-
22nd November 2014, 10:24 AM
#2981
சிவாஜி செந்தில் சார்,
நடிகர்திலகத்தின் திரைப்பாடல்களில் ஈஸ்வரியின் பங்களிப்பு செய்த பாடல்களின் தொகுப்பு மிக நன்றாக உள்ளது.
எனக்கு தோன்றிய இன்னும் சில பாடல்கள்
திருடன் படத்தில் 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' மற்றும் 'நினைத்தபடி கிடைத்ததடி'
இன்னொரு பாடல் ராஜா படத்தில் (நடிகர்திலகம் பாடல் காட்சியில் இடம்பெறாத) 'நான் உயிருக்கு தருவது விலை... கண்களை கொண்டு வா'.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd November 2014 10:24 AM
# ADS
Circuit advertisement
-
22nd November 2014, 11:52 AM
#2982
Junior Member
Regular Hubber
ராஜ ராஜ சோழன் சினிமா பற்றிய
இந்து நாளிதழ் கட்டுரை(20.11.2014)
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd November 2014, 02:37 PM
#2983
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Senthilvel Sivaraj
நேரடியாக வாசிக்க ..
http://tamil.thehindu.com/general/li...cle6615722.ece
-
22nd November 2014, 03:09 PM
#2984
Junior Member
Veteran Hubber

Originally Posted by
adiram
சிவாஜி செந்தில் சார்,
நடிகர்திலகத்தின் திரைப்பாடல்களில் ஈஸ்வரியின் பங்களிப்பு செய்த பாடல்களின் தொகுப்பு மிக நன்றாக உள்ளது.
எனக்கு தோன்றிய இன்னும் சில பாடல்கள்
திருடன் படத்தில் 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' மற்றும் 'நினைத்தபடி கிடைத்ததடி'
இன்னொரு பாடல் ராஜா படத்தில் (நடிகர்திலகம் பாடல் காட்சியில் இடம்பெறாத) 'நான் உயிருக்கு தருவது விலை... கண்களை கொண்டு வா'.
ஆதிராம் சார்.
Thanks for the interactions. முடிந்தவரை நடிகர்திலகம் இடம்பெறும் காணொளியே தேர்வு செய்ய எண்ணினேன். சித்ரா பவுர்ணமி பாடல் தவிர்க்க முடியவில்லை. மற்றபடி திருடன், ராஜா பாடல்கள் நல்ல தேர்வே.
ராஜா படப்பாடல் தரவேற்ற இயலவில்லை
Last edited by sivajisenthil; 22nd November 2014 at 03:20 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd November 2014, 07:40 PM
#2985
Junior Member
Veteran Hubber
திரைப்படம் உருவாகிறது!
பிரெஞ்சு சினிமா இயக்குநரான லூயிமால், இந்தியாவைப் பற்றி ஆறு மணி நேரம் ஒடக் கூடிய விரிவான ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். 1969-ம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் தமிழகக் கலைகள் மற்றும் வாழ்க்கை முறையைப் பதிவு செய்திருக்கிறார் லூயிமால்
1968-ம் ஆண்டு தமிழ் சினிமா உலகம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள லூயிமால், ‘தில்லானா மோக னாம்பாள்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று சிவாஜி, பத்மினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒன்றுதான் தமிழ் சினிமா படப்பிடிப்புகுறித்து பதிவு செய்யப்பட்ட பழைய ஆவணம்.
படப்பிடிப்பில் சிவாஜி, பத்மினி இருவரும் நடிப்புக்குத் தயார் ஆகும் விதம், நடிப்பில் சிவாஜி காட்டும் ஈடுபாடு, இயக்குநரான ஏ.பி.நாகராஜன் தாளகதியுடன் கைதட்டிப் பாடி, நடிகர் வெளிப்படுத்த வேண்டிய பாவத்தைக் காட்டும் தனித்துவம் என்று லூயிமால் காலத்தின் அழியாத நினைவுகளை ஆவணப் படுத்தியிருக்கிறார். இன்று இக்காட்சியை யூ-டியூப்பில் நாம் காண முடிகிறது.
மதுரை ‘ரீகல்’ தியேட்டர் முன்பாக உள்ள பழைய புத்தகக் கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக அரிய நூல் ஒன்றை வாங்கினேன். அது ‘திரைப்படம் உருவாகிறது’ என்ற கலைஅன்பன் எழுதிய புத்தகம். 1973-ம் ஆண்டு வெளியாகியுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜிகணே சன் நடித்த ‘ராஜராஜசோழன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து படப்பிடிப்பு முடியும் நாள் வரை என்னவெல்லாம் நடந் தது என்பதைப் பற்றி ஒரு டாகுமென்டரி படத்தைப் பார்ப்பது போல நேரடியாக விவரிக்கிறது இப்புத்தகம்.
சுப.ராமன் என்ற பத்திரிகை யாளர் படப்பிடிப்புத் தளத்தில் கூடவே இருந்து, இதை ஆவணப்படுத்தியிருக்கிறார். இவர் ‘தமிழ்நாடு’ இதழில் பணியாற்றியவர்.
‘ராஜராஜசோழன்’ தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம். அரு. ராமநாதன் எழுதிய ‘ராஜராஜசோழன்’ நாடகத்தை டி.கே.எஸ் சகோதரர்கள் 1955-ல் திருநெல்வேலியில் அரங்கேற்றி உள்ளனர்.
அதன்பிறகு, இந்த நாடகத்தைப் படமாக்க பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்து, எதிர்பாராத காரணங்களால் நடைபெறாமல் போயுள்ளது.

இந்நிலையில் 1972-ம் ஆண்டு ஜி.உமாபதி அவர்கள் இதனைப் படம் எடுக்க முன் வந்துள்ளார். புராணப் படங்களை இயக்கி புகழ்பெற்றிருந்த ஏ.பி.நாகராஜன் முதன்முறையாக ஒரு சரித்திரப் படத்தை இயக்க இருக்கிறார் என்பது பரபரப்பாக அப்போது பேசப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு டபிள்யூ.ஆர். சுப்பா ராவ். ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற புகழ் பெற்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர்.
சினிமாஸ்கோப்பில் படம் எடுப்பதற்காக இவரை பம்பாய்க்கு அழைத்துப் போய், அமெரிக்க கம்பெனியில் பயிற்சி கொடுத்து அவர்களிடமிருந்த சினிமாஸ்கோப் லென்ஸ்களை வாடகைக்கு வாங்கி வந்திருக் கிறார்கள்.
சோதனை முயற்சியாக, ‘அகஸ்தியர்’ படத்தின் உச்சகட்டக் காட்சியினை 500 அடிகள் சினிமாஸ்கோப்பில் படமாக்கிப் பார்த்திருக்கிறார்கள். அது சிறப்பாக அமையவே, ‘ராஜராஜசோழன்’ முழுப் படமும் சினிமாஸ்கோப்பில் எடுக்க முடிவு செய்தார்களாம். இப்படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க, கலை இயக்குநராக கங்கா வும், எடிட்டிங் வேலையை டி.விஜயரங்கமும் கவனித்துள் ளனர்.
1972 பிப்ரவரி 2-ம் நாள் வாசு ஸ்டுடியோவில் ‘ராஜராஜ சோழன்’ படப்பிடிப்பு ஆரம்பம். ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம் மாண்டமான முறையில் தஞ்சை பெரிய கோயிலை செட் போட்டுள்ளார்கள். 25 அடியில் ஒரு நந்தியை உருவாக்கியுள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் தான் நடிக்கிறோம் என்ப தையே மறந்துவிட்டு, ராஜராஜசோழனாகவே வாழ்ந்துள்ளார் நடிகர் திலகம்.
ஒருநாள் படப்பிடிப்பைக் காண்பதற்காக பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சீவ்குமார் வந்திருக்கிறார். அவர் நடிகர் திலகத்தின் நடிப்பைக் கண்டு வியந்து பாராட்டியதோடு, கோயில் போல அமைக்கபட்ட செட் அமைப்புகளைக் கண்டு பிரமித்துப் போனாராம்.
படப்பிடிப்பின்போது ஒருநாள் கடும் மழையால் படத்துக்காக போடப்பட்ட செட் சரிந்து விழுந்துள்ளது. மேட்டி தொழில்நுட்பத்துக்காக கேமரா முன்பு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து போனதாம்.
அன்றைக்கு படப்பிடிப்பு நின்று போனதுடன், 2 லட்ச ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கெல்லாம் அந்தப் படத்தின் ஜி.உமாபதி கலங்கவில்லை. படத்தைத் திட்டமிட்டபடியே இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். மீண்டும் அதே போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்புத் தொடர்ந்துள்ளது.
இப்படி ‘ராஜராஜசோழன்’ படப்பிடிப்பில் நடைபெற்ற பல சுவாரஸ்யமான விஷயங்களுடன், அன்றைய தமிழ் சினிமாவின் நிலை, ஹாலிவுட் சினிமா எப்படி இயங்குகிறது என்றெல்லாம் இந்தப் புத்தகத்தில் நுட்ப மாக எழுதியிருக்கிறார் கலை அன்பன். இந்நூலில் அரிய புகைப்படங்களும் திரைக்கதையின் மாதிரி பக்கமும் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd November 2014, 08:25 PM
#2986
Junior Member
Veteran Hubber
Female singers who helped glorify NT's movies and his stardom!! : திருமதி எஸ் ஜானகி
Part 3 :S. Janaki: The melody queen added richness to songs in NT movies !
நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: திரை கானங்களின் Nightingale S. Janaki!!
திருமதி எஸ் ஜானகி :
திறமை நிறைந்த பன்மொழிப் பாடகி. எனினும் தமிழ் திரையுலகில் சுசீலாவின் காலத்தில் சரியாக ஒளிர இயலவில்லை. இளையராஜாவின்
வரவுக்குப்பிறகே புகழ் வெளிச்சம் ஜானகி மீது இமயமலைப் பனிபோல படர்ந்து விண்ணை எட்டியது .நடிகர்திலகத்தின் நடிகர்திலகத்தின் பொற்காலத்தில் கூட ஜானகியின் பங்களிப்பு அரிதாகவே இருந்தது.ஜெமினியின் கொஞ்சும் சலங்கை'சிங்கார வேலனே , .குங்குமம் திரைப்படம் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை 'ஜானகியின் அசாத்தியமான குரல்வளத்துடன் கூடிய பாடும் திறமையை மின்னல் கீற்றாக வெளிப்படுத்தியது ஆலயமணியிலும் விளயாட்டுப்பிள்ளையிலும் ஒரு மென்மையான மனதுக்கு இதமான பாடல் அவ்வளவே. நடிகர்திலகத்தின் படங்களுக்கு இளைராஜா இசை அமைக்கத் தொடங்கியதும் அவரது சிறப்பான பங்களிப்பு அதிகரித்தது. முதல் மரியாதை..ரிஷிமூலம் ...தியாகம் ......ஜானகி அம்மாவுக்கு நன்றிகலந்த வணக்கங்கள் !
1. Kungumam : Even today this song sequence is a bench mark scene for stage performance of carnatic music based songs! The sudden invasion of NT and his continuation of song with inimitable facial expressions and lip movements... an audio-visual feast to enjoy!!சொன்னதைச் சொல்லும் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை சாரதாவுக்குக்கூட ஊர்வசி கொடுப்பினை ! நமக்கு.....நம் மன்னவருக்கு உரிய பெருமை....உரிமை ..... நம் நெஞ்சங்களில்....தீராத வேதனை...வாசல் இருந்தும் வழியில்லையே !
2. Mudhal Mariyadhai : The first respect goes to NT and the rest taken care by Janaki!! விடலைப்புள்ள நேசம்.....வேட்டிவேரின் வாசம்....முதுமையிலும் பாசம் பேசும்.....பாசத்தென்றல் வீசும் !!
3. Vilayaattuppillai (1969): A melody that lingers! காதல் வயப்பட்டிருப்பது...சொல்லாமல் புரிய வேண்டுமே!
4. Aalayamani: Instead of a bed-time story....தூக்கம் நம் கண்களைத் தழுவிடும் தாலாட்டுக் குரல்
5. Thyaagam: Poignant reminiscence of love!கலைந்திடும்(சிலை , பாரதரத்னா ஆஸ்கார்..) கனவுகள்....... நடிகர் திலகம் பற்றிய கண்ணீர் சிந்தும் நினைவுகள்
6. Rishimoolam : Sheer happiness rolls in our minds and hearts upon hearing this number! மழை வருவதை முன்னறியும் மயில்....ஜானகி அம்மாவின் குயில் குரல் மழையில் ...நனைவோமே !
NT comes back to thank the Sparrows and Parrots of singing P. Leela, Jamunarani and M.S. Rajeswari for their indelible contributions to add pep to the tempo of his movies!
Last edited by sivajisenthil; 23rd November 2014 at 12:53 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
22nd November 2014, 09:40 PM
#2987
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
22nd November 2014, 09:52 PM
#2988
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
22nd November 2014, 09:53 PM
#2989
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
22nd November 2014, 10:10 PM
#2990
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks