Page 149 of 397 FirstFirst ... 4999139147148149150151159199249 ... LastLast
Results 1,481 to 1,490 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1481
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இளையராஜாவின் வலது கை பேஸ் கிடார் மற்றும் கீ போர்ட் கிங் விஜி மேனுவல் அவர்களின் பேட்டி.







    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1482
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இளையராஜாவின் வலது கை பேஸ் கிடார் மற்றும் கீ போர்ட் கிங் விஜி மேனுவல் அவர்களின் பேட்டி.
    https://soundcloud.com/ks-suka/g2doepl7n0cs

    நண்பர் வாசு

    இசை ஞானி இளையராஜாவிடம் விஜி மனுவல் பங்கு பெற்ற பல பாடல்களின் தொகுப்பை இசையாகவே வழங்கி இருக்கிறார்கள் .
    gkrishna

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  6. #1483
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    வாசு ஜி

    ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது உங்களுக்கு இசையரசியின் வேறு மொழிப்பாடல் கொடுத்து

    இதோ இசையரசியின் இசை ராஜாங்கம். ஸ்வயம்ப்ரபே சந்த்யே என்று அவர் சொல்லும் போதே அழகு

    புனர் ஜென்மம் - தேவராஜன் வயலார் இசையரசி கூட்டணி


  7. Thanks Russellmai, vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, gkrishna liked this post
  8. #1484
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி இருந்த பழைய மின் அஞ்சல் அதில் இருந்து

    பொதுவாக இளையராஜாவிடம் இசைக்கருவிகள் வாசிப்பவர்கள் தத்தம் வாத்தியத்தில் மேதைகளாக இருந்தால் மட்டுமே அவரிடம் வாசிக்க சாத்தியம் என்பர். கிடாரிஸ்ட் சதானந்தன் (பழம்பெரும் இசையமைப்பாளர் சுதர்ஸனம் மாஸ்டரின் மகன் இவர்), வயலினிஸ்ட் வி.எஸ்.நரசிம்மன் மற்றும் ராமசுப்பு, புல்லாங்குழல் கலைஞர் நெப்போலியன் (அருண்மொழி), மிருதங்கக் கலைஞர் மதுரை டி.ஸ்ரீனிவாசன், பாஸ் கிடாரிஸ்ட் சசிதரன், கீபோர்டு கலைஞர் விஜி மேனுவல் மற்றும் பரணி, பழம்பெரும் தபலா கலைஞர் தபலா பிரசாத் என எல்லோருமே அசாத்திய திறமை வாய்ந்த ஒப்பற்ற கலைஞர்கள். இந்த கலைஞர்களில் ஒருவர் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் மாணவர் பண்டிட் பாலேஷ். பல முறையான ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு, ஷெனாய் கச்சேரிகள் செய்வதோடு மட்டுமில்லாமல், சென்னையில் ஹிந்துஸ்தானியைக் கற்றுத்தரும் குருவாகவும் இருக்கிறார்

    ராஜ பார்வையில் உருக்கமாக இழையோடும் வயலின், ஹௌ டு நேம் இட் (How to name it?) இசைத் தொகுப்பில் வரும் அற்புதமான தந்தியிசை, சஹானா எனும் தொலைக்காட்சித் தொடரில் அமைந்த அழகிய பாடல் எனப் பல அற்புதமான கணங்களை நமக்காகத் தந்த வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன். விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களிடம் முதன்மை வயலின் கலைஞராகப் பணியாற்றியவர். லண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுக்காக இளையராஜா இசையமைத்தபோது அவருக்கு உறுதுணையாக வி.எஸ்.நரசிம்மன் இருந்துள்ளார். கண் சிமிட்டும் நேரம், பாசமலர்கள் போன்ற பல திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ள வி.எஸ்.நரசிம்மன், கர்நாடக இசையையும் மேலையிசையையும் இணைக்கும் முயற்சியில் பல இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த இசைத் தொகுப்புகள் அவரது வாழ்நாள் சாதகத்தின் கனிகள். அவரது பெரும் கனவு.
    gkrishna

  9. Likes Russellmai, vasudevan31355 liked this post
  10. #1485
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Thanks to Tamil Hindu Newspaper



    இசையின் மொழி தில்ரூபா சரோஜா

    ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தில்ரூபா என்னும் வாத்தியத்தில் தன்னுடைய ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருப்பவர் சரோஜா. இந்த வாத்தியத்தில் பெயரும் புகழும் பெற்ற தில்ரூபா சண்முகத்தின் மகள் இவர். தன்னுடைய தந்தையிடமிருந்து தில்ரூபா, தர்ஷெனாய் போன்ற வாத்தியங்களை வாசிப்பதற்குக் கற்றுக்கொண்டு, பின் உள்ளூர் மேடைகளிலும் உலக மேடைகளிலும் இந்த இசையின் புகழைப் பரப்பியவர் சரோஜா.

    மிகவும் அரிதான ஹிந்துஸ்தானி வாத்தியமான தில்ரூபாவின் இசையை அலிபாபாவும் 40 திருடர்களும், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பழைய படங்களின் பாடல்களில் கேட்டிருக்கலாம். இந்தப் படங்களில் எல்லாம் தில்ரூபாவை வாசித்த கலைஞர் சரோஜாவின் தந்தை சண்முகம். அவரைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளிவந்த படங்களில் எல்லாம் தில்ரூபா இசை வழங்கி இருக்கிறார் சரோஜா.

    எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, அனு மாலிக், அம்சலேகா, கீரவாணி, தினா, ஜிப்ரான் போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார் சரோஜா. ஏறக்குறைய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிப் பாடல்களில் இவரின் தில்ரூபா இசை ஒலித்திருக்கிறது.


    தொடரும் இசைப்பயணம்

    அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகளிலும் நடந்த ஐக்கிய நாடுகளின் பொன்விழாக் கொண்டாட்டத்தில், உலக அளவில் புகழ்பெற்ற பெல்ஜியம் நாட்டின் இசையமைப்பாளர் ஹான்ஸ் வெர்மிக், ஒரு இசை நிகழ்ச்சியை வழங்கினார். இவரின் குழுவில் இடம்பிடித்து தில்ரூபா வாசித்த பெருமையும் சரோஜாவுக்கு உண்டு.

    சீனாவில் நடந்த சங்கமம் நிகழ்ச்சியில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் பால்ஜேக்கப்பின் குழுவில் இணைந்து வாசித்திருக்கிறார். கடல் கடந்தும் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது சரோஜாவின் தில்ரூபா.
    gkrishna

  11. Likes Russellmai, vasudevan31355 liked this post
  12. #1486
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 20)







    அடுத்து ராஜாவின் இசையில் நம் எல்லோரையும் தன் பாடல்களால் மயக்கிய 'சிட்டுக் குருவி'. தேவராஜ்-மோகன் இயக்கிய வண்ணப் படம் இது. 1978-ல் வந்த படம் இது. 'ஸ்ரீ விஷ்ணுபிரியா கிரியேஷன்ஸ்' தயாரிப்பு இது. சிவக்குமார், சுமித்ரா, ஸ்ரீகாந்த், மனோரமா, மீரா, புஷ்பலதா, சுருளி நடித்தார்கள். ஆர்.செல்வராஜ் கதை எழுத, திரைக்கதை வசனம் பாடல்கள் மூன்று பொறுப்பையும் ஏற்றிருந்தார் கவிஞர் வாலி. ஒளிப்பதிவு ஆர்.என்.கே.பிரசாத். தயாரிப்பு கந்தசாமி மற்றும் தேவராஜ்-மோகன். இளையராஜா தேவராஜ்-மோகன் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது.

    இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்று முழங்கின. இப்பாடல்களைப் பற்றி நான் சொல்லவே தேவை இல்லை.


    1.'அடடட மாமரக் கிளியே! உன்ன இன்னும் நான் மறக்கலியே!
    ரெண்டு நாளா ஒன்ன எண்ணி பச்ச தண்ணி குடிக்கலியே'

    சுமித்ராவுக்காக ஜானகி பாடிய இந்த அற்புத பாடலை இளையராஜா கிராம நறுமண மெட்டோடு அமர்க்களமாக இசை அமைத்து தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கினார். 'மச்சானப் பார்த்தீங்களா', 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' டைப்பில். மெகா ஹிட்டான பாடல்.





    2. சிவக்குமாரும், சுமித்ராவும் 'பொய்க்காலு குருதையிலே ஊர்கோலம்' போக ஆசைப்பட்டு பாடுவார்கள். பாலா அட்டகாசம் பண்ணுவார்.

    'பொன்னுல பொன்னுல பண்ணின மூக்குத்தி
    மின்னுது மின்னுது ஒத்தக் கல்லு மூக்குத்தி
    போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்'

    குழுவினர் குரல்கள் குளோப் ஜாமூன் கணக்காக இருக்கும். (நீரஜா) ஜோராக எழுந்து ஆட வைக்கும் பாடல்.

    'காவேரிக் கரை ஓரத்திலே
    ஏலாலம்பர ஏலாலம்பர ஏலாலம்பர ஏலா'

    அருமையோ அருமை.




    3. சுமித்ராவின் சோகம் சுசீலா அம்மாவின் குரலில் நம் நெஞ்சில் ஆழ இறங்கும் பாடல். என்று கேட்டாலும் அற்புதம். கிராமத்து கிளாஸிக். ஜானகிக்குப் போகாமல் மிகப் பொருத்தமாக இசையரசிக்குப் போனது. இன்றுவரை பாடல்களின் அரசியாக திகழ்கிறது. அபார வரிகள். அபாரப் பாடல். அபாரக் குரல். அபார இசை. ஜனங்களின் அபார ரசனை. அபார வெற்றி. படத்தின் டாப் பாடல்.

    'வீரத்துல கட்ட பொம்மன்
    ரோஷத்துல ஊமைத்துர'



    ஒரு நிமிடம் நடிகர் திலகம் நம் பிரேமில் வந்து மிரட்டி விட்டுப் போவார்.




    4. பஸ்ஸில் பயணிக்கும் காதல். மௌனக் காதல். பயணம் செய்யும் காதலர்களின் மனசாட்சி உருவங்கள் அவரவர்கள் காதலைக் கூறும் கற்பனை. பஸ்சில் இடையிடையே ஒலிக்கும் கண்டக்டரின் குரல். ஒரு பிரயாணியின் கமெண்ட் என்று மிகப் பொருத்தமாக பாயசத்தில் கலந்த முந்திரிப் பருப்பாய் இனிக்கிறது இப்பாடல். நகரத்து மாந்தர்களை வசியப் படுத்தினப் பாடல். சிவக்குமார், மீரா இணை. ராஜாவின் அபரிமிதமான கற்பனை நயம் இப்பாடலில் வெளிப்படும்.

    'என் கண்மணி உன் காதலி
    இள மாங்கனி எனைப் பார்த்ததும்
    சிரிக்கின்றதே...சிரிக்கின்றதே'

    இள மா'மயில்' அருகா 'மையில்'. வாலி அவர்களின் மை(ய)ல் வரிகள்.

    'இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ'

    'தேனாம் பேட்டை சூப்பர் மார்க்கட் எறங்கு'

    'நன்னா சொன்னேள் போங்கோ'

    இந்த வசனங்களெல்லாம் நமக்கு தேசிய கேதம் போலத்தானே! பாடலைக் கேட்கும் போது இடையே தன்னையுமறியாமல் தமிழக ரசிகன் அத்தனை பேரும் உச்சரிப்பானே!


    Last edited by vasudevan31355; 22nd November 2014 at 11:04 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes Russellmai, gkrishna liked this post
  14. #1487
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    அதே போல் சங்கர் கணேஷின் இசையில்
    அனுக்ரஹம் என்ற திரையில் இசையரசியின் குரலி
    ஸ்வர்ணமயூர ரதத்தில் இரிக்கும் என்ற அருமையான பாடல்
    ராதா சலூஜா


  15. Likes vasudevan31355 liked this post
  16. #1488
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post

    ராஜ பார்வையில் உருக்கமாக இழையோடும் வயலின், ஹௌ டு நேம் இட் (How to name it?) இசைத் தொகுப்பில் வரும் அற்புதமான தந்தியிசை, சஹானா எனும் தொலைக்காட்சித் தொடரில் அமைந்த அழகிய பாடல் எனப் பல அற்புதமான கணங்களை நமக்காகத் தந்த வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன். விஸ்வநாதன் – ராமமூர்த்தி, இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களிடம் முதன்மை வயலின் கலைஞராகப் பணியாற்றியவர். லண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுக்காக இளையராஜா இசையமைத்தபோது அவருக்கு உறுதுணையாக வி.எஸ்.நரசிம்மன் இருந்துள்ளார். கண் சிமிட்டும் நேரம், பாசமலர்கள் போன்ற பல திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ள வி.எஸ்.நரசிம்மன், கர்நாடக இசையையும் மேலையிசையையும் இணைக்கும் முயற்சியில் பல இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த இசைத் தொகுப்புகள் அவரது வாழ்நாள் சாதகத்தின் கனிகள். அவரது பெரும் கனவு.
    கே. பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன்தான்.

    அதன்பின் கங்கை அமரனின் ஒரு மேடையிசை நிகழ்ச்சியில் ஒரு சாதாரண வயலினிஸ்ட்டாக வந்திருந்தார். ரொம்ப பரிதாபமாக இருந்தது.

  17. Thanks gkrishna thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  18. #1489
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அருமை ராஜேஷ் சார். 'மறுபிறவி' யின் 'அலைகளிலே தென்றல் வந்து' பாடல்தான் மலையாளத்தில் இது. இரண்டுமே இன்பமான இன்பம். 'மதுர கானங்கள்' தொடங்கும் போது இப்பாடல் பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது. மலையாளத்தைவிட தமிழில் இன்னும் கூடுதல் இனிமை.

    நடிகர் திலகமே தெய்வம்

  19. Likes Russellmai liked this post
  20. #1490
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    மேல் நாட்டு இசை அமைப்பில் கவுன்ட்டர் பாயிண்ட் என்ற முறை ஒன்று உண்டு.அந்த கவுன்ட்டர் பாயிண்ட் முறையில் ரெகார்டிங் செய்யப்பட்ட பாடல் 'என் கண்மணி உன் காதலி '. 1970 களின் இறுதியில் இது மிகவும் புதுமை
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •