-
10th November 2014, 10:43 PM
#2761
Senior Member
Seasoned Hubber
சிவாஜி செந்தில் சார்
நடிகர் திலகத்தின் திரைப் பேராண்மை... நடிப்புத் திமிங்கிலம் ... எனத் தங்களின் எழுத்தின் ராஜ்ஜியம் விரிவடைந்தே போகிறது... பாராட்டுக்கள்...
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வரை அந்த நாள் படம் பாடல்கள் இல்லாத படம் என்கின்ற அளவில் மட்டுமே மக்களின் நினைவில் தங்கியிருந்தது. எஸ்.பாலச்சந்தர் என்கின்ற அந்த மாமேதைக்குக் கூட வீணையில் கிடைத்த அங்கீகாரம் திரைத்துறையில் தரப்படவில்லை என்பதே என் எண்ணம். உலகத் திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் தமிழ் சினிமாவை ஒரு புழுவிற்கு சமமாக நடத்திய கால கட்டத்தில் இந்தியாவில் ரோஷமானுக்குக் கிடைத்த அமோக வரவேற்பும் அந்தஸ்தும் அதற்கு சற்றும் குறையாத சொல்லப் போனால் அதை விட அதிகமாகவே அருமையாக அமைந்த அந்த நாள் படத்திற்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. அந்தக் காரணத்தை கோபால் சார் புதியதாக தொடங்கியுள்ள தொடரின் முதல் பகுதியில் தாங்கள் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் சினிமாவைப் பற்றிய பொதுஜன awareness ஆழமாகப் பெருகியுள்ள நிலையில் அந்தநாள் திரைப்படம் மிகப் பெரிய அளவில் அதற்குரிய அங்கீகாரம் பெற்று வருவது உள்ளபடியே மகிழ்வூட்டுகிறது. இதனையும் கோபால் சாரின் பதிவில் நாம் புரிந்து கொள்ளலாம்.
நேற்றுக்கூட முரசு தொலைக்காட்சியில் அந்தநாள் திரைப்படம் திரையிடப்பட்டது, எந்த அளவிற்கு மக்களிடம் இத்திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பதைக் காட்டுவதோடு நாளுக்கு நாள் இப்படத்தின் cult classic அந்தஸ்து பெருகி வருவதை நிரூபிக்கிறது.
வரலாற்றில் சாதனைகள் மறைக்கப் படமுடியாதவை என்பதற்கான துவக்கமே அந்த நாள்.
இது இனி பல திரைப்படங்களின் வாயிலாக நடிகர் திலகத்திற்குக் கிடைக்க இருக்கும் அங்கீகாரங்களுக்கான தொடக்கம்.
தங்களுடைய இந்தத் தொடர் விரிவாக மக்களிடம் சென்று சேர வேண்டும்.. கோபால் சாரின் புதிய தொடரின் முதல் பகுதியின் கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து தங்களுடையதைத் தொடரலாம் என நான் நினைக்கிறேன்.
இதைப் பற்றிய தங்கள் கருத்தையும் கூறலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th November 2014 10:43 PM
# ADS
Circuit advertisement
-
10th November 2014, 11:00 PM
#2762
Senior Member
Seasoned Hubber
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்து கொண்டால்
அவன் தான் .......
பூஜ்ஜியத்திலும் ராஜ்ஜியம் நடத்தக் கூடியவன் அந்த மன்னன். அந்தப் பூஜ்ஜியத்திற்கு அருகில் அவன் அமைக்கும் இலக்கமே அவனது அரச தந்திரம்... அவனது ராஜ்ஜியத்தில் பூஜ்ஜியங்களாக நுழைபவர்கள் அந்த இலக்கங்களாக மாறி அவனை பூஜை நாயகனாக்கி பின்னர் இறைவனாகவே வழிபடுகிறவர்கள்.. அவனும் இறைவனாகவே அவர்களுக்கு அருள் பாலிக்கிறான். அவன் அருளில் அந்த இலக்கங்களான யாவருமே அறிவுக் கண்ணால் பார்க்கிறார்கள்.. பகுத்தறிவால் சிந்திக்கிறார்கள்.. அவர்களுக்கு அவன் அருள் பாலிக்கும் போது அவர்களுக்காக தன்னுடைய பாடங்களில் சில சமயம் எளிமையைப் புகுத்தி விடுகிறான். கடினமான பாடங்களையும் புரிந்து கொள்ளும் வல்லமையினை அவன் அருளால் கிடைக்கப் பெறும் அந்த இலக்கங்கள் அந்த வல்லமையை அவனிடமே காண்பிக்கிறார்கள்.. இந்த இறைவனை நம்பாத நாத்திகனாகக் கூறிக்கொள்பவனிடம் இந்த இலக்கங்கள் சென்றடைய அங்கே அவர்களிடம் இந்த இறைவனைப் பற்றிய தவறான புரிதல்கள் திணிக்கப்படுகின்றன. இந்தத் திணிப்பில் மயங்கிய இந்த இலக்கங்கள் தங்களின் மனசாட்சியை மறந்து விட்டு இந்த இறைவனையே பழிக்கின்றன.
இதைக்காணும் அந்த இறைவனை நம்பித் தொடரும் மற்ற இலக்கங்கள் விழிக்கின்றன. என்ன செய்வதென்பது தெரியாமல் திகைக்கின்றன. இறுதியில் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறிக் கொண்டு அந்த இறைவனுக்கான திருப்பணியைத் தொடர்கின்றன.
பல்வேறு திசைகளிலும் பயணிக்கும் அந்த திசைமாறிய இலக்கங்கள் காலப்போக்கில் அனுபவங்களின் துணையுடன் மீண்டும் அந்த பூஜ்ஜியத்திற்குள்ளேயே அடைக்கலமாகின்றன.
இதையெல்லாம் பார்க்கும் அந்த இறைவன்... சிரிக்கிறான்...
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்து கொண்டால்
அவன் தான் .......
Last edited by RAGHAVENDRA; 10th November 2014 at 11:09 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th November 2014, 11:33 PM
#2763
Junior Member
Veteran Hubber
Dear Raghavendhar Sir. I accept your views and wait for my next posting after the deliberations on Mr. Gopal's write-ups. I also wish to take some time to collect relevant reference materials to justify. Thank you.
-
11th November 2014, 01:06 AM
#2764
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
உங்கள் முறையான விளக்கத்திற்கு நன்றி. நாம் இருவரும் மீண்டும் மீண்டும் வாதிப்பதால் அது முடியாத ஒன்றாகவே இருக்கும். மற்றவர்களுக்கு அது ஒரு அயற்சியையும் கொடுக்கக் கூடும். நான் எழுதிய பதிவில் நீங்கள் ஒரு இரண்டு மூன்று இடங்களை குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். அப்படியில்லை என்று நான் விளக்கினாலும் மீண்டும் விவாதம் வளரவே செய்யும். என் பதிவு [அது ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது] எம்ஜிஆர் அவர்களை குறை சொல்லும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல. மணியன் ஆனந்த விகடன் என்ற பாரம்பரியமிக்க ஒரு ஊடகத்தை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியதையும் அதன் காரணமாக நடிகர் திலகம் என்ற மனிதன் அனுபவித்த வேதனைகளையும் பதிவு செய்வதே என் நோக்கமாக இருந்தது. இதயம் பேசுகிறது இதழில் தாமரை மணாளன் நக்கீரன் என்ற பெயரில் எழுதிய பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கட்டுரை என் பதிவில் ஒரு விஷயமே இல்லை. காரணம் அதற்கு நான் மதிப்பே கொடுக்கவில்லை. ஆனந்த விகடன் இதழில் ஆரம்பித்த மணியனின் சிவாஜி விரோதத்தின் தொடர்ச்சியாகவே நான் இதயம் பேசுகிறது கட்டுரையை பார்த்தேன். அப்படி சொல்வது தவறாக இருந்தாலும் தாமரை மணாளன் கூலிக்கு மாரடிக்கும் எழுத்தாளர் என்பதுதான் என் எண்ணம். காரணம் இதே நபர் பத்து வருடங்களுக்கு பிறகு வாசுகி இதழில் ஆசிரியராக பொறுப்பேற்றவுடன் சிவாஜியை எப்படி தூக்கி வைத்தார் எப்படி புரபசர் ராமு போன்றவர்களை வைத்து சிவாஜியை பற்றி தொடர் கட்டுரை எழுத வைத்தார் என்பதெல்லாம் வரலாற்று சான்றுகளாக விளங்குகின்றன.
