இந்த நாளில் அன்று (28.10.1983); ""ராணுவத்தை அனுப்புமாறு இலங்கைத் தலைவர்கள் கோரவில்லை'' சட்டசபையில் எம்.ஜி.ஆர். பதில்

இலங்கை அமைச்சர் தொண்டமானோ அமிர்தலிங்கம் போன்ற இலங்கைத் தமிழர் தலைவர்களோ ஈழ விடுதலைப் புலிகளோ இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும்

என்று கேட்காதபோது, இங்கிருப்பவர்கள் சிலர் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்பது எப்படிப் பொருத்தமுடையதாகும்'' என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் கேட்டார்.

""விடுதலைப் புலிகள்கூட இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்கவில்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள்; முடிந்தால் ஆயுதம் கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

தனி ஈழம் வேண்டும் என்று முடிவு செய்வதோ கேட்பதோ அங்கு வாழும் தமிழ் மக்களே தவிர நாம் அதை முடிவு செய்து விட முடியாது. ஈழத் தமிழர்களோ விடுதலைப்

புலிகளோ இலங்கைத் தமிழர் தலைவர்களோ படை அனுப்புங்கள் என்று கேட்கவில்லை. இந்த உண்மையை மறைத்துப் பேசுகிறோம். இது பல சிக்கலை உருவாக்கும்'' என்றும் முதல்வர் சொன்னார்.



நவீன அரிசி அரவை ஆலைகளை அமைக்க திட்டம்

சென்னை, அக்.27- நாள் ஒன்றுக்கு 100 டன் நெல்லை அரவை செய்யும் திறன் கொண்ட நவீன அரிசி ஆலை சீர்காழி அருகே எருக்கூர் என்ற கிராமத்தில் அமைக்கப்படுகிறது.

மேலும் 5 இடங்களில் நவீன அரிசி ஆலைகளை ஏற்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரி இருக்கிறோம். இவற்றில் ஒன்றை தஞ்சை மாவட்டம், குத்தாலத்தில் அமைப்பது

பற்றி பரிசீலிக்கப்படும் என்று ஆர். ராஜமாணிக்கம் (தி.மு.க.) கேள்விக்கு பதிலளிக்கையில் தொழில் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசு தெரிவித்தார்.

( 28.10.1983 தினமணியில் வெளியான செய்திகள்... )