-
8th November 2014, 06:56 AM
#2891
Junior Member
Diamond Hubber

முதலில் சாரி கோபால் சார் ஏன் என்றால் நீங்கள் கலைவேந்தன் அவர்களுக்கு கூறிய பதிலில் நான் நுழைவது கடவுளை பற்றி ஒரு கடவுள் மறுப்பாளர் வைக்கும் அபாண்டங்கள் சொல்லும்பொழுது எந்த வொரு பக்தனுக்கும் கோபம் வருவது நியாயம் தானே
திமுக விற்கு நீங்கள் இந்த கருத்தை எல்லாம் சொல்லினால் நீங்கள் தான் கொ ப செ .
தலைவர் சொல்லியதால் தான் என்னை போல் அவருடைய ரசிக கண்மணிகள் யாரும் எந்த வித தீய பழக்கத்திற்கு ஆளாக்ம்மால் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .
கட்சி ஆரம்பித்தவுடன் பச்சை குத்த சொன்னவர் என்று சொல்லுபவரே அதற்கு முன்னாலே எத்தனை லட்சம் பாட்டாளி மக்கள் பெயர் அவர் பெயரை பச்சை குத்தி கொண்ட கணக்கு தெரியுமா அவர்கள் எல்லாம் கழக கொடி தனை பச்சை குத்தி கொள்ளவில்லை அவருடைய தமிழ் வார்த்தை கொண்ட பெயரை விட ஆங்கிலத்தில் உள்ள mgr என்ற பெயரை தான் பச்சை குத்தி கொண்டது உங்களுக்கு தெரியுமா ?
உங்களுக்கு ஒரு விண்ணப்பம் தயவு செய்து அன்புமணி ராமதாஸ் என்ற சாக்கடையோடு எங்கள் புண்ணிய தலைவரை ஒப்பிடாதிர்கள் .
1)சிவாஜி ஆரம்பத்திலிருந்தே ,தன்னுடைய செல்வாக்கினால் கட்சியை வளர்த்தவரே தவிர,கட்சியினால் வளர்ந்தவர் அல்ல.சில சில்லறை நடிகர்கள்,கட்சியினால் தங்களை வளர்த்து கொண்டது ஊரறிந்த விஷயம்.( உங்களை போல் சிலர் அறிந்த விசயம் )
2)அவர் தனக்காக எதுவும் கேட்டதில்லை.பதவி சுகம் நாடியதில்லை.தன்னை நம்பியவர்களுக்காகவே போராடினார்,.அதுவும் வெளிப்படையாக.தனக்கு அமைச்சர் பதவி கேட்டு ,கட்சியை உடைத்தவரும் இல்லை.புதியதாய் வந்த ஒரு நடிகனின் ஓரிரு படங்கள் வெற்றி கண்டதும்,raw அமைப்பு புண்ணியத்தில் புது கட்சி கண்டவரும் அல்ல.இந்திரா காந்தி ,காமராஜ் இருந்த போதே சிவாஜிக்காக தூது விட்டு வெற்றி காண முடியாத போது ,இன்னொரு கட்சியை இலகுவாக உடைத்தார்.(வாழ்க பாரத் ) ( தலைவரின் ஒப்புதலோடு தான் அண்ணாவின் முதல் அமைச்சரவை அமைந்தது உலகம் அறிந்த விசயம் )
3)தி.மு.கவில் அவர் திருப்பதி போன போது அவ்வளவு கொந்தளிப்பு கண்டது,திட்டமிட்ட சதி. தனி பிறவிகள் முருகனாகி,கொல்லூர் சென்றதில் திராவிட கொள்கைகள் என்னவானது? ( தெய்வம் இன்னொரு தெய்வத்தை பார்க்க செல்வதில் தவறு ஒன்றும் இல்லை )
தன் இறுதி காலம் வரை தமிழக மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர் கோடி கணக்கான மக்கள் நேசித்த நேசிக்க பட்டு கொண்டு இருக்கின்ற ஒரே தலைவர் எங்கள் புரட்சிதலைவர் மட்டுமே உங்களைவிட மோசமாக விமர்சித்தவர்கள் எல்லோரும் இன்று எங்கள் தெய்வத்தின் புகழை பாடி கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் எம் மாத்திரம் ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2014 06:56 AM
# ADS
Circuit advertisement
-
8th November 2014, 07:37 AM
#2892
Junior Member
Diamond Hubber
Today daily thanthi thalaiyangam
யார் பக்கம் தொண்டர்கள் இருப்பார்கள்?
இந்தியாவில், தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஏராளமான அரசியல் கட்சிகள் உண்டு. இந்த கட்சிகள் எல்லாமே ஏதாவது சந்தர்ப்பங்களில் பிளவுகளை சந்திப்பது வழக்கம். இவ்வாறு பிளவுபடும்போது, பிரிந்துபோன கட்சிகள் பலநேரங்களில் கரைந்துபோய் காணாமல் போய்விடுவதும் உண்டு. ஒருசில கட்சிகளே நிலைத்து நிற்கும். கம்யூனிஸ்டு கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியுமே நிலைத்து நின்றுள்ளது. 1949–ல் திராவிடர் கழகத்தில் இருந்து, தி.மு.க. என்று தனியாக அண்ணா கட்சி தொடங்கினார். தி.மு.க.வில் இருந்தும் சிலர் தனியாக பிரிந்துபோய் தனிராகம் பாடி புதுகட்சிகள் தொடங்கினாலும், அவையெல்லாம் காற்றிலே கலந்த கீதங்களாகிவிட்டன. ஆனால், 1972–ல் அ.தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கி 1977–ல் ஆட்சியை பிடித்து, அவர் உயிரோடு இருக்கும்வரை யாரும் அ.தி.மு.க.வை வெற்றிபெற முடியாது என்ற சாதனையைப்படைத்து மறைந்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 3 தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சியை, 1967–ல் தி.மு.க. தோற்கடித்து ஆட்சி அமைத்தது. அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., அல்லது அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கமுடியும் என்ற அசைக்கமுடியாத நிலையை இன்றளவும் இரு திராவிட கட்சிகளும் உருவாக்கிவிட்டன. வேறு எந்த கட்சியும் வெற்றியின் பக்கத்தில்கூட போகமுடியவில்லை. அ.தி.மு.க.வில் இருந்தும் பல கட்சிகள் பிரிந்துசென்றாலும், தலையெடுக்க முடியாமல் மங்கிபோய்விட்டன. பின்னாளில் தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க.வை வைகோ தொடங்கி அந்த கட்சியை நடத்திவருகிறார்.
காங்கிரஸ் கட்சியும் பிளவுகளைச் சந்தித்துள்ளது. 1949–ல் முதலில் ராஜாஜி விலகி, சுதந்திரா கட்சியை தொடங்கினார். 1969–ல் காங்கிரஸ் மற்றொரு பிளவை சந்தித்தது. காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும், இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் தனித்தனியாக இயங்கியது. அகில இந்திய அளவில் இந்திரா காங்கிரஸ் வலுவோடு இருந்தாலும், தமிழ்நாட்டில் காமராஜர் உயிரோடு இருந்தவரையில் ஸ்தாபன காங்கிரசுக்குத்தான் பலம் இருந்தது. அவர் மறைவுக்குப்பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியோடு இணைந்தது. இந்திரா காங்கிரசே காங்கிரஸ் கட்சியாக வலம் வந்தது. 1979–ல் நெடுமாறனும், 1989–ல் நடிகர் சிவாஜி கணேசனும் காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சிகள் தொடங்கினாலும் நீடிக்க முடியவில்லை. அகில இந்திய அளவில் திவாரி தனியாக கட்சி தொடங்கிப்பார்த்தார், முடியவில்லை. ஆனால், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத்பவாரும், மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய மம்தாவும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சவாலாகிவிட்டனர். இதுபோல, தமிழ்நாட்டில் 1996–ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் தொடங்கி நடத்தியபோது, அவரே காங்கிரஸ் என்ற நிலையை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் அவர் பக்கமே அணிவகுத்து நின்றனர். அவர் மறைவுக்குப்பிறகு 2001–ல் காங்கிரசோடு அந்த கட்சியை ஜி.கே.வாசன் இணைத்துவிட்டு, இப்போது மீண்டும் விலகி தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார்.
இப்போதுள்ள நிலையில், ஏற்கனவே ஒருகாலத்தில் தமிழக அரசியலில் மலையாக இருந்த காங்கிரஸ் கரைந்து 4 சதவீதத்துக்கும் சற்றே அதிகமான ஓட்டுகளைப்பெற்றுள்ள நிலையில், யார் எவ்வளவு ஆதரவை தங்கள் வலையில் பெறப்போகிறார்கள்? என்பது தெரியவில்லை. பொதுவாக அனைத்து கட்சிகளுமே பிளவுபடும்போது, கட்சிகளின் மூலக்கொள்கையைவிட்டு பெரும்பாலும் விலகிப்போய்விடுவதில்லை. எந்த தலைமை அந்த கட்சியின் கொள்கைகளை உறுதியாக நிறைவேற்றும் என்று தொண்டர்கள் நம்புகிறார்களோ, அதன் அடிப்படையில்தான் பின்பற்றுகிறார்கள். ஆக, தனிப்பட்ட தலைவர்கள், தலைமையின்கீழ்தான் தொண்டர்களின் ஆதரவும் நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதும் ஜி.கே.வாசன், காங்கிரசின் கொள்கையில் இருந்து வேறுபட்டு தனிக்கட்சியை தொடங்கியதாக அறிவிக்கவில்லை. கட்சி செயல்படவில்லை என்பதால்தான் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார். இதை எந்த அளவுக்கு தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு அவர் பக்கம் செல்வார்கள், அல்லது ஏற்றுக்கொள்ளாமல் காங்கிரசிலேயே தங்குவார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
Courtesy today daily thanthi
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
8th November 2014, 08:03 AM
#2893
Junior Member
Platinum Hubber
யுகேஷ் பாபு
சரியான பதில் - அருமையான தலையங்கம் பதிவு .
கேள்விகள் கேட்பது சுலபம்- அவர் சொன்னார் - இவர் கூறினார் .அதோ ஆதாரம் என்று மேம்போக்காக ஆத்திரத்தின்
வெளிபாடுதான் சிலரின் பரிதாபமான நிலை .
மக்கள் திலகத்தின் அரசியல் மாற்று கருத்து கொண்டவர்களின் பிற்கால நிலையில் எப்படி எல்லாம் தங்களை
மாற்றி கொண்டு மக்கள் திலகத்தின் புகழ் பாடினார்கள் என்பதை நாடே அறியும் .
இருட்டு உள்ளத்தில் தேங்கி கிடக்கும் பொறாமை வெளிப்பாடுகளை பற்றி கவலை இல்லை .
தனிப்பட்ட எம்ஜிஆர் என்ற மனிதரின் சக்தி - தாங்கி கொள்ள முடியாதவரின் நடுக்கம் புரிகிறது .
அவரின் மனப்புண்ணுக்கு மருந்து இல்லை .
ஒரு பாமர ரசிகனுக்கு தெரிந்த அளவிற்கு கூட படித்த ரசிகனுக்கு தெரியாமல் கருத்து குருடாகி போனது வருத்தமே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2014, 08:30 AM
#2894
Junior Member
Platinum Hubber
முதல்முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை புரிந்த இனிய நண்பர் திரு கோபால் அவர்களை
மகிழ்ச்சிய்டன் வரவேற்கிறேன் . ஆயிரம் கருத்து மாறு பாடுகள் இருந்தாலும் நட்பு ரீதியாக உங்களின் வரவு
எங்களுக்கு ஆனந்தமே .
பதிவிட்ட சில நொடிகளில் இங்கிருந்து நீக்கியதையும் ரசிக்கிறோம்
-
8th November 2014, 11:03 AM
#2895
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
முதலில் சாரி கோபால் சார் ஏன் என்றால் நீங்கள் கலைவேந்தன் அவர்களுக்கு கூறிய பதிலில் நான் நுழைவது கடவுளை பற்றி ஒரு கடவுள் மறுப்பாளர் வைக்கும் அபாண்டங்கள் சொல்லும்பொழுது எந்த வொரு பக்தனுக்கும் கோபம் வருவது நியாயம் தானே
திமுக விற்கு நீங்கள் இந்த கருத்தை எல்லாம் சொல்லினால் நீங்கள் தான் கொ ப செ .
தலைவர் சொல்லியதால் தான் என்னை போல் அவருடைய ரசிக கண்மணிகள் யாரும் எந்த வித தீய பழக்கத்திற்கு ஆளாக்ம்மால் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .
கட்சி ஆரம்பித்தவுடன் பச்சை குத்த சொன்னவர் என்று சொல்லுபவரே அதற்கு முன்னாலே எத்தனை லட்சம் பாட்டாளி மக்கள் பெயர் அவர் பெயரை பச்சை குத்தி கொண்ட கணக்கு தெரியுமா அவர்கள் எல்லாம் கழக கொடி தனை பச்சை குத்தி கொள்ளவில்லை அவருடைய தமிழ் வார்த்தை கொண்ட பெயரை விட ஆங்கிலத்தில் உள்ள mgr என்ற பெயரை தான் பச்சை குத்தி கொண்டது உங்களுக்கு தெரியுமா ?
உங்களுக்கு ஒரு விண்ணப்பம் தயவு செய்து அன்புமணி ராமதாஸ் என்ற சாக்கடையோடு எங்கள் புண்ணிய தலைவரை ஒப்பிடாதிர்கள் .
1)சிவாஜி ஆரம்பத்திலிருந்தே ,தன்னுடைய செல்வாக்கினால் கட்சியை வளர்த்தவரே தவிர,கட்சியினால் வளர்ந்தவர் அல்ல.சில சில்லறை நடிகர்கள்,கட்சியினால் தங்களை வளர்த்து கொண்டது ஊரறிந்த விஷயம்.
( உங்களை போல் சிலர் அறிந்த விசயம் )
2)அவர் தனக்காக எதுவும் கேட்டதில்லை.பதவி சுகம் நாடியதில்லை.தன்னை நம்பியவர்களுக்காகவே போராடினார்,.அதுவும் வெளிப்படையாக.தனக்கு அமைச்சர் பதவி கேட்டு ,கட்சியை உடைத்தவரும் இல்லை.புதியதாய் வந்த ஒரு நடிகனின் ஓரிரு படங்கள் வெற்றி கண்டதும்,raw அமைப்பு புண்ணியத்தில் புது கட்சி கண்டவரும் அல்ல.இந்திரா காந்தி ,காமராஜ் இருந்த போதே சிவாஜிக்காக தூது விட்டு வெற்றி காண முடியாத போது ,இன்னொரு கட்சியை இலகுவாக உடைத்தார்.(வாழ்க பாரத் )
( தலைவரின் ஒப்புதலோடு தான் அண்ணாவின் முதல் அமைச்சரவை அமைந்தது உலகம் அறிந்த விசயம் )
3)தி.மு.கவில் அவர் திருப்பதி போன போது அவ்வளவு கொந்தளிப்பு கண்டது,திட்டமிட்ட சதி. தனி பிறவிகள் முருகனாகி,கொல்லூர் சென்றதில் திராவிட கொள்கைகள் என்னவானது?
( தெய்வம் இன்னொரு தெய்வத்தை பார்க்க செல்வதில் தவறு ஒன்றும் இல்லை )
தன் இறுதி காலம் வரை தமிழக மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர் கோடி கணக்கான மக்கள் நேசித்த நேசிக்க பட்டு கொண்டு இருக்கின்ற ஒரே தலைவர் எங்கள் புரட்சிதலைவர் மட்டுமே உங்களைவிட மோசமாக விமர்சித்தவர்கள் எல்லோரும் இன்று எங்கள் தெய்வத்தின் புகழை பாடி கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் எம் மாத்திரம் ?
நல்ல பதிலை அளித்துள்ள திரு. யூகேஷ்பாபு அவர்களுக்கு நன்றி !
அந்த பதிலுடன், என்னுடைய சில விளக்கங்களையும் அளிக்க விரும்புகிறேன்.
நமது மக்கள் திலகம் அவர்கள் மகத்தான மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த காரணத்தினால் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் சேர்ந்த பொழுது பலத்த வரவேற்பு இருந்தது.
நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தனக்கிருந்த செல்வாக்கினால் காங்கிரஸ் கட்சியை வளரத்தவர் என்றால் அவர் தமிழர் முன்னேற்ற முன்னணி ஆரம்பித்த கால கட்டத்தில், அவர் ஒருவராவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்தலில், ஒரு. பி. எச். பாண்டியன் அவர்கள் சுயேட்சையாக வெற்றி பெறும்போது மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களால் ஏன் வெற்றி பெற முடியாமல் போனது.
எந்த கட்சியினையும் சாராமால் சுயேட்சையாக வெற்றி பெற்ற மக்கள் செல்வாக்கு படைத்த சட்டமன்ற உறுப்பினர்கள் அறந்தாங்கி திருநாவுக்கரசு சாத்தூர் ராமச்சந்திரன், பேராவூரணி குழ. செல்லையா, காங்கேயம் ராமசாமி, ஆலங்குடி வெங்கடாசலம், ஸ்ரீ வில்லிப்புத்தூர் தாமரைக்கனி, தாரமங்கலம் செம்மலை உள்ளிட்ட பலரை தமிழக சட்டப் பேரவை கண்டிருக்கிறது.
1957 முதல் வெற்றி கண்ட சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட நீண்ட பட்டியல் ஆதாரப்பூர்வமாக காட்ட முடியும்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று கூறிய, நடிகர் சிவாஜிகணேசன் அவர்கள் ஏற்றுக்கொண்ட, பெருந்தலைவர் காமராஜர் கூட தோற்று விட்டார். ஆனால் அவ்வாறு படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று கூறாமல், மருத்துவனமனையில் இருந்துகொண்டே 1967 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றி பெற்ற பெருமை எங்கள் புரட்சித்தலைவருக்கு மட்டுமே உண்டு !
.
தி.மு.க. வில் கடவுள் மறுப்பு இயக்கம் கொள்கை தீவிரமாக இருந்த பொழுதுதான் சிவாஜி கணேசன் அவர்கள் திருப்பதி சென்றார். எனவே அவர் விமர்சிக்கபட்டார். ஆனால் எங்கள் பொன்மனச்செம்மல் அவர்கள் தனிப்பிறவியில் “ முருகனாக " காட்சியளித்தபோதும் சரி, கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற பொழுதும் சரி, தி. மு.க வில் கடவுள் மறுப்பு இயக்கம், மற்றும் திராவிட நாடு பிரிவினை கொள்கைகள் கைவிடப்பட்டன என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு புரியும்.
மந்திரி பதவி கேட்டு மறுக்கப்பட்டதால் கட்சியை உடைத்தார் என்று திரு. கோபால் அவர்கள், மக்கள் திலகத்தை மறைமுகமாக சாடியதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த போலி வார்த்தைகள் அப்போதைக்கு, (1972) கால கட்டத்தில்) சரிந்து வரும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான கட்சிக்கு (உண்மையான தி.மு.க. பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்டதுதான்) ஆறுதலாக தேவைப்பட்டதால் திட்டமிட்டு பரப்பிய வதந்தி செய்தி.
எந்த சில்லறை நடிகர் (திரு. கோபால் அவர்களின் வார்த்தைப்படி) படங்கள் வெற்றி பெற்றாலும் அது பற்றிய கவலை மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தியான எங்கள் பொன்மனசெம்மலுக்கோ கவலை இருந்ததில்லை அவரது காவியங்களை திரும்ப திரும்ப பார்ப்பதெற்கென்றே நிரந்தரமான ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இது உலகத்தில் எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு பெருமை. அவரது படங்கள் என்றென்றும் வசூல் சாதனைகள் புரிந்து கொண்டிருப்பதால்தான் அவர் நிரந்தர “ வசூல் சக்கரவர்த்தி “ என்று அழைக்கப் படுகிறார்.
எங்கள் புரட்சித்தலைவர் ஆரம்பத்தில், தான் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியையும் பின்னர் தி. மு. க. வையும் வளர்த்தவர்தானேயொழிய எந்த கட்சியை உடைத்தவர் அல்ல. கலைஞர் கருணாநிதி தலைமையிலான கட்சி தான் அவரை விலக்கியதே தவிர அவர் உடைக்க வில்லை என்பதை இந்த நாடறியும். கட்சிகளை உடைத்தவர் என்ற தனிப்பெயர் வேறொரு அரசியல் வாதிக்கு உண்டு. அவர், இன்றும் தமிழக அரசியலில் இருந்து வருகிறார்.
திரு. கோபால் அவர்களுக்கு ஒரு வினா !
நீங்கள் உண்மையிலேயே திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மீது பற்று கொண்டவர்தானா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்து வருகிறது. இல்லையென்றால், இப்படி அவருக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணி, எங்கள் வாயை கிளறி, பழைய உண்மைகளை வெளிக்கொண்டு, திரியின் பார்வையாளர்கள் பலரும் அறிந்திட செய்வீரா !
எங்கள் புரட்சித்தலைவரை பற்றி தவறான விமர்சனம் செய்து உண்மைக்கு மாறான செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தால், அதற்கு தக்க பதிலடியாக மேலும் என்னிடமுள்ள ஆதாரப்பூர்வமான செய்திகளை பலவற்றினை பதிவிட நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
Last edited by makkal thilagam mgr; 8th November 2014 at 01:23 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
8th November 2014, 12:04 PM
#2896
Junior Member
Veteran Hubber
நம் திரியின் ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். உலகிலேயே மக்கள் திலகம் ஒருவர்தான் திரையுலகம் மற்றும் அரசியல் உலகத்தில் முதல் இடத்தில் இருந்தவர். திரையுலக வசூலிலும் சரி அரசியல் வெற்றியிலும் சரி இவரது இடத்தை நிரப்ப இதுவரை ஒருவரில்லை. அப்படிப்பட்ட நமது மக்கள் திலகம் அவர்கள் தனது மனித நேயத்தினால் மனிதப் புனிதராகி உலகத் தமிழரின் உள்ளங்களில் தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தன்னிகரில்லா நம் தலைவரை, எங்கள் இதய தெய்வத்தை யாருடனும் ஒப்பிடவேண்டாம் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். மேலும், மற்றொரு திரியில் கூறப்படும் கருத்துகளுக்கு இங்கே விளக்கம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன். அது அந்தந்த திரிகளின் தரம். அந்த தரத்தை இங்கே பதிவிட்டு நம் திரியின் வேகத்தையும், புனிதத்தையும் கெடுத்து விடவேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுகொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
8th November 2014, 12:19 PM
#2897
Junior Member
Platinum Hubber
வரும் 16/11/14 ஞாயிறு மாலை 4 மணி முதல் 9 மணி வரை சென்னை பத்திரிகை நிருபர்கள் சங்க ஹாலில் (சேப்பாக்கம்) புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் ஆயிரத்தில் ஒருவன் 190வது நாள் விழா 1964 - படங்களின் பொன்விழா ஆகியன பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் உரிமைக்குரல் இதழ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th November 2014, 12:22 PM
#2898
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th November 2014, 12:24 PM
#2899
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th November 2014, 12:25 PM
#2900
Junior Member
Platinum Hubber
Bookmarks