ராஜ ராஜ சோழன் பற்றி கோபால் எழுதியதை நாங்கள் கண்டிக்கவில்லை. மாறாக அவர் பயன்படுத்தியிருந்த வார்த்தைகள், வாக்கியத்தின் தொனி இவற்றையே சுட்டிக் காட்டினோம். அதில் ஆட்சேபகரமான வார்த்தைகளை மட்டுமே நீக்க கூறினோம். ஆனால் அவர் பதிவையே நீக்கி விட்டார். இந்த ஒரு பதிவிற்கு இப்படி சொல்கிறீர்களே, கோபால் எத்தனை தடவை இதை போல் எழுதியிருப்பார்? அவற்றையெல்லாம் நீக்கினோமா என்ன?
நான் மாடரேட்டராக இருந்துக் கொண்டு உங்கள் மேல் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினேன் அதற்கு காரணம் கோபம் என்று சொல்கிறீர்கள். நிச்சயமாக இல்லை நண்பரே, நீங்கள் அந்த பதிவில் நான் குறிப்பிட்ட சில விஷயங்களை எழுதாமல் இருந்திருந்தால் [அவை அந்த குறிப்பிட்ட பதிவுகளுக்கு தொடர்பில்லாதவை என்பதுதானே விஷயம்] இந்த பதிவே என்னிடமிருந்து வந்திருக்காது. மேலும் என்னை உங்கள் பதிவு காயப்படுத்தவுமில்லை.
பதில் நீண்டுக் கொண்டே போகிறது. முன்பே சொன்னது போல் பலருக்கும் ஆயாசமாக இருக்கக் கூடும். ஒன்றை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு சிவாஜி ரசிகன் எழுதுகிறான் என்ற காரணத்தினாலேயே எம்ஜிஆரை குற்றம் சொல்லும் நோக்கத்தோடு எழுதுகிறான் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேடி இந்த வார்த்தை அந்த அர்த்தத்தில் எழுதினீர்கள், இதில் விஷம் கலந்திருக்கிறது என்றெல்லாம் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருந்தால் அதற்கு முடிவே இருக்காது. ஒரு நிகழ்வை அனைவரும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். மாற்றுக் கருத்தையும் அனுமதிப்பதுதான் ஜனநாயகம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. தகவலில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். மாறாக ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லும்போது இப்படி கருத்து கூறக் கூடாது. காரணம் அது எம்ஜிஆர் அவர்களை தாக்குவது போல் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தால் அப்புறம் நான் என்ன சொல்வது? உங்கள் விருப்பம்.
அன்புடன்
-
11th November 2014, 03:14 AM
#2765
Junior Member
Newbie Hubber
கலை வேந்தன்,
தங்கள் ஆதங்கம் புரிகிறது. தனி பட்ட முறையில் மனிதாபிமானம் எங்கிருந்தாலும் நான் பாராட்ட தலை படுவேன். ஆனால் அது பலன் கருதா ஒன்றாக இருக்க வேண்டும். நான் ஒரு இட்லியும் கீரையும் கொடுத்து விட்டு எனக்கு தலைமை பதவி தா என்றால்?
எங்களை புரிந்து கொள்ளுங்கள்.எங்கள் வீட்டில் யார் வந்தாலும் சோறிடுவோம்.அது என்ன நேரமாக இருந்தாலும்.சுற்றியிருக்கும் பூ விற்பவர்,வீட்டு பணியாளர்,மற்றும் உதவி வேண்டுவோர் எல்லோருடைய சிறார்களின் படிப்பு,மருத்துவம் அனைத்திலும் உதவியுள்ளோம். சமீப காலங்களில் ,தெருவில் அடிபட்டுள்ள நாட்டு நாய்களுக்கு சிகிச்சை அளித்து குண படுத்தி,மறு வீடு காண உதவி கொண்டுள்ளோம்.எங்களிடம் இந்த குணம் இயல்பாகவே உள்ளது.இது நாள் வரை ,இதை பற்றி நான் பேசியதும் இல்லை.ஆனால் நான் இதை வைத்து விளம்பரம் கண்டு ,பலன் பெற எண்ணினால் ,என் நல்லியல்புக்கு ஒரு மாற்று குறைவல்லவா?(இதில் என்னை விட என் மனைவியார் மற்றும் மக்கள் காட்டும் ஈடுபாடு சொல்லி மாளாதது.)எங்கள் வருமானத்தின் ஒரு பகுதி எப்போதும் இவ்வகை நற்செயல்களுக்கு ஒதுக்க படும்.சாதி,மத,இன வேறுபாடெல்லாம் இருந்ததே இல்லை.(என் ஆசிரியை அன்னை ,வீட்டில் வரும் அத்தனை தொழிலாளிகளுக்கும்,நாங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களிலேயே அன்னமிடுவார்,தண்ணீர் தருவார்.)
உங்கள் தலைவரிடம் எனக்கு பதில்களை விட கேள்விகளே நிரம்பியுள்ளதால், எனக்கு உவப்பான நடிகராகவோ,தலைவராகவோ எண்ண முடியவில்லை.சில படங்கள் பிடிக்கும் என்ற அளவோடு மட்டுமே நிற்கிறது.
மற்றபடி ,அவர் செய்த நற்காரியங்களை நான் குறைத்து பேச விரும்பியதில்லை.
சிவாஜியின் அபார திறமைக்கு நான் அடிமை. அவர் நான் வளர வளர என் எண்ணத்தில் வளருகிறார்.உயருகிறார்.நான் காணும் தோறும் புதுமை தருகிறார்.அதனால் ஒரு நடிகராக என்னால் அவரை மட்டுமே பீடத்தில் ஏற்றி பார்க்க முடிகிறது.
தலைவர்கள் என்றால் உலகத்தில் பஞ்சமா என்ன? ஏக பட்ட தலைவர்கள்,கலீபாக்கள்,மகான்கள் என்று உண்டே?ஒரு வாசிப்பாளன் என்ற முறையில் நான் போற்ற மனிதர்களுக்கா பஞ்சம்?
Last edited by Gopal.s; 11th November 2014 at 03:17 AM.
-
11th November 2014, 07:38 AM
#2766
Junior Member
Newbie Hubber
கலை வேந்தன்,
நான் உங்கள் தலைவரை பற்றி எதுவுமே கூறவில்லை. ஆர்.எம்.வீரப்பன் எழுதியவற்றை மட்டுமே குறிப்பிட்டேன்.
ஆபாசம்,erotism என்பது கம்பி மேல் நடக்கும் வித்தை.
காதலியுடன் சல்லாபித்ததை ,நண்பனுடன் பகிரலாம்.ஆனால் மனைவியுடன் சல்லாபித்ததை சொல்லி மகிழ்வார்களா? அதே போல மனைவியுடன் தனியாகவோ,டாக்டருடன் தனியாகவோ உடை களையலாம். ஆனால் இருவரும் சேர்ந்து இருக்கும் போது சங்கடமாக உணர மாட்டோமா?
நாலு பக்கம் வேடருண்டு நான் மிக மிக ரசித்த காட்சி. ஞாபக படுத்தியதற்கு நன்றி.
இதில் நடித்தவர் சிவாஜி என்ற புதுமுக இளைஞர். ஆம். ஒவ்வொரு படத்திலும் புது முகம் காட்டி ,புத்துணர்வை தரும் சிவாஜி,இதில் அழகான கண்னாடி போட்டு புதுமுகம் காட்டி ,நடிப்பிலும் புது பரிமாணம் காட்டினார்.
தாக்கும் போக்கை தொடர்வதை ,நான் தவிர்க்கவே எண்ணுகிறேன். அவர் சொன்னார்,இவர் சொன்னார் ,அவர் எழுதினார்,இவர் எழுதினார் என்று சொல்ல என்னிடமும் ஏராள விஷயங்கள் உண்டு.என் வீடு,எல்லா பத்திரிகைகளாலும் (தமிழ்.ஆங்கிலம்)நிறைந்திருக்கும் நான் பிறந்த முதலே.
என்னை என் தொடரை நிம்மதியாக எழுத அனுமதியுங்கள்.
Last edited by Gopal.s; 11th November 2014 at 09:05 AM.
-
11th November 2014, 08:49 AM
#2767
Junior Member
Newbie Hubber
கடின நடையை தவிருங்கள் என்று நிறைய செய்திகள். தமிழின் சிறப்பும்,குறையும் அதுவே. விஷயத்தின் கனத்திற்கு தக்க மொழியும் சிக்கலாகி விடும். அதுவும் தமிழர்கள் தமிழை விட்டு தள்ளி சென்று விட்டனர். கலைஞர் டி.வீ முதலியவற்றில் கூட அறிவிப்பாளர்கள் இருக்கட்டும், தமிழ் மாணவ மணிகள் கூட ல,ள ,ழ உச்சரிப்பை பற்றி கவலை கொள்வதே இல்லை. ஆசிரியர்கள் பணி நீர்த்து போக காரணம், சலுகை,உரிமைகளின் மீது கண் வைக்கும் அளவு கடமை,பொறுப்பு இவற்றில் அக்கறை காட்டுவதில்லையோ என்று எனக்கு படுகிறது. சில சமயம் அவமானமாக கூட இருக்கிறது.
என்ன செய்வது, வேலூர் தமிழர்கள் கூட கஸ்தூரி நிவாசுக்கு குடியேறி ஆகி விட்டதே?
கடவுளில் கூட பேதம். காசை கொட்ட தமிழ் நாட்டில் கடவுள்கள் இல்லையா,ஆசிரமங்கள் இல்லையா? சபரி மலைக்கும் ,திருப்பதிக்கும் மட்டுமே தமிழர்கள் அள்ளி கொடுக்கின்றனர்.
அது போலவே சிவாஜி. கமல் போன்ற மேதை தமிழ் நடிகர்களை ,தமிழை வாழ வைக்க எண்ணுவோரை வாழ்த்தும் பண்பு கூட தமிழர்களுக்கு இல்லை.
நாமே ராஜ பக்சேயின் வேலையை சுலபமாக்கி விட்டோம்.
கடின நடையை தவிர்த்து லகு ஆக்குகிறேன். ஆனால் நகைச் சுவை போர்வையில் எல்லாவற்றிலும் அசட்டு தனம் கலக்க முடியாது. செய்யவும் கூடாது.அதற்கென்று தனி களம் உள்ளது. நான் கலையின் குறிப்புகள் இலக்கணத்தில் உள்ள படி,அதன் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள், தெரு கூத்து,நாடக கலைகளில் அதன் தாக்கம், திரை படங்களில் அதன் நீட்சி ,
அதை அங்கீகரித்து கலை மரபையும் தொடர்ந்து, மாற்றத்தையும் விளைத்து, அதில் மேலை நாட்டு பாணியை அழகாய் புகுத்தி ,சினிமா மீடியம் என்பதில் சிவாஜி நிகழ்த்திய அற்புத ரசவாதம் .இவையே என் agenda . சிறிதே நேரமெடுத்து விஷயத்தை இளக்கி கொடுக்க முயல்வேன். கொஞ்சம் பொறுங்கள்.
Last edited by Gopal.s; 11th November 2014 at 08:53 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
11th November 2014, 09:01 AM
#2768
Junior Member
Platinum Hubber
என்ன செய்வது, வேலூர் தமிழர்கள் கூட கஸ்தூரி நிவாசுக்கு குடியேறி ஆகி விட்டதே?- கோபால்
ஆதங்கம் .
கோபால்
அந்த கஸ்தூரி நிவாசா படம்தான் உங்கள் அபிமான நடிகர் நடித்த அவன்தான் மனிதன் - கலை ரசனைக்கு மொழிகள் பேதமில்லை மொழியை வைத்து வீணாக பேதங்களை வளர்க்காதீர்கள் .
தமிழன் என்று சொல்லும் நீங்கள் ஏன் சென்னைக்கே வந்து தமிழனின் பெருமைகளை நிலை நாட்டுங்கள் . ஆராய்ச்சி செய்யுங்கள் - உண்மையான திராவிடத்தை புரிந்து கொள்ளாததால் இந்தஆதங்கம் .
தொடர்ந்து மொழி பேதமின்றி உங்களது புதிய இலக்கை தொடருங்கள் . வெற்றி பெற வாழ்த்துக்கள் .எந்த குறுக்கீடும் இனி வராது ..என்பது உங்களின் பதிவுகளை பொறுத்தது ..
-
11th November 2014, 09:41 AM
#2769
Junior Member
Newbie Hubber
யுகேஷ் பாபு,
பகுத்தறிவு வாழ்க, பெரியார் வாழ்க.
புராணம் எல்லாம் புகுந்து விளையாடுகிறது. உங்கள் திரி அனைத்து நண்பர்களின் நோக்கம் விளங்கி விட்டது. விரைவில் ,நடிப்பு தெய்வத்தின் அடி சேரும் துடிப்பு. உங்கள் ஆசை விரைவில் நிறைவேற எனது அருளாசிகள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th November 2014, 10:11 AM
#2770
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
கலைஞர் டி.வீ முதலியவற்றில் கூட அறிவிப்பாளர்கள் இருக்கட்டும், தமிழ் மாணவ மணிகள் கூட ல,ள ,ழ உச்சரிப்பை பற்றி கவலை கொள்வதே இல்லை. சில சமயம் அவமானமாக கூட இருக்கிறது.
கோபால் ....நீங்க ஒரு மகா மேத
ஒரு காலத்தில் ஹிந்தி கொள்கை எதிர்பிற்கு ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்தவர்கள்....இன்று தங்களுடைய வியாபாரம் என்று வரும்போது ..."வன்கம் நேயர்கலே..இப்போ நாமோ ஒரு கல்கல் பாட்டு பாக்லாம்" ....என்று தூய தமிழ் நடையில் தமிழ் பேசும் மாந்தரை RECRUIT செய்வது ...ஊருக்குதான் உபதேசம் என்பதை தெளிவாக்குகிறது !
கடவுளில் கூட பேதம். காசை கொட்ட தமிழ் நாட்டில் கடவுள்கள் இல்லையா,ஆசிரமங்கள் இல்லையா? சபரி மலைக்கும் ,திருப்பதிக்கும் மட்டுமே தமிழர்கள் அள்ளி கொடுக்கின்றனர்.
நீங்கள் பழனி பற்றி கேள்விப்பட்டதில்லை என்று நினைக்கிறன்..! உங்களை போலவே கேரளா வில் கூட ஒருவர் கூறுகிறார்....நம்ம ஊர் குருவாயூர் இருக்கும்போது...எதற்கு பழனியில் சென்று நம்மவர்கள் காசுகொட்டுகிரார்கள் என்று...!
கூடுதல் தகவல் !
மேலும்...ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து மதமும் அனைத்து இனமும் பெருமளவில் சென்றுவரும் இரண்டு திருத்தலங்கள்....1) சபரி மலை 2) திருப்பதிமலை என்று கேள்வி ...! ஜாதி மத நல்லிணக்கம் பற்றி நடைமுறையில் புழக்கத்தில் கொண்டுவந்த திருத்தலங்கள் இவை....அரசியல்வாதிகள் போல வெறும் வாய்பேச்சுடன் நிற்காமல் செயலளவில் உள்ள கோவில்கள்..!
அது போலவே சிவாஜி. கமல் போன்ற மேதை தமிழ் நடிகர்களை ,தமிழை வாழ வைக்க எண்ணுவோரை வாழ்த்தும் பண்பு கூட தமிழர்களுக்கு இல்லை.
சிவாஜி அவர்கள் சொல்கிறீர்கள் சரி...அதுமட்டுமே சரி !!! கமல் இதில் சேரமாட்டார் !
கமலுக்கு அனைவரும் கொடுக்கும் IMPORTANCE 5% நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்குமேயானால் ...ராஜபக்ஷே பற்றிய பேச்சே வந்திருக்காது... !
.....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks