-
30th October 2014, 11:29 PM
#11
Junior Member
Seasoned Hubber
சங்கே முழங்கு
மக்கள் திலகத்தின் மகத்தான நடிப்புத் திறமையைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த படம். ஆரம்பக் காட்சி முதலே மிகுந்த விறுவிறுப்பாகச் செல்லும் படங்களில் ஒன்று. பொம்பள சிரிச்சா போச்சு பாடல் காட்சியிலும், இரண்டு கண்கள் பேசும் மொழியில் படலிலும், குடிப்பது போலே நடிப்பார் பாடல் காட்சியிலும் அவரது நடன அசைவுகள் அமர்க்களமாக இருக்கும்.
லட்சுமியுடனான காதல் காட்சிகளில் மிகுந்த வித்தியாசம் காட்டியிருப்பார். சண்டைக் காட்சிகள் மிகக்குறைவான படங்களுள் இதுவும் ஒன்று. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கூர்மையான வசனங்கள் படத்திற்கு மற்றொரு பலம். தான் உயிரையே வைத்திருக்கும் தனது வளர்ப்புத் தந்தையை தான் கொன்றதாக பழிசுமத்தப்பட்டு வழக்கறிஞர் வி.கே.ராமசாமியின் சூழ்ந்சியை அறியாமல் அவர் தந்த யோசனையை ஏற்று பயந்து ஓடி ஒளியும் அப்பாவி பின்னர் அவரையே மடக்கும் அளவுக்கு ஞானம் பெற்று கோர்டில் வாதம் புரியும் காட்சிகள் அமர்க்களம். நான்குபேருக்கு நன்றி பாடல் காட்சியில் அவரது முகபாவங்கள் மிக மிக மிக இயற்கையாக இருக்கும். மேலும் ரயில் செல்வதற்கேற்ப அவரது உடலசைவுகள் அவ்வளவு இயற்கையாக இருக்கும். (பேக்புரஜக்சன் முறையில் படமாக்கப்பட்ட காட்சி இது என்பது பின்னணியை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும் . அந்த அளவுக்கு மக்கள் திலகத்தின் உடலசைவுகள் தத்ரூபமாக இருக்கும். உடன் பயணிப்பவர் விஷயத்தில் இது கோட்டை விடப்பட்டிருக்கும்.)சிறு பாத்திரத்தில் வந்தாலும் டி.கே.பகவதி அவர்களின் நடிப்பு கச்சிதம். விகேஆரும், அசோகனும் சபாஷ் போட வைக்கின்றனர். தங்கையின் அண்ணனாகவும், மாப்பிள்ளையின் அக்காவாகவும் அவர் நடிக்கும் காட்சி அபாரம். அதிலும் வெறும் வாயிலேயே வெற்றிலை போட்டது போல நடிக்கும் காட்சி அற்புதம். கோர்டில் வாதாடும் காட்சிகள், அசோகனை ஏமாற்றி உண்மைகளை வாங்க பேசும் போதும் அவரது உரையாடல்கள் சுவையானவை . அறிவுக்கூர்மையான வசனங்கள். continuity விஷயத்தில் மிக கவனமாக இருக்கும் மக்கள் திலகம் வெகு அபூர்வமாக சில படங்களில் அதில் தவறியிருப்பார். அதில் இந்தப் படமும் ஒன்று. உதாரணமாக விமான நிலையத்தில் லட்சுமியுடனான தகராறின் போது நீல வண்ண உடையில் காட்சியளிப்பார். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் சண்டைக் காட்சியில் சிவப்பு உடையில் காட்சியளிப்பார்).வேலைபழு காரணமாக அவரையும் மீறிய சில அசாதாரணங்களில் இதுவும் ஒன்று. சீக்கியராக வரும் காட்சிகளில் அவரது அழகு அசத்தல். அதே போல டி.கே.பகவதி தவறவிட்ட அவரது பெட்டியை ஒப்படைக்கச் சென்ற போது லட்சுமி தன்னை அடையாளம் கண்டு கொள்வாரோ என்ற பதட்டத்தை காட்டும் காட்சியில் அவரது நடிப்பு 100சதவீதம் இயற்கை. மொத்த்த்தில் இந்தப் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பு மற்றொரு இமயம்.
-
30th October 2014 11:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks