubber

Originally Posted by
SPCHOWTHRYRAM
உலகத்தமிழர்களுக்கும் திரி நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள
அடுத்த தீபாவளிக்குள் தலைவருக்கு பாரத்ரத்னா விருது கிடைத்து அவ்விருதுக்கு பெருமை சேர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்திப்போம்.

From the year 1964 I have been enjoying NT films first day mostly first show or evening show till annan orukoil afe that due to setbacks and constraints missed many first day enjoyments.
iam also getting aged and iam waiting for BHARAT RATNA HONOUR FOR NT very soon.
diwali greetings to all our hubbers and NT fans.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st October 2014, 08:23 PM
#2388
Senior Member
Senior Hubber
Dear friends,
Wish you and your family a very happy and safe Deepavali.
Regards,
R. Parthasarathy
-
21st October 2014, 08:32 PM
#2389
Junior Member
Devoted Hubber
Wish you happy Deepavali to all NT fans.
-
21st October 2014, 09:53 PM
#2390
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks