-
23rd October 2014, 07:11 PM
#11
Junior Member
Seasoned Hubber
திரு. ராமமூர்த்தி சார்,
இதயவீணை படத்தின் விமர்சனத்தின்போது, ஏசுநாதர் என்ற பெயரில் தலைவர் நடிக்கவிருந்த படம் பின்னர் கைவிடப்பட்டதை குறிப்பிட்டிருந்தேன். படத்தில் தலைவர் நடிப்பதற்கு அப்போது எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.மணி என்பவர் போப்பாண்டவருக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கு போப்பாண்டவர் சார்பில், தலைவர் நடிப்பதற்கு ஆட்சேபம் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட கடிதத்தையும் அது தொடர்பான மாலை முரசு செய்தியையும் திரு.மணி அவர்களின் நன்றி அறிவிப்பு விளம்பரத்தையும் பதிவிட்ட உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.
நற்பண்புகள் நிறைந்த எம்.ஜி.ஆர். ஏசுநாதராக நடிப்பது தவறில்லை என்று போப்பாண்டவரே கூறியிருப்பது தலைவரின் தொண்டர்களான நமக்கெல்லாம் கிடைத்த பெருமை. எந்த நடிகருக்கு இதுபோன்று சான்று அதுவும் போப்பாண்டவரிடம் இருந்து கிடைக்கும்? இதயவீணை விமர்சனத்தில் ஏசுநாதர் படம் தலைவர் நடித்து வெளிவந்திருந்தால் ஒரு சரித்திரம் ஆகியிருக்கும் என்றும் கூறியிருந்தேன்.
திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் கூட தன்னை பாராட்டியதாக நன்றி அறிவிப்பு விளம்பரத்தில் திரு.மணி கூறியுள்ளார். அவர் கூறியது மிகையில்லை என்பதற்கு ‘தலைவரின் ஏசுநாதர் வேஷப் பொருத்தம் நன்றாக இருந்ததாகவும் அந்தப் படம் வெளிவராதது நஷ்டமே’ என்றும் சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகரான ஆருயிர் நண்பர் திரு.கோபால் கூறியிருப்பதே சான்று. (தலைவர் இருந்தவரை அவருக்கு தொல்லை கொடுத்தவர்கள் அவர் மறைந்த பின் 40 ஆண்டு கால நண்பர் என்று கூறிக் கொள்ளும்போது கோபாலை நான் ஆருயிர் நண்பர் என்று சொல்லக் கூடாதா? ஆயிரம் சொல்லுங்கள். கோபால் இல்லாமல் எனக்கே ‘சப்’பென்று இருக்கிறது. விரதத்தை முடித்து வந்து விட்டாரா? என்று இன்று கூட அந்தப் பக்கம் பார்த்தேன். ஏமாற்றமே. நம்பிக்கையுடன் காத்திருப்போம்)
இப்படிப்பட்ட பெருமையுடைய ஆவணத்தை வெளியிட்ட திரு.ராமமூர்த்தி சார், உங்களுக்கு நன்றி என்று சொல்வதெல்லாம் வெறும் சம்பிரதாய வார்த்தையாகவே இருக்கும். அதற்கு பதிலாக என்ன சொல்லலாம் என்று தெரியாமல் கலங்கும் கண்களுடன் கைகூப்பி வணங்குகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
23rd October 2014 07:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks