Results 1 to 10 of 3997

Thread: Makkal thilagm mgr-part -12

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரைச் சூட்டி செல்வி ஜெயலலிதாவுக்கு மோடி பதிலடி , நாடார் சமூகத்தை கவரத் திட்டம் .- தினமலர் பிதற்றல்.
    ---------------------------------------------------------------------------------------------------
    வரலாற்றை முழுவதுமாக மழுங்கடிக்கச் செய்தல் என்பது இது தான் . முதலில் காமராஜர் அவர்களை மக்கள் திலகம் எப்படி அணுகினார் என்று பார்ப்போம்
    1960 களில் காமராஜரை மிகவும் தரக்குறைவாக தி மு க வினர் மேடைகள் தோறும் வசை பாடிய காலக் கட்டம் . அப்பொழுது , மக்கள் திலகம் தி மு க வில் இருக்கிறார் , பொதுச் செயலாளராக பேரறிஞர் அண்ணா அவர்கள் இருக்கிறார்கள் .
    15 ஜூலை 1965 ம் ஆண்டு . காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டு மக்கள் திலகம் பேசியது .
    " அண்ணா எனது வழிகாட்டி , ஆனால் தலைவர் காமராஜர் " - என்பது தான் ....
    இதனால் தி மு க வில் மக்கள் திலகத்திற்கு எதிராக குரல் எழும்பியது , ஆனால் மக்கள் திலகத்தை புரிந்துக் கொண்டிருந்த அண்ணா அவர்களோ இது குறித்து எதுவும் கூறவில்லை . மக்கள் திலகமும் தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியுடன் கூறிவிட்டார் . அது தான் மக்கள் திலகத்திற்கும் தி மு க விலிருந்த கருணாநிதி கும்பலுக்குமான முதல் உரசலாக அமைந்தது .
    அது மட்டுமா ? மக்கள் திலகம் அ தி மு க வை துவங்கிய பின்னரும் காமராஜர் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தப் பொழுதிலும் , அவர் பதிலுக்கு அவரை விமர்சிக்கவில்லை .
    ஜனவரி 1973 , கணையாழி பத்திரிக்கையில் வந்த மக்கள் திலகத்தின் பேட்டியே அதற்கு உதாரணம் , அதில் வைக்கப் பட்ட கேள்வியும் மக்கள் திலகத்தின் பதிலும் இதோ :
    கேள்வி : காமராஜ் உங்கள் இயக்கத்தை கண்டித்திருக்கிறாரே , எதனால் அப்படி ?
    மக்கள் திலகத்தின் பதில் : -
    " எனக்கு காரணம் புரியவில்லை ,. கொள்கை , தார்மீக அடிப்படையில் ராஜாஜி என்னை ஆதரிக்கிறார் . காமராஜ் வேறு காரணங்களுக்காக எதிர்கிறார் . ஆனாலும் அவருடைய தியாகத்தையும் மக்களிடையே அவருக்குள்ள பெருமையையும் நான் மதிக்கிறேன் . என்னைத் தூற்றினாலும் நான் அவரை வாழ்த்துவேன் . "
    மேலும் திண்டுக்கல் இடைத் தேர்தலில் காமராஜரும் பெரியாரும் கூட அ தி மு க வுக்கு எதிராக விமர்சனங்கள் வைத்தப் பொழுதும் , அ தி மு க அமோக வெற்றி பெற்றது .
    இன்னும் சிலர் சொல்வதுண்டு , மதிய உணவுத் திட்டத்தை மக்கள் திலகம் அபகரித்துக் கொண்டார் என்று , அதுவே தவறான கூற்று .
    18 ஜூலை 1982 திருச்சியில் சத்துணவுத் திட்டத்தை மக்கள் திலகம் துவங்கி வைக்கையில் , காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை விரிவு படுத்தியே இந்தச் சத்துணவு திட்டம் கொண்டு வரப் படுகிறது என்று சொன்னவர் தான் மக்கள் திலகம் ...
    அது மட்டுமில்லை , வரலாற்றிலேயே இல்லாத கதையாக , கிட்டத் தட்ட 70 லட்சம் குழந்தைகள் இந்த விரிவு படுத்தப் பட்ட சத்துணவுத் திட்டத்தினால் பயனடைந்தார்கள் , அது காமராஜர் காலத்தில் இல்லை .
    காமராஜர் ஆட்சிக் காலத்தில் சில நூறு மதிய உணவுக் கூடங்கள் சில பள்ளிகளில் மட்டுமே செயல் பட்டது , ஆனால் மக்கள் திலகத்தின் விரிவு படுத்தப் பட்ட சத்துணவு திட்டத்தின் கீழ் 17000 இற்கும் மேற்பட்ட சத்துணவுக் கூடங்கள் உடனடியாக திறக்கப் பட்டது . இதுவும் வரலாறு .
    சத்துணவு சமைப்பதற்கான ஆயாக்கள் , பொறுப்பாளர்கள் , அமைப்பாளர்கள் என்று 10000 இற்கும் அதிகமான நபர்களுக்கு உடனடி வேலையும் கிடைத்தது . இந்த பணி நியமனமே ஒரு உலகச் சாதனை தான் .
    இது மக்கள் திலகத்தின் காலத்தில் என்றால் , அதே சமயத்தில் அம்மா அவர்களது அரசியல் திருப்புமுனையில் நாடார் சமூகத்தினரின் பங்கு மிகவும் முக்கியமானது .
    அம்மா அவர்களது முதல் அரசியல் சவாலாக அமைந்தது தான் திருச்செந்தூர் இடைத் தேர்தல் . நாடார் சமூகத்தினர் அதிகப் படியாக வாழும் அந்தத் தொகுதியில் 1983 இல் இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டது . பால் கமிஷன் விவகாரத்திலும் , திருச்செந்தூர் கோவில் அதிகாரி கொலை விவகாரத்திலும் மிகவும் பரபரப்பாக இருந்த சமயம் அது .
    தொகுதி முழுவதும் கருணாநிதியும் , அன்பழகனும் , வைகோ வும் சுற்றி வந்தனர் . மக்கள் திலகம் 5 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தார் , மற்றப் படி தொகுதி முழுவதும் சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டது அப்பொழுதைய கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த அம்மா அவர்கள் தான் .
    வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்கிற சூழலில் , அ தி மு க 1710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . அந்தத் தேர்தல் பிரசாரத்தின் பொழுது , நாடார் கிறிஸ்துவர்கள் அம்மா அவர்களிடம் வைத்த கோரிக்கை , அவர்கள் பிறபடுத்தப் பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் ... அதையும் மக்கள் திலகத்திடம் வலியுறுத்தி பெற்றுத் தந்தவர் அம்மா அவர்கள் ....
    எனவே நாடார் சமூகத்திற்கு உரிமை கொண்டாடும் முன்னர் , அவர்களுக்காக செய்தது என்ன என்பதை பாரதிய ஜனதாவினர் பட்டியலிடட்டும் , சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பதில் இவர்களது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவு படுத்தட்டும் , நாடார் இன மக்கள் அதிகமாக பாதிக்கப் படக் கூடிய விவகாரம் அது .
    காமராஜர் காலத்திலேயே வெற்றிகளை குவித்த இயக்கம் அ தி மு க . அதே சமயதில் அவர் மீது மட்டற்ற மரியாதையும் நன்மதிப்பையும் வைத்திருந்த , வைத்திருக்கும் இயக்கம் அ தி மு க . எனவே , தினமலர் காவடி எடுக்க வேறு ஏதாவது காரணத்தை தேடித் பிடிக்கட்டும் ....


    courtesy net

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •